Advertisement

ஏழு வருடங்களுக்குப் பிறகு…

 பூமணி மற்றும் நல்லசிவம் இருவரும் வயோதிகத்தால் இறந்து விட்டார்கள்..

 இந்த இரண்டு குடும்பத்திற்கும் பொதுவாக அகிலம் மற்றும் முத்தரசி ராசாத்தியம்மாள் மாறனின் தந்தை நெடுமாறன் மூர்த்தி மற்றும் சாந்தி.. அனைவருமே பெரியவர்கள் என்று இன்னமும் அந்த இளைய தலைமுறையை நல்ல வழியில் வழிகாட்டி அவர்களை வாழ வைக்கிறார்கள்..

 அதன் பின் இம்முறையும் அகிலம் பட்டியின் அடுத்த பேரனாகிய கவி மாறனுக்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் பேசி..  அன்புக்கொடியில் தங்கை பூங்கொடியை கவிமாறனுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம்   செய்து திருமணத்திற்கு.. ஆயத்தமானார்கள்…

 விடிந்தால்  திருமணம்..

 மாறன் மற்றும் செழியன் அவர்களின் குழந்தைகள் நன்கு வளர்ந்து ஏழு வயது ஆகிவிட்டது.. அந்த கல்யாண மண்டபத்தை கலை கட்டும்படி விளையாடி குதித்து திரிகிறார்கள்..

 செழியனின் நான்கு பிள்ளைகளையும் மாறனின் ஆண் குழந்தையும்.. இரண்டு வயதான பெண் குழந்தையும்.. என்று 6 குழந்தைகளை மாறனின் மூத்த பெண் அரசிகள் கலைச்செல்வி மற்றும் தமிழ்செல்வி இருவரும்

வழி நடத்துகிறார்கள்..

 வாடிப்பட்டி என்னும் ஊரில் அந்த பெரிய வீடு திருமணத்தால் கலை கட்டியிருந்தது..

 ராசாத்தி அம்மாவுக்கு  சந்தோஷம் பிடிபடவில்லை.. இந்த குடும்பத்தில் மூத்த மகள் வாக்கப்பட்டு சென்று மிகவும் சந்தோஷமாக வாழ்வதை கண்கூடாகப் பார்க்கின்றார்..

 மேலும் இளைய மகள் பூங்கொடியையும் அவர்கள் கவிமாறனுக்கு பெண் கேட்டது அப்படி ஒரு மனநிறைவையும் சந்தோஷத்தையும் கொடுத்தது…

 கண்ணனை மாறன் பொறுப்பெடுத்து கோவையில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கின்றான்..

 இளைய மருமகன் கவியின்  திருமணத்தை செழியன் மிகவும் ஆர்ப்பாட்டமாக மகிழ்ச்சியாக எடுத்து நடத்தினான்..

 பெரியவர்களின் ஆசியோடு நல்ல நேரத்தில் கவிமாறன் பூங்கொடியின் கழுத்தில் பொன் தாலி பூட்டி அவளை அவனது சரிபாதியாக ஆக்கிக் கொண்டான்..

 இனிதாக அவர்களது திருமணம் நிறைவு பெற்றது..

 மேலும் இந்த ஏழு வருடத்தில் அவர்கள் சொன்னது போன்று ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நெல் என பயிர் செய்து அதற்கான மாபெரும் விளைச்சல் பலன்களை கண்டு பூரித்துப் போனார்கள்…

 இந்திய ஜனாதிபதியின் கையால் விருது வழங்கும் விழாவிற்கு அவர்களுக்கு அழைப்பு வந்தது..

 மாறன் அனைத்து விஷயத்திலும் மாமன் செழியனை அனைத்திலும்  முன் நிறுத்தினான்.. ஊரும் மக்களும் அவர்களது அசுர வளர்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ந்து ஆசீர்வதித்தார்கள்..

 அடுத்து பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட்  எலக்சனுக்கு செழியனை நாமினேஷன் செய்யவைத்து அதிலும் மாமனை வெற்றிகொள்ள வைத்து… பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட் ஆக்கினான்..

