அதன் பின்பு அவன் தோளில் தலை சாய்ந்து கொண்டவள், “இப்போ இத ரெண்டு வீட்டுக்கும் இன்பார்ம் பண்ணனும், எப்படி பண்றது”, என்று அவனிடமே கேட்டாள்.
“ராதா கிட்ட சொல்லு” என்று சொன்னான்.
“நான் ராதா கிட்ட எப்படி சொல்றது” என்று அவனிடம் செல்லம் கொஞ்சி சிணுங்கி கொண்டிருந்தாள்.
அவனும் அவளை இழுத்து அணைத்தபடி, “இப்போ நான் சொல்லட்டுமா” என்று கேட்டாள்.
“எப்படி சொல்லுவீங்க”, என்று கேட்டாள்.
“நான் சொல்றேன் பாரேன்”, என்று சொன்னவன்,
ஃபோனை எடுத்து ராதாவிற்கு அழைத்தவன், “சிஸ்டர் நீங்க உங்க ஹஸ்பண்ட் ட்ட சொல்லி, என் வொய்ப் க்கு ஒர்க் ப்ரம் ஹோம் கொஞ்சம் ரெடி பண்ண முடியுமா”, என்று கேட்டான்.
அவளோ “ஏன் ப்ரோ உங்க வொய்ப் இப்படி எல்லாம் பேசுவதற்கு சொல்லிக் கொடுக்கிறாளா, அவ கூட சேர்ந்து நீங்களும் இப்படியெல்லாம் பேசுறீங்க”, என்று சொல்லி விட்டு,
“இருங்க அவர்ட்டையே கொடுக்கிறேன்”, என்று சொன்னாள்.
“அய்யய்யோ அவங்கட்டையா”, என்றான்.
“ஏன் அவர்கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு என்ன பயம், என்ன வாய் பேசுறீங்க ரெண்டு பேரும், ஆனால் என் புருஷன் கிட்ட பேசுறதுன்னா மட்டும், உங்களுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் அவ்வளவு கஷ்டமா இருக்கு” என்று சொன்னவள்,
நந்தன் கையில் போனை கொடுத்து விட நந்தனிடம் சிரித்துக்கொண்டே நலம் விசாரித்தவன், “எவ்வளவு நாள் ஒர்க் ப்ரம் ஹோம் கொடுப்பீங்க” என்று கேட்டான்.
“ஏன் என்னாச்சு” என்று கேட்டவன், “ஏன் டிரான்ஸ்பர் எதுவும் வருதா” என்று கேட்டவுடன்,
“ட்ரான்ஸ்பர் இல்ல, ப்ரோமோஷன் தான் வருது”, என்று சொன்னான்.
“இப்பதான் உங்களுக்கு இந்த பிரமோஷன் வந்துச்சுன்னு சொன்னாங்க”, என்று சொன்னான்.
“எனக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் தான் ப்ரோமோஷன், எனக்கு அப்பா பிரமோஷன், உங்களுக்கு தாய் மாமா பிரமோஷன்”, என்று சொன்னான்.
முதலில் புரியாதவன், பின்பு புரிந்தவுடன் “நிஜமாவா சொல்றீங்க”, என்று கேட்டான்.
“ஏங்க இதுல போய் யாராவது விளையாடுவாங்களா”, என்று சொன்னான்.
சந்தோஷத்துடனே, “ரொம்ப முடியாமல் இருக்காளா”, என்று கேட்டான்.
ராதாவோ அருகில் இருந்து, “என்ன என்ன” என்று கேட்கும் சத்தம் கேட்டது, நந்தனோ “நீ அத்தை ஆயிட்டியாம், அத சொல்றதுக்கு தான் மாம்ஸ் போன் பண்ணி இருக்காரு”, என்று சொன்னான்.
ராதாவும் “நிஜமாவா, அந்த பக்கி எனக்கு ஒரு போன் பண்ணல பாருங்க”, என்று சொன்னாள்.
கதிரவனும் “அவளே வெட்கப்பட்டுட்டு இருக்கா, அவளை போய் போன் பண்ணு சொல்லிட்டு இருக்கீங்க”, என்று சொன்னான்.
“இதோ வீட்டுக்கு கிளம்பி வந்துகிட்டே இருக்கேன் ன்னு சொல்லுங்க” என்று சொல்லி விட்டு நந்தன் போனை வைக்கவும்,
நந்தனிடம் ராதா “என்னை அங்க விட்டுட்டு போறீங்களா, நானும் பாப்பாவும் ரெடி ஆகுறோம், நான் பாப்பாக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கிறேன்”, என்று சொன்னாள்.
