Advertisement

பனித்துளியின் மீது பகலவன்
பார்வை படரும் நேரம்……….
அழகான பறவைகள் ஓசை எழுப்ப
அதிகாலை தொடரும் நேரம்…………
சோம்பல் முறித்து காலை
சுகமாய் தெரிகிறது……..
காணும் மனிதரில் எல்லாம் மெய்
அன்பே தெரிகிறது…….
அனைவருக்கும் விடியல் என்றுதான்
அதிகாலை இயம்புகிறதோ ?….
இருள் முடிந்து தொடங்கும் இனிய காலையாய்
வசந்தம் வரும் வாழ்க்கையிலும்.
வரவேற்க காத்திருப்போம் ……….
அழகாக விடிந்தது அந்த காலை பொழுது..,,
ஏங்க இந்த வருஷமாச்சும் நம்ம புள்ள மீனு இங்க பொங்கலுக்கு வருவாளா.?? போன வருஷம் வேலையை காட்டி அங்கேயே இருந்துட்டா.இந்த வருஷமாச்சும் அவ கண்டிப்பா இங்க வரனுங்க என்று சுப்புரபாதமாக அதனை திரும்பத் திரும்ப தன் கணவரிடம் கேட்டுக் கொண்டு இருந்தார் சுசிலா.
ஏன் மா காலையிலேயே உன்னோட சுப்புரபாதத்த ஆரம்பிச்சு என்ன கொள்ளுற…,அவ இந்த வருஷம் கண்டிப்பாக நம்மகூட தான் இருப்பா பொங்கலுக்கு சரியா நீ கவலைப்படாமா இரு மா..!!!! என்றார் ராஜன்.
“சரிங்க அவ வந்தா நான் ஏன் கவல பட போறேன் சொல்லுங்க” என்றார் சுசிலா.
” சரிங்க எதுக்கும் நாம இன்னைக்கு நம்ம குடும்ப ஜோசியர போய் பாத்துட்டு வந்தர்லாங்க “
“சரி மா பொய்ட்டு வந்தர்லாம் “என்றார் ராஜன்.
சரி அப்போ இன்னைக்கே போலாம்ங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு கிளம்பலாம் என்றார் சுசிலா.
#############
அர்ஜுன் தன் முதல் நாள் வேலைக்கு கிளம்ப ஆய்த்தமாகினான். சுபா அப்பொழுது அர்ஜுன் அறை கதவை தட்டி உள்ளே சென்றாள். அவன் குளித்து விட்டு வெறும் துண்டுடன் நின்றுகொண்டு இருக்க…,அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த சுபா.., அவன் நின்றுகொண்டு இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து நின்றாள். ஆனால் அவனோ கூலாக அவளிடம் நெருங்கி வந்து “என்ன” என்று கேட்டான். அதற்கு அவளோ” அம்மா நீங்க டி குடிக்க மாட்டிங்கன்னு காபி குடுத்துவிட்டாங்க” என்றாள் திக்கி திணறி.
“சரி அங்கே வச்சிட்டு போ” என்றான் அவளை பார்த்த படி…
அவள் பக்கத்தில் இருந்த மேசையில் வைத்துவிட்டு செல்லும் நேரத்தில்..,அவள் தடுமாறி கீழே விழ போக அர்ஜுன் அவள் இடையை லாவாக பிடித்து கீழே விழாமல் பிடித்துக்கொண்டான்.
அந்த இடம் கொஞ்சம் ஈரமாக இருந்ததால் அவனும் தடுமாறி அவள் மேலே படுக்கையில் விழுந்தான்.
அவனின் தொடுகையிலேயே சுபா தன்னை இழக்க தொடங்கி இருந்தாள். இருவரது கண்களும் சந்தித்து கொண்டது. இருவரும் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜுன் அவனது காதலை விழி வழியாக அவளுக்கு புகட்டிக் கொண்டு இருந்தான். அவளும் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க இருவரும் சிறிது நிமிடங்களுக்கு பிறகே சுயநினைவிற்கு வந்தனர் .
அர்ஜுன் தன்னை சமன் படுத்திக்கொண்டு எழுந்து, சுபாவையும் எழந்து நிற்க வைத்தான்.
