பின்பு அவளைப் பார்த்து “நிஜமா உன்னை மறக்கணும்னு, அந்த நேரத்துல நான் எஃபெக்ட் போடலைன்னா, இந்த இடத்துக்கு வந்து இருக்கவே மாட்டேன், ஆனாலும் மறக்கவே முடியல, என்னடி பண்ண அஞ்சு நாள் தானே பார்த்தோம்”, என்று கேட்டான்.
இவளோ அவனை முறைத்து பார்க்க, அவனோ இவளை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்,
“நிறைய பேசினோம் இல்ல, நிறைய நிறைய பேசினோம் ஆனால் என்ன பேசினோம் ன்னு தெரியல, யோசிக்கும் போது இவ்வளவு பேசினோமா அப்படின்னு தோணுது இல்ல”, என்று அவன் கேட்க,
இவளோ அவனை சிரித்தபடி பார்த்திருந்தாள், அதிகமாக வாய் அடிக்கக் கூடியவளோ அன்று அமைதியாக இருக்க, இத்தனை நாள் பேசாதது எல்லாம் சேர்த்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்.
“சரி சொல்லு ஆறு வருஷத்தை மீட்டுருவோமா” என்று கேட்டான்.
இவளோ “உங்க பொசிஷனை மறந்துட்டே பேசுறீங்க, நான் ஒர்க் ப்ரம் ஹோம் னு சொல்லிட்டு வீட்ல உக்காந்துக்குவேன், போன்ல பேசலாம், நீங்க சொல்ற மாதிரி மீட்க முயற்சி செய்யலாம் ஓகே, ஆனா நீங்க என்ன பண்ணுவீங்க”, என்று கேட்டாள்.
அவனோ சிரித்தபடி “வீட்ல இருந்து பேசுறதா இருந்தா, போன் எதுக்கு, இப்படி நேரிலேயே வந்து உன்னை கட்டிப்பிடித்துட்டே பேசலாம், அப்பப்போ உன்ன இப்படி கிஸ் பண்ணலாம்”, என்று கன்னத்தில் முத்தமிட வரவும் இவ்ளோ அவனை தள்ளிவிட்டாள்.
“நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க, கிளம்புங்க” என்று அவனை கிளப்புவதில் பிடியாக நிற்க,
அவனும் சிரித்துக்கொண்டே “நான் சாம்பிள் தான் சொன்னேன்”, என்று சொன்னான்.
“வேண்டாம் நான் பேசவே வரலை ஆபீஸ்க்கு போறேன்” என்று சொன்னாள்.
“ஆபீஸ் டைம் போக மீதி நேரத்தில் பேசலாம்” என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடிக்க,
இவளோ “கண்ண குத்திடுவேன்” என்று சொல்லவும்,
சுத்தி முத்தி பார்த்தவன் “நல்ல வேளை இந்த ரூம்ல அடிக்கிற மாதிரி எதுவும் இல்லை” என்று சொன்னான்.
“நேரம் ஆயிடுச்சு போங்க” என்று அவனை தன்னோடு சேர்ந்து இருந்தவனை தள்ளி நிறுத்தினாள்.
“கிளம்ப தான் போறேன், ஆனா ஒரே ஒரு நிமிஷம்” என்று சொல்லி மீண்டும் அருகில் வந்தவன், அவள் கன்னம் இரண்டையும் பற்றி தன்னை பார்த்து நிமித்தியவன், “இது காலேஜ்ல வச்சு நான் சொல்ல நினைச்சது இல்ல, அத நான் கல்யாணத்துக்கு அப்புறம் தான் சொல்லுவேன் ன்னு சொல்லிட்டேன், ஆனா இது என்னன்னா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேக்குற ஒரு சின்ன அப்ளிகேஷன், அப்ளிகேஷன் போடும் போது வெறுமனே அப்ளிகேஷன் போட கூடாதாம்”, என்றான்.
