Advertisement

அத்தியாயம் – 15
      சஹானா “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று விஜய்யிடம் கேட்ட போது சிறிது அதிர்ந்தது உண்மையே. பின் சுதாரித்தவன் “இங்க பாரு சஹி இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு தான்.
     ஒரு டூ டேஸ் என்னை பார்த்துட்டே இருக்கவும் உனக்கு இப்படி தோணுதுன்னு நினைக்கிறேன்‌. லைஃப்ல இந்த மாதிரி பாசிங் கிளவுட்ஸ் நிறைய இருக்கும் சஹி.
     அதெல்லாம் லவ்னு நினைச்சு உன்னை நீயே குழப்பிக்காத” என்று புரிய வைக்க நினைப்பதாய் எண்ணி பேசினான். அவன் பேசியதை பொறுமையாக கேட்டவள் இப்போது தன் மனதை பேசினாள்.
     “நீங்க சொல்றது எல்லாம் புரியுது விஜய். பட் இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு இல்லைன்னு கண்டிப்பா எனக்கு தெரியும். உங்களுக்கு தான் அது புரியலை விஜய்.
     எனக்கு வாழ்க்கையில நிம்மதி கிடைக்க என்ன செய்றது அப்படின்னு மனசுக்கு உள்ள ஒரு தேடல் இருந்துட்டே இருந்துச்சு. அன்ட் அந்த தேடலுக்கான பதிலை நீங்க தான் விஜய் எனக்கு தந்திருக்கீங்க.
     இன்னைக்கு மார்னிங் அங்க தேவை இருந்த மக்களுக்கு உதவி செஞ்சப்ப‌ ஐ பெல்ட் வெரி புல்பில்டு. அதே மாதிரி ஒரு ஃபீலிங் உங்க கூட இருக்கும் போதும் தோனுது விஜய்.
     எனக்கு பயமா இருக்கு விஜய். என்னோட லைஃப் எங்க என்னோட அப்பா அம்மா லைப் மாதிரி போயிருமோன்னு. பட் நீங்க என் கூட இருந்தா ஒரு நம்பிக்கை லைஃப் நல்லா இருக்கும்னு” என்று அவள் சொல்லும் போது அவன் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
     ஏன் என அவனுக்கும் தெரியவில்லை. இப்போது சஹி பேசுவதை மீண்டும் கேட்டான். “நான் ஸ்ரே சோம் அங்கிள்‌ லக்ஸ் ஆன்டி எல்லாரும் டெல்லி போய்ட்டு ஒரு டென் டேஸ் காசி அமர்நாத் இந்த மாதிரி கோவிலை சுத்த போறோம்.
     அன்ட் ஆப்டர் டெர் டேஸ் ஆக்ரா வரோம். அப்போ நீங்க வாங்க விஜய். அப்போ வந்து உங்க மனசுல என்ன இருக்கோ அதை சொல்லுங்க‌. அது வரைக்கும் டைம் எடுத்துக்கோங்க.
     அப்புறம்” என இழுத்தவள் “டூ யுவர் இன்டர்வியூ வெல். நான் உங்களை கலெக்டரா பார்க்க ரொம்ப ஆசைப்படுறேன். அதையும் மைன்ட்ல வச்சிக்கோங்க. இப்போ தூங்க போலாம்” என்று மனதில் இருந்ததை பேசி சென்று விட்டாள்.
     ஆனால் விஜய் தான் அவள் பேச்சில் அப்படியே நின்று விட்டான்‌. காதலிக்கப்படுவது சுகம் என படித்திருக்கிறான். அதை நேரில் உணரும் தருணம் இவ்வளவு மகிழ்ச்சியை தருமா என்று இப்போது உணர்ந்தான் விஜய்.
     ஆம் சஹியின் பேச்சில் இருந்த தெளிவு, அவள் கண்களில் தெரிந்த காதல் என ஒவ்வொன்றும் அவளின் மனதை அப்படமாக காட்ட இதை சாதாரண ஈர்ப்பு என்ற பிரிவில் அவனால் சேர்க்க முடியவில்லை.