“ஐம் ரி…யலி சா..சாரி அ..ர்ஜூ..ன் . நான் தான் கீழே தண்ணீர் சிந்தி இருந்தத‌ பாக்கல தெரியாம தான் விழுந்துட்டேன் ” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.
அவன் அவள் சென்ற வழியை பார்த்து சிரித்து விட்டு”செல்லம் ஓடிட்டியா பாத்துக்கிறேன் உன்னை ” என்று வாய் மொழியாக கூறி வேகமாக கிளம்பி கீழே சென்றான்.
அங்கு செல்வா சாப்பிட்டுக்கொண்டு இருக்க சுபா அவனுக்கு பறிமாறிக் கொண்டு இருந்தாள். அர்ஜுன் அங்கே சென்றதும் சுபா சமையலறைக்கு சென்று தன்னை மறைத்து போக்கு காட்ட தொடங்கினாள்.
“ஏய் சுபா அர்ஜுன்க்கு போய் பறிமாறு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க “என்று லதா அதட்ட…
“சரி மா போய் தொலையிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
“ஏய் என்ன டி இன்னும் இங்கேயே நின்னுட்டு இருக்க போ போய் அவனுக்கு இந்த தோசையை கொண்டு போய் வை ” என்று லதா அவளை துறத்த ..,அவளும் அதை வாங்கிக் கொண்டு டைனிங் டேபிள் அருகே சென்றாள்.
“இவளுக்கு என்ன தான் ஆச்சோ அர்ஜுன் வந்ததுல இருந்து இவ சரி இல்லையே “என்று புலம்பிக் கொண்டு இருந்தார் லதா.
சுபா டைனிங் டேபிள்க்கு சென்று அர்ஜுன்க்கு பறிமாறிக் கொண்டு இருக்கையில்..,செல்வா சாப்பிட்டு முடித்து விட்டு வேலைக்கு கிளம்பிச் சென்றான்.
பிறகு அர்ஜுனும் சாப்பிட்டு முடித்து விட்டு தன் முதல் நாள் வேலைக்கு கிளம்பி அவனும் சென்று விட்டான்‌..
செல்வா எப்பொழுதும் போல்,அவன் பூங்காவிற்கு சென்று கொஞ்ச நேரம் இருந்து விட்டு வேலைக்கு சென்றார்.
செல்வா வேலை பார்த்து கொண்டிருந்த நேரம், அவனுடைய மேல் அதிகாரி அவனை தன் அறைக்கு வருமாறு தரைவழி தொலைபேசி மூலம் அழைத்தார்.
அவனும் தன் வேலைகளை விட்டுவிட்டு , தன் மேல் அதிகாரரை காணச் சென்றான்.
“மே ஐ கம் இன் சார் “என்று கதவை தட்ட  ” எஸ் கம் இன் செல்வா” என்று உள்ளே அழைத்தார் அந்த மேல் அதிகாரி.
சொல்லுங்க சார் எதுக்காக என்னை கூப்பிட்டுங்க..?? என்று கேட்க
நான் உங்களிடம் ஒரு பிராஜெக்ட் பத்தி சொல்லி இருந்தேனே என்று மேல் அதிகாரி கூற..,”ஆமா சார் சொல்லிருந்திங்க”என்று செல்வா கூற
” அதுக்காக நம்மளுடைய இன்னோரு பிரான்ச்ல வேலை பார்க்கும் இரண்டு நபர்கள் இந்த பிராஜெட்காக இங்க வந்து வேலை செய்ய போராங்க உங்களுடன்”  என்றார் அந்த மேல் அதிகாரி…
“சரிங்க சார் அவுங்க  எப்போ இங்க வந்து ஜாயின் பண்ன போறாங்க…”என்று கேள்வி கேட்க ‌”இன்னும் பத்து நாள்ல இங்க ஜாயின் பண்னிருவாங்க செல்வா ” என்று அவனுக்கு பதில் அளித்தார்.
“ஓகே சார்” என்று கூறிவிட்டு வெளியே வந்தான் செல்வா.
