Advertisement

ஓம் நமச்சிவாய.

உன் நினைவே என் சுவாசமானது.

அத்தியாயம் 19.

எழிலை அனுமத்திருந்த மருத்துவமனையில்.  அமைச்சர் ஒருவரையும் ஹார்ட் அட்டாக்கினால் அங்கு சேர்த்தார்கள்.. அந்த அமைச்சரின் உடல் நலனை அறிந்து கொள்ள மூன்  டீவி சேனல் நிருபர்கள் இருவர்  அந்த மருத்துவமனையை சுற்றி திரிந்தார்கள்.. ஏதாவது சுடச்சுட நீயூஸ் கிடைக்காதா?.. என்கிற ஆவலில்.. 

அப்பொழுதுதான் எழிலுக்கு பிரசவம் பார்க்கும்போது  கூட இருந்த நர்ஸ் பெண்கள் அவளின் பிரசவத்தை பற்றி பேசிக்கொண்டார்கள்.. அதை கேட்ட நிருபர்கள்.. எழிலுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்  லட்சுமி அம்மாவை சூழ்ந்து கேள்விகளை அடுக்கினார்கள். 

மாறனின் கட்டாயத்தினால் ஓய்வெடுக்கச்சென்ற செழியன்.. ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனை வந்துவிட்டான்.. அவன் வந்ததும் மாறன் சொன்னது போன்று எழிலிற்கு உதவியாக இருந்த நர்ஸ் பெண் ” சார் நீங்க வந்ததும் மாறன் சார் அவருக்கு அழைக்கச்சொன்னார்.. அவருக்கு ஏதோ கால் வந்துது அதை எடுத்து பேசினதும் டென்ஷனாகி நீங்க வந்தா சொல்லச்சொல்லி என்கிட்ட சொல்லிட்டு போனார்..” என்றாள்… 

அதை கேட்ட செழியன். என்னவோ என்று பதட்டத்துடன் மாறனுக்கு அழைத்தான்.. அதை எடுத்த மாறனோ

” மாமா நொண்டி குழந்தைகளை கடத்திட்டு போயிட்டானாம்.. இது அவனா செய்து இருக்க வாய்ப்பில்லை.. இதுல ஏதோ நடந்திருக்கு நீ என்ன பண்ணுறன்னா அந்த மாணிக்கம்  பயலை கண்கானி அப்போதுதான் என்ன நடந்திருக்குனு தெரியும்.. அப்புறம் கவியை வீட்டுலயே இருக்க சொல்லு மாமா..  நீ சொன்னாதான் கொஞ்சம் அடங்குவான்..” என்று விட்டு வைத்தான் மணிமாறன்..

மாறன் சொன்னதை கேட்டதும் எழில் இருந்த அறைக்கு சென்று சாந்தியை தட்டி எழுப்பினான்.. சாந்தி மிகுந்த சோர்வில் மாறன் உறங்க சொன்னதும் ஆழ்ந்து உறங்கிவிட்டார்..

 செழியன் வந்த அரவம் கேட்டு எழில் கண் விழித்தாள்.. ” மாமா அம்மா ரொம்ப டயர்டா தெயுறாங்க எழுப்பாதீங்க தூங்கட்டும்..” என்று அவனது முகத்தை பார்த்து சோபையாக சிரித்தபடி கூறினாள் எழில்..

 அவளிடம் அவனின் அவசரத்தை   கூறமுடியாமல் மீண்டும்  சாந்தியை இரண்டு முறை கொஞ்சம் அழுத்தமாக தட்டி எழுப்பினான் செழியன்..

 அதில் கண்விழித்த சாந்தியை அழைத்துக்கொண்டு வெளியே சென்று மாறன் கூறியவற்றைக் கூறி.. எழிலை கவனமாக பார்த்துக் கொள்ளும்படியும் அவன்   சென்று குழந்தைகளை காப்பாற்றி அழைத்து வந்த பின் மீண்டும் வருவான் என்றும் கூறிவிட்டு அவனின் சூப்பியிடம்  சென்றான்..

 அவளின் அருகில் சென்று அவளது தலையை தடவி ” மாறன் ஒரு அவசர வேலையாக வரச்சொல்லி கூப்பிட்டான்..  நான் போயிட்டு வரேன்.. நீ கொஞ்சம் கவனமா இருடி சூப்பி.. சாந்தி அக்கா பக்கத்திலேயே இருக்கும் எதையும் யோசிக்காத சீக்கிரமா வந்துருவேன்.. ” என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து சென்றான் செழியன்..