“அதுக்கு” என்று இவள் கேட்க,
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா, என்னை கல்யாணம் பண்ணிக்கோ, என்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்திடாத, என்னை கண்டிப்பா பண்ணிக்கிறேன்னு சொல்லு” என்று அடுக்கியவன்,
அவள் சிரிக்கவும் அவள் நெற்றியில் ஒரு முட்டு முட்டி விட்டு, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
இவளோ அதிர்வாக அவனைப் பார்க்க, “இங்க தான் கொடுத்தேன், வேற எங்கேயும் கொடுக்கல இல்ல”, என்று சொல்லிவிட்டு சிரித்தபடி மீண்டும் அவளை இருக்க அணைத்து விட்டு “ஸ்வீட் ட்ரீம்ஸ் இசை” என்றான்.
திரும்பி பால்கனி கதவை நோக்கி இரண்டு எட்டு நடந்தவன், மீண்டும் திரும்பி அவள் நின்ற இடத்திற்கு வர,
“என்ன” என்று கேட்டாள்.
அவனும் “இல்ல அன்னைக்கு ஒரு ஷால வச்சி என் நெற்றியில் ரத்தத்தை அழுத்தி பிடிச்ச இல்ல, அந்த ஷால் பத்திரமா வச்சி இருக்க தானே”, என்று கேட்டான்.
இவளோ தலையை மட்டும் அசைத்தாள், “தெரியும் வச்சிருப்ப ன்னு எனக்கு தெரியும்” என்று சொன்னவன்,
“அப்புறம் அன்னைக்கு உன் கிட்ட இருந்து நான் ஒன்னு எடுத்துட்டு போனேன், ஞாபகம் இருக்கா” என்று கேட்டான்.
“இல்ல” என்று தலையாட்டும் போது,
“இல்ல நம்ம மூணாவது நாள் நினைக்கிறேன், பேசிட்டு இருக்கும் போது நீ உன் கையில குட்டியா ஒரு வெள்ளி மோதிரம் போட்டிருந்த,ஞாபகம் இருக்கா, அது நீங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒன்று போல வாங்குனதுன்னு சொல்லிட்டு இருந்ததா ஞாபகம், நீ சொன்ன ரொம்ப ப்ரிசியஸ் என்னோட ஸ்கூல் எண்ட்ல ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்குனது, என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் நியாபகமா நான் வச்சிருக்கேன் அப்படின்னு, சொன்ன, அதுல குட்டியா உன்னோட நேம் அடிச்சி இருக்கும், ஞாபகம் இருக்கா”, என்று கேட்டான்.
வேகமாக தலையாட்ட “அத உன் கையில் இருந்து உருவிட்டு போனேன்”, என்றான்.,
இவள் அதிர்ச்சியாக முழித்தாள், “எப்போ” என்று கேட்கும் போது “இந்த தலையில காயம் வந்த அன்னைக்கு உன்னை பிடிச்சி அந்த பில்டிங்கு பின்னாடி அங்க போ அப்படின்னு தள்ளி விட்டேனா, தள்ளி விடும் போது உன் கையில் இருந்து உருவிட்டேன், நீ அந்த டென்ஷன்ல சரியா கவனிக்கல” என்று சொன்னான்.
அவள் வாயில் கையை வைத்து மூடியவள் “கேடி திருடன்” என்றாள்.
“இப்ப போலீஸ்” என்று அவன் சொல்லிவிட்டு அவள் தலையை பிடித்து ஆட்டிவிட்டு நாளைக்கு பார்ப்போம், ஸ்வீட் ட்ரீம்ஸ் இசை” என்று சொன்னான்.
அவனைப் பார்த்து முறைத்தவள் “அது எப்படி காணமல் போச்சு ன்னு நான் தலைய பிச்சிட்டு இருந்தேன்” என்றாள்.
“பத்திரமா இருக்க வேண்டிய இடத்தில் இருக்கு”
என்று அவனும் கண்ணடித்து விட்டு “நீ எனக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ், சொல்லாட்டி கூட எனக்கு இன்னைக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் தான் வரும்” என்று சொல்லிவிட்டு பால்கனி இடையே உள்ள கதவை திறந்து கொண்டு அவன் வீட்டு பக்கமாக சென்று மீண்டும் அதே போல பூட்டியவன், தன் அறைக்கு சென்று நீண்ட நாளுக்கு பிறகு நிம்மதியான உறக்கத்திற்கு சென்றான்.