மீனு நிறுவனத்தில் தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். அங்கே கதிரோ இவளிடம் சொல்லி எப்படி சம்மதிக்க வைக்கலாம் என்று இல்லாத மூளையை கசக்கி கொண்டு இருந்தான்.
பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவனாய்.., தன்னுடன் வேலை செய்யும் ஒருவரை அழைத்து அவனிடம் ஏதேதொ சொல்லிக் கொண்டு இருந்தான்…
சுசிலா மா கிளம்பிட்டீயா?? சீக்கிரம் வா மா கொஞ்சம்…!!!இந்த பொண்ணுங்க மட்டும் கிளம்ப ஏன் தான் இவ்வளவு நேரம் எடுத்து கொள்ராங்களோ தெரியல என்று புலம்பி கொண்டு இருந்தார் ராஜன்.
எங்களை கிண்டல் அடிச்சது போதும் வாங்க நாம கிளம்பலாம் என்று அறையில் இருந்து வெளியே வந்தார் சுசிலா.
இருவரும் கிளம்பி ஜோசியரை பார்க்க சென்றனர்……
%%%%%%%%%%
அஞ்சலி அஞ்சலி…!!! என்று கத்திக்கொண்டே அவளது அறைக்குள் நுழைந்தார் அவளது அன்னை பத்மாவதி..
“ஏய் அஞ்சலி உன்ன எவ்வளவு நேரம் தான் கூப்பிடுறது காது கேக்குதா இல்லையா “என்று கூறிவிட்டு பத்மாவதி அவளை பார்த்து முறைத்தார் .
அய்யோ இன்னைக்கு நான் செத்தேன் என்று மனதில் நினைத்தவாறே”சாரி அம்மா நான் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தேன். அதான் காதில் விழுகல ” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல பத்மாவதி அவளை பார்த்து முறைத்தார்.
எதுக்காக மா என்னை கூப்டீங்க??? என்ற அஞ்சலியிடம் ,”உங்க அத்தை எனக்கு கால் பண்ணிருந்தாங்க டி..இந்த பொங்கலுக்கு நம்மள அங்க வரச்சொல்லி இருக்காங்க. இந்த பொங்கலுக்கு நாம அங்க போறோம் அர்ஜுனும் அங்க தான இருக்கான் அப்படியே அவனையும் பாத்த மாதிரி ஆயிடும் .நீ தேவையான எல்லாத்தையும் எடுத்து வைச்சிக்கோ சரியா.” என்றார்
சரிங்க அம்மா…!!!!” நான் எனக்கு தேவையானத எல்லாத்தையும் எடுத்து வைச்சறேன்” என்று சோகமாக அஞ்சலி‌ கூறினாள்.
“ஏன் டா நான் சொன்னதும் டல்லாயிட்ட.., முதலில் எல்லாம் அத்தை வீட்டுக்கு போறோம் என்று சொன்னாலே ரொம்பவும் சந்தோஷம் படுவ ஆனா இன்னைக்கு என்ன நீ இப்படி அமைதியா இருக்க…??? என்னாச்சி உனக்கு …?? ” என்றார்  பத்மாவதி அக்கறையாக..
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா,எனக்கு சந்தோஷம் தான்”என்றாள் அஞ்சலி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு.
“சரி டா நா கீழ போறேன் நீ ரெஸ்ட் எடு ” என்று கூறிவிட்டு சென்றார்.
அஞ்சலி தன் படுக்கையில் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
%%%%%%%%
கதிரும் அஞ்சனாவும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது கதிரின் அருகில் அவன் அனுப்பி வைத்த ஆள் வர..,அவன் “நீ சொன்ன வேலையை முடிச்சுடேன்” என்று கூறி தன்னிடம் இருந்த கோப்பை கதிரிடம் தந்து விட்டு சென்றான்.
இதை மட்டும் நான் சரியாக செய்து முடித்து விட்டேன் என்றால் நீ கண்டிப்பாக என்கூட சென்னை வந்துடுவன்னு நான் நம்புகிறேன் என்று மனதுடன் பேசிக்கொண்டு இருந்தான்..
