20

காலையில் ராதா  போய் யாழினியை எழுப்பி விட்டாள், அவளும் “அதுக்குள்ள ஏன் ராது எழுப்புற, கூட கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று சொன்னாள்.

   “அம்மா தாயே நீ நம்ம வீட்ல தூங்கிட்டு இருக்க, இப்ப குளிச்சு கிளம்பி உன் ஹஸ்பண்ட் வீட்டுக்கு போகணும், எழுந்துக்கோ எழுந்துக்கோ” என்ற எழுப்ப, அதன் பிறகு தான் திருமணம் ஆனதே நினைவு வந்து எழுந்தாள்.

     குளித்து உடை மாற்றி கிளம்பியவள், பால்கனி வழியாகவே கதிரவன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

   கதிரவனின் அக்கா தான் அவள் கையில் காபியை கொடுத்து, “தம்பி ட்ட கொடுத்துட்டு வா” என்று அனுப்பி வைக்க,

     “நீ காபி குடிச்சிட்டு போ” என்று கதிரவனின் அம்மா சொன்னார்.

    அவள் கையில் காபியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறி பார்க்க,  கதிரவன் அக்கா தான், “கையில் இருப்பதை நீ குடிச்சிரு, அதுக்கப்புறம் தம்பிக்கு எடுத்துட்டு போ, சூடா போட்டு தரேன்”, என்று சொன்னவர் அவளை குடிக்க வைத்து  பிறகு அவள் கையில் சூடாக வேறு கொடுத்து அனுப்பினார்.

    உள்ளே செல்லும் போது அவன் எழுந்து ரெப்ரெஷ் செய்து விட்டு வெளியே வருவதற்காக நிற்கவும், இவள் உள்ளே செல்லவும் சரியாக இருந்தது.

     கையில் இருந்து காபியை வாங்கி கீழே வைத்தவன், “நல்ல தூங்னீயா” என்று கேட்டான்.

     இவளும் “நல்ல தூங்கி எந்திரிச்சேன்” என்று சொன்னாள்.

அவனும் “அதுக்கு தான் அங்க போக சொன்னேன்” என்று சொல்லிவிட்டு அவளை தன் அருகில் இழுத்து கட்டிக் கொண்டவன்,

     “இப்போ கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே போனா போதுமா”, என்று கேட்டான்.

     இவளோ “அக்கா சொல்லி அனுப்பினாங்க, உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் ஆன் தி வே வாம், நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனுமாம், அப்படின்னா தான் பிரேக்பாஸ்ட் சீக்கிரமா முடிக்க முடியுமாம், அப்புறம்”, என்று சொல்ல,

     “அப்புறம் எல்லாம் ஒன்னும் கிடையாது, நம்ம ரெண்டு பேரும் பாண்டிச்சேரி கிளம்புறோம்”, என்று சொன்னான்.

   “லன்ச் க்கு அப்புறம் தானே கிளம்புறோம்” என்று கேட்டாள்.

    “கண்டிப்பா, ஆனா ஏன் என் கூட, கொஞ்ச நேரம் இருந்தா என்ன”, என்று கேட்டான்.

    “நோ நோ” என்று சொல்லி அவன் முகத்தை பார்த்தவள், “நான் இப்ப கொஞ்ச நேரம், உங்க அம்மா கூடயும், உங்க அக்கா கூடவும் இருக்கேன்”, என்று சொல்லி அவன் கையில் இருந்து நழுவி வெளியே போக,

    அவன் மீண்டும் இழுத்து தன் கைக்குள் கொண்டு வந்தவன், நீண்ட அழுத்தமான ஒரு இதழ் முத்தத்தை கொடுத்து, பெற்று அதன் பிறகே விட்டான்,

    மீண்டும் கண்ணாடி முன்னாடி சென்று நின்றவள், தன் முகத்தை சரிப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து முறைத்தாள், “ஒழுங்கா காபி குடிச்சிட்டு, குளிச்சிட்டு வந்து சேருங்க” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

இவனோ சிரித்துக் கொண்டே காபியை அருந்தினான்.

அதன் பிறகான காலை நேரம் இரு வீட்டிற்கும் கல்யாண வீட்டிற்கான கலை தொற்றிக் கொண்டது. அன்றே இரு வீட்டாரும் பொதுவான விருந்து என்று சமைத்தனர், சைவம் அசைவம் என சமைத்து வைத்தனர்.

    பாதி சமையல் கதிரவன் வீட்டிலும், பாதி யாழி வீட்டிலும் நடக்க, அவனது நண்பர்கள் தான், “பால்கனி ல நடுவில் கதவு இருந்ததற்கு பதிலா வீட்டுக்கு நடுவில் ஒரு கதவு இருந்திருந்தா, வசதியா இருக்கும்”, என்றனர்.

“தெரியாதே தெரிஞ்சிருந்தா, பர்ஸ்டே கதவு வச்சிருக்கலாமே” என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தாள் அக்கா.

    “டேய் கதிர் நல்ல வேலை பால்கனி கதவு இருந்துச்சு, இல்லை னா,  உனக்காக சுவரை தான் ஓட்டை போட வேண்டியது இருந்திருக்கும்” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர், அவன் நண்பர்கள்.

