சங்கர் உண்டு முடித்துவிட்டார். அப்படியே தலையை சக்கர நாற்காலியில் தலையை சாய்த்துக் கொண்டார்.. இந்த வார்த்தையை கேட்டு.

கோக்கிலா “போதும்.. கொஞ்சம் ரெஸ்ட் எடு.. காலையில் எழுந்தது.. ரமேஷ்.. கூட்டி போய் மருந்து கொடுப்பா” என்றார்.

சங்கர் “அக்கா, அப்போவே வந்திருக்கனுமில்ல அக்கா..” என மீண்டும் தொடங்க.

கோக்கிலா “சங்கர், இப்பவும் ஏதும் மாறிடலையே..” என்றார்.

சங்கர் “உண்மையை சொல்லு.. எனக்கு இப்படி நடக்கலைன்னா” என எதோ கேட்க்க வர.. 

கோக்கிலா “தம்பி உனக்கு ஒண்ணுமில்ல.. எங்களுக்கு தெரியலை ஏதும். அப்போதைய கோவம் அவ்வளவுதான். நீ மனசை குழப்பிக்கிற. நீ தைரியமா இரு. நாங்க எல்லோரும் இருக்கோம்” என்றார்.

சங்கர் எதையோ கேட்க்க வந்தாரோ.. சொல்ல வந்தாரோ.. அக்காவின் சமாதானத்தில் அமைதியாகினார்.

கோக்கிலா “அமைதியா இரு.. எல்லாம் சரியாகும்” என்றார்.

ரமேஷ் சங்கரை உள்ளே அழைத்து சென்றார்.

பாட்டி கிருபா பூஜை முடித்து வந்தனர்.

கிருபா லாப் எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு லாப் ஸ்லொவ்வாக இருந்தது. தாத்தா வருவதற்குள் கணக்குளை எடுத்து வைக்கலாம்.. நீண்டநாட்கள் ஆகிறதே கணக்கு பார்த்து என அமர்ந்தாள் திண்ணையில்.

தாத்தா சற்று நேரம்  உறங்கிவிட்டான் போல.. கோக்கிலா சொன்னார். அதனால், கிருபா உண்டு கடைக்கு கிளம்பினாள்.

மதியம் 2மணிக்குதான் லாக்கின் டைம் ஈசனுக்கு. ஆனாலும் கோக்கிலாவும் பாட்டியும் அதற்கு அரைமணி முன்பிலிருந்தே “ஈசா சாப்பிட வா.. சாப்பிட்டு வேலையை பாரு, காலையிலும் சரியா சாப்பிடறதில்லை” என அழைத்துக் கொண்டே இருப்பார். 

ஈசன் “வரேன் வரேன்” என்ற அமர்ந்திருப்பான். அவன் காலையில் தாமதமாக உண்பான். அதனால் மதியமும் எப்போதும் நேரமாகும். இங்கு வந்த இந்த ஐந்தாறு நாட்களாக.. இவர்கள் அழைக்கவும் தட்ட முடியவில்லை. அதேசமயம் பசிக்கவும் இல்லை. பசிக்கும் போது.. தானே, எடுத்து போட்டு உண்டுக் கொள்வான்.

தாத்தா இரண்டு மணிக்கு வந்து உண்டுவிட்டார். பாட்டியும் கோக்கிலாவும் எப்போதும் போல கிருபாவின் வரவிற்காய் காத்திருந்தனர்.

கிருபா போன் செய்து அன்னையிடம் “ஸ்டாக் வந்திருக்கும்மா.. இன்னுக்கு லேட் ஆகும். நான் இங்கே சாப்பிட்டுகிறேன். நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

ஒன்றும் சொல்லவில்லை பெரியவர்கள்.. ‘பத்துநாட்களாக ஏதும் கடையை கவனிக்கவேயில்லை.. வேலை இருக்குமே பெண்ணுக்கும்’ என, பாட்டி சொல்லிக் கொண்டே உண்டார். கோக்கிலாவும் உண்டார். ஈசன் உண்ணவில்லை என்பதால்.. அப்படியே மூடி வைத்து சென்றனர்.

கிருபா, நான்கு மணிக்குதான் வந்தாள். அதன்பிறகு உண்டு விட்டு எழுந்தாள். நல்ல பசி போல கிருபாக்கு.

அவள் உண்டு எழுந்துக் கொள்ளும் போது, ஈசன் உண்பதற்கு என அமர்ந்திருந்தான்.. டேபிளில். கிருபா, எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைக்காலம் என கை கழுவி வந்தவளுக்கு. ஈசன் தட்டோடு அமர்ந்திருப்பது தெரிந்தது.