     அதே போல் அவனுக்கு யோசிக்கவும் நேரம் தேவைப்பட அதை சொல்லாமலே தந்து சென்ற சஹியின் மீது ஒரு அபிமானம் தானாவே வந்து விட்டது விஜய்க்கு சஹி மீது.
     அந்த எதிர்க்காற்றை தானும் முகத்தில் வாங்கியவனின் புன்னகையோ அந்த இருட்டிலும் அழகாக தெரிந்தது.
     அடுத்த நாள் மதிய நேரம் டெல்லியை வந்து அடைந்தது ரயில். அவ்வளவு நேரம் ஒன்றாக வந்த அந்த ஆறு பேரும் பயணிகளாக இல்லாது ஒரு குடும்பமாகவே இப்போது மாறி இருந்தனர் என்றால் மிகையில்லை.
     “அப்புறம் திரும்ப எப்போ மீட் பண்ணலாம்” என்று வெற்றி தான் கேட்டான். அவன் கேள்விக்கு வெற்றியை பார்க்காது விஜயை பார்த்தே தான் அவள் பதில் வந்தது.
     “இன்னும் டென் டேஸ் தான் வெற்றி. வீ வில் கம் அகைன்‌. நீங்க எங்களுக்காக வெயிட் பண்ணுங்க. நாம ஆக்ரா போலாம். நிறைய பிளேஸ் பார்க்கலாம். அவ்ளோ நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
     சோ நாங்க எங்க இறை சுற்றுலாவை முடிச்சிட்டு வரோம். எல்லாரும் இங்க ஒரு ஃபன் சுற்றுலா போலாம். ஓகேவா” என்றவள் விஜயை நோக்கி புருவத்தை உயர்த்தி கண்களாலே ‘ஓகேவா?’ என்றாள்.
     அவள் பாவனையில் விஜய்க்கு சிரிப்பு வந்தாலும் முகத்தில் எந்த பாவத்தையும் காடட்வில்லை. மதிய உணவை முடித்தபின் வெற்றியும் விஜய்யும் அவர்கள் முன்பதிவு செய்திருந்த அறைக்கு கிளம்பினார்கள்.
     அதே நேரம் சஹி ஸ்ரே சோம் லக்ஸ் இவர்கள் நால்வரும் காசிக்கு செல்லும் அடுத்த ரயிலுக்கு செல்ல ரயில் நிலையத்திற்கே மீண்டும் சென்றனர்.
     காசி சென்றவர்கள் வந்தது போல் பேச்சும் கூத்தும் என சந்தோஷமாக சென்றாலும் ஏதோ குறைவது போல் தான் உணர்ந்தனர். ஆனால் அதை ஒருவர் மற்றவரிடம் காட்டாமல் இருந்து கொண்டனர்.
     இந்த இறை சுற்றுலா நால்வரின் மனதிலும் நல்ல இதத்தை பரப்பியது என்னவோ உண்மை தான்.‌ இதில் சோம் லக்ஷ்மி மீது காட்டிய அக்கறை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது சஹி ஸ்ரேவிற்கு.
     அங்கே தேவை உள்ளவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்து கொண்டும் வந்தனர். கோவிலுக்கு சென்றதை விட பிறருக்கு உதவியது தான் மனதுக்கு நிம்மதி அளித்தது இவர்களுக்கு.
     இதில் ஸ்ரே தன் கவலையில் இருந்து நன்கு தெளிந்து வெளியே வந்துவிட்டாள். இரவில் நன்றாக உறங்கி எழ அது சஹிக்கு மிகுந்த நிம்மதியை தந்து சென்றது.
     என்ன தான் இவர்களோடு சுற்றினாலும் இடை இடையே சஹியின் மனம் என்னவோ விஜய் சொல்லப்போகும் பதில் என்னவாக இருக்கும் என்பதை சுற்றியே வந்தது.
     இங்கே இப்படி செல்ல இன்டர்வியூ என்று வந்த விஜய் மனதிலும் சஹியின் எண்ணங்கள் தான் வரிசை கட்டி நின்றது. ஆனாலும் இன்டர்வியூ என்று வந்த போது சிரத்தையாக மற்ற எண்ணங்களை ஒதுக்கி நல்லபடியாகவே செய்து விட்டு வந்தான்.