பவி‌ எப்பொழுது உன்னை பத்தி தான் என்கிட்ட சொல்லிட்டே இருப்பா. அப்போ தெரியாது நான் இப்படி காதல்ல விழுவேன்னு இப்போ உன்ன லவ் பண்ணுவேன்னு நான் நினச்சி பார்த்தது கிடையாது..ஆனா எப்போ உன்ன முதன் முதல்லா பார்த்தேனோ அன்றே நீ என் மனதில் நுழைந்து விட்டாய்..”நீ என் வாழ்வில் வரப்போகும் தேவதை “உனக்கு என்ன கஷ்டம்னு எனக்கு தெரியவில்லை .., ஆனால் நான் உன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தன் தேவதையை நினைத்து மனதிடம் கூறிக்கொண்டு இருந்தான்.
%%%%%%%
ராஜனும் சுசிலாவும் தன் குடும்ப ஜோசியரை பார்ப்பதற்காக காத்து கொண்டு இருந்தனர்.சிறிது நேரம் கழித்து அவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர் அங்கே இருந்தவர்கள்.
“வணக்கம் சாமி…!!!!” என்று பணிவாக இருவரும் வணங்க
“வாங்க ராஜன் எல்லாம் சவுக்கியம் தானே” என்க…
“எல்லாரும் நல்லா இருக்காங்க சாமி இது என் மூத்த பொண்ணோட ஜாதகம் சாமி .., அவள் கல்யாணத்து  சமதிக்கவே மாட்டேங்கிறா சாமி அதான் எதாவது தோஷம் இருக்கா என்னனு பாத்துட்டு போகலாம் னு வந்தோம் சாமி “என்றார் சுசிலா.
சாமி அந்த ஜாதகத்தை வாங்கி பார்த்துக்கொண்டு இருந்த நேரம்.., சுசிலாவுக்கு பயமாக இருந்தது. சுசிலாவை தேற்றி கொண்டு இருந்தார் ராஜன்.
ஆனாலும் அவர் மனதிலும் ஒரு கலக்கம் இருக்க தான் செய்தது….
பின்னர்., சாமியார் அந்த ஜாதகத்தை மூடிவிட்டு , அவர் கண்களை மூடிக்கொண்டு கடவுளின் முன் சோலியை உருட்டி கொண்டு இருந்தார். சோலியை உருட்டி பார்த்து விட்டு பதில் கூற தொடங்கினார்.
அவர் கூறிய பதிலை கேட்டு இவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அவரிடமிருந்து விடைபெற்று இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வீடு வந்து சேர்ந்த சுசிலா அந்த ஜோசியர் சொன்னதையே நினைத்து கொண்டு இருந்தார்…, ராஜன் சுசிலாவை சமாதானம் படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தார். ஆனால் ராஜன் எவ்வளவு கூறியும் அவர் மனம் ஜோசியர் கூறியதை மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தது.
சுசிலா தன் மகளின் வாழ்வை எண்ணி கொண்டு இருக்க தானாகவே கண்ணீர் வந்தது அவரது கண்களில் இருந்து அவரை அறியாமலே..
பிறகு அவர் பூஜை அறைக்கு சென்று தன் இரு கைகளையும் கூப்பி சாமி கும்பிட ஆரம்பித்தார்.
சிறிது நேரம் வரை பூஜை அறையிலேயே இருந்தவர்.,மணியை பார்த்த போது மணி 4:30 என்று காட்டியது..
உடனே தன் கைப்பேசியை எடுத்து கொண்டு மீனுவிற்கு அழைப்பு விடுத்தார்..
அஞ்சனாவிற்கு நான்கு மணி அளவில் நிறுவன வேலை நேரம் முடிந்து விடும். ஆனால் இன்று கொஞ்சம் வேலை இருந்ததால் அவள் கிளம்ப தாமதம் ஆகியது. அவள் கிளம்பும் வேலையில்  கதிர் அவளை அழைத்திருந்தான்.
அவன் அழைத்த நேரம் பார்த்து ,அவளது அன்னையிடம் இருந்து அழைப்பு வர..,அவள் அதை எடுக்காமல் கதிரிடம் சென்றாள்…
சொல்லுங்க கதிர் எதுக்காக என்ன கூப்பிட்டிங்க என்று கேள்வி கேட்க…, நான் உன்கிட்ட இந்த ஃபைல்ல சைன்  வாங்க மறந்துட்டேன் என்று அவளிற்கு பதில் அளித்தான் கதிர் .