கிருபா “இன்னும் சாப்பிடலையா” என்றாள்.

ஈசன் பதில் சொல்ல பிடிக்காமல் “ம்..” என சொல்லி தட்டில் சாதம் எடுத்துக் கொண்டு. கண்களில் அலட்சியபாவம்தான்.

கிருபா “அச்சோ, பொரியல் இல்லையே, நானே சாப்பிட்டேனே..” என்றாள் எதோ பெரிய குற்றம் போல.

ஈசன் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. தன்போல இருப்பதை உண்டான்.

கிருபா, உள்ளே சென்று.. சிப்ஸ் எடுத்து வந்து.. அவனுக்கு இட்டால். ஈசன் அலட்டிக் கொள்ளவேயில்லை. கிருப்பாக்குதான் என்னமோ போலானது அவனோ கௌரவம் பார்ப்பவன்.. அங்கே தங்கள் உணவை சாப்பிடவேயில்லை. இங்கே எதுவென்றாலும் உண்ணுகிறான் என ஒருமாதிரி இருந்தது. தொடர்ந்து ஏதும் பேசவில்லை அவள்.. மெதுவாக பரிமாறினாள். ஈசன் முதலில் தடுத்தான். அவள் வைத்திருந்த கரண்டியை தன் விரலால் தடுத்து நிறுத்தி வேண்டாம் என்றான். கிருபா கரண்டியை வைக்கவில்லை “என்ன இப்போ.. சாப்பிடுங்க” என்றாள் சின்ன குரலில். 

அதற்குமேல் ஈசன், பதிலே பேசவில்லை.. அமைதியாக உண்ணத் தொடங்கினான்.  

ஈசன் உண்டு முடித்ததும். கிருபா பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றாள்.

ஈசன், வேலையை பார்த்தான்.

எப்போதும் போல கிருபா, ஆறுமணிக்கு கடைக்கு கிளம்பினாள்.

தாத்தா “என்ன ம்மா.. ஆர்டர் செய்திருந்தது வந்திடுச்சா..” என்றார்.

கிருபா “ஆமாம் தாத்தா. எல்லாம் செக் செய்து முடிச்சிட்டுதான் வந்தேன். வரீங்களா தாத்தா பார்த்துட்டு வரலாம். அஷ்ட்டலஷ்மி குடம்.. சொம்பு..  எல்லாம் நல்லா இருக்கு தாத்தா” என்றாள்.

தாத்தா “ம்.. காலையில் போலாம் ம்மா” என்றார். 

கிருபா “தாத்தா, காலையில் கணக்கு பார்க்கலாம்ன்னு நினைச்சேன். நீங்க ரெஸ்ட் எடுக்க போய்டீங்க. உடம்பு முடியலையா” என்றாள்.

தாத்தாவும் “கொஞ்சம் அசதியா இருக்கு ம்மா..” என்றார்.

கிருபா “தாத்தா என்ன பண்ணுது” என்றாள்.

ஒன்றுமில்லை என தாத்தா சொல்லுவதை கேட்க்காமல் உடனே.. சங்கர் மாமாவின் அறைக்கு சென்று.. நர்ஸ் ரமேஷை அழைத்து வந்து, தாத்தாவிற்கு பரிசோதனைகள் செய்ய சொன்னாள்.

ஈசன், இவள் அறைக்கு வந்ததை பார்த்துவிட்டு.. வெளியே வந்தான். தாத்தாவிற்கு சோதனை நடக்கவும்.. “என்னாச்சு” என்றான், பொதுவாக.

கிருபா “தாத்தாக்கு அசதியா இருக்காம். அதான் செக் செய்ய சொன்னேன்” என்றாள்.

ஈசன் ஒன்றும் சொல்லாமல் அப்படியே ஒரமாக கைகட்டி நின்றுக் கொண்டான்.

ரமேஷும் “ஆமாங்க BP அதிகமாகத்தான் இருக்கு. நீங்க டேபிலெட் எடுத்து வாங்க, நான் கொஞ்சம் பார்த்து சொல்றேன்” என சொல்ல.. கிருபா அந்த வேலையை செய்தாள்.

மாத்திரகைகள் கொடுத்து தாத்தாவை சற்று நேரம் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தாள் கிருபா.

கிருபா கையில் சாவி இருக்கவும்.. தான் கடைக்கு செல்லத்தான் வந்தோம் என உணர்ந்து.. அப்படியே கிளம்பினாள்.

கிருபா மனதில் தடுமாற்றத்தோடு வாசற்படி இறங்க.. கிருபாவின் கவனம் தப்பி..  இரண்டு படி தாண்டி கால் செல்ல.. கால்மடங்கி  சட்டென அமர்ந்துவிட்டாள்.. விழுந்துவிட்டாள் படியில்.

