Advertisement

நினைவு 2

கோவையில் மீனுவும் சென்னையில் செல்வாவும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டு இருந்தனர்.

மீனு தன் வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்.அவர்களே வந்து பேசினாலும் வேண்டா வெறுப்பாகவே மட்டுமே பேசுவாள்.அவளுக்கு ப்ரோக்ராமிங் கோடிங் போடுவது என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்று.அதனாலயே அவள் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே வேலை உயர்வு பெற்றாள்.
உணவகம் சென்று காலை உணவை முடித்து விட்டு வந்தவள்…,,நேராக தன் இருக்கைக்கு சென்று தன் அம்மாக்கு “நான் சாப்பிட்டேன் அம்மா “என்று மெசேஜ் செய்து விட்டு தன் வேலைகளை செய்ய தொடங்கினாள்.
அப்போது அங்கே வந்த ஒருவர்,
மேம் உங்களை ப்ராஜெக்ட் மேனஜர் கூப்பிடுறாங்க என்று அந்த அலுவலக உதவியாளர் கூறினார்.
சரிங்க அண்ணா நான் போய் பாத்துக்குறேன் என்று கூற அதற்கு அவர் சரிங்க மேடம் என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
அவளும் தன் இருக்கையில் இருந்து எழுந்து ப்ராஜெக்ட் மேனஜரை பார்க்க சென்றாள் .
லதா வீட்டில் மதிய உணவை தயார் செய்து கொண்டு இருக்க.,,சுபா வீட்டில் வேலை செய்து கொண்டே கைபேசியில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தாள்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க…, சுபா கதவு தட்டுற சத்தம் கேட்குது பாரு ,போய் யாருன்னு பார் என்றார் லதா.
சிலிண்டர் புக் பண்ணியிருந்தேன் அவுங்க தான் வந்துருப்பாங்கனு நினைக்கிறேன் ,அவுங்க அப்படின்னா அலமாரியில்ல பணம் இருக்கு அதை கொடுத்து வாங்கு என்றார் .
சரிங்க அம்மா என்று சொல்லிவிட்டு சுபா கதவை திறந்து பார்த்து , ஒரு நிமிடம் சிலையென நின்று விட்டாள் அங்கு இருப்பவரை பார்த்து.
சுபா யாரு வந்துருக்காங்க என்று கேட்டுக்கொண்டே பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தார் லதா.
ஏய் சுபா என்ன ஆச்சி உனக்கு??? எதுக்கு என்ன பாத்து இப்படி நின்னுகிட்டு இருக்க நான் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கேன்  என்ற குரல் அவள் காதினுள் கேட்டது. அவள் இதயத் துடிப்பு அதை விட அவளுக்கு கேட்டது.
அ….அ…அது வந்து…..!! அதெல்லாம் ஒன்னும் இல்லை என்றாள் தட்டு தடுமாறி.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் மனதிற்குள் சிரித்துக்கொண்டு ,,நீ இப்படியே எண்ண வெளிய நிற்க வைச்சி தான் பேச போறியா?? இல்லை வீட்டிக்குள்ள விட்டு பேசுறியா சுபா என்றது அந்த குரல்.
ஐம் ரியலி சாரி என்றவள் உள்ள வாங்க என்று சொல்லி கொண்டு இருக்கையிலே லதா அங்கு வந்து சேர்ந்தார்.
வா டா உள்ள …!!! ஏன் வெளியிலே நிற்கிற…, வீட்டிற்குள் வரவைப்பதற்கு வெத்தலை பாக்கு ஏதேனும் தேவை படுமா டா உனக்கு???? என்று  கிண்டல் அடித்த தன் அத்தை  லதாவை பார்த்து..,,
அட போங்க அத்தை, உங்க பொண்ணு தான் வழியை விடாம அப்படியே சிலைப் போல் நிக்கிறாளே.அவள் உள்ளே வா என்று கூட சொல்லல என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
ஏன் டி புள்ளய வானு கூட சொல்ல முடியாதா உன்னால உன்னலாம் வச்சிகிட்டு என்ன தான் பண்றதோ… ஒரு வேலை கூட ஒழுங்காக செய்வது கிடையாது என்றார் சிறு கோபத்துடன்.
அம்மா நான் தெரியாம தான் செஞ்சேன் அதுக்கு என்ன மன்னிச்சிக்கோங்க பா என்று சொல்லிவிட்டு வேகமாக சுபா அறைக்குள் சென்றுவிட்டாள்.
சரி விடுங்க அத்தை சின்ன பொண்ணு இன்னும் வளர்ச்சி பத்தலைன்னு நினைக்கிறேன் என்று நக்கலாக கூறிய படியே உள்ளே வந்தான்.