விருந்து சாப்பாடு எல்லாம் முடித்துவிட்டு அதன் பிறகு இவர்கள் பாண்டிச்சேரி கிளம்ப துவங்க நந்தன் தான், “டிரைவிங் க்கு யாரையாவது அரேஞ்ச்  பண்ணுவோமா”, என்று கேட்டான்.

  கதிரவனோ “அதெல்லாம் வேண்டாம், எனக்கு எந்த நேரத்திலும் ட்ரைவ் பண்ணி பழக்கம் தான்” என்று சொல்லி கிளம்ப துவங்கினான்.

கதிரவனின் அக்காவும் ராதாவும் சேர்ந்து “நம்ம அட்வைஸ் பண்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல, அதெல்லாம் அவனே பாத்துக்குவான்”, என்றார்கள்.

இவளோ தலையில் கையை வைத்து, “என் மானத்தை வாங்கிட்டு  இருக்காங்க” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

கதிரவனும் “கிளம்பலாமா இசை, வா போலாம்”, என்று சொன்னான்.

“எல்லாரையும் முதல்ல வீட்டுக்குள்ள போக சொல்லுங்க, எல்லாரும் வெளிய வந்து நிப்பாங்க, நான் வரல” என்று சொன்னாள்.

    “அடியே கடைசி நேரத்தில் கலட்டி விடாதே” என்று சொன்னான்.

  “எல்லாரையும் ஒரே வீட்டுக்குள்ள போட்டு அடச்சி வச்சிட்டு வாங்க, நம்ம கிளம்பலாம்”, என்று சொன்னாள்.

அதைக் கேட்ட கதிரவனின் அக்காவும், ராதாவும், “ஓஹோ உங்களுக்கு நாங்க டிஸ்டர்பன்ஸா இருக்கோமா, ஒழுங்கா கிளம்பி ஓடிப்போங்க, எங்களுக்கு தான் நீங்க டிஸ்டபன்ஸா இருக்கீங்க, நாங்க ஓ டி டி ல படம் பார்த்துவிட்டு ரெஸ்ட் எடுக்க போறோம், மீதி இருக்க சாப்பாடெல்லாம் நைட்டு வச்சு சாப்பிட்டுட்டு,  ரெண்டு நாள் நாங்க ஃபுல் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா,  கிளம்புங்க”, என்று சொல்லி கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தனர்.

   அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் கிளம்பி பாண்டிச்சேரி நோக்கி காரில் சென்றனர்.

முதலில் பைக்கில் சென்ற பயணத்தை பற்றி இருவரும் ஒருவரை ஒருவர் வாரி பேசிக்கொண்டே, கேலியும் கிண்டலுமாக அந்த பிரைவேட் பீச்சில் உள்ள ரெசார்ட்  ற்கே சென்றனர்.

   அங்கு விதவிதமான குடில்கள் இருக்க,  அதில் தான் அவன் எந்த குடில்  செலக்ட் செய்தான் என்பதை பற்றி சொல்லி இருந்தான், அதை தான் அன்று வந்து சொல்ல வந்திருந்தான்,  அதை இப்போது நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டனர்.

மூன்று மணியளவில் கிளம்பி இருந்த அவர்கள் இங்கு வந்து சேரும் போது 5 மணி தாண்டி இருந்தது.

வந்த உடனே  ரெசார்ட் ல் இருக்கும் இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு அவர்களுக்கான அறையில் பைகளை எல்லாம் வைத்தார்கள்.

    மீண்டும் கடற்கரையை நோக்கி சென்றனர். கடலில் கால் நனைத்து விளையாடி விட்டு கைகோர்த்து பேசிய படியே சற்று தூரம் நடந்து சென்று விட்டு வரும்போது தான், அவனோ “குளிச்சிட்டு அப்படி ஒரு அவுட்டிங் போயிட்டு வரலாமா” என்று கேட்டான்.

இவளும் சரி என தலையசைத்தாள், குளித்து இருவரும் உடைமாற்றிக்கொண்டு வெளியே கிளம்பி சென்று விட்டனர்,

     இரவு உணவு நேரத்தில் அங்கே வந்தவர்கள் உள்ளே  இருக்கும் ரெஸ்டாரண்டில் உணவருந்தி விட்டு வந்து சேர்ந்தனர்.

     அறைக்கு வரும்  போது “இசை இங்கேயே உட்கார்” என்று அவர்களுக்கு என கொடுக்கப்பட்ட குடிலுக்கு வெளியே இருந்த மூங்கில் ஊஞ்சலில் அவளை அமர வைத்து விட்டு அவன் செல்ல,

    இவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அவன் திரும்பி பார்த்தவுடன் “இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா, உங்களுக்கு” என்று சொன்னாள்.

     சிரித்தபடியே நின்றவன் “இரு இப்ப வாரேன்” என்று சொல்லி உள்ளே சென்றான்.

  அதே நேரம் அவர்கள் உணவருந்தி விட்டு  வரும் போது, பேரர் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு வந்திருந்தான். அதில் அங்கிருந்த ஊழியர் ஒரு பிளாஸ்க் கொண்டு வந்து இவளிடம் கொடுக்க, சரி என்று வாங்கி வைத்தாள்.