Advertisement

அத்தியாயம் 01

நான் மறைந்து
போனாலும்…

உந்தன் நினைவு
மறவாது….
விடியற்காலை 4:30 மணி மார்கழி மாதம் என்பதால் குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எல்லா பெண்களும் எழுந்து அவர்களது வீட்டின் முன் வாசலில் கோலம் போட்டு அந்த கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்துக்கொண்டு இருந்தனர்…..
அதே நேரத்தில் விடுதியில் இருந்த ஒரு அறையில் அலாரம் அடித்ததுக் கொண்டு இருந்தது. அந்த அலாராத்தை அணைத்து விட்டு எழுந்தவள் ,,அவளது படுக்கை சரி செய்தாள் . அவளுக்கு இன்று பகல் நேரப்பணி என்பதால் சீக்கிரமே விழித்துக் கொண்டாள்.
மீனு எழுந்து  காலை கடன்களை முடித்து விட்டு வந்தவள்…,,வெறுமையான மனதுடன் பால்கனிக்கு சென்று,, சிறிது நேரம் அந்த இயற்கையின் அழகை இரசித்துக் கொண்டு தன் கவலைகளை எல்லாம் மறந்து நின்றாள் .
மீனு என்பவள் தனிமையை நாடி குடும்பத்தை விட்டு பிரிந்து தன்னை சுற்றி ஒரு உலகை உருவாக்கி அதில் இளவரசியாக வாழும் அரிவையவள்.
நேரமாவதை அறிந்தவள் குளித்து முடித்து விட்டு வந்து..,அலமாரியில் இருந்த ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு பால்கனியில் தலையை துவட்ட ஆரம்பித்தாள் . பிறகு தலை வாரி தன்னை ஒப்பனை செய்து கொண்டு தன் பையையும் கைபேசியையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்…
சுசிலா மற்றும் ராஜன் தம்பதியினருக்கு இரண்டு மக்கள்.மூத்த மகள் அஞ்சனா என்கிற மீனு இரண்டாமவள் சிந்தியா. இன்ஜினியரிங் முடித்துவிட்டு இங்கே கோவையில் தங்கி வேலை செய்கிறாள்.அமைதியின் குணமாக திகழும் பாவையினுள் ஆராத காயங்களும் மன வருத்தங்களும் உள்ளது. இவை அனைத்தையும் தனக்குள்ளே புதைத்து கொண்டு வெளியில் நடமாடுக்கிறாள்.
விடுதியை விட்டு வெளியே வந்தவள் சாலையை கடந்து வந்து அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் வண்டிக்காக நின்று கொண்டு இருந்தாள்…
அப்போது தனது அம்மாக்கு தன் கைப்பேசியில் இருந்து அழைப்பு விடுக்க ஒரு சில நிமிடங்களுக்கு பின்பு அழைப்பை ஏற்றார் அவள் அம்மா சுசிலா.
தன் அம்மாவிடம் தினமும் பேசுபவள் .., இன்றும் அவருக்கு அழைப்பு விடுத்தாள். அவர்கள் தன் திருமணத்தை பற்றி மட்டும் பேசும்போது அதை முற்றிலும் தவிர்த்து விடுவாள்…
மொபைலை உயிர்பித்த அவளது அம்மா ஹலோ மீனு மா என்று கூற அவளும் ஹலோ அம்மா என்றாள்.இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க அதற்கிடையில் சுசிலா வேலைக்கு கிளம்பிட்டியா டி என்று பாசமாக கேட்க கிளம்பிட்டேன் மா கேப்காக தான் வெய்ட்டிங் என்றாள்.
அப்போ சரி அங்க போனதும் கேண்டின் பொயிட்டு சாப்பிடு சீக்கிரமா சாப்பிட்டு வந்துடு வயித்த காய போடாத சரியா என்று அக்கறையாக கூற
அவளும் சரி மா நான் அங்க போனது சீக்கிரமே சாப்பிடுறேன் என்று கூறிவிட்டு அம்மா, அப்பா என்ன பண்றார் பக்கத்தில இருந்தா ஃபோன் குடு மா என்றவளிடம் உங்க அப்பா வீட்ல இல்ல டி ந்யூஸ் தெரிஞ்சுகிள்ளனா உங்க அப்பாவுக்கு தான் அந்த நாள் முழுக்க ஒடாதுல அதான் ந்யுஸ்பேப்பர் வாங்க பொயிருக்கார் என்றார் .
சரி மா நான் அப்பாவையும் சிந்துவையும் கேட்டதா சொல்லு மா என்க சரி சொல்றேன் டி இந்த டைம்மாவது ஊருக்கு வர ஐடியா இருக்கா என்க
வரணும் மா ஆனா இங்க வேலை அதிகமா இருக்கு .அதுனால தான் வர முடிய மாட்டேங்கிது என்று கூறி சரி மா கேப் வந்திருச்சி அப்புறமா பேசுறேன் என்று அழைப்பை அணைத்தாள்.