“ஏன் டா வந்ததும் வராததும்மா அவள சீண்டிட்டு இருக்க”என்க அதற்கு அவனோ “சும்மா” என்றான் நாக்கை வெளியே நீட்டியபடி…
சரி அங்க அண்ணா அண்ணி அப்பறம் என் செல்லம் அஞ்சலி எல்லாரும் எப்படி இருக்காங்க டா என்று கேட்க
அதற்கு அவன் “எல்லாரும் நல்லா இருக்காங்க . அப்புறம் என்னோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு அத்தை” என்று கேட்டவனிடம் “எனக்கு தான் நேற்றே நீ இங்க வரப்போற என்ற விடயம் தெரியுமே அர்ஜுன் “என்றார் லதா.
“இங்க தானே வேலை டா உனக்கு ” என்றார்.
தன் அம்மாவை பொய்யாக மனதினுள் திட்டிவிட்டு “அதுக்குள்ள இந்த இன்ஃர்மேஷன் குடுத்தது யாரு அம்மாவா..??இல்ல அந்த குட்டிச்சாத்தானா ‌..?? என்று கேட்டவன் “ஆமாம் அத்தை…!!!! அர்போர்ல  தான் வேலை செய்ய போறேன்” என்றான் .
ரொம்ப சந்தோஷம் டா….!!! நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் என்க ,,அது உங்க பொண்ணு கைல தான் இருக்கு என்று முணுமுணுத்தான்.
இப்போ என்ன டா சொன்ன என்று லதா கேட்க ,,அய்யோ அத்தை நான் ஒன்னும் சொல்லலையே என்றான் தன் கைகளை விரித்து காட்டி .
எக்ஸ் க்யூஸ் மீ சர் மே ஐ கம் இன்..!!! என்று அஞ்சனா கதவை தட்டிய படி கேட்க ,, “எஸ் கம் இன் மிஸ் அஞ்சனா அண்ட் கேட் யுவர் சீட்” என்றான் கதிர்.
தேங் யூ சார் என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
எதுக்கு என்ன கூப்பிட்டிங்க சார் என்று கேட்க அவளையே இமைக்க மறந்து அவளது சிறு சிறு செய்கைகளையும் இரசித்து  கொண்டிருந்தவன் சுயநினைவு பெற்று எதற்காக அழைத்தோம் என்று கூறத் தொடங்கினான்…
நம்ம மெயின் பிராண்ச்க்கு மும்பைல இருந்து ஒரு பெரிய ப்ராஜெக்ட் வந்துருக்கு. நம்ம பிராண்ச்சுல ரீசன்ட்டா ஒரு எக்ஸாம் நடந்துச்சி அது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். பெரிய அதிகாரிகள் மொதற் கொண்டு அதுல கலந்துக்கிட்டாங்க .அது எதுக்காக  நடந்ததுன்னு தெரியுமா .??இந்த பிராஜெக்ட்ல அவுங்க பெஸ்ட் பேர்சன்ஸா தான் இருக்கனும்னு நினச்சிருக்காங்க. அதுல அவுங்க நம்மளோட டெக்னிக்கல் ஸ்கில்ஸ் எப்படி இருக்குன்னு பாத்துருக்காங்க . அதுல உங்களையும் என்னையும் தான் செலக்ட் பண்ணிருக்காங்க. அது இன்னைக்கு தான் எனக்கு மெயின் பிரான்ச்ல இருந்து மெயில் வந்துச்சி. இனி நாம ரெண்டு பேரும் இங்க இருந்து அந்த ப்ராஜெக்ட்க்கு ஒர்க் பண்ண போறோம் என்றான்…
அஞ்சனா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க கதிரே பேச்சை தொடர்ந்தான்.
இது தான் அந்த ஃபைல் இதுல நாம பண்ண வேண்டிய ஒர்க் டிடெய்ல்ஸ் இருக்கு என்று அவளிடம் கொடுக்க அதை பெற்றுக்கொண்டவள் அந்த ஃபைலையே பார்த்துக் கொண்டே கண்டிப்பா சார் என்றாள்.
சரி அஞ்சனா நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்றான் கதிர்.
தேங்க்யூ சார் என்று கடமைக்கு சொன்ன மீனு அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
அவள் வெளியே சென்றதும்….,
அஞ்சனா எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு என் வாழ்க்கையிலேயே நான் இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .இனி நீ என்கூடவே இருக்க போற  என்றவன்..,” நான் உன்னை ரொம்பவே காதலிக்கிறேன் அஞ்சனா “..,இத எப்போ உன்கிட்ட சொல்ல போறேன்னு  தெரியல ஆனா சொல்லுவேன் . இந்த பிராஜெக்ட்காக நாம சென்னை போக வேண்டும் .எனக்கு உன்ன விட்டுட்டு போக மனசே இல்ல .உன்னோட இன்னும் ரெண்டு பேரோட நேம் லிஸ்டுல வந்துச்சி. அதுனால என்கிட்ட இவுங்க மூனு பேருல யாரையாவது ஒருத்தர கூட வரதுக்கு ரெஃபர் பண்ணுங்கன்னு சொன்னப்ப கண்ண மூடி நான் உன்னோட பேர தான் சொன்னேன்.. ஆனா உன்கிட்ட இப்ப சொன்னா நீ இந்த பிராக்ஜெக்டே வேணாம்னு சொல்லுவ அதுனால தான் இந்த விஷயத்த உன்கிட்ட இருந்து மறைக்க வேண்டியதா போச்சு என்னை மன்னிச்சிடு அஞ்சனா என்று கதிர் அவள் சென்ற வழியை பார்த்து தன்னந்தனியே பேசிக்கொண்டு இருந்தான்.
