வணக்கம் தோழிகளே,

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 12

அடுத்த நாள் காலை யாருக்கு சாதகமாக இருந்தோ இல்லையோ, ஆனால் நேத்ராவிற்க்கு, அன்று காலை உடற்பயிற்சி முடிந்து, காலை செய்திதாளை பார்த்தவள் அதில் இருந்த செய்தியை நம்பமுடியாமல் பார்வையை அதில் பதித்து இருந்தால்.

அதில் இருந்த தலைப்பு செய்தி – பிரபல கோச்சிங் சென்டர் உரிமையாளர் சிறையில் தற்க்கொலை!!!!!

அதை தொடர்ந்து அவர் தந்தை மருத்துவமனையில் அனுமதி!?! ஆபத்தான கட்டத்தில் உள்ளார்!!!!!

என்றும் அவரின் குடும்ப புகைப்படம் மற்றும் அவரின் குடும்பவிவரம் முழுவதும் வெளியிட்டு இருந்து அந்த பத்திரிக்கை செய்தி!!!

மகன் கைது ஆனவுடன் தன் மகளை கிராமத்தில் இருந்த தன் தந்தையின் விட்டில் விட்டார் ஆனந்தி, அங்கு இந்த அளவு இன்னும் செய்தி பரவாதால் அவர் பெண்ணை அங்கு விட்டு வைத்தார்.

நேற்று ஆதிகாலை அமேரிக்காவில் இருந்து விமானம் ஏறிய அதியன், இந்தியா வந்தவன் விமானநிலையத்தில் தான் செய்தி அறிந்தான்.

அறிந்தவனுக்கு அடியும் புரியவில்லை நூனியும் புரியவில்லை. அவனுக்கு என்ன நடந்து என்று முழுதாக சொல்லகூட ஆள் இல்லை.

யாரை தொடர்புக்கொண்டு மேற்க்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கூட முடிவு செய்யமுடியவில்லை.

இந்த நிலையில் தான் அவள், சிவநேசனை பார்க்க மருத்துவமனை செல்ல வேண்டும் என்று இளாவிடம் விவாதித்துக்கொண்டு இருந்தாள்.

அவன் அதை முற்றிலும் மறுத்துக்கொண்டு இருக்க, எனக்கு இந்த வளவன் சிவநேசன் மகன் தெரியாது இளா ஸார். என்னால நம்பவே முடியல!! அவர் பையன் இப்படியானு!!!!

என்ன பேசுற நேத்ரா கேஸ் கோட்ல இருக்கு, ஜெயில அவளே பாதுகாப்பையும் மீறி இந்த தற்கொலை எப்படி?

நானே ரொம்ப குழப்பத்துல இருக்கேன்.

ஒரு வேல இது கொலையா இருத்த இந்த கேஸ்ல நம்ப பிடி நழுவநிறைய வாய்ப்பு இருக்கு. ஏற்கனவே எல்லா ஆதாரமும் வளவன் தான் குற்றவாளி மாதிரி, அவனுக்கு எதிராவே இருந்து.

இப்ப இருக்க நிலையில் ரவியையும் , ராகவ்வையும் முக்கிய குற்றவாளியா காமிக்க போதிய ஆதாரம் நம்ம கிட்ட இல்லை.

அப்படியே அவனுக்கிட்ட எழுதிவாங்கினாலும், நாளைக்கே கோர்ட்டுல எங்கள மிரட்டி வாங்கிதாங்க சொன்னா நாம ஒன்னும் பன்னமுடியாது.

ஏன்னா இன்னைய வர யாரும் இவங்க இரண்டு பேருக்கும் எதிரா யாரும் புகார் கொடுக்கல.

இந்த நிலையில் நீ அவன் அப்பாவ பார்க்க ஆஸ்பிட்டல் போனா அத கண்டிப்பா அவங்களுக்கு சாதகமாக மாத்திபாங்க. பிளீஸ் புரிஞ்சுக.

ஸார் இந்த கேஸ்ல ஏன் இவ்வளவு அவசரம் காட்டினாங்க இப்பதான் புரியிது. இப்ப நம்ப எடுத்து வைக்க ஒரு தப்பான அடி கூட இந்த வழக்கின் போக்கையே மாத்திடும்.

அதனால என்ன கேக்காம நீ எதையும் செய்ய கூடாது என்று இளா நேத்தராவை எச்சரித்தான்.

……………………………

அதே சமயம் இந்த வழக்கை பற்றி பத்திரிக்கையின் மூலமாக அறிந்த ஆதிராவும் அதை பற்றியும், சிவநேசன் பற்றியும் இளாவிடம் விசாரித்தாள்.

அவளும் சில விஷயங்களை இளாவிடம் பகிர்ந்துக்கொண்டாள், எல்லாவற்றையும் கேட்ட இளா இன்னும் கூடுதல் கவனமுடன் இந்த வழக்கை கையாள வேண்டும் என்று முடிவேடுத்தான்.

இதற்க்கிடையில் சிவநேசனை பார்க்க அதியன் மருத்துவமனை வந்து இருந்தான்.

