இரு வீட்டிலும் சம்மதம் என்ற நிலையில் இனி எப்படி பேசி முடிப்பது என்பது அவர்கள் கையில் தான்.

நந்தனுக்கும் கதிரவனின் அக்காவிற்கும்  வெளியில் சொல்லாவிட்டாலும் இருவருக்கும் ஒரே கவலை தான், இரண்டு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி இருவருக்கும் திருமணம் செய்வதற்குள் கலாட்டாக்கள் எத்தனை வரும் என்று எண்ணி பயந்து போய் இருந்தனர்.

கல்யாணம் நல்லபடியாக நடந்தால் சரி, கலாட்டாக்கள் நடந்து கலாட்டா கல்யாணமாக ஆகாமல் இருந்தால் நிம்மதி என்றே நினைத்திருந்தனர்.

மறுநாள் எப்போதும் போல அலுவலகம் கிளம்பி வெளியே வந்தாள் யாழினி.,

   காலையில் எப்போதும் போல எழுந்தவள் தனக்கு தேவையானதை சமைத்து வைத்திருந்தாள்,  காலை உணவாக இட்லி சட்னியை மட்டும் அத்தனை பேருக்கும் சேர்த்து செய்திருந்தாள்.

    மதியத்திற்கு அவளுக்கும் நந்தனுக்கு மட்டும் உணவை செய்து பாக்ஸில் எடுத்து வைத்திருந்தாள். அதை ராதா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

அப்போது ராதாவிடம் “மத்தியானத்திற்கு நீங்க சூடா செஞ்சு சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு இரண்டு பேக்குகளில் எடுத்து வைத்தவள், “அவன் ட்ட கொடுத்துவிடு” என்று  எடுத்து வைத்தாள்.

    இப்போது தனக்கான பையை எடுத்துக்கொண்டு அவள் கிளம்ப தொடங்கும் போது, யாழினி அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

   “இவளை நல்ல கேட்டு அனுப்பு ராதா, போயிட்டு வருவாளா, இல்ல அப்படியே போயிருவாளா ன்னு கேளு, ஏற்கனவே நேற்று போறதுக்கு ரெடியா இருந்தா தானே”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

    நந்தன் வந்தவன் “என்ன பேசுறீங்க சித்தி”, என்று சத்தம் போட்டு விட்டு “ஆபீஸ் தானே போறா, அவ வேலையை அவ பார்க்க வேண்டாமா”, என்றவன்,

    “சித்தப்பா வந்துட்டு இருக்காரு, தேவையில்லாமல் பேசி வைக்காதீங்க”, என்று சொல்லிவிட்டு தனக்கான லஞ்ச் பேக் எடுத்துக்கொண்டவன்,

   காலை உணவாக இட்லியை சாப்பிட்டவன், “அவ சாப்பிட்டாளா” என்று ராதாவிடம் கேட்டான்.

“கிச்சன்ல நின்னுட்டே ரெண்டு இட்லி சாப்பிட்டு போறா”, என்று சொன்னாள்.

  ” ஒரு ஜூஸ் போடு,  கிளம்பிட்டாளா,என்ன”, என்றான்.

  “அவ ரூம்ல இருக்கா”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “குடிக்க சொல்லு, இல்லன்னா பேக் ல வச்சி விடு” என்று சொன்னான்.

     ராதாவும் ஜூஸ் போட்டு எடுத்து அவள் பேக்கில் வைத்தாள். அவள் வந்து “என்னது இது” என்றாள்.

  ” ஜூஸ் தாண்டி போயி, காலையில குடி, நீ சரியா சாப்பிடல”, என்று சொன்னாள்.

   அவளிடம் தலையாட்டிவிட்டு வெளியே சென்றவள். லிப்டின் பட்டனை அழுத்தி விட்டு லிப்ட் வருவதற்காக காத்திருந்தாள்.

      அவள் லிப்டில் ஏறவும், நந்தனும் வந்து ஏறிக்கொள்ள,  அதே நேரம் கதிரவனும் வர நந்தனும் கதிர்வனையும் யாழினியும் பார்க்க அவர்கள் இருவரும் நேற்று நடந்ததற்கும் இன்று இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல யாரோ போல் நின்றிருந்தனர்.

      அவனுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது, ‘எப்படிடா இது ரெண்டும் இப்படி நிக்குது’ என்று யோசித்தான்.

    அதன் பிறகு தான் அவன் சொன்னது ஞாபகம் வந்தது, ‘யூனிபார்மை மாற்றிவிட்டு வந்ததாகவும், அவளுக்கு யூனிஃபார்மில் நின்றால் அருகில் செல்ல மாட்டாள்’ என்பதையும் நினைத்துக் கொண்டவன்.

‘இப்படி வேற இருக்கா’ என்று யோசித்து இருந்தான்.

  அதிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஒரு போதை பொருள் கும்பலை பிடிப்பதற்காக இவன் தலைமையில் போலீஸ் குழுவை உருவாக்கி, அவன் அதில் பொறுப்பேற்று இருந்தான்.

அதைப்பற்றி அந்த பொறுப்பு இவனுக்கு தரப்பட்ட உடனே யாழினிக்கு சொல்லி இருந்தான், “இப்போதைக்கு நான் ரொம்ப டைட்டு வொர்க் ல இருக்கேன், எனக்கு  இந்த வொர்க்   கொடுத்து இருக்காங்க, சோ எனக்கு டைம் கிடைக்கும் போது தான் நான் உன்கிட்ட பேசுவேன்,  வேற எதுவா இருந்தாலும் உனக்கு நான் மெசேஜ் பண்ணி விடுறேன்” என்று அவளிடம் சொல்லி இருந்தான்.