மீனு தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து ,தன் கையில் இருந்த கோப்பை எடுத்து படிக்க தொடங்கினாள். அப்பொழுது அவளுடன் வேலை பார்க்கும் தியா அஞ்சனா என்று அழைக்க.
தன்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்க, தன் தலையை நிமிர்த்தி பார்க்க அங்கு தியாவை கண்டதும் “சொல்லு தியா இப்போ எதுக்கு  என்ன கூப்பிட?? “என்க
அதற்கு அவளோ எனக்கு ரொம்ப ஆசை மா உன்னோட பேர சொல்லனும்னு அதான் சொன்னேன் என்று நக்கலாக சொன்னவள் அவளின் பார்வையை கண்டு அப்புறம் என்ன மா ரொம்ப நேரமா உன்னோட சீட் காலியாவே இருந்துச்சி அதுனால நீ வந்ததும் எங்க போன என்று கேட்கலாம்னு வந்தேன் என்றே கூற
போதும் தியா உன் விளையாட்டு, எனக்கு இப்போ உன்கூட விளையாடுறதுக்கு நேரமில்ல நிறையா வேலை இருக்கு அத பாக்கனும் என்றாள் அஞ்சனா கடுப்பாக..
சரி எதுக்காக உன்ன அந்த மேனஜர் கூப்பிட்டாரு..??? என்று தியா கேள்வி கேட்க அது ஒன்னும் இல்லை ஒரு ந்யூ பிராஜெட்காக தான் கூப்பிட்டாரு என்றாள்.
“ஹோ…!!!! புது பிராஜெட்டா சூப்பர் ஆல் தி பெஸ்ட் டி டூ வெல்” என்று கூறிவிட்டு சரி நா கிளம்புறேன் மா நீ உன் வேலைய செய் என்று கூறிவிட்டு சென்றாள் “ம்ம்ம் பொய்ட்டு வா மா”என்றவள்.,அவள் சென்றதும் மீண்டும் அந்த கோப்பையில் மூழ்கி போனாள்..
அர்ஜுன் வா சாப்பிடலாம் என்றதும் இதோ வந்துட்டேன் அத்தை என்று டைன்னிங் டேபிலிற்கு வந்தான்.
அத்தை இன்று என்ன ஸ்பெஷல் என்று அர்ஜுன் கேட்க
” எல்லாம் உனக்கு பிடிச்சது தான் டா “என்றார் லதா .
“அப்படினா இன்று ஒரு புடி புடிச்சிர வேண்டியது தான்” என்றான் அர்ஜுன்.
எங்க அத்தை சுபாவ காணல என்றதும் அவ அவளோட அறையில தான் இருக்கா..,  இப்போ வந்திடு வா  நீ சாப்பிடு என்றார் .
சிறிது நேரத்தில் சுபாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.
உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு அத்தை ரொம்ப வருஷம் கழிச்சு சாப்பிடுறேன்.,,உங்களுக்கு தனி கை பக்குவம் இருக்கு யப்பா என்ன டேஸ்ட்டு என்று கைகளை சூப்பியவன், சுபாவுக்கும் உங்களோட கைப்பக்குவம் இருக்கும் தான ,  ஏன்னா சக்திக்கு இருந்தது . அதனால் தான் கேக்கிறேன் என்று யதார்த்தமாக சுபாவை பார்த்த படியே  கேட்டான்.
சுபாவிற்கோ அவன் பார்த்த பார்வையில் பொறை ஏற ஆரம்பித்தது. அவனது கண்ணில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு தோன்றியது போல் உணர்ந்தாள்.
ஆனால் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாத லதா அவனிடம்,” அடா நீ வேற ஏன்டா.!! அவளுக்கு சமைக்கவே தெரியாது இதுல எங்க என்ன மாதிரி சமைக்கிறது ” என்று புலம்ப ஆரம்பித்தார் லதா.
அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.,அதை கட்டுபடுத்தி கொள்ள முயற்சி செய்து தோற்று போனவன் ,சுபாவின் முறைப்பை பரிசாக பெற்று கொண்டான்‌‌..
அமைதியா சாப்பிடுங்க எல்லாரும்…, எனக்கு சமைக்க தெரியலன்னா  என்ன .., எனக்கு வரப்போகும் கணவன் எனக்காக விதவிதமா சமச்சி  தருவான் என்றாள்.
இந்த முறை அர்ஜுன்க்கு பொறை ஏறியது. அவர்கள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு ஓய்வு எடுக்க என்று அவர் அவர்கள் அறைக்கு சென்று விட்டனர்.
அர்ஜுன் அவனுக்கு அளிக்கப் பட்ட அறையில் படுகையில் படுத்துக்கொண்டு ஏதோ கோட்டையை எப்படி பிடிப்பது போல் யோசனையில் ஆழ்ந்தான்.