“நீ அங்க போனா, அவ ரெஸ்ட் எடுக்க மாட்டா, அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே”, என்று சொன்னான்.
“அதெல்லாம் இல்ல நான் போய் அவளை பார்த்துக்கிறேன், அவளுக்கு ஜூஸ் மட்டும் கரெக்ட் டைம்க்கு ஆர்டர் போட்டு அனுப்பிடுங்க”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், நான் பார்க்கிறேனோ, இல்லையோ, எஸ்பி கரெக்டா பார்ப்பாரு”, என்று சொல்லி இவன் சிரித்துக் கொண்டிருந்தவன்,
கதிரவன் அவனிடம் “உங்களுக்கும் பிரமோஷன் கிடைச்சிருக்கு” என்று சொல்லி இவனை கலாய்த்து “நீங்க தாய் மாமாவா ஆயிட்டீங்க”, என்று சொன்னதை ராதாவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
இப்போது தான் ராதா, “நீங்க முதல்ல இரண்டு அத்தைக்கும் போன் பண்ணி சொல்லுங்க” என்று சொன்னவள்,
“அவங்க வீட்டுக்கு சொல்லிட்டாங்களா ன்னு கேட்டீர்களா”, என்று சொன்னாள்.
“தெரியல இங்கதான் பஸ்ட் போன் பண்ணி இருப்பாரு ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னான்.
ராதா கதிரவனுக்கே அழைத்தாள்,
ராதாவின் எண்ணில் இருந்து வரவும் எடுத்து, “என்ன சிஸ்டர்” என்று கேட்டான்.
“ஆமா உங்க அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா”, என்று கேட்டாள்.
“இப்பதான் நேர்ல போய் சொல்ல போறேன்” என்று சொன்னான்.
“போங்க போங்க, முதல்ல அதை போய் செய்யுங்க”, என்று சொன்னவள், “போறது போறீங்க ஸ்வீட் எடுத்துட்டு போங்க”, என்று சொன்னாள்.
“ஈவினிங் ஸ்வீட் வாங்கி கொடுக்குறேன், இப்போ ஸ்வீட் க்கு வீட்டில் கருப்பட்டி வச்சிருப்பாங்க, கருப்பட்டி கொடுத்து சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றவன், கிச்சனை உருட்ட தொடங்கினான்.
அங்கு வந்தவரோ, “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க”, என்று கேட்டார்.
“இல்ல கருப்பட்டி வச்சிருப்பீங்க இல்ல, அதுதான் தேடிட்டு இருக்கேன்”, என்று சொன்னான்.
“இந்தா” என்று எடுத்து கையில் கொடுக்கவும், அதை உடைத்தவன் அவன் அம்மா கையிலே கொடுத்து, அவன் அப்பா கையிலும் கொடுத்தான்.
“அப்படி என்னடா குட் நியூஸ்”, என்றவர், அவனை கேள்வியாக நோக்கி “யாழினி உண்டாகி இருக்காளா”, என்று கேட்டார்.
அவனும் “நான் சொல்லவே இல்லையே ம்மா, எப்படிம்மா”, என்று கேட்டான்.
“நேத்தே எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சுடா, கேட்கலாமா ன்னு யோசிச்சேன், சரி அவளே சொல்லட்டும், நம்ம எதுவும் கேட்க கூடாது தான் வந்துட்டேன், ரொம்ப சோர்ந்து போய் தெரிஞ்சா, கண்ணெல்லாம் கிறங்கி போய் இருந்துச்சு, எனக்கு அப்பவே தோணுச்சு, அப்படின்னா தான் சொல்லி இருப்பாளே அப்படின்னு நினைச்சிட்டு தான் விட்டுட்டேன்”, என்று சொன்னார்.
“டெஸ்ட் கன்ஃபார்ம் பண்ணிகிட்ட அப்புறம், இப்போ தான் இப்படி ன்னு சொன்னா, இனி டாக்டர் பார்க்க போகனும்” என்று சொன்னான்.
“அதுக்கு என்னடா, நல்ல டாக்டரை பார்த்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கு. நான் இருக்கேன் இல்ல கூட்டிட்டு போறேன்”, என்று சொன்னார்.