 அவன் சென்றதும் ” அம்மா பாரும்மா உன் தம்பியை என்ன கொழுப்பு குழந்தைகள் பிறந்த பிறகும் இன்னும் இன்னும் என்னை சூப்பினே சொல்றாரு… நாளைக்கு இவங்க வளர்ந்ததுக்கு பிறகு அதைக் கேட்டு என்னை  நக்கல் பண்ண மாட்டாங்களா…?” என்று கேட்டு தாயிடம் செல்லம் கொஞ்சி சினுங்கினாள் எழிலரசி..

” அவன் உன்னை தூக்கி வளர்த்தவன்.. நீ சின்ன வயசா இருக்கும்போது உன்னோட ஒவ்வொரு செயலையும் பார்த்து அப்படி ராசிப்பான்… நீ விரல் சூப்பி திரியும் போது அதை தடுத்து அந்த பழக்கத்தை மாற்ற அவன் ரொம்ப கஷ்டப்பட்டான்.. ஆனாலும் நீ உங்க அப்பாவோட சேர்ந்து அவனுக்கு அடி வாங்கி கொடுப்ப.. ஆனா நீ அதை மறக்க முயற்சி செய்யவேயில்லை… அப்புறம் சின்ன சின்ன சண்டை வந்து இரண்டு குடும்பமும் பிரிஞ்சிடோம்..” என்றார் கவலையுடன்..

” அச்சோ..! அப்போ நான் சின்னப்பொண்ணு எனக்கு எதுவும் தெரியாது.. ஆனா இப்ப மாமாதான் எனக்கு உயிர்.. அதனால இனி ஹாப்பி அண்ணாச்சி பீல் மட்டும் தான் மா.. கவலை படாத.. மாமா எல்லாத்தையும் சரி பண்ணிடுவார்.. அப்பாவும் இனி மாமாவை புரிஞ்சு ஏற்றுக்கொள்வார் பாரேன்.. ” என்றாள் மாமன் மீது உள்ள நம்பிக்கையில் எழில்..

மாறன் சொன்னது போன்று கவிக்கு செழியன் அழைத்து  வீட்டில் நடக்கும் விருந்தை கவனிக்கும் படியும்.. அவர்கள் யாருக்கும் குழந்தைகள் இல்லை என்ற விசயம் தெரியவேண்டாம்.. சீக்கிரம் குழந்தைகளை அவர்கள் கண்டு பிடித்து அழைத்துவருவதாகவும் கூறினான் செழியன்..

அதன் படியே கவி வீட்டு பெண்களை வேலையில் ஈடுபடுத்தி அவர்களை கண்கானிப்பதற்கு அகிலத்திடம் உண்மையை சொல்லிவிட்டு அழகனுடன் அவனும் விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றான்..

மாறன் சென்ற அரை மணி நேரத்தில் நொண்டி என்பவனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.. 

அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன்..

” டேய் நீ மட்டும் என் கையில மாட்டின தொலைச்சிடுவேன்.. துரோகி.. இது மட்டும் அப்பா தாத்தாவுக்கு தெரிஞ்சது உன் நிலை ரொம்ப மோசமாகிடும்.. ஒழுங்கா சொல்லிடு குழந்தைகளை எங்க வச்சிருக்க?.. ” என்றான் மாறன்..

அவன் பேசியதை காதில் வாங்காதது போன்று நொண்டி என்பவன் வேறு  யாரிடமோ பேசுவது  பேசினான்…. 

” டேய் உங்களை என்ன பண்ணுறேன் பாருங்கடா..? நான் ஊருக்குள்ள இருக்கிற பள்ளிக்குதானே வரச்சொன்னேன்.. செவிட்டு பயலுகளா?.. எங்கையோ போய் நின்னு ஏன் என் உயிரை வாங்குறீங்க..? அந்த மாறனும் அவன் மாமன் செழியனும் வருவதற்கு முன்ன சீக்கிரம்  நீங்க வந்து தொலைங்கடா?.. அப்போதுதான் அந்த தடியன்களை சமாளிக்க முடியும்..” என்றான்.. 

சற்று நேரத்தில் அந்த பக்கம் சத்தம் எதுவும் இல்லை ஏதோ சரியில்லை என உணர்ந்த மாறன்.. ” சரிண்ணே ஏன் கோவப்படுற?..  பக்கத்துல வந்துட்டோம்.. ஊருக்கு புது இடம் தெரியாம கேட்டால் ஏன் நீ திட்டுற?..” என்று சற்று குரலை மாத்தி பேசிவிட்டு வைத்தான் மாறன்..

