6

           படபடக்கும் உள்ளத்தோடு மருத்துவர் பின்தொடர உள்ளே அவளின் உடலை எடுத்துக் கொண்டு வந்தவன்.,

         கட்டிலில் போட போகும் போது மருத்துவர் தான்.,  “ஸ்ரவன் ஒரு நிமிஷம்  வெயிட் பண்ணுஎன்று சொன்னார்.,

      “பாக்கியம்மா அந்த பிளாஸ்டிக் ஷீட் எடுத்து கட்டில்ல விரிங்க“.,  என்று சொன்னார்.,

         இவனோ., “டாக்டர் பெட்ஷீட் வீணா போகும் நினைக்கிறீங்களா வேற போட்டுக்கலாம்“., என்று சொன்னான்.

              “அதுக்காக சொல்லல தம்பி.,  உங்களுக்கு புரியாது., உடம்புல ஈரத்தில் ஊறிப் போய் இருக்கு.,  இப்போ வெண்ணீர் வச்சு ஒத்தடம் கொடுக்கணும்., உடம்பு நார்மல் சூட்டுக்கு வரனும்.,  பெட் ஈரமா  ஆயிருச்சுன்னா., பொண்ணுக்கு குளிர் தாங்குமா., ரூம்ல ஹீட்டர்  போட்டாலும் முதல்ல துடைத்து டிரஸ் மாத்தணும்.,  அதுமட்டுமில்லாம பொண்ணுக்கு வேற ஏதும் பாதிப்பு இருக்கான்னு செக் பண்ணனும்.,  உடம்புல எங்க எங்க அடிபட்டு இருக்குன்னு பாக்கணும்., இந்த மாதிரி நிறைய இருக்கு“.,  என்று சொன்னார்.

       அவனுக்கு ஒரு நிமிடம் பதட்டமாக தான் இருந்தது., ஆனாலும் வேறு எதுவும் இருக்காது என்ற எண்ணத்தோடு பாக்கியம் அம்மா கட்டிலில்  விரித்த சீட்டின் மேல் படுக்க வைத்தான்.

      பின்பு அப்படியே நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்., ” நீ கொஞ்சம் வெளியே இருப்பா., நாங்க மூணு பேர் இருக்கோம் இல்ல., நாங்க பார்த்துக்கிறோம்“., என்று திலகவதி சொன்னார்.

          ஒரு பெருமூச்சோடு அவன் வெளியே வந்தான்.,  வெளியே மேனேஜர் நின்று கொண்டிருந்தார்., அதற்குள் அருகில் இருக்கும் செவிலி பெண்ணிற்கு டாக்டர் சொல்லி இருக்க., அவரும் மருந்தோடு வந்து சேர்ந்தார்.,    அவர் உள்ளே சென்றவுடன் அவளுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினர்.

             அவளுக்குஉடல் துடைத்து போடுவதற்கு உடை வேண்டும்“., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

        “நைட்டி போடலாமா“., என்று பாக்கியம் கேட்டார்.

          திலகவதி அம்மா தான்நைட்டி வேண்டாம்., எங்கெங்கு அடிபட்டு இருக்கு எப்படி பார்ப்பது., எப்படி மருந்து போடுவது.,  இருங்க  நான் வர்றேன்“., என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்.

        நேரே தன் அறைக்குச் சென்றவர் கட்டாத புது பாவடையை எடுத்துக் கொண்டார்., வெளியே வந்துசரவணா ஒரு டிஷர்ட் கொடு டா“., என்று கேட்டு அவனிடம் வாங்கி கொண்டு வந்தார்.

      அவளுக்கு பாக்கியம் செவிலியின் உதவியோடு கொதிக்கும் வெந்நீரை வைத்து உடல் துடைக்க., உடைமாற்ற திலகவதி அம்மா உதவி செய்தார்.

       பாத்ரூமில் எப்போதும் ஹீட்டர் ஆன் ல்  இருப்பதால் உடனே வெண்ணீர் பிடித்துக் கொள்ள வசதியாக இருந்தது.,

          அத்தனை சூடான வெண்ணீர் வைத்து துடைக்கும் அவளிடம் சிறு அசைவும் இல்லை., டாக்டர் பரிசோதித்து விட்டுநல்லவேளை பொண்ணுக்கு வேறு எந்த பாதிப்பும் இல்லை., நானும் பயந்து கொண்டே தான் இருந்தேன் இந்த காலத்தில் பெண்கள் தனியே வருவது பாதுகாப்பு இல்லாதது தானே.,  இப்பஎப்படி இந்த விபத்து நடந்தது என்பது புரியவில்லையே., அங்கங்கே ரத்தம் கட்டி இருக்கு., அடி நல்லா விழுந்திருக்கு., முதுகுல அங்கங்க குத்தின மாதிரி தடம் இருக்கு., அந்த இடமெல்லாம் ரத்தம் கட்டின மாதிரி இருக்கு“., என்று திலகவதி அம்மாவிடம் காட்டியவர்., 