இந்த ஃபைல்ல நான் நம்முடைய வேறொரு கிளை
க்கு உன்கிட்ட இருந்து சைன் வாங்கி அனுப்பனும் என்றான் .
இது ஒரு ஒப்பந்தம்(agreement) போடும்
பைல் இதுல எனக்கு உன்னோட சைன் வேணும் அஞ்சனா .சைன் பண்றதுக்கு முன்னாடி நல்லா படிச்சு பாத்துட்டு சைன் பண்ணுங்க என்றான்.
கதிர் பேசிக்கொண்டு இருந்த வேலையில் தன் அன்னையிடம் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க இதை பார்க்க பார்க்க அஞ்சனாவிற்குள் ஏதோ ஒரு பதற்றம் வர தொடங்கியிருந்தது.(இது நாள் வரை தன் அம்மா தன்னை அழைப்பு விடுத்து கொண்டே இருந்தது கிடையாது என்ற எண்ணம் வர) இன்று தான் அம்மா இப்படி தொடர்ச்சியாக அழைத்து கொண்டு வருவதால்.., அவள் அந்த ஒப்பந்தம் போட படும் ஃபைலை படித்து கூட பார்க்காமல் வேகமாக கையெழுத்து போட்டு கதிரிடம் குடுத்து விட்டாள்.
“சரி கதிர் எனக்கு நேரமாகிறது நான் கிளம்புகிறேன் “
ஒகே பாய் அஞ்சனா என்று வழி அனுப்பி வைத்தான் கதிர்.
என்னோட வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று நான் நினைக்கல. இதுக்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
அது ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்பை ஆகும். அதில் இருந்தவை என்னவென்றால் ,சென்னையில் இருக்கும் அந்த நிறுவனத்தின் கீழ் இருந்து இந்த ப்ராஜெக்டை முடித்து தருவதாகவும் , அதற்கு மேல் விருப்பட்டால் இங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம் என்றும் அடுத்து வர ஒரு வருடத்திற்கு இந்த நிறுவனத்தில் வேலையில் இருக்க வேண்டும் என்பதே இருந்தது.
இன்னைக்கே இதே போய் நான் சென்னைல கொடுத்து சப்மிட் பண்ணிடணும் இல்லன்னா படிக்காம சைன் போட்டு போன அவ திரும்ப வந்து கேட்டாலும் கேப்பா என்று தனியே மனதினுள் பேசிக்கொண்டு இருந்தான்.
ஏதோ பெரிதாக சாதித்து விட்டோம் என்று சந்தோஷம் வேற அடைந்தான்.
வேகமாக அந்த அறையை விட்டு வந்தவள் தன் அன்னைக்கு அழைப்பு விடுத்தாள்.
முதல் ரிங்கிலே ராஜன் அந்த அழைப்பை ஏற்றார்.
“ஹலோ அப்பா என்ன ஆச்சு பா அம்மா எதுக்கு எனக்கு இத்தன தடவ கால் பண்ணி இருக்காங்க?? ” என்று தன் தந்தையிடம் சிறு பதற்றத்துடனே கேள்வி கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா ..,உன்ன பொங்கலுக்கு வர சொல்லி சொல்ல தான் கால் பண்ணிருந்தா?? ” என்று பொய்யுறைத்தார் .
“உண்மையை தான சொல்றீங்க அப்பா?? ” என அவர் கூறியதை நம்பமுடியாமல் கேட்க
“நான் ஏன் டா கண்ணு உன்கிட்ட பொய் சொல்ல போகிறேன் சொல்லு நான் உண்மைய தான் சொல்றேன்” என்றார் .
“சரிங்க அப்பா..!!” என்று பதில் கூறினாள்.
“இந்த வருஷம் கண்டிப்பாக ஊருக்கு வந்திடு டா இந்த அப்பாகாகவது வந்து விடு மா” என்று தன் மகளிடம் தன் ஆசையை முன் நிறுத்தி கூறினார் .
“சரிங்க பா நான் கண்டிப்பாக ஊருக்கு வரறேன்  ” என்று பதில் கூறினாள்.