     ‘கண்டிப்பா அவளை விட வேற யாரும் நம்ம லைஃப் பாட்னரா வந்தா செட்டாகாதுன்னு தான் எனக்கு தோனுது. அவளுக்கு ஓகே சொல்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. பட் எங்க வச்சு சொல்ல’ என்று யோசித்தவனுக்கு சட்டென பல்ப் எரிந்தது.
      “தாஜ் மஹால்!! அதான் அதுதான் கரெக்ட் பிளேஸ். அந்த இடத்தில சொன்னா அவ கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்படுவா” என்று மகிழ்ச்சியாக மனதில் எண்ணிக் கொண்டான்.
     பத்து நாட்களும் நிமிடங்களாய் கடக்க இறை சுற்றுலா சென்ற நால்வரும் டெல்லி வந்து சேர்ந்தனர். வந்தவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் வெற்றி. விஜய்யும் புன்னகையுடன் தான் வரவேற்றான்‌.
     சோம் விஜய்யின் கையை பிடித்து கொண்டவர் “எனக்கு வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு நல்லா உணர்த்திட்ட விஜய். என் மனசு நிம்மதி அடைய எனக்கு என்ன செய்யனும்னு இப்ப புரிஞ்சிருச்சு பா.
     நான் முடிவு பண்ணிட்டேன். நான் ஏன் ஊரை விட்டு இப்படி ஓடி ஒளியனும். நான் எங்க ஊருக்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். அங்க என் மக்களுக்கு என்னால‌ ஆன உதவியை என் காலம் இருக்க வரை செஞ்சிட்டு,
     நிம்மதியா ஒரு சாவை பார்க்கலாம்னு மனசுல ஒரு எண்ணம் வந்திருச்சு” என்று புன்னகையுடன் கூறிய சோமை விஜய் “நல்ல முடிவு அங்கிள்” என கூறி மகிழ்வுடன் அனைத்து கொண்டான்.
     அதன்பின் ஒரு நாள் முழுக்க டெல்லியை நன்றாக சுற்றி பார்த்தனர்‌. விஜய் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது அமைதியாகவே வர சஹி‌ தான் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
     ஆனால் அதை எதையும் உணராதவன் போல் சுற்றி வெறுப்பேற்றி கொண்டிருந்தான் விஜய். அவனை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது சஹியால்.
     அன்று இரவு நன்கு ஓய்வெடுத்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஆக்ரா நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் அனைவரும்.
     ஆக்ரா கோட்டை, அக்பர் சமாதி, ஃபத்தேபூர் சிக்ரி என அனைத்து இடங்களையும் ஒரு லயிப்புடன் பார்த்து கொண்டே வந்தனர்.
     அந்த கட்டுமான தொழில் நுட்பத்தை கண்டு ஆர்வமாக பார்வையிட்டனர். மாலை தான் தாஜ்மகால் செல்வதென முடிவு செய்திருந்தனர். இரவு நிலவின் ஒளியில் தாஜ்மகாலின் பிம்பம் அருமையாக இருக்கும் என பலர் சொல்லியிருக்க அதற்காகவே மாலை வேளையை தேர்வு செய்திருந்தனர்.
     மாலை நேரமும் வந்தது. இவர்கள் ஆறு பேரும் தாஜ் மகாலை வந்தடைந்தனர். வந்தவர்களின் கண்களுக்கு நல்ல விருந்தாய் அமைந்தது அந்த காட்சி.
     அவ்வளவு அழகான வேலைப்பாடு. உண்மையான காதலின் அழகான ஒரு சின்னம் அல்லவா. “வாங்க வாங்க லவ் பேட்ஸ். உங்களை போன்றவர்கள் தான் இந்த இடத்தை சுத்தி பார்க்கனும்.
      வந்து எஞ்சாய் பண்ணுங்க” என்று ஸ்ரேயா சோம் லக்ஷ்மியை ஆர்ப்பாட்டமாக கூட்டி சென்றாள். இவர்களுடன் தானும் இணைந்து கொண்ட வெற்றி விஜய்யை பார்த்து ‘ஆல் த பெஸ்ட் மச்சான்’ என வாயசைத்து கையால் சைகை செய்து சென்றான்.