மீனு அழைப்பேசியை அணைத்து விட்டு தன் பர்சில் ஃபோனை வைத்தவள் கண்களின் ஓரத்தில் வரவா வேண்டாமா என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கண்ணீர் துளிகளை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டாள்..
அப்பா அம்மா என்னை மன்னிச்சிடுங்க .., எனக்கும் உங்களுடன் இருக்கனும் னு ஆசை தான்.., ஆனால் அங்கு வந்தால் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது மா . அதனால் தான் அங்கு வர மாட்டேங்கிறேன்.. என் வாழ்வின் மறக்க முடியாத நினைவுகள் எல்லாம் இங்க இந்த ஊர்ல தான் உள்ளது .. எங்க பயமா இருக்கு மா என்னோட வாழ்க்கைய நினைச்சா . நான் ஆசப்பட்ட வாழ்க்கையும் எனக்கு இல்ல நான் ஆசப் பட்ட என்னோட ராகவ் கண்ணாவும் இப்ப என்கூட இல்ல . அதுனால தான் அதோட நினைவுகள சுமந்து கொண்டு வாழ ஆரம்பிச்சுட்டேன். என்னோட வாழ்க்கை எப்போதோ முடிஞ்சு போச்சி மா.நான் அங்க வந்தா நீங்க கல்யாணத்த பத்தி மட்டுமே பேசுறீங்க. எங்க உங்கள கஷ்ட படுத்திருவேன்னோன்னு பயம் . என்னால கல்யாணம் மட்டும் பண்ணிக்க முடியாது என்று மனதில் நினைத்து புலுங்கி கொண்டு இருந்தாள் மீனு என்கிற அஞ்சனா.
என்ன மன்னிச்சிடுங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பொண்ணா பொறந்து இருக்கவே கூடாது மா. உங்களை எல்லாம் நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டு இருக்கேன். ஆனாலும் என்னால நீங்க ஆச படுற விசியத்த என்னால செய்ய முடியாது மா. ஐம் ரியலி சாரி மா என்னால இத தவிர வேற எதுவும் சொல்ல முடியல என்று உள்ளுரே அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டு இருந்தாள்.
ஐந்து நிமிடத்தில் அவள் செல்ல வேண்டிய நிறுவனத்தின் வண்டி வர.., அவள் அதில் ஏறி அடையாள அட்டையை வைத்து பதிவு செய்து விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…
**************
காலை ஏழு மணி இருக்க,, வீட்டில் சுப்ரபாதம் பாட்டு ரேடியோவில் பாடிக் கொண்டு இருந்தது. லதா காலை உணவை சமைத்து கொண்டு இருந்தார்..,சுபா தன் அம்மாவிற்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்…
இந்திரன் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டு சமுகத்தின் நிலையை பற்றி தெரிந்து கொண்டு இருந்தார்.
செல்வா அவனது அறையில் உறங்கிக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் எழுந்து,ரெஃபிரஷ் ஆகிவிட்டு கீழே வந்தவன் தந்தையுடன் சேர்ந்து ந்யூஸ் பேப்பர் வாசிக்க தொடங்கினான்..
அதற்குள் லதா அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்று தன் சமையல் வேலையை காணச் சென்றுவிட்டார்.. அதை வாங்கி குடித்தவன் தொலைக்காட்சியை பார்க்க தொடங்கினான். சிறது நேரத்தில் வேலைக்கு கிளம்ப ஆயத்தமானான்….
லதா மற்றும் இந்திரன் தம்பதியினருக்கு மூன்று மக்கள். முதலாவது பெண் ,பெயர் சக்தி அவளுக்கு திருமணம் ஆகி இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளது..‌அவருக்கு அடுத்ததாக பிறந்தது நம் கதையின் நாயகன் செல்வராகவன். கடைசியில் அந்த வீட்டின் கடை குட்டியாக பிறந்தது சுபா .
சிறிது நேரத்திலே வேலைக்கு கிளம்பி கீழே வந்தவன்..,, அவனது அன்னை லதா அவனுக்கு தோசை எடுத்து வைக்க…,, அதை அவன் சாப்பிட்டு விட்டு தனது காரில் ஏறி வேலைக்கு கிளம்பி சென்றான்.
தனது காரை எடுத்து வேகமாக சென்று கொண்டிருந்தவன் ஒரு பூங்காவில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கு சென்றான்…. அவன் தினமும் வேலைக்கு செல்லும்போது இந்த பூங்காவில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு செல்வது வழக்கம்…
இன்றும் அந்த பூங்காவிற்கு வந்தவன் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டு மனம் போன போக்கில் நினைவுகளை நினைவு படுத்த துவங்கினான் .அவன் அந்த பூங்காவில் இருக்கும் போது மட்டும் தான் அவன் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் கிடைப்பது போல் இருக்கும்….
இன்று செல்வா ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறான்.அவனது கடினமாக இரவு பகல் பாராது உழைத்ததற்கே  இந்த பதவி. இன்று சொந்தமாக வீடு ஒன்று கட்டி அவனது குடும்ப நிலையை மாற்றி அமைத்தான்.
