அதே நேரம் அங்கு வந்த நந்தன், “நீ என்ன செய்ற இங்க,  உனக்கு ப்ராஜெக்ட் வொர்க் இல்லையா”, என்று ராதாவை பார்த்து கேட்டான்.

    ராதாவும் “ஒன்னுமில்ல உங்க தங்கச்சி இன்னைக்கு பிரைட்டா இருந்தா, அதான் என்னன்னு கேட்க வந்தேன், அவ கடலைமாவு தயிர் ன்னு கதை சொல்லிட்டு இருக்கா”,

என்று சொன்னாள்.

“சரி கேட்டுட்ட இல்ல, போய் சாயந்திரம் போட்டுக்கோ, இப்போ கிளம்பு”, என்று சொன்னான்.

“பாருடி நான் என்ன  உன்னை பார்த்து பொறாமையா படுறேன், போட்டுக்கோ அப்படின்னு சொல்லி, உங்க அண்ணன் எப்படி சலிப்பா சொல்றாருன்னு,  இதே இது  உனக்கு டிப்ஸ் சொல்லனும்னா மட்டும் நல்ல டிப்ஸா சொல்லு,  அப்படின்னு சொல்றது,  அதே  இது நான் உன்கிட்ட எதுவும் கேட்டால், போதும், இருக்கிறது போதும் கிளம்பு அப்படின்னு சொல்றது,  இதெல்லாம் அநியாயம் பார்த்துக்கோ,  ஓவர் தங்கச்சி பாசமா இருக்கு”, என்று சொல்லி சிரித்துக் கொண்டே இடத்தை காலி பண்ண போகவும்,

    “ஓய் ராது” என்று யாழினி அழைத்தாள்,

     ‘என்ன’ என்று அவளும் தலையை அசைத்து கேட்க,

      அவளோ “இந்த தயிர், கடலைமாவு, மஞ்சள்,  இதுகூட தேன் போட்டுக்கோ,  காபித்தூள் போட்டுக்கோ,  இன்னும் பளிச்சுனு ஆயிடுவ” என்று சொன்னாள்.

“உன்னை நம்பி இதெல்லாம் போட்டேன்னு வை, நான் என்னத்துக்கு ஆகுறது”, என்றாள்,

    ” நான் வேணா அந்த டிப்ஸ் உனக்கு அனுப்பி வைக்கிறேன் பாரு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அவளோ “சரி சரி பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டே சென்றாள்.

      இவனோ அவளை பார்த்து “வேலையை பாரு வெட்டி அரட்டை அடிக்காத” என்று யாழினியை  சொல்லிவிட்டு செல்லவும்,

    “மூஞ்ச பாரு இவன் பொண்டாட்டி வந்து பேசுனதுக்கு, நான் என்ன செய்வேன், நல்ல ஆட்கள் புருஷனும் பொண்டாட்டியும்”, என்று திட்டிக்கொண்டே தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

ஒரு பக்கம் வேலையை பார்த்துக் கொண்டே இருந்தாலும் மனம் என்னவோ ராதா சொன்னதிலேயே நிலைத்திருந்தது.

     “அவ்வளவுஉஉஉ பிரைட்டாவாஆஆ   இருக்கு”, என்று கிண்டல் குரலில் சொல்லிக் கொண்டவள்,  ‘ஒரு நாள்ல தெரியுமா என்ன,  அச்சோ’, என்று நினைத்தவள்,

ரெஸ்ட் ரூம் செல்வது போல அங்கு போய் தன் முகத்தை ஆராய்ச்சி செய்து விட்டு “இல்லையே எப்பவும் போல தானே இருக்கேன்”, என்று யோசித்துக் கொண்டே வந்து மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தாள்,

    அவள் இருக்கையில் அமர்ந்து தன் வேலையை தொடங்கிய சற்று நேரத்தில் கால் வர எடுத்துப் பார்த்தாள்,  அது கதிரவனின் அழைப்பாக இருந்தது.

     மெதுவாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தவள் நந்தன் வேலையில் இருப்பதை அறிந்து கொண்டு எடுத்து மெதுவாக காதில் வைத்தாள்.

         மெதுவான குரலில் “என்ன” என்றாள்.

  அந்த பக்கம் இருந்தும் “என்ன” என்றான்.

      “நீங்க தான் போன் பண்ணீங்க, என்னன்னு கேட்டேன்”, என்று சொன்னாள்.

     “நான் காலையில ஸ்வீட் மார்னிங் போட்டேன், ஹேப்பி மார்னிங் போட்டேன், பதிலுக்கு ஒரு மார்னிங் காவது நீ போட்டியா”, என்றான்.

