பார்ட்டிக்கு வந்திருந்த செலிபிரிட்டிஸ் அனைவரையும் பார்த்த ஆராவிற்கு மயக்கம் வராத குறை தான். தங்கள் திருமணத்தில் அனைவரையும் பார்த்திருந்தாலும், இப்போது அனைவரும் வித்யாசமாய் தெரிந்தனர் அவளுக்கு.
அவர்கள் அனைவரையும் பார்ட்டி உடையில் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.
“இதையெல்லாம் வியர் பண்ணி, நார்மலா எப்படி நடக்குறாங்க?” என்று ஒரு பக்கம் ஆராய்ச்சி செய்தாலும், பலரின் உடைகளையும், அதன் டிசைன்களையும் கண்கள் படம் பிடித்துக் கொண்டிருக்க,
“தேவ் சார், எல்லாரும் சொன்ன மாதிரி உங்க வொயிப் நிஜமாவே ஸ்டன்னிங் பியூட்டி தான். கலா ரசிகன் சார் நீங்க. இப்படி ஒரு தேவதைக்கு வெயிட் பண்ணித்தான் எங்களை எல்லாம் ரிஜக்ட் பண்ணிங்களா?” என்று இளம் கதாநாயகி விகல்பம் இல்லாமல் கேட்க, சிறு புன்னகையை மட்டுமே உதிர்த்தான் தேவ்.
“ஹேய் ஆதிரா? வாட் அ சர்பிரைஸ்” என்றாள் தங்கையை அங்கு கண்டு விட்டு.
“ஆனா, நீ இன்வைட் பண்ணவும் இல்லையே?” என்று குத்தினாள் ஆதிரா.
“ஹேய் ஆதிரா! சில். அதான் நான் இன்வைட் பண்ணேன்ல. யார் இன்வைட் பண்ணா என்ன? லெட்ஸ் என்ஜாய் திஸ் பார்ட்டி” என்றான்.
“உங்களுக்காக இவளை சும்மா விடுறேன் மாமா” என்றவள் அவளை முறைத்துக் கொண்டு செல்ல,
“மாமாவா?” என்று வாயைப் பிளந்து நின்றாள் ஆரண்யா.
“ஷாக்கை குறைடி. மவுத்தை குளோஸ் பண்ணு. இல்லைன்னா நான் குளோஸ் பண்ண வேண்டியதா இருக்கும் பரவாயில்லையா?” என்று அவன் காதோரத்தில் கிசுகிசுக்க, பட்டென்று வாயை மூடினாள் ஆரா.
“அங்க பார், உன் பிரண்ட் மித்ரா வர்றாங்க” என்றான் தேவ்.
“ஹேய் மித்ரா” என்று அவனிடமிருந்து அவள் விலகி செல்ல எத்தனிக்க, அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.
“என்னைய விட்டு நகரவே கூடாது” என்றான் ஆர்டராய். சிறிது நேரம் அவனுடன் இருந்து, வந்தவர்களின் கேள்விக்கு பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆரா. மெல்ல அவனிடமிருந்து விலகி மித்ராவின் அருகில் செல்ல,
“என்ன மேடம்? என் மேல இருந்த கோபமெல்லாம் போயாச்சா?” என்றாள் மித்ரா.
“அதை வேற ஏண்டி ஞாபகப் படுத்துற? நானே லூஸ் ஹேர் விட்டு கவர் பண்ணியிருக்கேன்” என்று பல்லைக் கடித்தாள். அவ்வளவு நேரம் மறந்திருந்த விஷயம் மீண்டும் மூளைக்குள் சென்று அமர,
“பேக்ல எதுவும் தெரியலையே மித்ரா. அநியாயத்துக்கு லோ-நெக் டி. அதுலயும் நாட் குடுத்திருக்க?” என்றாள் படபடப்பாய்.
“அதெல்லாம் ஒன்னும் தெரியலை” என்று மித்ரா கடுப்புடன் சொல்ல,
“ஏன் என்னவோ மாதிரி பேசுற?” என்றாள் ஆரா.
“இதெல்லாம் என்ன ஆரா? புதுப் பழக்கமா இருக்கு? இங்க பாரு எல்லாரும் ட்ரிங்க்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..” என்று மித்ரா முகத்தை சுழிப்பவளைப் போல் வைத்துக் கொண்டாள்.
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? எனக்கு பார்ட்டிக்கு போய் தான் பழக்கம் இல்லையே தவிர, அங்க இதெல்லாம் இருக்கும்னு கூடவா தெரியாது?” என்றாள் ஆரா கேள்வியாய்.
“இப்பல்லாம் நல்லா பேசக் கத்துகிட்ட” என்று மித்ரா பேசிக் கொண்டிருக்கும் போதே ஆராவின் அருகில் வந்தாள் ஆதிரா.
“ஹாய் மித்ரா” என்றாள் ஆதிரா.
“அக்கான்னு மரியாதை எல்லாம் இல்லையா?” என்றாள் மித்ரா பட்டென்று.
