“அட என்னம்மா என்னபத்தி சொல்லாம விட்டுட்ட” என்று கேட்டவாறு வந்தார். முன்பு மீனாவுடன் பேசிய அதே பெண் கையில் டீ கப்புடன்.

“ம்கூம்…. உன்னை சொல்லாம விடுவேனா. இங்க பாருங்க.இவங்கதான் முனியம்மா. எங்களுக்கு எல்லாமே இவங்கதான்” என்று சொல்லி சிரிக்க,

முனியம்மாவோ கோவமாக “என்னம்மா நீ நான்தான் என் பேர முனிஷ் மொத்துவாணினு பேர மாத்திட்டேன்ல அப்புறம் ஏன் பழைய பேர சொல்ற? ட்ரெண்டிங்கு வா” என்று சொல்ல,

மீனா ஆவென்று பார்க்க ஸ்ரீயோ வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். “என்ன பேரு மொத்துவாணியா….. அது என்ன பேரு”.

“ஆமா ஹன்சிகா மொத்துவாணி, ரெஜினா மொத்துவாணி மாதிரி முனிஷ் மொத்துவாணி”என்க,

இரு பெண்களும் அவரை இப்படியெல்லாம் உன்னால மட்டும்தான் யோசிக்க முடியும்னு என்னும் ரேஞ்சில் பார்த்து வைத்தனர்.

“சரி என் பேர் கிடைக்கட்டும் இந்த வீட்டில் ஆல் இன் ஆல் நான்தான். சரி இப்போ உன் பேர் சொல்லு. எங்க போகணும் சொல்லு. அதுக்கு முன்னாடி இந்த டீய குடி” என்று அவளிடம் ஒரு கப்பை குடுத்தவர் ஸ்ரீயிடம் ஒரு கப்பை குடுக்க அவளும் வாங்கி குடித்து கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

சற்று நேரம் அங்கே அமைதியே நிலவியது. பின் முனிஷ் இப்போ சொல்லுமா உன் எஸ் டி டிய என்க,

மீனா அவரை புரியாமல் பார்த்தாள். ஸ்ரீயோஅவங்க கொஞ்சம் வடிவேலு ரசிகர் அப்படிதான் பேசுவாங்க. நீங்க சொல்லுங்க. உங்க பேர் என்ன?. உங்க ஊர் என்ன?ஏன் வண்டில விழுந்தீங்க.

“என் பேரு மீனாங்க” என்று சொல்ல,

ஸ்ரீயும் “நீங்க எந்த ஊர். எங்க போக வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா , நானே உங்களை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கறேன்” என்று சொல்ல,

மீனாவோ பெருமூச்சுடன் “ நான் இருந்த இடத்துல என் குழந்தை உயிர்க்கு ஆபத்து. அதான் அங்க இருந்து ஓடி வந்துட்டேன். அப்படி வரும்போதுதான் அந்த ஆள் துரத்திட்டு வந்தான்.

நான் பயந்து போய் ஓட ஆரம்பிச்சேன் உங்க வண்டில விழுந்துட்டேன்” இதுக்கு மேல வேற எந்த விவரமும் என்கிட்ட கேட்காதீங்க. ப்ளீஸ்….. என்னை புரிஞ்சுக்கோங்க”என்க,
அவளையே ஆழ்ந்து பார்த்த ஸ்ரீ “சரி ஓகே. உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைனா பரவால்ல, எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லுங்க”என்னும்போதே,

“ஸ்ஸ்…” என்று ஸ்ரீயை அழைத்தார் முனிஷ், அவள் கவனிக்கவில்லை என்பதை அறிந்து கடுப்பானவர், அவள் கையை பிடித்து ஓரமாக இழுத்து சென்று “சிரி பாப்பா……அது……”

“அட என்ன முனிஷ் நீங்க. இப்போ என்ன ஜோக் நடந்தது சிரிக்க”.

“சிரி பாப்பா விளையாடுற நேரமா இது. உன் பேரு என் வாயில அப்படிதான் வரும்னு உனக்கு தெரியாதா. அதை விடு. எனக்கு என்னம்மோ இந்த பொண்ணு மேல சந்தேகமா இருக்கு”

“ஏன் முனிஷ். பார்க்க நல்ல பொண்ணு மாதிரிதானே இருக்கு”.

“ம்கூம்…நீ இப்படிதான் எல்லாரையும் நம்புவ. நான் சீரியல்ல பார்த்துருக்கேன். எல்லா வில்லியும் இப்படிதான் ஹீரோ வீட்டுக்குள்ள வருவாங்க. அப்புறம் வில்லங்கத்தை உருவாக்குவாங்க” என்று சொல்ல,

அவரை கிண்டலாக பார்த்த ஸ்ரீ “முனிஷ் நீங்க சீரியல் பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்டீங்க. நம்ம வீட்ல எந்த ஹீரோ இருக்காரு. ஹீரோயின் நீங்கதான் இருக்கீங்க. ஒரு வேலை உங்களுக்கான வில்லியோ இந்த பொண்ணு” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க,

தன்னை ஹீரோயின் என்று சொல்லவும் வெட்கம் கொண்ட முனிஷ் “உண்மையாலுமே நான் ஹீரோயினா சிரி பாப்பா” என்று கேட்க,

அவளும் சிரித்து கொண்டே “இல்லையா பின்ன. அன்னைக்கு எங்க ஹாஸ்பிடல் வந்தல்ல முனிஷ் அப்போ உன்னை பார்த்து ஒரு டாக்டர் யார் இந்த பொண்ணு உங்க தங்கச்சியான்னு என்கிட்ட கேட்டாரு தெரியுமா” என்க,

முனிஷோ “ம்ம்ம்…. நெசமாலுமா….”

“பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன். சரி அதைவிடுங்க. இப்போ இந்த பொண்ண என்ன பண்ணலாம்னு சொல்லு”

“ இந்த சிஐ டி முனிஷ் மொத்துவாணிகிட்ட விடு சிரி பாப்பா எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்”என்று சொல்ல,

அவளும் உங்க விருப்பம்”என்றுவிட்டாலும் , மீனாவின் தோற்றம் அவள் மீது ஸ்ரீக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.

மீனாவிடம் சென்ற ஸ்ரீ “சரி என்ன படிச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க. நான் உங்களுக்கு எதாவது உதவ முடியுமான்னு பார்க்கிறேன்”என்று சொல்ல,

அவளை நன்றியாக பார்த்த மீனா முதலில் தயங்கினாலும் பின் தன் நிலையை உணர்ந்து “நான் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சுருக்கேன்”என்க,

ஸ்ரீயோ “ஹோ…. அப்படியா. எங்களுக்கு ஒரு ஸ்கூல் இருக்கு. அங்க வேலைல சேர்ந்துக்கறீங்களா” என்க,

அவளோ தயக்கத்தோடு ஸ்ரீயை பார்த்து “உங்களுக்கு ரொம்ப தொல்லை தரேன்னோ”.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உங்களுக்கு என்னால ஆனா சின்ன உதவி. அவ்வளவுதான்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் போன் மணி அடிக்க எடுத்து பார்த்தாள் ஹாஸ்பிடலில் இருந்துதான் அழைத்து இருந்தார்கள்.

அழைப்பை ஏற்று பேசியவள் அந்த பக்கம் சொன்ன தகவலில் அதிர்ந்து “என்ன சொல்றீங்க” என்று கேட்க, அந்த பக்கம் சொன்ன பதிலில் ஆடி போனவள்.

“நான் உடனே வரேன்”என்றவள் போனை கட் செய்துவிட்டு “நான் இப்போ வரேன்….” என்றவள் வேகமாக சென்றுவிட்டாள்.

முனிஷ் ஸ்ரீ பின்னாலேயே சென்று என்னவென்று விசாரிக்க,அவளோ எதுவும் சொல்லாமல் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே ஓடிவிட்டாள்.

ஸ்ரீ முகத்தில் இருக்கும் பதட்டத்தை கண்டு மீனாவும் அவள் பின்னோடு வந்து என்னவென்று விசாரிக்க, முனிஷோ தெரியவில்லை என்று சொல்ல இருவரும் ஸ்ரீ சென்ற பாதையை குழப்பத்தோடு பார்த்து கொண்டு நின்றனர்.

ஸ்ரீயின் பதட்டத்திற்கும் கண்ணீருக்கும் காரணம் என்னவாக இருக்கும் அடுத்த எபியில் பார்க்கலாம்.அத்தியாயம் -8

தன் எதிரில் இருக்கும் உருவத்தை கண்டு மீனா பயந்து போய் கையில் இருந்த பையை கீழே போட,

“அக்கா நாங்கதான் பயப்படாத…” என்றாள் கண்ணம்மா.

உடன் பிறப்புகளை கண்டு நிம்மதி மூச்சு விட்டவள் தம்பியின் கரங்களை பிடித்து கொண்டு “மல…. மல…அது…அது…”என்று தடுமாற,

ஏழுமலையோ அவளை அணைத்து கொண்டவன் “எல்லாத்தையும் நானும் கேட்டேன்க்கா. நீ எந்திரிச்சு போறத பாத்து பயந்து போய்தான் உன் பின்னாடியே வந்தோம். அம்மாவும்….நம்பள புரிஞ்சுக்காம இப்படி இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லக்கா” என்று வருத்தமாக சொல்ல,

கண்ணம்மாவோ “சரி போதும். அவங்க இப்படிதான்னு நமக்கு தெரிஞ்சு போச்சுல்ல. இனி அடுத்து என்ன பண்ணலாம். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. நமக்கு நேரம் இல்ல”.

மீனா, “நான் முடிவெடுத்துட்டேன் கண்ணு. எனக்கு இவங்க யாரும் வேண்டாம். என் குழந்தை எனக்கு வேணும். அதான் வீட்டவிட்டு கிளம்பிட்டேன்”.