“சரி டா கண்ணு நான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன் “. என்றார் ராஜன்.
“பாய் அப்பா” என்று சொல்லி விட்டு அழைப்பை அணைத்தாள்.
பிறகு மீனு தன் விடுதிக்கு சென்றாள்…..
%%%%%%%
சுபா அவளது அறையில் இருந்தாள்…
லதா தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்த நேரம்..,செல்வா வீட்டை அடைந்தான்.
அர்ஜுன் காலையிலேயே “தான் வீட்டிற்கு வர தாமதமாகும் ” என்று கூறி விட்டு தான் வேலைக்கு சென்றான்.
அவன் இருந்த களைப்பில்  வந்தவுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். லதா அவனுக்காக டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க செல்வா அதை வாங்கி குடித்துக்கொண்டே தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தான்.
சுபா தனது அறையில் காலை நடந்ததையே நினைத்து புலம்பி கொண்டு இருந்தாள்.
“அய்யோ என்ன டா இது இப்படி நடந்து போச்சு.. அவன் நம்மளை பற்றி என்ன நினைப்பானோ தெரியலையே. அவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கனும் சுபா ..என்னால நானா இருக்க முடிய மாட்டேங்குது..அவன் என்னை தொட்டவுடன் எனக்கு ஏதோ ஒரு உணர்வு ..இந்த மாதிரி ஓர் உணர்வு எனக்கு யார் மேலயும் வந்தது இல்லையே. ஆனா அவனோட கண்ணு என்கிட்ட ஏதோ சொல்ல நினைக்கிது.. ஆனால் அது என்னன்னு  தான் தெரியல ” என்று தன் மனதிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
” செல்வா உன்னிடம் ஒரு விஷயம் சொல்லனும் டா” என்றபடி அவன் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டார்.
“சொல்லுங்க மா  என்ன விஷயம்   ?” என்று கேட்க
“இந்த பொங்கலுக்கு நான் உங்க மாமா அத்தையை வீட்டிற்கு வர சொல்லிருக்கேன் டா ” என்றார் லதா .
“ரொம்ப சந்தோஷம் மா அவுங்க வந்தா இந்த பொங்கல் நல்லா தான் இருக்கும்  “என்றான் செல்வா .
“ஆமா டா. சுபாவை பத்தி உன்கிட்ட கொஞ்சம் டா பேசனும் பா” என்றார் லதா சிறு தயக்கத்துடனே
“குட்டிக்கு என்ன பிரச்சினை நல்லா தானா இருக்கா அம்மா .அவள் உடம்புக்கு ஏதும் சரியில்லையா.?? என்னனு சொல்லுங்க மா..?? “‌ என்று தன் தங்கையை நினைத்து செல்வா கேள்விகள் பல கேட்க
“அதெல்லாம் ஒன்னும் இல்லை டா ” என்று லதா‌ பதில் அளித்துவிட்டு ,”அவளுக்கும் வயசு ஆகிட்டே போகுது  அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க   வேண்டிய நேரம் வந்துருச்சு டா ” என்றார் லதா
“உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னா நீ எனக்கு இப்போ வேணாம் முதல்ல தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அப்புறமா என்னோட கல்யாணத்த பாத்துக்கலாம்னு சொல்லிட்ட அதான் அவளுக்கு பாக்கலாம்னு இருக்கோம் பா ” என்க
“சரி மா சுபாக்கு சரின்னா எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை .நாம மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கலாம் .ஆனா அவ முழு சம்மதம் இருந்தா மட்டும் தான் இந்த கல்யாணத்த பத்தி பேசணும் .அவளுக்கு இது புடிக்கிலனா இதோட விட்டுருங்க ” என்று தீவிரமான குரலில் கூற
“சரி டா அவளுக்கு சம்மதம்னா மட்டும் தான் மத்தத பேசுவோம் சரியா ” என்றுவிட்டு சுபாவை அழைத்தார் லதா.
அவளோ வராமல் போக மீண்டும் அவளை அழைக்க “இதோ வரேன் மா ” என்று அறையில் இருந்து சுபா பதில் அளித்தாள் .