மித்ரா, ஆதிராவைப் பார்த்த பார்வையில் மருந்துக்கும் சிநேகம் இல்லை. இதை தேவ் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அதற்கடுத்து முக்கிய விஐபி க்கள் வர, அவர்களை உபசரிக்கும் பொருட்டு ஆராவை விட்டு சிறிது நகர்ந்தான் தேவ். உடனே அவளை பிடித்துக் கொண்டாள் மித்ரா.
“ஆதிராவை இன்வைட் பண்ணது யாரு” என்றாள் ஆராவிடம்.
“தேவ் தான்” என்றாள் புரியாமல்.
“தேவ்க்கும் உன்னோட தங்கச்சிக்கும் என்ன தொடர்பு. அக்கா நீயே இன்வைட் பன்னாதப்போ அவர் ஏன் இன்வைட் பண்ணனும்?” என்றாள் மித்ரா.
அவளின் பேச்சில் எரிச்சல் வந்தது ஆராவிற்கு.
“பார்த்து பேசு மித்ரா! ஆதிரா என் சிஸ்டர். அப்பறம் தேவ் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. ஆதிரா அப்படி பட்டவளும் கிடையாது. எல்லாரையும் இன்வைட் பண்ணும் போது என் சிஸ்டரை இன்வைட் பண்றதுல என்ன தப்பு? இன்பேக்ட் நான் மறந்துட்டேன். பட் தேவ் சரியா இன்வைட் பண்ணிட்டார். ஏன் உன்னைக் கூட அவர் தானே இன்வைட் பண்ணார்?” என்றாள் ஆரா.
“அக்கா பொருளை பிடிச்சா, அவ புருஷனையும் பிடிக்கணும்னு அவசியமில்லை மித்ரா” என்ற ஆதிராவின் குரலில் ஆரா பயத்துடன் திரும்பினாள்.
“ஆதிரா நான் அப்படி நினைக்கலை” என்று ஆரா விளக்கம் சொல்ல முற்பட,
“நான் உன்னை ஏதாவது சொன்னேனா? எதுக்கு வான்டேடா வண்டியில ஏர்ற?” என்ற ஆதிரா,
“நீங்க சொல்லுங்க மித்ரா, அப்படி அவசியம் இருக்கா?” என்றாள் மீண்டும் அழுத்தமாய்.
மித்ரா அவளை முறைத்துக் கொண்டே சென்று அங்கிருந்த டேபிளில் அமர்ந்து கொண்டாள்.
“இங்க பார் ஆரண்யா, என்னைக்கு இவ பிரண்ட்ஷிப்பை விட்டு ஒழிக்கிறியோ அன்னைக்குத் தான் நீ உருப்படுவ. அதுக்கு மேல உன் இஷ்ட்டம்” என்றவள் நகர, தேவ்வை காணாமல் தேடினாள் ஆரா.
“ஹாய் பியூட்டி, ஐ ஆம் ஆக்டர் பிரணவ். ஷெல் வி டான்ஸ்” என்றான்.
“நோ” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க, இவளைப் பார்த்த மித்ரா பார்க்காதவளைப் போல் அமர்ந்து கொண்டாள். வேகமாய் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் ஆரா.
“நான் சொல்லலை, அங்க பாரு எல்லாம் ட்ரிங்க்ஸ்சும் கையுமா சுத்துறதை” என்றவள், சாருவை காட்ட, அவளோ ஒரு ஹீரோவுடன் இணைந்து இணக்கமாக நடனமாடிக் கொண்டிருந்தாள். பார்த்த ஆராவிற்கு ‘ச்சைக்’ என்றிருந்தது.
“இவ்வளவு அழகான நடிகைகள் எல்லாம் தேவ்க்கு ப்ரப்போஸ் பண்ணியிருக்கும் போது, அவர் எதுக்காக உன்னைத் தேடி வந்து மேரேஜ் பண்ணனும்? அது ஒன்னு தான் எனக்கு புரியலை. அவர் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி பார்த்திருக்கலாமே?” என்றாள் மித்ரா.
“அவர் ஆதிராவைத் தான் பார்க்க வந்தார். வந்த இடத்துல என்னைப் பிடிச்சு கேட்கவும் வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்” என்றாள் பொறுமையாக.
“எதுக்கும் கேர்புல்லா இரு ஆரா. என்னால முடிஞ்ச சின்ன அட்வைஸ்” என்றாள்.
ஆராவிற்கு ஏற்கனவே அந்த இடமும், இசையும், அவர்கள் நடனமும் தலைவலியைத் தந்திருக்க, மித்ராவின் பேச்சு அதைக் கூட்டியதே தவிர குறைக்கவில்லை. தேவ் இவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அவனை பேச்சிற்கு பிடித்துக் கொண்ட ஒரு ப்ரொடியூசர் அவனை விடாமல் இழுத்து வைத்துக் பேசிக் கொண்டிருந்தார்.
“மேம் சார் உங்களுக்கு ஜூஸ் குடுக்க சொன்னார்” என்றான் ஒரு பேரர்.
“எந்த சார்?” என்றாள்.