      “காலையிலும் இரத்தக்கட்டு மருந்து தடவினால் போதும்., மற்றபடி அப்பெண் முழித்தால் தான்., அவளின் வலியின் அளவும் அறியமுடியும்“.,  என்று சொல்லி அவளது இதயத்துடிப்பை அவ்வ போது பார்த்துக்கொண்டிருந்தார்.,

       இதயத்துடிப்பு நார்மலாக இருந்தாலும் இன்னும் முழுமையாக சரியான நிலையில் இல்லை என்பது தெரிந்தது.,

       “இன்னும் மயக்கம் தெளியவில்லையே“.,  என்று பாக்கியம் கேட்டார்.

         “சில அதிர்ச்சியான சம்பவங்களில் மயக்கம் தெளிய நேரம் ஆகும்., காத்திருக்கலாம்“., என்று சொல்லி விட்டு அவளுக்கு அடிபட்ட கை கால் சிராய்ப்புகளுக்கும் ரத்த காயம் பட்ட இடங்களிலும் மருந்தை தடவி கட்டுப் போடவும் தவறவில்லை.,

         “திலகவதி மேடம் இந்த பொண்ணு கழுத்தை பாருங்கள்“., என்று கூப்பிட்டு காட்டினார்.,

           “தலை மற்றும் கழுத்துப் பகுதியில் நல்லா அடி பட்டிருக்கும் போல“.,  என்று அவள் தலைமுடியை பார்த்தவர்.

      “இது ஏன் இப்படி வெட்டி இருக்கு“.,  என்று கேட்டார் . அப்போது தான் திலகவதிதேயிலை செடியில் மாட்டியிருந்தது., பிரித்து எடுக்க முடியாமல் வேறு வழியில்லாமல் முடியை வெட்டி விட்டு அவளை தூக்கி வந்தது‘., என்று விரிவாக சொன்னார்.

           டாக்டரோசரி விடுங்கஎன்று சொன்னவர்., “சரியாகி எழுந்த அப்புறம் நல்ல வெட்டி விட்டுருங்க“.,  என்று சொல்லி விட்டுவேற யாரும் இந்த மாதிரி கோலத்தில் பார்த்தா., நாம என்னமோ அந்த பிள்ளையை கொடுமைப் படுத்தினதா நினைத்து விடக்கூடாது“.,  என்று சொன்னவர்.

          “பொண்ணுங்களுக்கு மட்டும் அவங்க சம்மதம் இல்லாம முடிவெட்ட கூடாதுன்னு சொல்லுவாங்க., இப்ப வேற வழி இல்ல., ஆக்சிடெண்ட் காப்பாற்றுவதற்காக தானே“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தவர்.

      கழுத்தின் மேல் பகுதியை காட்டிஇங்க பாருங்க., இந்த இடத்தில நல்ல வீக்கம்  இருக்கு., அதே மாதிரி  கழுத்திலும் தலையோட அடிப்பகுதியிலும் நல்ல வீக்கம் இருக்கு பாருங்க.,  தோள்பட்டை பக்கம் பாருங்க சிவந்து போயிருக்கு., முதல்ல முழுசா எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பார்க்கணும்“.,  என்று சொன்னார்.,

    “முதல்ல முழிக்கட்டும் எங்கு உள்ள பொண்ணோ பார்ப்போம்“., என்று பாக்கியம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.

            வேறு வழி இன்றி  ட்ரிப்ஸ் ஏற்ற முடிவு செய்தனர்., எனவே மிக மெதுவாக சொட்டு சொட்டாக இறங்கும் படி வைத்தார்.,  ஏற்கனவே அவளுக்கு மேல் சூடு ஏற தொடங்கியிருந்தது., காய்ச்சல் இருக்குமோ என்று டெம்பரேச்சர் பார்க்க லேசாக கூடுவதை அறிந்தவுடன் அவளுக்கு காய்ச்சலுக்கான மருந்தையும் ஊசி மூலமாக செழுத்தியிருந்தனர்.,

           செவிலி அன்று இரவு அங்கு அவளோடு தங்குவதாக இருந்தது.,  அந்த அறையில் பாக்கியமும் நர்சும் அவளோடு  தங்கிக் கொள்வதாக இருந்தது.

