அவள் கால்மாட்டில் அமர்ந்து அவளின் இரு பாதங்களையும் பிடித்து அதில் தலை வைத்து மன்னிப்புக் கேட்பவன் போல் குனிய, கண்கள் மூடியிருந்தாலும் உறங்காமல் இருந்தவள், அவன் செயலில் விதிர்விதிர்த்து,
“என்ன பண்றிங்க சத்யா?” என்று சட்டென்று கால்களை இழுத்துக் கொள்ள முற்பட, அவனின் பிடியில் இருந்து அவளால் பாதத்தை சற்றும் அசைக்கக் கூட முடியவில்லை. அவனின் கண்ணீர் துளி அவள் பாதங்களில் பட, அவளுக்கும் கண்கள் கலங்கியது.
“என்ன பண்றிங்க சத்யா?” என்றவளுக்கு குரல் கமறிக் கொண்டு வர,
“ஆரா பிளீஸ்! ஐ ஆம் சாரி” என்றான், உணர்வுகளற்ற குரலுடன்.
“எ..என்னாச்சு? இப்ப எதுக்காக நீங்க சாரி கேட்குறிங்க? பிளீஸ் காலை விடுங்க” என்றாள். அவன் தன்னுடையை காலைப் பிடித்திருப்பதை அவஸ்தையுடன் பார்த்திருந்தாள். மேல்சட்டை இல்லாமல் அவனைப் பார்ப்பது அவளுக்கு சங்கோஜத்தை கொடுத்திருக்க, அவனோ அதைப் பற்றி என்னும் நிலையில் எல்லாம் இல்லை.
“சத்யா” என்று அவள் சற்று குரலை உயர்த்தவும் தான் நிஜத்திற்கு வந்தான்.
“ஏன் இப்படி பண்றிங்க?” என்றாள்.
அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன்,
“யாதவ் இப்படி பண்ணது தப்புத்தான். இந்த அளவுக்கு நடக்க விட்டது என்னோட பெரிய தப்புத்தான். ஐ ஆம் சாரி ஆரா” என்று அவன் நடந்த பழைய விஷயத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க,
“அதுக்கு ஏன் நீங்க சாரி சொல்லணும். அதான் அடிச்சு மண்டையை உடைச்சுட்டேனே” என்றாள். இப்போது நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கிறான் என்று நினைத்து.
“உன்கிட்ட அந்த அளவுக்கு நடக்க விட்டது என் தப்புத்தான்” என்று மீண்டும் சொன்னவன், அமைதியாய் படுத்துவிட்டான். அவளிடம் பேச வேண்டும் என்று உள் மனம் உந்தினாலும், அவள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திராணி அப்போதைக்கு அவனுக்கு இல்லை என்பதே உண்மை.
“நீங்க சாப்பிடலை” என்றாள் தயங்கியபடி.
“பசியில்லை” என்றான், ஒற்றை வார்த்தையாய்.
“என்மேல கோபமா இருக்கிங்களா?” என்றாள்.
“எதுக்கு?”
“இல்ல, உங்க அண்ணாவை அப்படி அடிச்சுட்டேன்னு” என்று அவள் தயங்க,
“நீ அவனையே கொலையே பண்ணியிருந்தாலும் எனக்கு உன் மேல் கோபம் வராது” என்றவன்,
“ஐ பீல் வெரி டயர்ட் ஆரா” என்றான்.
“இவ்வளவு நேரம் எங்க போயிருந்திங்க?”
“ஸ்விம் பண்ணிட்டு இருந்தேன்” என்றவன், கைகளால் கண்களை மூடி படுத்துவிட, அவனுக்கு மறுபுறம் திரும்பிப் படுத்தவளுக்கு உறக்கம் பெயருக்குக் கூட வரவில்லை.
எப்போதும் வம்படியாய் அவளை அணைத்துக் கொண்டு உறங்கும் அவன் கரங்கள் ஏனோ இன்று அவளை அணைத்துக் கொள்ளவில்லை. அதுவே அவளுக்கு பெரிய மனக் குறையாய் இருக்க, அவ்வப்போது திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டாள். ஜெய் என்று தெரியாத போதே அவன் அருகாமையை அவளால் தவிர்க்க முடியாது. இன்று அவன் தான் ஜெய் என்று உணர்ந்த பின்னும் அவனைத் தள்ளி இருப்பது அவளுக்கு அத்தனை வேதனையாய் இருந்தது.
வெறுமனே கண்களை மூடியிருந்த அவனுக்கும் தூக்கம் என்பது இல்லை. ஆற்றுவார் தேற்றுவார் இன்றி உள்ளே காய உணர்வுகள் கொட்டிக் கிடக்க, தவித்துப் போனான் தேவ்.
உறக்கமின்றி தவித்த ஆரா, ஒருகட்டத்தில் தானாகவே சென்று அவனை அணைத்தபடி அவன் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள். சட்டென்று கண்களை மறைத்திருந்த கையை எடுத்தவன், அவள் தானாக தன்னை நெருங்கி வந்து அணைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தான்.
“ஆரா” என்றவனின் குரல் கரகரப்பாய் வெளிவர,
“ஐ நீட் யுவர் டைட் ஹக் சத்யா ப்ளீஸ்” என்றவள் அவனுள் புதைந்து போக, அவள் வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டது.