“தேவ் சார் தான் மேம்” என்றான்.
“ஹோ, ஓகே தேங்க் யு “ என்றவள் அதை குடிக்க முற்பட,
“ஹேய் அந்த ஜூஸ் உனக்கு பிடிக்காது. நீ இதைக் குடி” என்று மித்ரா வேறொன்றை திணிக்கக் முற்பட,
“இல்லை இதுவே இருக்கட்டும்” என்றபடி அதை குடிக்க ஆரம்பித்தாள் ஆரா. அதன் சுவையில் மீண்டும் கொண்டு வர சொல்லி குடிக்க,
அவள் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆதிரா வேகமாய் அவள் அருகில் வந்தாள்.
“என்ன குடிக்கிற?” என்றாள்.
“ஜூஸ் தான் ஆதிரா? உனக்கு வேணுமா? டிப்ரன்ட் டேஸ்ட்ல நல்லா இருக்கு” என்றவள் மீண்டும் குடிக்க, அதைப் பார்த்த ஆதிரா,
“இது ஜூஸ் இல்லை ட்ரிங்க்ஸ். இதை யார் குடுத்தா உனக்கு?” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“என்னை எதுக்கு முறைக்கிற ஆதிரா. தேவ் சார் குடுக்க சொன்னதாத்தான் வந்து குடுத்துட்டு போனான் பேரர்” என்றாள் மித்ரா.
“அப்போ நான் குடிச்சது சரக்கா?” என்றாள் வாயைப் பிளந்தபடி.
“வாயை மூடு ஆரா. இப்ப கேளு அது சரக்கான்னு” என்றாள் ஆதிரா,
“ட்ரிங்க்ஸ்ன்னா ஸ்மெல் வரணுமே? ஆனா இதுல தான் ஒண்ணுமே வரலையே? ஆனா, நல்ல டேஸ்ட்டியா இருக்கு” என்றவள், அருகே பேரர் வரவும், மீண்டும் ஒன்றை எடுத்து ஒரே மூச்சில் குடித்திருந்தாள். மித்ரா நமட்டு சிரிப்புடன் பார்த்திருக்க, ஆதிரா அவளை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள்.
தேவ்விடம் சென்று விஷயத்தை சொல்ல, ஆராவிடம் விரைந்தான் தேவ்.
“ஹேய் சத்யா, இந்த ஜூஸ் செம்ம டெஸ்ட்டி. ஐ வான்ட் ஒன் மோர்” என்றாள் அவனிடம்.
“யார் குடுத்தா உனக்கு?” என்றான் கோபத்துடன்.
“நீயென்ன லூசா? நீதானே எனக்கு குடுத்துவிட்ட. அதான் நம்பி குடிச்சேன்” என்று உளற ஆரம்பித்திருந்தாள்.
“சரி வா போகலாம்” என்று தேவ் அவளை அணைத்தபடி கூட்டி செல்ல,
“ஹேய் சத்யா, பார்ட்டி இன்னும் முடியலை. பாதியில போனா நல்லா இருக்காது மேன்” என்று நெஞ்சில் புதைந்து கொண்டு பேச,
அவளை அழைத்துக் கொண்டு அவனுக்கென்று புக் செய்திருந்த அறையில் விட்டவன்,
“ஒரு டென் மினிட்ஸ் பார்த்துக்க ஆதிரா. நான் வந்திடுறேன்” என்று ஆதிராவின் பொறுப்பில் அவளை விட்டுச் சென்றவன், திரும்பி வரும் போது முகம் முழுவதும் கோபத்தில் சிவந்தபடி வந்தான்.
“என்னாச்சு? ஏதாவது பிராப்ளமா?” என்றாள் ஆதிரா.
“நத்திங்க ஆதிரா” என்றவன்,
“யுவன், நீ ஆதிராவை அவ கார்லயே டிராப் பண்ணிட்டு கேப் புக் பண்ணி வந்துடு. நான் டிரைவ் பண்ணிக்கிறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தவன், ஆராவை அழைத்துக் கொண்டு காருக்கு சென்றாள்.
“பேசாம வாடி” என்று ஒரு அதட்டல் போடவும், அமைதியாய் இருந்தாள். அவன் கோபத்தை கண்ட்ரோல் செய்த படி காரை ஒட்டிக் கொண்டிருக்க, தலையை சாய்த்து சாய்த்து அவனையே விநோதமாய் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் அவன் அருகே நகர்ந்தவள், ஒற்றை விரலால் அவன் கன்னம் வருட, அவள் செய்கையில் அவன் முகத்தில் இருந்த கோபம் மறைந்து சட்டென்று மென்மை குடியேறியது.
“என்னடி?” என்றான் சிரிப்புடன்.
“யு லுக் சோ ஸ்மார்ட் மேன்” என்றாள் உளறியபடி.
“அப்படியா?” என்றான் சிரிப்புடன்.
“அப்பறம்?” என்று அவன் பேச்சுக் குடுக்க,
“ஐ வான்ன அ டீப் கிஸ் வித் யு “ என்றவளின் குரலில் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியிருந்தான் தேவ்.