“அது தெரியலை மித்ரா. ஆனா, இங்க வந்தப்ப இருந்த வெறுமையோ வெறுப்போ இல்லை எனக்கு. அது ஏன்னு சொல்லத் தெரியலை எனக்கு. இங்க நான் நானா இருக்கேன். என்ன வேலை ஒன்னும் செய்யாம சும்மாவே இருந்து பொழுது போக்குறது தான் கஷ்ட்டமா இருந்தது. இங்க எல்லாம் செட் பண்ணிட்டா,இனி அதுவும் இருக்காது.” என்றாள் ஆரா.

மித்ரா அமைதியாய் இருக்க,

“ஏன் அமைதியாகிட்ட மித்ரா?” என்றாள் புரியாமல்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆரா. இனி நம்ம பிஸ்னஸ் எப்படி ரன்னாகப் போகுதுன்னு யோசிக்கிறேன்” என்றாள்.

“அந்த கவலையே வேண்டாம் உனக்கு. தேவ் அதுக்கு கண்டிப்பா ஏதாவது சொல்யூஷன் சொல்லுவார்” என்றவள்,

“நம்ம திருச்சில இருக்குற ஸ்டிச்சிங் யூனிட்டை இங்க சென்னைக்கு ஷிப்ட் பண்ணலாம்ன்னு யோசிக்கிறேன், பார்க்கலாம்” என்றாள் ஆரா.

“அதுக்கு இங்க ஸ்பேஸ் தேவைப்படும். மெயின் ஏரியால லேண்ட் வாங்குறது சாதாரண விஷயம் இல்லை” என்றாள் மித்ரா.

“அதையெல்லாம் தேவ் பார்த்துப்பார் மித்ரா” என்றாள்.

“பரவாயில்லையே! இந்த மூணு நாள்ல தேவ் உன்னை நிறைய மாத்திட்டார். முன்னாடி தான் நீ சாதாரண ஆரண்யா. ஆனா இப்போ அப்படி இல்லையே, தி கிரேட் ஆக்டர் சத்ய தேவ் மனைவி.அவர் நினைச்சா என்ன வேணும்னாலும் வாங்கலாம். ” என்றாள் மித்ரா.

“அப்படி எதுவும் என்னை மாத்தின மாதிரி தெரியலை. அப்பறம் இடம் ஏன் அவர் வாங்கிக் தரனும். நம்ம பிஸ்னசே நல்லாத்தானே போகுது.என்னாலையே வாங்க முடியும்” என்றவள்,

“நீ வா சாப்பிட போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“இல்லை வேண்டாம் ஆரா. நான் ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வந்துட்டேன். வீட்டுக்கு போய் பிரஷ் ஆகிட்டு அப்பறம் ப்ரேக்பாஸ்ட் பார்த்துக்கிறேன்” என்றவள் கிளம்ப எத்தனிக்க,

“என்ன அவசரம் மித்ரா? இருந்து சாப்பிட்டு போங்க” என்றான் தேவ்.

“பரவாயில்லை சார், இருக்கட்டும்”

“அப்பறம் மித்ரா, நாளைக்கு ஈவ்னிங் பார்ட்டி அரேஜ்ன்ச் பண்ணியிருக்கேன். ஆராவோட பிரண்ட் நீங்க இல்லாம எப்படி. கண்டிப்பா வந்துடனும். லொக்கேஷன் உங்களுக்கு ஆரா சென்ட் பண்ணுவா” என்றான் தேவ்.

சற்று யோசித்த ஆரா,

“கண்டிப்பா சார், நான் இல்லாமையா? மேரேஜ் தான் நான் வர்றதுக்குள்ள முடிச்சுட்டிங்க. ஆனா, இனி ஆரா சம்பந்தப்பட்ட எல்லாத்துலையும் இந்த மித்ரா கண்டிப்பா மிஸ் ஆக மாட்டா” என்றாள்.

“அது தான் எனக்கும் வேணும். நாங்களும் உங்களை மிஸ்ஸாக விட மாட்டோம். ஏன்னா? நீங்க தான் அவளோட பெஸ்ட் பிரண்ட் ஆச்சே” என்றான் சிரிப்புடன்.

மித்ரா வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் அங்கிருந்து கிளம்பினாள்.அதுவரை அமைதியாக இருந்த யுவன்,

“சார் படம் ரிலீஸ் டேட் அனௌன்ஸ் பண்ணிடலாமான்னு ப்ரொடியூசர் ஆபீஸ்ல இருந்து கால் பண்ணாங்க” என்றான்.

“நோ யுவன். ரிலீஸ் டேட் தள்ளிப் போகும். சில சீன்ஸ் மாத்தணும். கொஞ்சம் ஆல்ட்ரேஷன் இருக்கு. கிளைமேக்சே மாத்த வேண்டியது வரும். நான் சொன்னேன்னு இன்பார்ம் பண்ணிடு” என்றான் தேவ்.

“சார் அவங்க அதுக்கு ஒத்துப்பாங்களான்னு தெரியலை” என்றான் தயங்கியபடி.

“இது தான் என்னோட பைனல் டிசிஷன்னு சொல்லு யுவன். நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்றான் யோசனையுடன்.

“ஓகே சார்” என்றான்.

“இப்போ வந்துட்டு போனாங்களே மித்ரா, அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு இருக்கட்டும். அவங்க எங்க போறாங்க? என்ன பண்றாங்க? எல்லாமே எனக்கு அப் டு டேட் வந்தாகணும்” என்றான் தேவ்.

“ஏதாவது பிரச்சனையா சார்?”

“புதுசா எந்த பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு தான்” என்றான் தேவ்.

“ஓகே சார்” என்ற யுவனுக்குள்ளும் யோசனைகள்.

இருவரும்  பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆரண்யா வரவும் அப்படியே பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

“என்னாச்சு? ஏதாவது முக்கியமான விஷயம் பேசிட்டு இருந்திங்களா? நான் தான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றாள் ஆரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆரண்யா. ஒரு சின்ன ஸ்டோரி டிஸ்கஷன் அவ்வளவு தான்” என்றவன்,