அவன் அப்பாவும் அவனை அணைத்து வாழ்த்து சொன்னவர், “அந்த பிள்ளையை நல்லா பாத்துக்கோ டா, இனிமேலு கொஞ்சம் சத்தானதா சாப்பிட வைக்கணும்”, என்றார்.
“அதான் நீங்களும் அம்மாவும் பக்கத்தில் தானப்பா இருக்கீங்க, நீங்க பார்த்துக்கோங்க, நான் இப்பதான் நந்தனுக்கு சொன்னேன், அவன் வரும் போது ராதாவ கூட்டிட்டு வர்றேன் ன்னு சொன்னான், இப்போதைக்கு குழந்தையை வச்சிட்டு வீட்ல தானே இருக்குது, ராதாவும் வந்து பார்த்துக்கிறேன் சொல்லிச்சு, அவங்க அம்மா கிட்ட சொல்ல சொல்லனும் இல்ல, அதனால தான் நந்தனிடம் சொல்ல சொன்னேன்” என்று சொன்னான்.
“சரிடா சரிடா, நீ எப்ப போகணும்” என்று கேட்டார்.
“கொஞ்சம் பெர்மிஷன் கேட்கிறேன்” என்றான்.
“முதல் செக்கப்புக்கு நீ கூட வாடா, அதுக்கப்புறம் நீ எப்படி எப்படி வாரியோ தெரியல, என்று சொன்னவர், காலண்டர் பார்த்து நாளைக்கு லீவ் போடு, இன்னைக்கு டாக்டர் விசாரித்து அப்பாயின்மென்ட் வாங்கு, நாளைக்கு அவளை டாக்டர் கிட்ட காட்டிட்டு வரலாம்”, என்றார்.
கதிரவனின் அக்காவிற்கு அழைத்துச் சொல்ல அங்கு ஒரு சந்தோஷ நிகழ்வு அரங்கேறிக் கொண்டிருந்தது.
ராதா நந்தன் வரும் போது இவள் தலையை விரித்து காயப்போட்ட படி சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
வரும் போது நந்தனோ அவளுக்கு பிடித்த ஸ்வீட் வாங்கிக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான்.
இவர்கள் வந்தது தெரியவும் கதிரவன் அம்மா இருவருக்கும் பாயாசம் கொண்டு வந்து கொடுத்தார்.
அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கையை பிடித்துக் கொண்டான், பின்பு தலையை கலைத்து விட்டு, “இனிமேல் பொறுப்பா இரு” என்று அவளிடம் சொன்னான்.
அவளோ “நான் எதுக்கு பொறுப்பா இருக்கணும், நீ தான் தாய் மாமா, நீ தான் பொறுப்பா இருக்கணும், இனிமேல் இந்த குழந்தையும் சேர்த்து நீ தான் வளர்க்கப் போற, அதனால நீ பொறுப்பா இரு”, என்று அவனுக்கு சொன்னாள்.
“இந்த வாய் மட்டும் உனக்கு குறையுதா, பாரேன்”, என்று சொன்னான்.
“அதெல்லாம் குறையாது இல்லடா பப்பு”, என்று அவனுடைய மகளிடமே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அது சரி இனிமேல் எல்லாத்தையும் சேர்த்து வைத்து நீ ஓட்டிற மாட்ட”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் மகிழ்ச்சியான சூழ்நிலையிலே நிறைந்திருந்தனர்,
வீட்டிற்கு தெரியப்படுத்தி இருந்ததை, நந்தன் சொல்லிக் கொண்டிருந்தான், அம்மா இன்று மாலை கிளம்பி வருவதாகவும் சொல்லிக் கொண்டிருக்க,
இவளோ ராதாவிடம் வந்து “கவனிக்குறதிலும் நாங்க இப்படி தான் கவனிப்போம் ன்னு எதுவும் போட்டி வராதே”என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அதெல்லாம் உங்க அண்ணன் அட்வான்ஸ் ஆ சொல்லியாச்சி, பக்கத்தில் இருந்து பார்க்க போறது அவங்க தான், சும்மா சும்மா எதுவும் சொல்லாதீங்க ன்னு” என்றாள்.
இவளும் சிரித்துக் கொண்டே ராதாவிடம் சந்தேகம் கேட்டு கொண்டிருந்தாள்.
சிறு குழந்தையின் வரவு என்பதே அங்கு மகிழ்வான நிகழ்வு தானே.