“சொல்லுங்க மா இப்ப எதுக்காக என்ன கூப்பிட்டிங்க ” என்று சுபா கேட்க 
தன் மகளிடம் எப்படி பேசுவது என்று தயக்கம் கொண்ட லதா ” உன்கிட்ட எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல மா ” என்க
“அம்மா என்கிட்ட என்ன தயக்கம் என்னனு சொல்லு மா‌ ”  என்று சுபா சொல்ல
“நீ உன்னோட படிப்ப முடிச்சு ஒரு வருஷம் ஆக போகுது ” என்று மெல்ல ஆரம்பிக்க
“ஆமா நான் முடிச்சுட்டேன் தான் அதுக்கு இப்ப என்ன?? ” என்று சுபா கேட்க
“இல்ல டி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு  நானும் உன்னோட அப்பாவும் நினைக்கிறோம் ” என்றவர் ” உன் அண்ணன் கிட்ட கூட இத பத்தி பேசிட்டேன் அவன் உனக்கு சம்மதம்னா பாக்கலாம்னு சொல்லிட்டான் டி .இப்போ நீ தான் சொல்லனும் உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ள பாக்கலாமா வேணாமான்னு ” என்று விட்டு அவள் முகத்தை இருவரும் நோக்க
சுபா எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டு “உனக்கு சரினா மட்டும் தான் மாப்பிள்ளை பார்ப்போம் டா குட்டி” என்றான்.
“எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் தாங்க  ப்ளிஸ் நான் கொஞ்சம் யோசிச்சிட்டு பதில் சொல்றேன் அதுவரைக்கும் எனக்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ” என்றாள்.
“சரி டா குட்டி உனக்கு தேவையான டைம் எடுத்துக்கோ ” என்று விட்டு “அம்மா இத பத்தி அவகிட்ட  யாரும் இனி எதுவும் பேச கூடாது. அவளா பதில் கூறட்டும் ” என்றான் திட்டவட்டமாக…
” சரி டா இனி இத பத்தி அவகிட்ட நான் எதுவும் பேச மாட்டேன் போதுமா “என்று சொல்லிவிட்டு லதா அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
சுபா தன் அறைக்கு சென்று விட்டாள்….
செல்வா தன் அறைக்கு சென்று இரவு உடையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்…
அர்ஜுன் தன் முதல் நாள் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தான்…
வீடே அமைதியாக இருந்தது. குண்டு ஊசி கீழே போட்டால் கூட அதன் சத்தம் கேட்கும் அளவிற்கு மயான அமைதி நிலவியது அங்கே…
லதா சமயலறையில் இரவு உணவு சமைத்து கொண்டு இருந்தார். அர்ஜுன் நேராக சமையலறைக்கு சென்று.., அத்தையிடம் பேச தொடங்கினான்..
சிறிது நேரம் கழித்து தன் அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தான் அர்ஜூன்.
அதே நேரம் செல்வாவும் குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தான்.இருவரும் எதுவும் பேசாமல் அவர்களது கைப்பேசியை பார்த்து கொண்டு இருந்தனர்…
லதா சமைத்து முடித்துவிட..,
மணி 9ஆகவும் எல்லாரையும் சாப்பிட அழைத்தார்…,
எல்லாரும் சாப்பிட்டு முடித்தவுடன் உறங்க சென்று விட்டனர். உறங்க செல்லும் முன் அர்ஜூன் செல்வாவை தன்னால் முடிந்தவரை முறைத்து பார்த்து விட்டே படுக்க சென்றான்.
அவனிற்கு தான் செல்லாவின் கடந்த காலமும் அவனின் அர்த்தமற்ற செயல்களும் தெரியுமே. இதனால் ஒரு பெண் தன் உயிரை மாயித்து கொள்ளும் அளவிற்கு சென்றதே .எப்படி அவனால் இப்படி இருக்க முடிகிறது என்று தான் இன்றுவரை அவனுக்கு தெரியவில்லை. அர்ஜூனுக்கு தெரிந்த செல்வா இதில்லையே…
அவனது முறைப்பையும் சலைக்காமல் தாங்கி கொண்டான் செல்வா.

Advertisement