“என்னை ரொம்ப தெரிஞ்சவர் போல பேசுறிங்க?” என்றாள் சன்ன சிரிப்புடன்.
“இப்ப என்னடி பிரச்சனை உனக்கு?”
“நீங்கதான் பிரச்சனை. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல்.
“அது பார்ட்டில டிரக் டேப்லட் கலந்த ஜூசை உனக்குக் குடுக்க பார்த்திருக்கா. அதை சிசிடிவி புட்டேஜ்ல பார்த்துட்டு, வார்ன் பண்றதுக்காக போனேன்” என்றான் பாதி உண்மையுடன்.
“மித்ரா எதுக்கு அப்படி பண்ணனும்?” என்றாள்.
“என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும்?” என்றான்.
“அதான் அவளைக் கேட்டிங்களே அவ என்ன சொன்னா?” என்றாள் பாயிண்ட்டை பிடித்து.
“அவ ஒன்னும் சொல்லலை. அது இதுன்னு மழுப்பிட்டா” என்றான்.
“நீங்க தான் இப்ப மழுப்புறிங்க சத்யா” என்றாள்.
“நான் எதுக்கு அப்படி பண்ணனும் ஆரா. உனக்கு டவுட்டா இருந்தா உன் பெஸ்ட், குளோஸ் பிரண்ட் அவகிட்டயே கேட்டுக்கோ” என்றான் பட்டென்று. ஏனோ மித்ராவை பற்றி பேசும் போது அவன் முகத்தில் ஏற்படும் வெறுப்பை குறித்துக் கொண்டாள்.
“மித்ரா டேப்லட் கலந்தது எனக்குத் தெரியும் சத்யா” என்றாள் அமைதியாய்.
“என்னது?” என்றவனுக்குத் தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு எப்படி?” என்றான் புரியாமல்.
“நான் அங்க வச்சே பார்த்துட்டேன். இன்பேக்ட் அதைக் குடிக்காம இருக்கணும்னு தான் நான் இந்த் ட்ரிங்க்ஸ் கலந்த ஜூசையே அளவுக்கு அதிகமா குடிச்சுட்டேன். ஆனா ஏன் அப்படி பண்ணினான்னு தான் தெரியலை” என்றாள் தலையை குனிந்தபடி.
“முட்டாள் முட்டாள்” என்று கத்தியவன்,
“அதான் அப்பவே தெரிஞ்சிருக்குள்ள, அப்பறம் எதுக்குடி மறைச்ச? அப்பவே அவளை நாலு அப்பு அப்பியிருக்க வேண்டியது தான?. போதைல அவ குடுத்த ஜூசையும் குடிச்சிருந்தா என்னடி பண்ணியிருப்ப? அறிவு வேண்டாம்? இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் அவளை உன் வாழ்க்கையில விளையாட விட்டுட்டே இருப்ப? அங்கிட்டு அவ, இங்க யாதவ். இன்னும் எத்தனை பேர்டி?” என்று கோபத்தில் வார்த்தையை விட்டான் தேவ். கூறிய வார்த்தைகளை உணராது. ஆனால் அவனின் வார்த்தைகளை அவள் தெளிவாக பிடித்துக் கொண்டாள்.
கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டவன், தன்னைத் தானே கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
அவன் பேச்சில் திக் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தவள், சில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டாள்.
அவனை பின்னின்று இடையோடு அணைத்துக் கொண்டவள்,
“காம் டவுன் சத்யா ப்ளீஸ்” என்றாள்.
“என்னால முடியும்னு தோணலை. இதுல என்னையே சந்தேகப்பட்டு கொஸ்டின்ஸ் கேட்குற? ஐ வான்ட் டு ஸ்விம். லீவ் மீ அலோன் ஆரா” என்றான்.
“மாட்டேன்”
“ஆரா” என்று அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், அவனை அணைத்துக் கொண்டிருந்தவளின் ஒரு கரம் மட்டும் அவன் முன்னோக்கி விரிய, அதில் அவன் அணிவித்த செயினும் மோதிரமும் இருக்க, அதைப் பார்த்தவனின் இதயமோ படபடவென்று அடித்துக் கொண்டது. அதை அவனை அணைத்திருந்தவளும் உணர்ந்தாள். அவள் அவனுக்கு பின்னால் இருந்தாலும் அவன் இதயத் துடிப்பும், அவன் உடலில் தோன்றிய லேசான நடுக்கமுமே அவன் நிலையைச் சொல்லியது.
“போட்டு விடுங்க ஜெய்” என்றவளின் வார்த்தைகள் அவன் காதில் தேனாய் பாய, கண்ணீரே வந்துவிட்டது அவனுக்கு.