அவளும் சரி என்று சொல்லி இருந்தாள்.

   அன்று வீட்டில் பெரியப்பா, அப்பா, பெரியம்மா, அம்மா என்று அனைவரும் இருக்க, அன்று தான் நியூஸில் இந்த போதை பொருள் தடுப்பு குழுவை பற்றியும், அதில் இவன் தலைமை பொறுப்பில் இருப்பதை பற்றியும் நியூசில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அத்தனை பேரும் ஆர்வத்தோடு அப்படியா என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இவளோ எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக தன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்,

” என்ன அங்க ஒரு ரியாக்சனும் காணும்” என்று நந்தன் ராதாவிடம் கேட்டான்.

    ராதாவோ “டிவி நியூஸ்க்கு போறதுக்கு முன்னாடியே, அந்த நியூஸ் உங்க தங்கச்சிக்கு வந்து இருக்கும், இன்னுமா வராமல் இருக்குன்னு நினைக்கிறீங்க, முதல்ல அவருக்கு நீங்க தான் தலைமை பொறுப்பேற்க போறிங்கன்னு சொன்ன உடனே, உங்க தங்கச்சிக்கு போன் போட்டு சொல்லி இருப்பாரு, உண்டா இல்லையா நீங்க போய் கேளுங்க”, என்று சொன்னாள்.

“நீ வேற பேசாம இரு, பதில் சொல்ல மாட்டா”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

இரண்டு வீட்டிலும் பெரியவர்களை சம்மதிக்க வைக்க சிறியவர்கள் போராடி சம்மதிக்க வைத்திருந்தனர்.

இன்னும் நேரடியாக திருமணத்தைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை,  ஆனால் கதிரவனின் அக்கா ராதாவிடமும் நந்தனிடமும் சொல்லியிருந்தார்,

    “நீங்க எப்போ சொல்றீங்களோ, அப்ப நாங்க வந்து நேரடியா பேச வாறோம், நீங்க தான் டெலிவரி ஆகணும்னு சொல்லி இருக்கீங்க இல்ல”, என்று சொன்னவுடன்,

   “ஆமா இன்னும் ஒரு வாரத்துக்குள் டெலிவரி இருக்கும்” என்று ராதா சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவரவர் வேலைகளில் அவரவர் கவனமாய் இருக்க ராதாவின் பிரசவ நாளும் வந்தது, ராதாவிற்கு வலி வந்து மருத்துவமனையில் சேர்த்து இருப்பது தெரிந்தவுடன் அலுவலகத்தில் இருந்து நேராக மருத்துவமனை வந்து விட்டாள் யாழினி.

ஏற்கனவே நந்தன் அவளோடு இருந்ததால், அனைவரும் குழந்தையின் வரவுக்காக காத்திருக்க, ராதாவை சற்று கஷ்டப்படுத்தி விட்டே ராதாவின் மகள் வந்து பிறந்திருந்தாள்.

அனைவரும் மாறி மாறி தூக்கி பார்த்த பிறகு ராதாவின் கையில் நந்தன் கொடுக்க, அவளோ வாங்கி தன்னோடு சேர்த்து பிடித்திருந்தாள்.

    “ஒய்க்குட்டி, தெரியுதா நான் தொட்டது உனக்கு புரியுமா”, என்று குழந்தையோட கதை பேசிக் கொண்டிருந்தவள்.

தன்னோடு சேர்த்து பிடித்தபடி ஒரு ஓரமாக அமர்ந்து விட்டாள்,

   “நீ என்ன பண்ற நான் சொல்ற மாதிரிலாம் சேட்டை பண்ணனும், இவங்க ரெண்டு பேரையும் உண்டு இல்லைன்னு ஆக்கணும், அப்ப தான்  நீ எனக்கு செல்ல குட்டி சரியா”, என்று சொன்னாள்.

அதுவும் பிறந்த குழந்தை, கண்ணைத் திறந்து அவளைப் பார்ப்பதும், கண்ணை மூடுவதுமாக சிமிட்டிக் கொண்டிருந்தது.

    அருகில் வந்து பார்த்த நந்தனோ, “பிள்ளைக்கு என்ன சொல்லிக் கொடுக்க”, என்று கேட்டான்.

    “நல்லது தான் சொல்லிக் கொடுப்பேன்”,என்றவள், “அத்த உனக்கு நல்லது தானே சொல்லி கொடுத்தேன்”, என்று குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

    “உங்க அப்பாக்கு அறிவே இல்லமா” என்று சொன்னாள்.

    “ஆரம்பிச்சுட்டா, இவ்வளவு நாள் அவகிட்ட உன் புருஷன் மண்டையில் அறிவு இல்லைன்னு சொன்னா, இப்ப என் பிள்ளை கிட்ட சொல்லிக் கொடுக்குறா, நல்ல ஆளு நீனு”, என்று சொன்னான்.

   “நீ பிறந்த உடனே எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கணும், அதுக்காக தான் உனக்கு அத்தை சொல்லி கொடுத்தேன், நீ அத்தை பேச்ச மட்டும் தான் கேட்கணும்”, என்று சொன்னான்.