        “எல்லா மார்னிங் ம் உங்களுக்கு நல்ல மார்னிங் ஆ தான் இருக்கும், எனக்கு தெரியும் சொல்லுங்க, என்ன”, என்று கேட்டாள்.

    “என்ன என்னன்னு, கேட்டுட்டு இருக்க, நான் கேக்குறதுக்கு மட்டும் இப்ப பதில் சொல்லு, மெசேஜ் பார்த்தவுடன் என்ன தோணுச்சு”, என்றான்.

    “ஒன்னும் தோணல,  நல்ல கடமை வீரன் அப்படின்னு தோணுச்சு, இப்ப என்ன” என்று கேட்டாள்.

      “உங்க கடமை முடிஞ்சிட்டு, போல, ஆனா என் கடமை கம்ப்யூட்டர் ரூபத்தில் என் முன்னாடியே உக்காந்து இருக்கு, நானும் என் கடமையை பாக்கணும் வைக்கவா”, என்று கேட்டாள்.

       “அடியே  காலையிலிருந்து உன்னை பார்க்கனும்,  உன்கிட்ட பேசணும் ன்னு எவ்வளவு நேரமா தவிச்சு போய்,  12 ஆக போது இப்பதான் நான் கூப்பிட்டு இருக்கவே செய்கிறேன்,  சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கேட்டீயா,  காலைல அவ்ளோ ஏர்லியரா போனீங்களே என்ன விஷயம் ன்னு கேட்கலாம்,  எவ்வளவோ இருக்கே”, என்று அவன் கேட்டான்.

     அவளோ “ஐயா கடமை வீரரே, உங்களோட ஒர்க்கு எப்படி இருக்குன்னு ஓரளவுக்கு கேள்விப்பட்டிருக்கேன்,  எப்பவும் பிஸி ஒர்க்,  உங்களுக்கு ரெஸ்ட்டே இருக்காது,  அதுவும் தெரியும்,  கிடைக்கற டைம்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டா தான் உண்டு, என்று தெரியும், அதே நேரம் உங்களுக்கான ஃபுட் நீங்க ஆபீஸர் கிரேடுல இருக்கிறனால, எப்படினாலும் உங்களை தேடி வந்துரும்னு தெரியும்,  இப்ப நான் கேட்டதுனால தான் நீங்க சாப்பிட போறீங்களா, இல்ல கேட்டா தான் இனி சாப்பிடவே போறீங்களா சொல்லுங்க”,  என்றாள்.

 “ஆமா இதெல்லாம் நீ என்ன பார்த்ததுக்கு அப்புறம் தேடி கண்டுபிடித்த விஷயம் தானே”, என்று சொன்னேன்.

      “இல்லையே,  நிறைய பேரு இந்த போலீஸ் எல்லாம் ஹீரோவா போட்டு கதை எழுதுறாங்களா,  அவங்க கிட்ட இருந்து கத்துக்கிட்ட விஷயம் இதெல்லாம்”, என்று சொன்னாள்.

     “நீ கதையெல்லாம் வேற படிக்கிறியா” என்று கேட்டான்.

    “எப்பவாவது டைம் பாஸ்க்கு” என்று சொன்னாள்.

     “ஓஹோ அப்போ அதுல என்ன எல்லாம் எழுதி இருப்பாங்க”, என்றான் கேள்வியாக,

       “கடமை வீரர்களை பற்றி கவிதையா, எழுதி இருப்பாங்க,  அவங்க காதலை விழுந்து விழுந்து எப்படி பண்ணுறாங்கன்னு சொல்லி இருப்பாங்க”, என்று சொன்னாள்.

 “அப்போ எங்களுக்கெல்லாம் காதலிக்க நேரம் இருக்குன்னு சொல்றாங்க, அப்படிதானே”, என்றான்.

   “ஐயோ பாவம் கதையில் ஆவது  காதலிச்சிட்டு போட்டுமேன்னு சொல்றாங்க போல வேற ஒன்னும் இல்ல”,  என்று சொன்னாள்.

 “ஓஹோ அப்படியா சரி சரி, கதைல அப்படி இருக்கட்டும் நாம வேற மாதிரி இருப்போம்,  இப்ப ஒரே ஒரு நிமிஷம் வீடியோ கால் வரீங்களா மேடம்,   உன்னை ஒரே ஒரு தடவை பார்த்துக்கிறேன்” என்றான்.

      “வீடியோ கால் எல்லாம் நோ, இது ஆபீஸ் இங்க எல்லாம் வீடியோ காலில் எல்லாம் பார்க்க முடியாது,  ஈவினிங் பார்க்கலாம்” என்று சொன்னாள்.

