அவளின் வார்த்தைகளில் அவளை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், அவள் சொன்ன விஷயத்தையும் விட்டுவிடவில்லை.

“சைக்கிள் கேப்ல என் பொண்டாட்டியை மெண்டல்னு சொல்ற?” என்றவன் சிரிக்க,

“நான் எங்க சைக்கிள் கேப்பில் சொன்னேன். டேரக்ட்டாவே தான் சொல்றேன். உங்க பொண்டாட்டி மாதிரி ஒரு சிறந்த மெண்டலை இந்த உலகத்துலையே பார்க்க முடியாது. என்ன கொஞ்சம் அழகான மெண்டல். அதான் எனக்கும் கொஞ்சம் கடுப்பு” என்றாள் சிரிப்புடன்.

“நான் உன்னை வேற மாதிரி நினைச்சேன் ஆதிரா, சாரி” என்றான்.

“எப்படி? அடங்காபிடாரி, வீம்புக்காரி இப்படித்தான? அது நீங்க மட்டும் இல்லை. எங்க வீட்லயே அப்படித்தான் நினைப்பாங்க. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படக் கூடாது. அது என்னவோ தெரியலை, சின்ன வயசுல இருந்து இந்த ஆராக்கு அமையறது மட்டும் எல்லாமே நல்லதாவே இருக்கும். அவ பிரண்ட் மித்ராவைத் தவிர. அதனால என்னையறியாமையே ஈகோ, அவளுக்கு மட்டும் எப்படி அப்படி அமையலாம்னு. அதுவே எங்க ரெண்டு பேருக்குள்ள அவ்வளவு ஒட்டுதல் இல்லாம போகக் காரணம்.

ஆனா, சும்மா சொல்லக் கூடாது, நான் எவ்வளவு கழுவி ஊத்தினாலும் உங்க பொண்டாட்டி என்மேல பாசத்தை பொழிவா. நான் எதைக் கேட்டாலும் விட்டுக் குடுத்துடுவா. மிஸ்ஸானது நீங்க மட்டும் தான் மாமா” என்றாள் சிரிப்புடன்.

“நல்லவேளை நான் தப்பிச்சேன்மா” என்றவனுக்கு தானாக சிரிப்பு வர,

“என்கிட்ட சிக்கப் போற அந்த பாவப்பட்ட ஜீவன் யாருன்னு தான் தெரியலை. பார்ப்போம்” என்றவள்,

“அப்போ நான் வைக்கிறேன் மாமா” என்றபடி வைக்கப் போக,

“ஒரு நிமிஷம் ஆதிரா, உனக்கு ஏன் மித்ராவைப் பிடிக்கலை?” என்றான்.

“அது என்னவோ அவளை எனக்கு சின்ன வயசுலயே பிடிக்காது. அப்பறம் வளர வளர வெறுப்பும் வளர்ந்திடுச்சு போல. எப்பப் பார்த்தாலும் ஆராவை ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிகிட்டே திரிவா. அதுவே எனக்குப் பிடிக்காது. இந்த மெண்டலும் இவளுக்கு குடுக்குற எல்லாத்தையும் அவளுக்கே குடுத்துடுவா. ஆராவோட கடந்த கால வாழ்க்கையில மித்ரா கொஞ்சம் விளையாடி இருப்பாளோன்னு  எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும். அதை ஆராகிட்டையும் சொன்னேன். அதுக்கு மேடம் என் பிரண்டைப் போல யாருன்னு பாட்டு படிக்காத குறைதான்.” என்றாள்.

தேவ் அமைதியாக இருக்க,

“என்ன மாமா அமைதியா இருக்கீங்க?” என்றாள்.

“யாரையும் முழுசா தெரியறதுக்கு முன்னாடி ஜட்ஜ் பண்ணக் கூடாதுன்னு இன்னைக்கு தெளிவா புரிய வச்சிருக்கே ஆதிரா, தேங்க்ஸ்” என்றான்.

“சத்தியமா இந்த பேச்சு உங்களுக்கு செட்டாகலை. எப்பவும் என்னை முறைச்சுட்டு பேசுவிங்களே  அப்படியே பேசுங்க.  திடீர்ன்னு இப்படி பேசினா படபடன்னு வருதா இல்லையா?” என்றவள் சிரிக்க, தேவ்வும் சிரித்தபடி போனை வைத்தான்.

“சோ மித்ராவைப் பத்தி ஆதிரா சொல்லியும் இவ நம்பலை. இந்த தைரியம் தான் அந்த மித்ராவுக்கு” என்று எண்ணியவன், அவளை எழுப்பினான்.

“ஆரா ஆப்டர்நூன் ஆயிடுச்சு. இன்னும் நீ சாப்பிடவே இல்லை” என்று மீண்டும் எழுப்ப,

“எனக்கு டயர்டா இருக்கு” என்று தூக்கத்தில் முணங்கியவள், மீண்டும் தூங்க முற்பட,

“எனக்கும் தான் டயர்டா இருக்கு. நைட் நடந்த சம்பவம் அப்படி” என்று கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவன், அவளை ஓரக்கண்ணால் சிரித்தபடி பார்க்க,

அவனின் வார்த்தைகளில் பட்டென்று பெட்ஷீட்டை விலக்கியவள்,வேகமாய் எழுந்து அமர்ந்தாள்.