“என்னக்கா சொல்ற. இந்த ஊரைவிட்டா உனக்கு வேற யாரை தெரியும். தனியா…. அதுவும் இந்த நிலமைல எப்படி சமாளிப்ப. நாம வேற எதாவது பண்ண முடியுதான்னு பார்க்கலாம்”.

“ இல்ல கண்ணு நான் முடிவெடுத்துட்டேன். எப்போ அவர் உயிரை பணயமா வச்சு கையெழுத்து வாங்கிட்டு வர சொன்னாங்களோ அப்போவே என் உயிரை வெறுத்துதான் வாழ ஆரம்பிச்சேன்.

குழந்தைனு சொன்னப்போ என் வாழ்க்கைக்கு ஓர் புதிய பாதை கிடைச்சுதுனு சந்தோஷப்பட்டேன். ஆனா அந்த சந்தோசத்தையும் அழிக்க முடிவெடுத்துட்டாங்க இனி நான் இங்க இருந்தா. உயிர் இருந்தும் பிணமாதான் வாழணும். எனக்கு என் குழந்தை வேணும் கண்ணு ப்ளீஸ் புருஞ்சுக்கோ…” என்று முகத்தை மூடி கொண்டு அழ,

ஏழுமலையும் கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.

பின் ஒரு முடிவெடுத்த ஏழுமலை, சரி உன் முடிவை நாங்க ஏத்துக்கறோம். ஆனா.. இப்போ போக வேண்டாம். எல்லாரும் தூங்கட்டும். ரெண்டு மணிக்கு மேல நானே உன்னை ஊர் எல்லை வரை கொண்டு வந்து விட்டுட்டு வரேன். இப்போ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்க,

அவளோ “இல்லை பரவால்ல நான் அதுவரைக்கும் இப்படியே உட்கார்ந்து இருக்கேன்” என்றாள்.

“சொன்னா கேளுக்கா. இதுக்கு அப்புறம் உனக்காக நீ மட்டும்தான் ஓடணும். ஓடறதுக்கு நீ உன்னை தயார்படுத்திக்கோ. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்” என்று சென்றுவிட,

கண்ணம்மா மீனா கரத்தை பிடித்து கொண்டு சோகமாக அமர்ந்துவிட்டாள்.

மலை சொன்னது போல் ஒன்னரை போல் வர சகோதரிகள் இருவரும் கொட்ட கொட்ட விழித்து கொண்டு இருந்தனர்.

தம்பியை கண்டு எழுந்த மீனா “போகலாமா…” என்று கேட்க,

ஏழுமலை தன்னிடம் இருந்த பையை அக்காவிடம் கொடுத்தான்.

மீனா பையையும் அவனையும் மாறி மாறி பார்க்க,அவனோ “இது எல்லாமே உன்னோட நகை. வீட்ல இருந்த பணத்தையும் இதுல வச்சுருக்கேன். இந்த வீட்டை விட்டு போகணும்னு ஒரு வேகத்துல வேணா நீ முடிவெடுத்திருக்கலாம்.

ஆனா இந்த உலகத்துல உன்னால தனியா வாழ முடியாது. எல்லாத்துக்கும் பணம் வேணும். இங்க பணம் இல்லன்னா எதுவும் பண்ண முடியாது. இது உனக்கான பணம் உன்னோட நகை. அதனால தைரியமா எடுத்துட்டு போய் சந்தோசமா வாழு. குட்டிய நல்லா பார்த்துக்கோ. நான் உழைச்சு என்னோட சம்பாத்யத்துல வாழற அன்னைக்கு உன்னை தேடி கண்டு பிடிச்சு வருவேன்” என்று சொல்ல,

மீனா கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இருவரையும் அணைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அழ,

கண்ணம்மா அக்கா கண்ணீரை துடைத்தவள் “அழாம தைரியமா போ. பார்த்து பத்திரம் குழந்தையை சந்தோஷமா பாத்துக்கோ. மறுபடியும் எப்போ உன்னை பார்க்க போறேன்னு எனக்கே தெரியல. இருந்தாலும் உன்னோட இந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. எல்லாரையும் வெகுளித்தனமா நம்பாத இந்த உலகம் மோசமானது. அதுக்கு நம்ம அம்மா அப்பாவே சாட்சி கவனமா இரு” என்றவள் அக்காவின் வயிற்றை தடவி “குட்டி சித்தி உன்னை எப்போ பார்க்க போறேன்னு தெரியல ஆனா கண்டிப்பா உன்னை நினைச்சிட்டே இருப்பேன்”என்றாள்.

மலை, “போதும் நேரம் ஆகுது. வாங்க போலாம்” என்றவன் பெற்றோர் இருவரும் நன்றாக தூங்குவதை உறுதி செய்துவிட்டு வீட்டை விட்டு மெதுவாக வெளியில் வந்தனர்.

கிளம்பும் சமயம் கண்ணம்மாவை இறுக்கி அணைத்த மீனா “பார்த்துடி. நீயும் கவனமா இரு. என் மேல வர கோபத்தை உங்க மேலதான் காட்டுவாங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்துக்கோங்க” என்றுவிட்டு தம்பியுடன் கிளம்பினாள்.