அர்ஜுன் தனது படுக்கையில் உட்கார்ந்து ஏதோ யோசனையில் மூழ்கி இருந்த நேரம் அவனது கைப்பேசி அழைத்து அவனை சுயநினைவிற்கு கொண்டு வந்தது..

“ஹலோ மச்சான் கங்ராட்ஸ் டா .உனக்கு ஏர்போர்ட்ல வேலை கிடச்சிருக்குன்னு என்று கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு டா ” என்றான் அவனது உயிரை வாங்கும் நண்பன்  ஆதி.

“ரொம்ப தேங்க்ஸ் டா மச்சி” என்றான் அர்ஜுன்.

“எனக்கு கண்டிப்பாக ட்ரீட் வேணும் டா அர்ஜுன் எப்படியோ நீ நினச்ச மாதிரி வேலைல ஜாயின் பண்ணிட்ட. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா” என்றான் ஆதி.

“உனக்கு இல்லாமல்லா டா கண்டிப்பா தர்றேன் டா மச்சி .உன்னோட ட்ரெயினிங் எல்லாம் முடிச்சிட்டு சிக்கிரம் வா டா.நாம எல்லாம் மீட் பண்ணி எவ்வளவு நாள் ஆச்சி “என்றான் அர்ஜுன்.