    அவர்கள் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள் தான் அந்த நர்ஸ் என்பதால் இது பாதுகாப்பான இடம்.,  மற்றும் டாக்டரும் அருகில் இருப்பதால் பயம் இல்லை என்ற எண்ணத்தோடு அங்கே தங்கி விட்டனர்.,

     அது மட்டுமல்லாமல் டாக்டரும்ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே போன் செய்யுங்கள்., வந்து விடுகிறேன்“., என்று சொல்லி விட்டு தான் கிளம்ப எழுந்தார்.

         என்னென்ன மருந்து எவ்வப்போது டிரிப்ஸ் சேர்க்க வேண்டும் என்பதை நர்சிடம் சொல்லி விட்டு திரும்பிய டாக்டர்.,  திலகவதி அப்பெண்ணை பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்து விட்டுஎன்ன திலகவதி மேடம் அப்படி பார்க்குறீங்க“., என்று கேட்டார்.

      “பொண்ணுக்கு அடிபடாமல் அந்த முடி எல்லாம் வெட்டி எடுக்காம இருந்தா.,  எப்படி இருப்பான்னு யோசிச்சு பார்த்தேன்“., என்றார்.

   “அடிபடாமல் இருந்திருந்தா தேவதை மாதிரி இருந்திருப்பா., என்று சொன்னவர்ஏதோ கடவுள் அருளால
அங்கங்க அடிபட்டு  ஸ்கராட்ச் ஆயிருக்கு.,  ஏதோ கடவுள் சித்தத்துல பொழச்சு வந்திருக்கா., இந்த மாதிரி மண் சரிவுல்ல பொழைச்சி வர்றதே பெரிய விஷயமாக இருக்கும்., 

    அது மட்டுமில்லாம தப்பிச்சி வந்தாலும் அங்கங்க காயம் பயங்கரமாக இருக்கும்., ஆனா அவளுக்கு அந்த மாதிரி அதிகபட்சமான அடியும் இல்ல.,  ஆனால் கழுத்து முதுகு பயங்கரமா இரத்தம் கட்டி இருக்கு., ரத்தம் வர்ற அளவுக்கு பெரிய காயம் இல்லாம போனாலும் சின்ன காயம் நிறைய இருக்கத் தான் செய்யுது“.,  என்றவர்.

       “இதுக்காக சந்தோஷப்பட தான் செய்யணும்“., என்று சொல்லிவிட்டு  “மயக்கம் தெளிந்து எழுந்து ஏதாவது பிரச்சினை செய்தால்., தூக்க மருந்து கொடுத்து தூங்க வை“., என்று அந்த மருந்தையும் கொடுத்து விட்டுப் போனார்., 

      அன்று இரவு பாக்கியமும் செவிலி பெண்ணும் அவளோடு இருந்தனர்.

          அவலை சுத்தம் செய்து டிரிப்ஸ் எல்லாம்  ஏற்றி., காயங்களுக்கு மருந்திட்ட பின்னும் சரவணன் உள்ளே சென்று பார்க்காமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தான்.

      சரவணன் அருகில் வந்து அமர்ந்த திலகவதி தான்.,  சரவணன் கையை பிடித்தபடிஒரு உயிரை காப்பாற்றி இருக்க.,  இதைவிட அம்மாக்கு என்ன சந்தோஷம் வேண்டும் சொல்லு“., என்றவர்., “மயக்கத்தில் தான் இருக்காஎன்று சொல்லி அவன் கையை பிடித்துக் கொண்டார்.,

              இவனும் அம்மாவின் கையை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும் போதே அவன் கை நடுங்கியது.,

         “அந்த பொண்ணு பிழைச்சிடும் இல்ல ம்மா“.,  என்று கேட்டான்.,

               “அதெல்லாம் பயம் இல்லடா நல்லா இருக்கா.,  பல்ஸ் நீ கொண்டு வரும் போது இருந்ததை விட இப்ப நல்ல நார்மலுக்கு வந்து இருக்கு., இப்பதிக்கு டிரஸ் மாத்தியாச்சி., நாளைக்கு அந்த பொண்ணுங்க டிரஸ் மட்டும் வாங்கணும்என்று சொன்னார்.,

         “நாளைக்கு போய் வாங்கலாம் ம்மா“., என்றவன்., அந்த பொண்ணு முழிச்சதா“.,  என்று கேட்டான்.

              “எங்கடா முழிக்கலை., முழிச்சா தான் உன்னை கூப்பிட்டு காமிச்சு இருப்பேனே“., என்று சொன்னார்.

              “அம்மா ஒன்னும் ஆகாது இல்லை“.,  என்று கேட்டான்.,

             “ஒன்னும் ஆகாதுடா., எனக்கு நம்பிக்கை இருக்கு.,  நல்லபடியா கண்ணை முழித்துப்பா“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

          “அம்மா., அவங்க வீட்ல தேடுவாங்க இல்லை“., என்று சொன்னான்.