“என்ன சொன்னிங்க? என்ன சம்பவம்?” என்றாள் தூக்கக் கலக்கம் மறந்து வேகமாக.

“ஒன்னுமில்லையே?” என்றான் மீண்டும்.

“இல்ல ஏதோ இருக்கு” என்றாள்.

“அப்போ உனக்கு எதுவுமே ஞாபகம் வரலையா?” என்று உல்லாசக் குரலில் அவன் கேட்க,

“இல்ல, கொஞ்சம் மட்டும் ஞாபகம் வந்த மாதிரி இருக்கு” என்றாள்.

“குடிகாரி, நேத்து குடிச்சுட்டு வந்தது மட்டுமில்லாம, கதற கதற” என்று அவளைப் பார்த்தான்.

“கதற கதற” என்றவள், அழுவதைப் போல் முகத்தை வைக்க,

“என்னை ரேப் பண்ணிட்டடி நீ” என்றான்  நமட்டு சிரிப்புடன்.

“யாரு நானு? உங்களை” என்று அவள் கேட்க,

“நிஜமாடி” என்றான்.

“நீங்க பொய் சொல்றிங்க” என்றாள்.

“நான் எப்படி சொல்லி உன்னை நம்ப வைக்கிறது?” என்று யோசித்தவன், அவள் காதருகில் சென்று,

“நான் வேணும்னா உனக்கு எங்கெங்க மச்சம் இருக்குன்னு சொல்லவா?” என்று கேட்க, அவனின் பேச்சில் அதிர்ந்து விழி விரித்தவளை அள்ளி அணைக்க வேண்டும் போல் கைகள் பரபரக்க, அவளை அணைக்கப் போனவனை தள்ளி விட்டாள் ஆரா.

“நீதான் என்னை ஏதோ பண்ணிட்ட? உன்னை நம்பி தான் உன்கூட பார்ட்டிக்கு வந்தேன். அப்போ நடந்த எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு. அதோட என்கிட்டயும் தப்பா நடந்திருக்க. இதை நான் சும்மா விட மாட்டேன்” என்று எகிறிக் கொண்டு எழுந்து நிற்க,

“என்னைப் பார்த்தா நிதானம் இல்லாத பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிற பொறுக்கி மாதிரியா தெரியுது?” என்றான் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.

“அப்போ நீ மட்டும் அப்படி பேசலாமா? உன்னை ரேப் பண்ணிட்டேன் அப்படி இப்படின்னு” என்று மூக்கு விடைக்கப் பேசியவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன்,

“அப்படி நான் சொன்னாலும், ‘அப்படித்தான்டா நடந்துப்பேன்னு’ நீ அடிச்சு பேசியிருந்தா சந்தோஷப் பட்டிருந்திருப்பேன். அதை விட்டுட்டு நீ என்னடான்னா சண்டைக்கு ராவுறடி” என்றான் கரகரப்பாய்.

“விடுங்க சத்யா!” என்றவள் அவனிடம் இருந்து விலக முற்பட,

“ஒரு நேரம் மரியாதை வளருது, ஒரு நேரம் மரியாதை தேயுது, ஒரே மாதிரி பேச மாட்டியாடி” என்றான்.

“அது அப்படித்தான்” என்றாள்.

“ஆரா உனக்கு ஒரு உண்மையை சொல்லவா?” என்றான் அவளைத் தன் முகம் நோக்கி திருப்பி.

“என்ன?”

“சொல்லப் போனா நேத்து ரொமான்ஸ் பண்றதுக்கும்,தப்பு பண்றதுக்கும் அவ்வளவு சான்ஸ் கிடைச்சது எனக்கு.  அதுலயும் ஷவருக்கு அடியில அந்த ஈர சேரில ஹாட் பிகரா இருந்த தெரியுமா? அப்போ கூட என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு உனக்கு டிரஸ் சேன்ஜ் பண்ண அக்மார்க் நல்லவன்டி நானு. என்னைப் போய் தப்பா நடந்துகிட்டேன்னு சொல்ற?” என்றான் அவளை கண்ணோக்கி.

“என்னது? எனக்கு டிரஸ் சேன்ஜ் பண்ணிவிட்டிங்களா?நானா பண்ணிகிட்டேன்னு  தான காலையில சொன்னிங்க?” என்றவள் அவன் மடியில் இருந்து தவ்வியிருந்தாள்.

அவளை மீண்டும் இழுத்துக் கொண்டவன்,“ஆமா, நான் தான் பண்ணிவிட்டேன். அப்போ கண்ல பட்டது தான் அந்த மச்சம் எல்லாம்” என்றான் சிரிப்புடன்.

அவளுக்கோ ‘அய்யோ’ என்றிருந்தது. ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்ன, ஒரு பக்கம் இப்படி நடந்திடுச்சே என்று அவனைப் பார்க்க சங்கோஜப்பட்டவள் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அவள் முகத்தை மெதுவாய் தன்னை நோக்கி திருப்பியவன்,

“விரகதாபம்னா என்னன்னே நேத்து தான்டி எனக்கு புரிஞ்சுச்சு” என்றவனைப் பார்க்க முடியாமல், அவன் நெஞ்சிற்குள்ளேயே அடைக்கலம் புகுந்து கொண்டாள்.