இவளோ சற்று நேரம் அதே இடத்தில் நின்றவள் வெளியே வந்து பார்க்க பால்கனியின் இரண்டு வீட்டிற்கும் நடுவில் உள்ள கதவு பூட்டப்பட்டிருந்தது, “கேடி” என்று சொல்லிவிட்டு அவள் அறியாமல் முகத்தில் லேசான சிரிப்பு வர, தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், அவள் வீட்டு கதவை பூட்டிவிட்டு பாட்டை எல்லாம் நிறுத்திவிட்டு தன் அறைக்கு சென்றாள்.
அந்த பர்ஃபியூம் ஸ்மேல் முகர்ந்தவுடன் அவன் சொன்னது தான் நினைவுக்கு வந்தது, உண்மை தான் அந்த வாசம் கடைசி நாள் அவன் அருகில், மிக அருகில் வரும் போது அவள் அதிகமாக சுவாசித்தது மட்டுமல்லாமல், ஷாலை வைத்து அவனை நெற்றியில் ரத்தத்தை அழுத்தி பிடிக்கும் போதும் , அந்த ஸ்மல் அதிகம் தெரிந்தது, அவன் மேல் ஷால் பட்டிருந்ததால் பர்ஃபியூம் வாசமும் ஷாலில் இருந்தது,
பின்பு நீண்ட நாட்களாக அந்த ஸ்மெல் அவளுக்கு நினைவு இல்லை, ஆனால் ஒரு முறை பெர்ஃபியூம் வாங்க கடைக்கு சென்று இருக்கும் போது, ஒவ்வொரு பர்ஃபியூம் ஆக ஸ்மெல் செய்து கொண்டிருக்கும் போது, இந்த பர்ஃபியூம் பார்த்தவுடன் இவளுக்கு அவன் நினைவு வர, அதை ஒன்று வாங்கிக் கொண்டாள்,
அதன் பிறகு அதை தன் அறையின் வாசமாகவே மாற்றி விட்டாள், படுக்கப் போனவள், அவன் ‘அந்த ஷால் வைத்திருக்க தானே’ என்று கேட்டது நினைவு வர,
தன்னுடைய உடை வைத்திருந்த கபோர்டு திறந்தவள், அதன் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஷாலை எடுத்து பார்க்க, அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து, அதை துவைத்து இருந்தாலும் , அதில் ஆங்காங்கே சிறிய கரை போல இருந்த அந்த ரத்தக்கரை ஆறு வருடங்களுக்குப் பிறகும் லேசாக இருப்பது தெரிந்தது,
மீண்டும் அதுபோலவே சுருட்டி வைத்தவள் படுத்தவுடன் உறக்கம் வராமல், வேறு ஏதோ நினைவுகளுக்கு சென்று விட்டே, அதே நினைவுகளோடு உறங்கி விட்டாள்.
இருவரும் டீன் ஏஜ் தாண்டியாச்சு, ஆனாலும் இருவர் வீட்டிலும் காதல் என்று போய் நிற்கும் போது சம்மதிப்பார்களா, என்ற பயம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது யாழினிக்கு,
அதைப்பற்றி சிறிதும் பயம் இல்லாமல் இருந்தவன் கதிரவன் தான், என்ன செய்து விடுவார்கள் என்று தைரியம் அவனுக்குள் இருந்தது, ஆனாலும் வீட்டில் பேச வேண்டும் தனியே அம்மா அப்பாவிடம் பேசுவதை விட, அக்காவை அருகில் வைத்துக் கொண்டு பேசினால் வசதியாக இருக்கும், என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
பிள்ளைகளுக்கு எப்படியும் பரிட்சை முடிந்தவுடன் அக்கா இங்கு வருவாள், அப்போது பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்,
அதுவரை விட்ட ஆறு வருடங்களுக்கு சேர்த்து வைத்து அவளிடம் வம்பு வளர்க்க வேண்டும் என்பதை மட்டும் பிரதானமாக நினைத்து இருந்தான்,
இவளோ அவன் சொன்ன ஆறு வருடத்தை எப்படி ஈடு செய்யப் போகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள், ஆனாலும் மனதில் ஒரு இனம் தெரியாத நிம்மதி இருப்பதை உணர முடிந்தது.