நொண்டி சொன்னவற்றை சரியாக புரிந்து கொண்டு மாமனுக்கு அழைத்து ஊர் பள்ளிக்கு வரும் படி கூறி போலீஸுக்கும் அங்கு வரும் படி கூறிவிட்டு அவனும் அங்கு சென்றான்..

நொண்டி சொன்னது போன்று அவனும் வேறு இரண்டு பேரும் மட்டுமே அங்கு இருந்தார்கள்.. மாறன் வந்த சற்று நேரத்தில்  போலீஸும் வந்து விட்டது.. 

மாறன் குழந்தைகளை தூக்க சென்றபோது இடையில் தடுக்க வந்த இருவரையும் மாறன் அடி வெளுத்து விட்டு கவியை பள்ளிக்கு வரும் படி அழைத்து குழந்தைகளை அவனிடம் வீட்டிற்கு எடுத்து செல்லும்படி கூறி அனுப்பிவைத்தான்.. 

போலீஸ்  ஆதாரத்திற்கு அவர்களை போட்டோ எடுத்துக்கொண்டு  அவர்களையும் நொண்டியையும் ஸ்டேஷன் அழைத்துசென்றார்கள்..

அங்கு வைத்து விசாரித்ததும் 

 நடந்த அனைத்தையும் நொண்டி மாறன் செழியன் போலீசார் அனைவரிடமும் கூறினான்.. 

அவனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு நாட்கள் நெருங்கி விட்டதாம்.. பிரசவம் பார்ப்பதற்கு கையில் பணம் இல்லையாம்.. இதற்கும் போய் எப்படி மாறன் வீட்டில் கேட்பது என யோசித்தபடி இருந்த நேரத்தில் மாணிக்கம் அவனை அழைத்து மாறனின் வீட்டிற்குள் வெளியாட்கள் யாரும் போகமுடியாதாம்.. அதனால் அவனை மாறனின் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே வரும்படியும் இதை செய்யவில்லை என்றால்.. நொண்டியின் முதல் ஆண் குழந்தையை அவன் கடத்திவிடுவான்.. இதை செய்தால் மாறன் தரும் பணத்தில் அவனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க பணம் தருவதாகவும் கூறி நொண்டியை மாணிக்கம் மிரட்டினான்..

 நடந்தவற்றை கூறிய நொண்டி   “இதற்கு மாறன் தம்பியோட மொத சம்சாரத்தோட அம்மா அப்பாவும் உடந்தைங்க.. நான் காசுக்காக இதை பண்ணல.. எங்க தாத்தா காலத்துல இருந்து அந்த பெரிய குடும்பத்துக்கு விஸ்வாசமா உழைக்கிறோம்..  நான் கஷ்டம்னு ஒரு வார்த்தை சொன்னா பெரிய அம்மா கணக்கு பார்க்காம அள்ளித்தருவாங்க.. ஆனா எனக்கு கேட்க தயக்கமா இருந்துசி.. அதை அந்த மாணிக்கம் பயன்படுத்த நினைச்சான்.. நான் மாட்டேன்னு சொன்னா வேற யாரையாவது வச்சி குழந்தைகளை கடத்திருப்பான்.. அதுதான் நானே இதை பண்ணுறதா சொல்லி பண்ணினேன்.. பெரிய வீட்டுல எல்லாரும் விருந்து நடக்கிற இடத்துல இருந்தாங்க.. நான் கண்ணன் தம்பியை அன்பு சின்னம்மா கூப்பிடுறதா சொல்லி அனுப்பிட்டு குழந்தைகளை பின் வழியாக தூக்கிட்டு வந்துட்டேன்.. 

அப்புறம் மாணிக்கம் என்னை மிரட்டி சின்னய்யாவுக்கு அழைத்து பணத்தோட வரும் படி சொல்லச்சொன்னான்.. நான் சொன்னதும் அவனோட ஆளுங்க இதோ இவனுங்களை என்னை கவனிக்க விட்டு போய்ட்டான்..” என்றான் நொண்டி..

அதன்பின் மாறன் நொண்டிக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு அனுபிவைத்தான்.. போலீஸ் மற்ற இரண்டு பேரையும் அடித்து மாணிக்கத்திற்கு அழைத்து மாறன் பணத்தோடு வந்திருப்பதாக கூறச்சொன்னான்.. 

அதே போன்று அவனும் கூறியதும் மாணிக்கத்தை பிடிக்க அவனுகளையும் அழைத்துக்கொண்டு போலீஸ் மீண்டும் பள்ளிக்கு சென்றது..

அவர்கள் நினைத்தது போன்று மாணிக்கமும் பணம் என்றதும் பறந்து வந்தானோ..! அவ்வளவு வேகமாக வந்தான்.. போலீஸ் நினைத்தது போன்று அவனையும் கைது பண்ணி அழைத்து சென்றார்கள்..