அவசர சிகிச்சை பிரிவில், யாரும் இல்லாமல் அறையின் முன் ஒரு காவலர் இருக்க, அருகே இருந்த இருக்கையில் அவன் தாய் அமர்ந்து இருந்தார்.

ம்மா…. என்றவன் அவர் அருகே விரைந்தான், அவனை பார்த்தவர் முதலில் திகைத்தாலும், சுதாரித்துக்கொண்டவர், அதியா என்று அவன் தேளில் சாய்ந்துக்கொண்டார்.

என்னமா நடந்து இன்னிக்கு நியூஸ் பேபர்ர, காலையில் ஏர்போட் வந்துதான் பார்த்தேன். எனக்கு ஒன்னும் புரியில!?!

நம்ம வளவன்னா இப்படி?

என்ற அவன் கேள்விக்கு அவரிடம் அழுகையே பதிலாக கிடைத்து.

அதியனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவன் வந்தவுடன் அவன் அலுவலகத்திற்க்கு தெடர்புக்கொண்டு அவன் நிலையை விளக்கினான்.

அவனின் டீம் ஹட் அவன் தந்தையை பார்த்துவிட்டு மாலைக்குள் வந்து அறிக்கை சமர்பீக்குமாரு கூறியிருந்தார்.

அவனை சந்திக்க வந்த அவன் நன்பன் சுதாகர், அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு இப்போது இருக்கும் நிலையில் நீ யாரை அனுகினாலும் உனக்கு உதவுவார்களா தெரியாது அதி,

எனக்கு தெரிந்து நீ ஏசிபி இளமாறனை போய் பார், அவர் தான் இப்போ உன் அண்ணன் கேஸ் பார்கிறார். எனக்கு தெரிந்தவரை அவர் நேர்மையான ஆளு.

நம்ம வயசு தான் இருக்கும், அவர் கண்டிபா உனக்கு உதவி செய்வார் நினைக்கிறேன். என்றான்.

அவனால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

தந்தையை பார்த்துவிட்டு அலுவலகத்தில் ரிப்போட் செய்தவன் பின் நீண்ட விடுமுறைக்கு விண்ணபித்தான்.

அவன் ஹட் அவனுக்கு மிகவும் நெருக்கம், அதனால் தலைமை இடத்தில் அவன் நிலை கூறி அவன் விடுமுறைக்கு அனுமதி வாங்கி தந்தார்.

வீட்டிற்க்கு வந்தவன் செய்த முதல் வேலை, இந்த வழக்கு தெடங்கியது முதல் இன்று வரை யார் எல்லாம் இதில் சம்பந்த பட்டு இருக்கிறார்கள்.

வழக்கு யார் மூலம் தொடங்கபட்டது, இதுவரை போலீஸ் தரப்பில் என்னன்ன ஆதாரங்கள் கொடுக்கபட்டுள்ளது. என்று வழக்கை அடி முதல் நூனி வரை ஆராய்ந்தான்.

அதன் படி அவன் அறிந்து க்கொன்டது, வழக்கில் மற்ற இருவர் மேல் பெரியதாக குற்றம் சுமத்தும் படி ஆதாரம் ஏதும் இல்லை.

இதுவரை சிக்கி இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் வளவனுக்குதான் எதிர்ராக இருந்து.

ஒரு வேளை வளவன் தானே குற்றத்தை ஒப்புக்கொண்டாளே அல்லது நிருபிக்கபட்டாளே அது வளவனை தான் அதிகம் பாதிக்கும்.

மற்றவர்கள் இருவர்ரும் இதில் சம்பந்தபட்டு இருபதற்கான ஆதாரங்கள் ஏதும் பெரியதாக இல்லை.

இருக்கும் நிலையில் எல்லாம் தனக்கு எதிராக இருப்பதால் வளவன் இந்த முடிவுக்கு வந்தான்னா?

நிஜமாகவே வளவன் இப்படியா என்று அவனால் ஓருமுடிவுக்கு வரமுடியவில்லை.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாரிடம் உதவி கேட்கலாம் என்பதை விட யாரை நம்பலாம் என்று அவனால் முடிவுக்கு வரமுடியவில்லை.

…………………………

இங்கு நேத்ரா இளா சொன்னது சரி என்று பட்டாலும், அவளால் சிவநேசனை சந்திக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் சின்ன வயது நேசன் மாமவையும், அதிமாவையும் அவன் மனம் மிகவும் தேடியது.

வளவன் அவர் பிள்ளை என்று அவளுக்கு நினைவில் கூடயில்லை, அவளது சிறிய வயதில் சிவநேசன் மாமாவும், அதியனும் தான் அவர்களை கான வருவது. தங்கள் வீட்டிற்க்கு வரும் ஒரே விருந்தினர் அவர்கள் தான்.

அதிலும் அதியனை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும் எப்போதும் அவளை துக்கிக்கொண்டு அவளுடன் விளையாடியபடி இருப்பான், அவனுக்கு அப்போது ஒரு 10 அல்லது 11 வயது இருக்கலாம்.

