நீ கிளம்பு யுவன். நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என்றான் தேவ்.
“ஓகே சார்” என்றபடி கிளம்பினான் யுவன்.
நாளைக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட், அன்ட் மேக்கப் மேனை வர சொல்லியிருக்கேன். உனக்கு ஓகே வா?” என்றான்.
“ஹெலோ மிஸ்டர் சத்யா! ஏதோ நீங்க சொன்னிங்கன்னு தான் பார்ட்டிக்கு வர ஓகே சொன்னேன். அதுக்காக ஹீரோயின் ரேஞ்ச்க்கு எல்லாம் என்னால கிளம்ப முடியாது” என்றாள் கடுப்பாக.
“ஜஸ்ட் லைட்டா பண்ணிகிட்டா போதும். கொஞ்சம் கிராண்டா தெரிய வேண்டாமா?” என்றான்.
“எதுக்கு அப்படி தெரியனும்?ஒன்னும் தேவையில்லை. நானே மேக்கப் பண்ணிப்பேன்” என்றாள்.
“எது? இந்த புடவை கட்டி, ஜஸ்ட் ஒரு பின்னல் போட்டு, ஒரு பொட்டு வைப்பியே அந்த மேக்கப்பை சொல்றியா?” என்றான் சிரித்தபடி.
“நல்ல முன்னேற்றம் தான். முதல் நாள் பேசும் போது காத்து தான் வந்தது. இப்போ மேடம்க்கு பேச்சு சரளமா வருதே” என்றவன் அவளை மீண்டும் நெருங்க,
“இப்ப என்ன?” என்றாள்.
“ஆரா,தாகமா இருக்குற மாதிரி இருக்கு” என்றான்.
“தண்ணி எடுத்துட்டு வரவா?” என்றாள்.
“வேண்டாம்” என்பதைப் போல் தலையை ஆட்ட,
“ஜூஸ்” என்றாள்.
“எனக்கு பழரசம் எல்லாம் வேண்டாம்” என்றான்.
“அப்பறம்”
“இதழ்ரசம் கிடைக்குமா?” என்றவன் அவள் இதழ்களை நோக்கி செல்ல, சட்டென்று அவனைத் தள்ளியவள்,
“இப்போதைக்கு புளி ரசம் கூட கிடைக்காது மிஸ்டர் சத்யா. இதழ்ரசம் வேணுமாமே? ஆளையும் மூஞ்சியையும் பாரு” என்றவள் அவனை முறைத்துவிட்டு செல்ல,
“அரைவேக்காடு, கொஞ்சமாவது மனுஷனோட பீலிங்க்ஸ் புரியுதா இவளுக்கு?” என்று தலையைக் கோதியவனுக்கு, அல்லும் பகலும் அவள் அருகாமை வேண்டும் என்று தோன்றிய உணர்வை எண்ணி சிரித்துக் கொண்டான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாதவனுக்கு எரிச்சலாய் இருந்தது.
“இவன் என்ன வீட்லயே உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான். இவன் இப்படியே இருந்தா என் நிலைமை என்னாகுறது?” என்று யோசித்தவனுக்கு எரிச்சலை யாரிடம் காட்டுவதென்று புரியவில்லை.
மொபைலில் மூழ்கியிருந்த சாருவை பிடித்துக் கொண்டான்.
“வந்து எனக்குன்னு வாய்ச்சிருக்கு பாரு? எப்ப பாரு மேக்கப் போட வேண்டியது, ஊர் சுத்த வேண்டியது, இல்லைன்னா இப்படி உட்கார்ந்து மணிக்கணக்கா செல்லை பார்க்க வேண்டியது” என்று புலம்ப,
“உன்கூட ரொமான்ஸ் பண்ணி எனக்கு அலுத்து போச்சு யாதவ்” என்றாள் நிமிராமல்.
“எனக்குக் கூடத்தான் உன்னை வர வர பிடிக்கலை. அதுக்கு என்ன செய்யலாம்?” என்றான் எரிச்சலாய்.
“எப்படி பிடிக்கும்? உன் பார்வை எல்லாம் இப்போ தேவ் பொண்டாட்டி மேல இல்ல இருக்கு? அப்பறம் நான் எப்படி கண்ணுக்குத் தெரிவேன்” என்றாள்.
“இங்க பார்! அந்த ஆரண்யா அழகிடி. அந்த பொண்ணு மட்டும் என் படத்துல ஹீரோயினா நடிச்சா கண்டிப்பா படம் ஹிட்டு தான். இப்போ தேவ் வொயிப்ன்ற ப்ரேம் வேற இப்ப இருக்கு. எப்படியாவது கன்வைன்ஸ் பண்ணி நடிக்க வைக்கிறேனா இல்லையா பாரு?” என்றான்.
“இதுவரைக்கும் உன் ஆட்டம் வெளியதான் இருந்துச்சு யாதவ். அதனால பெருசா பாதிப்பு இல்லை. வீட்டுக்குள்ள ஆட நினைக்கிற? தேவ்க்கு மட்டும் விஷயம் காத்து வாக்குல தெரிஞ்சா கூட போதும், அப்பறம் நீ பிச்சை தான் எடுக்கணும்” என்றாள்.
“அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னமோ நீ பெரிய ஒழுங்கு மாதிரி பேச வந்துட்ட. என் பட ஹீரோ கூடவே இருந்தவ தானடி நீ” என்றான்.
“அனுப்புனவே நீதானடா? என்னமோ யோக்கியன் மாதிரி பேசுற? உனக்கு காரியம் ஆகணும்னு தான என்னை லவ் பண்றேன்னு சொல்லி, உன்னோட லாபத்துக்கு யூஸ் பண்ணிகிட்ட. நானும் நீ பெரிய டேலன்ட்டுன்னு நம்பி ஏமாந்துட்டேன். இங்க வந்து பார்த்தாத்தான் தெரியுது. தம்பி தான் ஹீரோ, நீ வெறும் ஜீரோன்னு” என்றாள் சாருவும் கோபமாக.
“சரி விடு சாரு. எதுக்கு பழசெல்லாம். நாம நம்ம லைபை என்ஜாய் பண்ணுவோம்” என்று யாதவன் அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.