வேகமாய் அவளைத் தன் முன்னே இழுத்தவன்,
“என்ன சொன்ன ஆரா? திரும்ப சொல்லு?” என்றான் பரபரப்புடன்.
“போட்டு விடுங்க ஜெய்” என்றாள் மீண்டும் அவன் கண் பார்த்து.
“ஆரா” என்றவனுக்கு வார்த்தையும் பெரிய மூச்சுகளும் ஒன்றாய் வெளி வர, திக்கு முக்காடிப் போனான்.
“என்னால ஒரு நாளைக்கே இந்த கனத்தை தாங்க முடியலை. எப்படி ஜெய் இத்தனை நாளும் என்னைத் தெரியாத மாதிரியே நடிக்க முடிஞ்சது உங்களுக்கு. ஆனா என்னால முடியலை ஜெய். உங்களை தெரிஞ்ச பிறகு, உங்களை உணர்ந்த பிறகு வேற எதுவும் என் கண்ணுக்கு தெரியலை. வேற எதையும் என்னால உணர முடியலை. என்கிட்டே மறைக்க எப்படி முடிஞ்சது ஜெய் உங்களால?” என்று அவன் இதயப் பரப்பை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருக்க, அவனோ பிரம்மை பிடித்தவன் போல் இருந்தான்.
“ஆரா உனக்கு எப்படி?” என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
“இப்ப சொல்லுங்க ஜெய்.. நீங்க ஏன் உங்க லவ்வரை பார்க்க வரலை?. இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட அவளோட ஞாபகம் வரலையா உங்களுக்கு?” என்றாள் கண்ணீருடன்.
“ஆரா பிளீஸ்டி” என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. எப்படி சொல்லுவான். சொன்னாலும் அது காரணம் சொல்வதைப் போலத்தானே. இன்னமும் அவள் தன்னை ஜெய் என்று சொன்னதிலிருந்தே வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது இந்த தவிப்பும் சேர்ந்து கொண்டது.
அவன் தவிப்புடன் நிற்பதைப் பார்த்தவள்,
“இப்படி எல்லாம் உங்களை கேள்வி கேட்டுடக் கூடாதுன்னு தான் பயந்தேன் ஜெய். இப்படி உங்களைத் தவிக்க விடக் கூடாதுன்னு தான் இவ்வளவு நேரமும் அமைதியா இருந்தேன் ஜெய். உங்களை எந்த விதத்திலும் நான் ஜட்ஜ் பண்ணிடக் கூடாதுன்னு தான் ஆயிரம் கேள்வி இருந்தாலும் அதை எல்லாம் அடக்கி வச்சிருக்கேன் ஜெய். ஏன் தெரியுமா?” என்றாள் கேள்வியுடன்.
அவள் வார்த்தை சுழலில் அவன் சிக்கிக் கொண்டிருக்க,
“ஏன்னா நான் உங்களை நம்புறேன் ஜெய்” என்றவளின் வார்த்தையில் செத்துவிட்டான் தேவ்.
“அப்பவும் உங்களை நம்புனேன். எல்லாரும் என்னை பைத்தியம்னு சொன்னாங்க. நீங்க, இல்லாமப் போனப்பவும் நம்புனேன். அப்பவும் என்னை பைத்தியம்னு சொன்னாங்க. இப்பவும் உங்களைத்தான் நம்புறேன். இப்பவும் என்னை பைத்தியம்னு சொல்லப் போறிங்களா ஜெய்” என்று கேட்டவளை அதற்கு மேல் முடியாது என்பவனைப் போல் இழுத்து மூச்சு முட்ட அணைத்துக் கொண்டான். அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு தன் ஆவேசத்தை அடக்கிக் கொண்டவன்,
“நீ பைத்தியம் இல்லடி, நான் தான் முட்டாள். இப்படி ஒருத்தியை இத்தனை வருஷமும் இழந்துட்டு நின்ன முட்டாள். உன்னோட நம்பிக்கை சிதைச்ச முட்டாள் ஜெய்டி நானு.எந்த முகத்தை வச்சுகிட்டு உன்கிட்ட நான் தான் ஜெய்ன்னு சொல்வேன். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஒருத்தன் சொன்னதை நம்பி அப்படியே வந்த முட்டாள் தனத்தை சொல்லச் சொல்றியா? உன்னைப் பார்க்கனும்னு தவிச்ச தவிப்பையெல்லாம் அடக்கிக்கிட்டு, இன்னொருத்தன் பொண்டாட்டியா பார்க்க முடியாம திரும்பி வந்த முட்டாள் தனத்தை சொல்ல சொல்றியா, இல்ல கூடப் பிறந்த அண்ணனே என்னை செத்துட்டதா சொல்லி உன்னை நம்ப வச்சதைக் கூட தெரியாம இருந்த முட்டாள் தனத்தை சொல்லச் சொல்றியா?” என்றவன்,