“கண்டிப்பா மீட் பண்ணலாம் டா.நானும் உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன். சரி டா எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறமா பேசுறேன் உன்னிடம்” என்று ஆதி கூற

“பாய் மச்சி” என்று அழைப்பை துண்டித்தான்.

மீனு அந்த கோப்பை முழுவதுமாக படித்து முடித்து விட்டு.,தனக்கு இருக்கும் வேலையை செய்து கொண்டு இருந்தாள்.அப்பொழுது தான் தன் கைகடிகாரத்தை பார்த்தால் மணி நான்கு என்று காட்டியது.,பிறகு அவள் தனது கணினியை ஷட்டௌன் பண்ணிவிட்டு விடுதிக்கு கிளம்பினாள் .

செல்வா தனது அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

அர்ஜுன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்த நேரம் செல்வா வீட்டிற்குள் வந்தான்.

செல்வாவும் அர்ஜுனும் வெறும் சிரிப்பை மற்றுமே மாற்றிக்கொள்ள சமையல் வேலைக்கு உதவியாக இருந்த சுபா அதை கவனித்தாள். ஆனால் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மீனு விடுதிக்கு வந்தவுடன், ரெஃபிரஷ் ஆகிவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்து..,தனது வருங்காலத்தை பற்றி என்னாமல் இறந்த காலத்தை பற்றி மட்டுமே நினைத்து கொண்டு இருந்தது அவளது மனம்.

ஏன் கண்ணா என்ன விட்டு போன?? என்னால இந்த உலகத்துல உன்னைய விட்டு வாழ முடியல ராகவ் கண்ணா.,நானும் உன்னுடனே வந்துறேனே டா.என்னைய மட்டும் இங்க விட்டுட்டு போக எப்படி உனக்கு மனசு வந்துச்சி சொல்லு.நீ இந்த உலகத்தை விட்டும் என்ன விட்டு போயும்  இரண்டு வருஷம் ஆகிடுச்சி.. உன்னால் என்னை அஞ்சு என்று கூப்பிட முடியாதா கண்ணா என்று அவளின் காதலான ராகவை நினைத்து கண்ணீர் வடித்தாள்.

என்னால் சென்னையில இருக்க முடியல டா.எனக்கு உன்னோட ஞாபகம் மட்டும் தான் டா இருக்கு.,அங்கே இருந்தால் என்னை நினைத்து அம்மா அப்பா வருத்தப் படுவாங்க .. அதனால் தான் இப்போ கோவையில் வேலை பார்த்துட்டு இருக்கிறேன் ‌,,உன்னுடன் இருந்த அந்த  மகிழ்வான நினைவுகள் எல்லாம் இங்க தான் இருக்கு என்று தன் கண்ணீரை துடைத்து கொண்டு தன் மனதுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

செல்வா அவனது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான்.

லதா மற்றும் சுபா சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு அர்ஜுனுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அர்ஜுனிற்கு அஞ்சலியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“டேய் அண்ணா சென்னை பொய்ட்டு ஒரு கால் பன்னியா எரும??? ” என்று அஞ்சலி கோபமாக கத்த

“சாரி டா அஞ்சலி , அப்பவே கால் பண்ணனும்னு நினச்சிட்டு தான் இருந்தேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் அஞசலியே “ஆனா மறந்துட்ட அப்படி தான” என்றாள்.

“ஈஈஈஈ ஆமா டா கரக்டா கண்டு புடிச்சிட்டியே ,என்ன மன்னிச்சிடு அஞ்சலி என் செல்லம்ல தங்கம்ல புஜ்ஜில”என்று அவளிடம் ஃபோனில் மன்னிப்பு வேண்டி கெஞ்சினான் அர்ஜுன்….

“சரி போனா போகுதுன்னு மன்னிச்சு விடுறேன் சரியா..,அத்தை மாமா சுபா எல்லாரும் எப்படி இருக்காங்க, அப்பறம் செல்வா மாமா எப்படி இருக்காரு???? ” என்றாள் அஞ்சலி அக்கறையுடன்….

“இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க டா அஞ்சலி .அம்மா அப்பாவை நல்ல படியா பார்த்துக்கோ சரியா?? “என்றான் அர்ஜுன்.

“சரி டா அண்ணா” என்றாள்.

பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் அஞ்சலி பேசி முடித்து விட்டு கைப்பேசியை அனைத்தாள்.

அர்ஜூன் மற்றும் அஞ்சலி லதாவின் ஒன்று விட்ட அண்ணன் மக்கள்.

அஞ்சலியிடம் பேசி முடித்த பிறகு எல்லாரையும் சாப்பிட அழைத்த லதா ,சுபாவிடம் செல்வாவை அழைத்து வருமாறு கூறினாள். சுபாவும் செல்வாவின் அறை கதவினை திறக்க போகையில் , செல்வா தன் கைப்பேசியை பார்த்து பேசிக்கொண்டு இருந்தான். அதை கவனித்த சுபாவிற்கு அவன் கூறிய அந்த பெயர் மட்டுமே அவள் மனதில் பதிந்தது.

‌‌ கதிர் தன் வீட்டில் இருந்து கொண்டு
மடிக்கணினியில் சென்னை செல்வதற்கான வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள ஒரு கிளையில் இருந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும் . அங்கு இருந்து தான் அந்த பிராஜெக்ட் செய்ய வேண்டும் என்பது மேல் உத்தரவு.

“எப்படி அஞ்சனாவை சமதிக்க வைப்பது என்று தெரியவில்லையே.‌., அவள் இதற்க்கு ஒரு பொழுதும் சம்மதம் சொல்ல மாட்டாள். இவளை எப்படியாவது சென்னைக்கு வர சம்மதிக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் என் காதலை அவளிடம் கூற முடியும்‌ என்று தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தான்.

அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாளோ??? இல்லையா??? என்று தெரியவில்லையே என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்திலே தன் காதலை நினைத்துக்கொண்டே உறங்கச் சென்றான்.

செல்வாவின் அறை கதவை தட்டி  உள்ளே சென்ற சுபா ,செல்வாவை சாப்பிட அழைத்தாள்.

“சரி நீ போ நான் வரேன் ” என்றான் .

சுபாவின் மனதில் அந்த பெயர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. அவள் கீழே சென்று சாப்பிட தொடங்கினாள்.

செல்வாவும் கீழே வந்து சாப்பிட உட்கார்ந்து எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட்டான். அர்ஜுனும் செல்வாவும் எதுவுமே பேசவில்லை சாப்பிடும் போது கூட..,பிறகு அனைவரும் உறங்க சென்றனர்..

இரண்டு் வருடத்துக்கு முன்.., செல்வா மற்றும் அர்ஜுன் ஒன்று சேர்ந்தால் போதும்..,வீடே கலகலப்பாக இருக்கும். ஆனால் இன்றோ வீட்டில் இவர்கள் இருந்தும் கலகலப்பு இல்லை..

வீட்டில் உள்ள அனைவரும் இதை பற்றி யோசிக்கவே இல்லை சுபாவை தவிர. செல்வாவிற்கு இன்று காலையில் இருந்து வேலை அதிகமாக இருந்ததால்  அவன் அந்த களைப்பில் அஞ்சுவை நினைத்துக்கொண்டு உறங்கினான். அர்ஜுனும் நாளைக்கு வேலையில் முதல் நாள் செல்ல வேண்டும் என்பதால் இரவு சீக்கிரமாகவே உறங்கினான்..

இனி இவர்களது வாழ்வில் என்ன நடக்க போகுதோ தெரியவில்லை.

மீனு எவ்வளவு நேரம் இப்படியே அழுதுகொண்டே இருந்தால் என்று அந்த மதிக்கே தெரியாது. நேரங்கள் மட்டுமே கடந்ததே தவிர , அவளது கண்களில் வழியும் கண்ணீர் நின்றபாடில்லை. அப்படியே தன் கண்ணீரோடு உறங்கியும் போனாள்..

அனைவரும் உறங்கச் சென்றனர். ஆனால் சுபாவிற்கு உறக்கம் ஏனோ வரவில்லை.

 

Advertisement