ஈசன் நின்றிருந்தவன்.. “பார்த்துங்க” என சொல்லிக் கொண்டே வாசல் வந்தான்.

கிருபாவிற்கு ஏதும் புரியவில்லை எப்படி விழுந்தோம் என.. கண்கள் கலங்கி போகிற்று.. வழியில். சட்டென எழ முடியவில்லை.

ஈசன் வந்து கை கொடுத்தான்.. அனிச்சையாய் அவன் கைபிடித்து எழ முயல.. ஈசன் மற்றொரு கையால்.. அவளின் தோள்களை பற்றி எழுப்பினான். கிருபாவிற்கு வலிதான்.

எழுந்துக் கொண்டாள். ஈசன் அவளின் தோள்களை விட்டான். கிருபா வலியை பொறுத்துக் கொண்டு.. அப்படியே இருவரும் திண்ணைக்கு வந்தனர். கிருபாவை அமர வைத்தான். சற்று தள்ளி நின்றுக் கொண்டான் ஈசன் “வேறு எங்காவது அடியா.. பாரு” என்றான்.

கிருபா மலங்க மலங்க விழித்தாள். 

ஈசன் “வேற எங்காவது அடிபட்டிருக்க போகுது.. கை உதறு.. கால் உதறு” என்றான்.

கிருபா ஈசன் சொன்னது போல செய்தாள்.. ஆனால், கால்களை அசைக்க முடியவில்லை.. உதற உதற வலிதான் இருந்தது அவளுக்கு.

ஈசன் “என்னாச்சு” என்றான் தள்ளி நின்றுக் கொண்டே.

கிருபா “அம்மா.. அம்மா கூப்பிடுங்க” என்றாள் கண்ணில் நீர் மல்க..

ஈசன் “இரு அழாத அழாத” என சொல்லிக் கொண்டே.. லேசாக பதறியவனாக உள்ளே சென்று கோகிலாவை கூட்டி வந்தான். 

கோகிலா கிருபாவை பார்த்துவிட்டு என்னவென கேட்க ஈசன் விளக்கம் சொன்னான்.

கோகிலா பெண்ணை கைத்தாங்களாக உள்ளே கூட்டி சென்றார். ஈசன் சற்று தள்ளி.. பின்னாலேயே சென்றான்.

அதன்பின் வீடே கிருபாவிற்காக ஓடியது. கண்ணம்மா அக்கா தண்ணீர் கொண்டு வந்தார். தாத்தா தன் தள்ளாமை மறந்து எழுந்து வந்தார்.

சங்கர் சத்தம் கேட்டு வெளியே வந்தார் ரமேஷின் உதவியோடு.

அரைமணி நேரத்தில் அவளுக்கு கால் பிசகிவிட்டது என கண்ணம்மா வந்து உருவிட்டார் கிருபாவிற்கு. கிருபா “அம்மா அம்மா.. வலிக்குது.. வேண்டாம்மா” என கொஞ்சம் சத்தமாக கத்த தொடங்கினாள்.

தாத்தா.. “ஒண்ணுமில்ல டா..” என சமாதானம் செய்தார்.

எல்லோரும் கிருபா படும் அவஸ்த்தையை பார்த்து ஏதேதோ வார்த்தைகள் சொல்லினர்.

ஈசன் அங்கேயே நின்றுக் கொண்டான்.. ஏதும் பேசவும் இல்லை.. உள்ளே செல்லவும் இல்லை. அப்படியே பார்த்துக் கொண்டு சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.

‘படெக்’ என ஒரு சத்தம்.. அதை தாண்டி கிருபாவின் ‘ஆ’ என்ற சத்தம்.. கேட்கவும். எல்லோரும் “அவ்வளவுதான் சரியா போச்சு போ… அவ்வளவுதான்” என பாட்டியும் கண்ணமமாவும் சொல்லினர்.

கண்ணம்மா “கால்களை உதறுடா” என சொல்லவும்.

கிருபா கண்ணில் நீர் மல்க.. கொஞ்சம் புன்னகையோடு நிமிர்ந்தாள்.. கால்களை உதறினாள். “கால் சரியாகிவிட்டது..” எல்லோரும் சொல்லினர்.

ஈசன் இப்போதுதான் உள்ளே தன் வேலையை பார்க்க சென்றான்.

கிருபா புன்னகைத்துக் கொண்டே எல்லோரையும் பார்த்தாள். அங்கே ஈசனை காணவில்லை. என்னமோ முகம் வாடி போனது அவளுக்கு.