“உன் லவ்வர் ஜெய் இறந்துட்டான்னு தெரிஞ்சப்போ எப்படி பீல் பண்ண?” என்றான்.
அவனை நிமிர்ந்து ஆழ்ந்த பார்வை பார்த்தவள்,
“எதுக்கு கேட்குறிங்க?” என்றாள்.
“தோணுச்சு” என்றான்.
“ஜெய் இல்லைன்னு தெரிஞ்சப்போ நெஞ்சே வெடிச்சிடுற மாதிரி வலிச்சது. ஆனா, இதுவரைக்கும் வெடிக்கவும் இல்லை, நெகிழவும் இல்லை. கடந்து போறது தான் கவலைகளோட கலை போல” என்றாள் அவன் கண் பார்த்து.
“கடந்து வந்துட்டியா?” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்குப் புரியவில்லை.
“நான் ஏன் கடந்து வரணும்? ஜெய் எனக்குள்ள தான் இருக்கான். எப்பவும் இருப்பான். ஜெய் இல்லாத நாட்கள் எல்லாமே என்னால் கடக்க முடியாத நாட்களாத்தான் இருந்திருக்கு. சிவந்த போன கண்ணும், காய்ஞ்சு போன கண்ணீரும் தான் நிறைய நாட்கள் துணையாவே இருந்திருக்கு. ஒரு இரவு கூட வலியில்லாம இருந்ததில்லை. ஒரு விடியல் கூட அழகா இருந்ததில்லை. ஜெய்யை திரும்பப் பார்க்கணும், என் காயத்துக்கு மருந்தா இறுக்கி அணைச்சுக்கணும், அவன் மடியில படுத்துக்கணும், எனக்குள்ள தொலைஞ்ச என்னையவே மீட்க அவன் முத்தம் வேணும் இப்படி எல்லாம் நினைக்காத நாளே இல்லை சத்யா.” என்றாள்.
“ஆரா” என்றவனுக்கு குரலே வரவில்லை.
“நமக்கு பிடிச்சதெல்லாம் கிடைச்சே ஆகணும்னு எந்த கட்டாயமும் இல்லையே சத்யா. நினைப்பில் மட்டும் இருக்குற மாதிரி போதும் போதும்ங்கிற அளவுக்கு அழகான நினைவுகளையும், ஆழமான வலிகளையும் குடுத்துட்டு போய்டுது” என்றவளுக்கு கண்ணீர் வெளியே வர, அவள் வார்த்தைகளின் வீரியத்தை தாங்க முடியாதவன், சட்டென்று விலக முற்பட,
அவனை விடாமல் அணைத்தவள்,
“சத்யா பிளீஸ்..! என் மனசுல ஏன் இவ்வளவு பாரம்னு தெரியலை. ஏன் இவ்வளவு குழப்பம்னு தெரியலை. ஏன் இத்தனை தவிப்புன்னு புரியலை. ஏன் இத்தனை ஏக்கம்னு சுத்தமா புரியலை.. ஆனா, உங்க கிட்ட தான் ஆறுதல் தேட சொல்லுது” என்றவள்,
சிறு தயக்கத்துடன், அவன் இதழ்களோடு தன் இதழ்களை பொருத்திக் கொள்ள, அதற்கு மேல் அவளைத் தவிக்க விடுவானா ஆராவின் காதலன்.
அத்தனை வருட காதலுக்கும், அத்தனை வருட ஏக்கத்திற்கும் அத்தனை வருட காத்திருப்பிற்கும், அத்தனை வருட காயங்களுக்கும் மருந்தாய், விருந்தாய் மாயமாய் அவளுள் கரைந்தவன்,முத்தத்தால் அவள் அங்கம் முழுவதும் ஆயிரம் கவிதைகள் எழுதியவன், அவள் அங்கத்தில் தேகம் சிலிர்த்தான்.
கலிங்கம் கலைந்து, வாசம் நுகர்ந்து, இதழ்கள் சுவைத்து தேனில் விழுந்த தேனீயாய் மாறி போனான். சொர்க்கத்தின் சுகங்கள் எல்லாம் உயிர்கொள்ள. ஓர் இரவில் இரு இதயமும் சிறைபட்டது. மறுப்புக்களுக்கும் வெறுப்புக்களுக்கும் இடமின்றி போனது. கீறல்களுக்கும் காயங்களுக்கும் இருவரும் பொறுப்பில்லை. மூச்சுக் காற்றின் ஓசையைத் தவிர வேறெதற்கும் இடமின்றி போனது. மொழிகள் இல்லா முத்தத்தின் சத்தங்கள் அடங்கவே இல்லை.
அவனைத் தேடிய அவளின் மனம் அவனிடமே சரணடைந்திருந்தது. நீரில் கரையும் உப்பாய் அவனும் அவளுள் கரைந்திருந்தான்.
வலிகளை யாரிடம் சொல்வது என்று புரியாமல், மன சுமைகளை யாரிடம் இறக்குவது என்று தெரியாமல்,கண்ணீரை யாருடைய மடியில் துடைப்பது என்று புரியாமல், இத்தனை வருட ஆசைகளைக் கொட்ட அவள் மடி தேடிக் கொண்டிருந்தவனுக்கு , அவளே அனைத்துமாகிப் போனாள்.