இங்கு தான் நான் என் வாழ்வில் கடைசியாக அவளுடன் இருந்த இடம்…என் அஞ்சுவுடன் இருந்த இடம்.. கடைசியா இரத்த வெள்ளத்தில் துடிதுக்க பார்த்த இடம் என்று அவளது பெயரை உச்சரிக்கும்போதே கண்ணில் அவனுக்கு நீர் சுரந்தது.
அவள் இன்று என்னுடன் இல்லை .அவளை விட்டு பிரிந்து வந்துட்டேன்.இன்று அவளை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. நீ எங்கு இருந்தாலும் நிம்மதியாக வாழ வேண்டும் .அதுனால தான் உன்ன விட்டு வந்தேன் ‌.என்னை மன்னிச்சிடு அஞ்சு மா. ஒருநாள் இல்ல ஒருநாள் கண்டிப்பா உனக்கு புரிய வரும் நான் ஏன் இப்படி செஞ்சேன்னு என்று மனதினிலே அவளுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
மீனுவிற்கு தனக்கு நெருக்கமானவர்கள் யாரோ அழைப்பது போல் உணர்ந்தாள்.சுற்றி முற்றி பார்த்தவள் யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் தனது வேலைகளை செய்ய தொடங்கினாள்.
அந்த பூங்காவில் இருந்த ஒரு குழந்தை செல்வாவை நோக்கி வந்தது..,
அவன் பக்கத்தில் விழுந்த பந்தை எடுக்க வருவதற்குள் ,,அவனே அதை கண்டு எடுத்து அந்த குழந்தையிடன் கொடுத்தான்.
அதற்கு அந்த குழந்தை அவனுக்கு முத்தத்தை கொடுத்து அதன் நன்றியை தெரிவிக்க அதை இன்பத்துடன் ஏற்றுக் கொண்டான்.
அந்த முத்தம் அவனுக்கு தன் அஞ்சுவே குடுத்தது போல் இருந்தது . அவனும் அந்த குழந்தைக்கு திரும்பி முத்தம் கொடுத்தான்.
அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு..”உன் பெயர் என்ன டா செல்லம்??? ” என்க
“என் பெயரு பூஜா அங்கிள் ., நீங்க ஏன் அங்கில் டல்லா  இருக்கீங்க??? ” என்று அந்த பிஞ்சு குழந்தை மழலை மொழியில் கேட்க
” பெயர் அழகா இருக்கே….!!” என்று கூறிவிட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்ல டா பூஜா குட்டி அங்கில் ஒரு குட்டி தப்பு பண்ணிட்டேன் டா செல்லம்…” என்றான் .
ஏனோ அவனுக்கு இதை அந்த குழந்தையிடம் கூறவேண்டும் என்று போல் இருந்தது.
” என்ன தப்பு பண்ணிங்க அங்கில் “என்று அந்த பிஞ்சு குழந்தை கேட்க அதற்கு செல்வா “ஒரு ஆண்டியோட மனச காய படுத்திட்டேன் டா” என்றான்.
” அங்கிள் அப்போ அந்த ஆண்டிக்கிட்ட நீங்க போய் சாரி சொல்லுங்க அந்த ஆண்டி உன் சாரிய அக்சப்ட் ஐ பன்னுவாங்க . எங்க ம்மா சொல்லி இருக்காங்க நாம தப்பு பண்ணி இருந்து அத நினைச்சி அவுங்க கிட்ட சாரி சொன்னா அவுங்க நம்ம மிஸ்டேக்ஸ மன்னிச்சிடுவாங்களாம் அங்கிள்” என்றாள் மழலை மொழியில்.
இதனை கேட்ட செல்வாவிற்கு ,நொடி பொழுது இமை கலங்கியது.
அந்தநேரத்தில் அந்த குழந்தையின் அம்மா அவர்களை நோக்கி வந்து ” நீ இங்க தா இருக்கியா பூஜா உன்ன எங்க எல்லாம் தேடுறது ” என்று திட்ட
” சாரிங்க தம்பி இவ உங்கள எதாவது தொந்தரவு பண்ணிட்டாளா??? “என்க
“அப்பிடில்லா ஒன்னும் இல்ல மா “என்றான்.
“அம்மா மீ வெரி குட் கேர்ள் (me very good girl) “என்று கூறி முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள இதை கண்ட செல்வாவின் இதழில் புன்னகை பூத்தது.
” ஆமாம்   பூஜா குட்டி குட் கேர்ள் தான் ” என்று செல்வா சொல்ல பூஜா தன் அம்மாவிற்கு ஒழுங்கு காட்டினாள்..
” சரிங்க தம்பி அப்போ நாங்க கிளம்புறோம்” என்றவள் ” பூஜா அங்கிள்க்கு பாய் சொல்லு” என்க
” பாய் அங்கிள் ” என்று அவள் சொல்ல அதற்கு இவனும்” பாய் பூஜா குட்டி” என்றான் .
அவர்கள் கிளம்பியதும் சிறிது நேரம் அங்கேயே இருந்து நேரத்தை கழித்தவன் அதன் பிறகு அவனும் அவன் காரை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்றான்.
நினைவுகள் தொடரும்……❤️❤️

Advertisement