        “ஒர்க் இருக்குடா நான் ஈவினிங் வரதுக்குமே, நேரம் ஆகும் ஒரு மர்டர் கேஸ் கொஞ்சம் டைம் எடுக்கும், முடிஞ்ச அளவு முடிச்சு பார்ப்போம்”, என்றான்,

 “என்னது மர்டர் கேஸா” என்று இவள்  மெதுவான குரலில் கேட்டாள்.

  இவள் குரலை மாற்றி கேட்ட உடன், அந்த புறம் சிரித்தவனோ “இப்ப நீ திருட்டு முழி முழிக்கிறியா” என்று கேட்டான்,

        ” எப்படி முழிக்கிறேன்”, என்று  எல்லாம் தெரியாது”., என்று சொல்லும் போதே அவளுமே ஏற்கனவே தன் முகபாவனைகளை மாற்றியது நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்,

       அவளை அறிந்தவனாக , அவள் மெதுவாக கேட்டதை நினைத்து சிரித்துக் கொண்டடிருந்தான்.

, “மர்டர் கேஸ் னா  கண்டுபிடிக்கிறதுக்கு லேட் ஆகுமா”, என்றாள் .

      “சில கேஸ் யாருன்னு தெரியாலை னா லேட் ஆகும் இந்த மாதிரி மர்டர் கேஸ் எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டில,  பழிக்கு பழி அந்த மாதிரி பண்ணுவாங்க,  இது  கிட்டத்தட்ட அந்த மாதிரி மர்டர் கேஸ் தான்., சோ இதெல்லாம் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம் அதுக்குள்ள யாராவது வந்து சரண்டர் ஆயிடுவாங்க” என்று சொன்னான்.

 “ஆனால் கொலை பண்ணுனவங்க வந்து சரண்டர் ஆக மாட்டாங்களா” என்று அவனிடம் கேட்டாள்.

       “ஆமா நீ எப்ப போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு வேலைக்கு சேர்ரதா இருக்க, இவ்வளவு ஆராய்ச்சி பண்ற”,  என்று கேட்டான்.

“இல்லையே நான் என்னோட ஒர்க்கு தான் பார்ப்பேன்” என்று சொன்னவள்.

    “ஆமா நீங்க தான் சொல்றீங்க, நான் கேட்கலனாலும்,  நான் எங்க போனேன்னு கேட்டியா,  என்ன கேஸ்ன்னு கேட்டியா ன்னு, அப்புறம்  நான் கேட்டாலும் ஏன் இதெல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்றேன்னு கேக்குறீங்க,  ரொம்ப கேர் ஃபுல்லா பேசணும்”,  என்று  மெதுவாக பேசிக் கொண்டிருக்க,

     தூரத்தில் ராதா இவளை நோக்கி வருவது தெரிந்ததும் “ஓகே வைக்கிறேன், ராதா வந்துகிட்டு இருக்கா”, என்று சொன்னாள்.

      “சரி இப்ப வந்தா என்ன”, என்றான்.

       “புரியாம பேசாதீங்க, அவ காலையிலிருந்து என்கிட்ட ஒண்ணுன்னா குடைஞ்சு குடைஞ்சு கேட்டுட்டு இருக்கா,  நீ ஏன் ஒரு மாதிரி இருக்க,  உன் முகம் ஏன் நல்ல ப்ரைட்டா இருக்குன்னு கேட்டுட்டு இருக்கா,  நான் அத , இத பண்ணேன்னு சொல்லிட்டு இருக்கேன், வந்துட்டா வந்துட்டா பக்கத்துல வந்துட்டா வைங்க, வைங்க”, என்றாள்.

அவனும் சிரித்துக்கொண்டே “சரி கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு வைத்தான்.

     இவளும் வைத்துவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள்,  ஐயோ இந்த மனுஷன் இப்படியா பாடா படுத்துவார் ,

கண்ட நேரத்தில் போன் பண்றாரு” என்று முணங்கி கொண்டே போனை எடுத்து நிதானமாக தன்னுடைய கம்ப்யூட்டருக்கு கீழே வைத்து மூடியவள், எப்போதும் வேலை பார்ப்பது போல அமர்ந்து கொண்டு,  ராதா வரவும் அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

    ராதாவும் “இப்ப எதுக்குடி இப்படி ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க”,என்றாள்.

    “அதெல்லாம் ஒன்னும் இல்ல,நீ அடுத்து என்ன டிப்ஸ் கேட்க வந்திருப்ப ன்னு நினைச்சுட்டு சிரிச்சேன்”, என்றாள்.

      “பார்த்தா அப்படி தெரியலையே, ஆமா யாரு கிட்ட போன்ல பேசிட்டு இருந்தா”, என்றாள்.

    “என் பிரண்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன். நீ என்ன புதுசா கேள்வி கேட்குற, அது என் காலேஜ் ஃப்ரெண்ட்”, என்றாள்.