“இப்போ வேணும்னா நான் காதல்ல ஜெயிச்சிருக்கலாம், ஆனா ஒரு காதலனா தோத்துட்டேன்டி நானு” என்றவனின் குரல் கரகரப்பாய் வெளி வர,
“அப்படி சொல்லாதிங்க ஜெய். இந்த காதல் நம்ம ரெண்டு பேரையுமே முட்டாள் ஆக்கியிருக்கு ஜெய்” என்றவளுக்கு கண்கள் கலங்கி அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
“எல்லாத்துலையும் சிக்கி, உடைஞ்சு, அழுது, சுக்கு நூறாகி அதுல இருந்து மீண்டு வந்ததுக்கு அப்பறம் கிடைக்குற வாழ்க்கை அற்புதமா இருக்குமாம். தொலைஞ்சு மீண்டா, வாழ்க்கை தித்திப்பா இருக்கும்னு எதுலையோ படிச்ச ஞாபகம். நாமளும் இப்போ அந்த நிலமையில தான் இருக்கோம் ஆரா” என்றவனின் வார்த்தைகளில்,
“எனக்கு இது கனவோன்னு தோணுது. கலைஞ்சு போயிரும்னு தோணுது” என்றாள் அழுகையுடன்.
“அப்படி டக்குன்னு கலைஞ்சு போறதுக்கு நீ கனவு இல்லடி. என்னோட உயிர்” என்றவன் அவள் இதழ்களில் முத்தமிட,
“ஐ லவ் யு ஜெய்” இதை சொல்லவே முடியாம போய்டுமோன்னு ஏங்கின நாட்களும் உண்டு. சொல்ல முடியாமையே போயிடுச்சேன்னு வருந்தின நாட்களும் உண்டு. ஆனா, மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கவே இல்லை ஜெய்.
“ஆரா”
“ஏன் உங்கமேல இவ்ளோ காதல்னு தெரியலை. எப்படி உங்க அன்புல சிக்கிக்கிட்டேன்னு தெரியலை. உங்கமேல அவ்வளவு கோபம் இருந்தாலும், ஏன் உங்க முகத்தை பார்த்த உடனே எல்லா கோபமும் மறந்து போகுதுன்னு தெரியலை. இப்படி எதுவுமே எனக்குத் தெரியலை. ஆனா ஒன்னு மட்டும் தெரியும் ஜெய், நீங்களும் இதே அளவுக்கு என்னை காதலிக்கிறிங்கன்னு தெரியும். ஐ லவ் யு ஜெய்” என்றாள் அழுகையில் கறைந்து அவனுள் மூழ்கி.
“அழாதடி, நீ அழுதா நான் உடைஞ்சுடுவேன் ஆரா பிளீஸ்” என்றவனின் வாயை கரம் கொண்டு மூடியவள்,
“அப்போ இழந்த ஆறு வருஷத்துக்கும் சேர்த்து லவ் பண்ணனும்” என்றாள் முறைப்புடன்,
“சரி” என்றான் சிரிப்புடன்.
“அரை நாள் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது” என்றாள் முறைப்புடன்.
“சரி” என்றான் சிரிப்புடன்.
“இங்க நான் மட்டும் தான் இருக்கணும்” என்றாள் அவனின் நெஞ்சத்தை ஒற்றை விரலால் தொட்டு.
“இப்பவும் நீ மட்டும் தான்டி இருக்க” என்றான்.
“எப்பவும் நான் மட்டும் தான் இருக்கணும்” என்றாள் முறைப்புடன்.
“சரி” என்றான் சிரிப்புடன்.
“எனக்கு கேள்விகள் நிறைய இருக்கு”
“கேளு”
“நான் கேட்க மாட்டேன். ஆனா நீங்களா பதில் சொல்லணும்” என்றாள்.
“இது கொஞ்சம் டப்பான டாஸ்க் தான். பட் அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்றவன்,
“அவ்வளவு தான இல்லை இன்னும் ஏதாவது இருக்கா?” என்றான்.
“தெரியலை ஜெய், ஆனா பேசிட்டே இருக்கணும் தோணுது. என்ன பேசன்னு தெரியலை. இது நிஜமான்னும் புரியலை. சந்தோஷத்துல நெஞ்செல்லாம் அடைக்குது. இன்னொரு முறை என்னை ஏங்க வச்சிட மாட்டிங்க தான?” என்றாள்.
“ஒரு தடவை தொலைச்சுட்டேன். இனி ஆயுசுக்கும் தொலைக்க மாட்டேன்டி” என்றவன்,