அதன்பின் மதுரை போலீஸிற்கு அழைத்து நிர்மலாவின் அம்மா அப்பா இருவரையும் கைது பண்ணும் படி கூறினார்கள்..

அதன்பின் மாறனும் செழியனும் வீட்டிற்கு வந்து உணவு உண்டுவிட்டு செழியன் மாறனை கட்டாயம்  ஓய்வெடுக்கும் படி மாமனாக அதட்டி கூறிவிட்டு அவனது சூப்பிக்கும் சாந்திக்கும் உணவை எடுத்துச்சென்றான்…

மாறன் வந்ததும் விருந்து அமர்களப்பட்டது.. நடந்தது எதுவும் அவனது மனைவி சுண்டெலிக்கு தெரியவேண்டாம்.. அவனது குழந்தையை சுமக்கும் இந்த நேரத்தில் இது தெரிந்தால் அவள் குழந்தைகளை  சரியாக கவனிக்கவில்லை என மனம் வருந்துவாள்.. என்று கூறி சொல்ல வேண்டாம் என்றான் மற்றவர்களிடமும்..

 இது அனைத்தையும் மாறன் அகிலத்திடம் கூறினான்.. 

அதன் பின் அவனது சுண்டெலியை தேடிச்சென்றான் மணிமாறன்..

அவளோ சமையல் நடக்கும் இடத்தில் நின்றாள்.. ” ஏய் சுண்டெலி உனக்கு எத்தனை தரம் சொல்லுறது அதிகமா உன்னை கஷ்டப்படுத்திக்காதனு.. இவன் என்ன சொல்லுறது நாம என்ன கேக்கிறதுனு தெனாவெட்ட இருந்தேனு வை பிச்சிடுவேன்.. வாடி..” என்று கொடியை அவர்களின் அறைக்குள் அழைத்து சென்றான்..

சென்றவன் கதவை சாற்றிவிட்டு                ” நேத்து இரவு இங்க இருந்து போனவன்.. இப்பதான் அதுவும் சுண்டெலியை பார்க்க ஆசையோட ஓடி வந்தா.. மாமனை காணோமேனு ஏக்கம் கொஞ்சமும் இல்லாம வேலையா பண்ணுற?.. உன்னை என்ன பண்ணுறேன்னு பாருடி..” என்று விட்டு வயிற்றோடு சேர்த்து பாதுகாப்பாக  பின்னிருந்து அவளை அணைத்தவன் காது மடலை செல்லக்கடி கடித்து அவளை அவஸ்த்தை படுத்தினான்..

” ம்பச்..!  விடுங்க மாமா.. சொல்லுறேன்ல விடுங்க..” என்றவள் அவனை அழைத்துசென்று கட்டிலில் அமரவைத்து அவனது தோளில் சாய்ந்தபடி ” ஏன் நான் என்ன மரமா? கல்லா? எனக்கு ஆசை வராம போக.. அதுக்காக எந்த நேரமும் புருசனை முந்தியில முடிஞ்சா வச்சிருப்பாங்க.. ஆம்பளைங்க வெளிய நாலு இடத்துக்கு போகவேணாம்.. எப்ப பாரு பொண்டாட்டி நினைப்பு போய்யா.. போ..” என்றாள் செல்லக்கோபத்தோடு அவளுக்குதானே தெரியும் இரவு அவனின் கையணைப்பு இல்லாமல் தூக்கம் வரமால் பட்ட கஷ்டம்.. அதை எவ்வாறு வெட்கத்தை விட்டு அவனிடம் சொல்வாள் பேதையவள்..

அதன்பின் செழியன் சொன்னதற்காக சற்று நேரம் அவளை அணைத்தபடியே இருவரும் தூங்கிப்போனார்கள்..

மருத்துவமனையில் செழியன் சென்றதும் டாக்டர் அவனை அழைத்ததாக கூறி சென்றாள் நர்ஸ்பெண்..

அவனும் சாந்தியிடம் சென்று எடுத்துவந்த உணவை கொடுத்துவிட்டு டாக்டர் அவனை வரச்சொன்னதாக சொல்லிவிட்டு அவர்களை சாப்பிடும்படியும்.. அவனும் மாறனும் சாப்பிட்டதாகவும்.. போன காரியம் வெற்றியாக முடிந்ததாகவும் சாந்தி மற்றும் எழிலிடம் கூறிவிட்டு அங்கிருந்து டாக்டரை பார்க்கச்சென்றான்.. 

Advertisement