அவள் சிறு வயது ஞாபகங்களில் அதியனுக்கு மறக்கமுடியாத இடம் உண்டு, ஆனால் அதே மாமவும், அதியும் அவளுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர்களுடன் இல்லாமல் போனது தான் அவர்களின் துர்தஷ்டம்.

ஒரு வேளை அவர்கள் அந்த நேரம் அவர்கள் கூட இருந்து இருந்தால் இன்று அவள் இப்படி ஒர் வெறுமையான வாழ்வு வாழ வேண்டி இருக்கதே என்னவோ?

எண்ணங்கள் அவளின் சிவேநேசன் மாமாவையும், அதியையும் சுற்றி வந்து.

என்ன தான் இளா அவர்களை சொன்று பார்க்க வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் மணம் கேட்பதாக இல்லை, ஒரு வேளை சிவநேசன் மாமாவையே அல்லது அதியையே பார்க்கமுடிந்தால், தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லிவிடலாம்.

அவர்களுக்கும் எல்லாம் தெரியும் பட்சத்தில், அவர்களுக்கு அதில் இருந்து வெளி வருவது எளிது, ஏன் என்றால் இளா அவளிடம் வழக்கு சம்பந்தமாக பேசி இருந்தான்.

வழக்கு ஆரம்பிக்கும் போது 3 பேர் மீதும் பதிவுசெய்து இருந்தாலும், உண்மையில் ரவி மற்றும் ராகவ் தான் உண்மைதான குற்றிவாளிகள்.

அவர்கள் வளவனை முன் இருத்தி எல்லாம் செய்தால், எல்லாமே வளவனுக்கு எதிர்ராக இருக்கிறது. வழக்கு நடக்கும் போது இருக்கும் ஆதாரங்களை வைத்துதான் அவர்களை சிக்கவைக்கமுடியும்.

என்றும் கூறி இருந்தான், ஆனால் இப்போது இந்த நிலையில் அவர்கள் எவ்வளவு மணமுடைந்து இருப்பார்கள், அவர்களை நேரில் சந்தித்து நிலையை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அதியன் எல்லாவற்றையும் ஆரய்ந்து பார்ததில், வழக்கு கொடுக்கபட்டது நேத்தரா என்ற பெண், அவள் அந்த பயிற்சி மையத்தில் தான் படித்துவந்தாள்.

அவள் கொடுத்த புகாரின் படி இதில் அங்கு படிக்கும் மாணவிகள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள் என்பது தான், அதற்கு முக்கியமாக அவள் கொடுத்த சாட்சி அன்று வளவன் அலுவலக அறையி்ல், அவன் தேவியுடன் பேசிக்கொண்டது இருந்தை தன் போனில் பதிவு செய்து வைத்து இருந்தைதான்.

அதை தவிர வேறு யார்ரும் எந்த புகாரும் அளிக்கவில்லை, இதில் மேலோட்டமாக பார்த்தால் எல்லா வளவனுக்கு எதிர்ராக இருப்பது போல் இருந்தாலும், வளவளை சீக்க வைத்து ரவி மற்றும் ராகவை இதில் இருந்து மீட்டு விடுவர்.

இதில் வளவன் தற்க்கொலை வேறு அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும், இருக்கும் எல்லா குற்றத்தையும் அவன் மேல் சுமத்தி இருவரையும் சுலபமாக வெளியில் எடுத்து விடுவார்கள்.

முதலில் வளவன் தற்க்கொலைதான் செய்துக்கொண்டான் னா இல்லை இவர்களால் கொலை செய்யபட்டானா?

இதற்கு எல்லாம் போலீஸ்சும் உடந்தையாக இருக்கும் மோ என்று தேன்றியது அதியனுக்கு, நான் இளாவை சந்திப்பது எனக்கு பாதகமா இல்லை அவர்களுக்கு சாதகமா?

ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை அவனால்

அதே எண்ணத்துடன் அவன் மருத்துவமனை புறபட்டான், அங்கே அவன் கண்டகாட்சி, அவனை இளா விடம் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்க வைத்து.!?

அங்கு அவன் தந்தையுடன் நேத்தரா உறையாடிக்கொண்டு இருந்தை கேட்டவன் மொத்த கோவமும் நேத்தாராவின் மீதே!?

இளா போக வேண்டாம் என்று சொல்லியும் நேத்தரா போய் சிவநேசனை சந்தித்தால்!!!

அதியனை இளாவை சந்திக்க சொல்லியும் அவன் இளாவை சந்திக்காமல் புறகனித்தான்!!!

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த வழக்கின் திசையை மட்டும் இல்லாமல் இவர்களின் வாழ்கையின் திசையையும் மாற்றி அமைத்து!?!

இன்று அது ஆதிராவின் உயிர் பறிக்கவும் காத்து இருக்கிறது……

தன்னை சுற்றி பின்னப்படும் வலை அறியாமல், தான் அதில் இன்று விழப்போவது தெரியாமல், ஊருக்கு புறபடுவற்கான ஏற்பாட்டில் இருந்தால் ஆதிரை…………………………

     நிலவு தேயும்…………