 செழியனின் பொருளாதார நிலைமையையும் மிகவும் உயர்த்துவதற்கு மாறன் மிகவும் உறுதுணையாக இருந்தான்..

 நாளை டெல்லிக்கு விருது வாங்குவதற்கு செல்ல மாறனும் அன்புகொடியும். செழியனும் எழிலும் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்..

அப்பொழுது மாறனின் புத்திரன் அங்கு அழுது கொண்டு வந்தான்.. ” அம்மா அம்மா ஏன் ம்மா எனக்கு  மணின்னு பேரு வச்ச.. எல்லாரும் டிங்கிரி குஞ்சுமணி டிங்கிரி குஞ்சுமணி அப்புடின்னு சொல்லி என்ன ரொம்ப நக்கல் பண்றாங்க.. எனக்கு வெளில போகவே ரொம்ப வெட்கமா இருக்கு.. நான் எப்படி பள்ளிக்கு போவேன் இனி படிக்க பள்ளிக்குப் போகமாட்டேன்..” என்று அழுது அடம் பண்ணினான்..

 கொடியோ மிகவும் நொடிந்து கொண்டு ” ஊர்ல இல்லாத பிள்ளை பெத்து வச்சிருக்கீங்க ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா டிசைன் டிசைனா பள்ளிக்கு போறதுக்கு சாட்டு சொல்லி அடம் பண்ணுறான்… இவனை கவனிக்குறதுக்கே எனக்கு பாடு போயிடும்.. அப்புறம் எப்படி பட்டுக்குட்டியை கவனிக்க முடியும்.. நீங்களாச்சி  உங்களோட ஆசை மகனாச்சி  ஆள விடுங்க நேரம் போகுது ரெடியாகுங்க.. ” என்று மாறனை அதட்டிவிட்டு அவளும் ரெடியாகி 2 வயது வெண்ணிலா எனும் பெண் குழந்தையும் தயார்படுத்தினாள்..

 செழியனின் வீட்டிலும் எழிலரசி செழியனை ஒரு வழிப்படுத்தி தயாராகிக் கொண்டிருக்கின்றாள்..

சற்று நேரத்தில் இரண்டு தம்பதியர் களும் அவர்களது குழந்தைகளை பெரியவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு சென்றார்கள்..

விமானத்தில்  ஏறி விமானம் கிளம்பியதும் பல கனவுகளுடன் விருது வாங்குவதற்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்..

 மாறனின் வாழ்வில் நடந்த சூழ்ச்சியை அன்புக்கொடி அவன்  மீது காதல் கொண்டு தகர்த்தெரிந்து தடைகளுக்குப் பின் திருமணம் செய்துகொண்டு அவர்களது வாழ்வை அழகாக மாற்றிக்கொண்டு விட்டாள்..

 மாறனின் நினைவில் அவளது இளமை காலங்கள் கழிந்தது.. பின் திட்டமிட்ட திருமணம் குழந்தைகள் என வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கின்றது மணிமாறன் மற்றும் அவனது சுண்டெலி இருவருக்கும்..

 இங்கு செழியனோ அக்காவின் மகளாக இருந்தாலும் அவள் அவனுக்கு கிடைக்க மாட்டாள் என்ற கவலையுடன் அதை யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைத்து அவளது நினைவை மனதில் சுமந்துகொண்டு அவனது இளமை காலத்தை போக்கினான்..

தம்பியை நன்கு உணர்ந்த அக்காவாக சாந்தி அவரது மகளை தம்பி செழியனுக்கு அழகாக திட்டமிட்டு திருமணம் செய்து வைத்தார்..

 அன்பின் அவர்களும் சந்தோஷமாக பல தடைகளைக் கடந்து குடும்பம் குழந்தைகள் என அவர்களது வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அன்புச்செழியன் மற்றும் அவனது சூப்பி இருவரும்…

 சாதனையாளர் என்னும் விருதை வாங்குவதற்கு அடுத்து அவர்களின் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியை நோக்கி பயணிக்கிறார்கள்..

இவ்வாறு இவர்களது வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறிக்கொண்டு நாமும் விடை பெறுவோம்..

நினைவு நிறைவு பெற்றது..

Advertisement