     அவனிடம் விஜய் எல்லாம் சொல்லி இருந்தான். எனவே அவன் விஜய் சஹி இருவரும் தனியே இருக்கும் சூழ்நிலை வர அவனும் அவர்களுக்கு தனிமை தந்து சென்றான்.
     அந்த யமுனை ஆற்றின் அழகை பார்த்து கொண்டிருந்த சஹியின் அருகே சென்றான் விஜய். அவளின் அழகான முகத்தை கண்டு புன்னகைத்த விஜய் “சஹி” என்றான் வார்த்தைக்கே வலிக்காமல்.
     அந்த குரலில் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்த சஹி “விஜய்” என்றாள் புன்னகையுடன்‌. எல்லாரும் எங்கே என்று பார்க்க யாரும் கண்ணில் தென்படவில்லை. எனவே கேள்வியாய் விஜயை பார்த்தாள் சஹி.
     அவளின் கையை மென்னகையுடன் பற்றியவன் “வா உக்காந்து பேசலாம்” என்று அவளை அழைத்து சென்று அமர்ந்து கொண்டான். அவனின் செய்கைகளை ஆச்சரியமாக பார்த்தவள் உடன் அமர்ந்தாள்.
     சிறிது மௌனித்தவன் “ம்ம் சஹி! எதுல இருந்து ஆரம்பிக்கன்னு தெரியலை. ஆனா சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் இங்க இந்த இடத்தில வச்சு சொல்லனும்னு ஆசைப்பட்டேன். அதான் இங்க வச்சு சொல்றேன் டா.
     உன்னை ஆபிஸ்லையே பார்த்திருக்கேன். உன் டெடிகேஷன் பிடிக்கும். பட் அதுக்கு மேல எதுவும் தோனினது இல்லம்மா. அன்ட் டிரைன்ல வந்தப்ப உன் பாஸ்ட் தெரிஞ்சப்போ கஷ்டமா இருந்துச்சு.
     பட் அப்போவும் எதுவும் தோனலை டா. ஆனா நீ டென் டேஸ் முன்னாடி என்கிட்ட புரபோஸ் பண்ண பாத்தியா அப்போ ஐ வாஸ் ஸ்பெல் பவுண்ட். அப்ப கூட என் பாஸ்ட் கேட்டு பரிதாபப்பட்டு சொல்றியோன்னு தோனிச்சு” என்னும் போதே அவள் எதோ பேச வர
     “இரு டா லெட் மீ கம்ப்லீட். ஆனா அதுக்கு முதல்லையே நீ உன்னோட பீலிங்ஸ்ஷ ஷேர் பண்ணிக்கிட்ட. சோ ஐ வாஸ் ஹேப்பி. அன்ட் காதலிக்கிறத விட காதலிக்கப்படுற பீல் தட் இஸ் எ கிரேட் ஃபீலிங் டா.
     யூ கேவ் மீ தட் ஸ்வீட் ஃபீலிங் டா. அப்போவே எனக்குள்ள இங்க வந்து ” என தன் இதயத்தை காட்டியவன் “என்னமோ பண்ணிட்ட டா” என்றான் புன்னகையுடன்.
     “உன்னை லைஃப்ல மிஸ் பண்ணிட கூடாதுன்னு மட்டும் தோனிருச்சு டா” என்றதும் சஹானா காற்றில் பறந்தாள் என்றே சொல்லலாம்.
     “இந்த டென் டேஸ் நீ இல்லாம ஐ பெல்ட் தட் சம் பார்ட் இஸ் மிஸ்ஸிங். சோ அந்த பார்ட் நீதான்னு எனக்கு புரிய ரொம்ப டைம் எடுக்கலை. அன்ட் அப்போ டிசைட் பண்ணுனேன்.
     இங்க இந்த லவ் சிம்பல் முன்னாடி வச்சு உனக்கு என்னோட லவ்வ சொல்லனும்னு முடிவு செஞ்சேன்” என்றதும் சஹியின் மனது வேகமாக அடித்து கொண்டது.
     விஜய் தான் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை எடுத்தவன் அவளை எழுப்பி நிறுத்தி “வில் யூ மேரி மீ டா?” என்றான் அவளை போல் நேரடியாக எந்த முகப்பூச்சும் இன்றி.
     இப்போது சஹியின் விழியில் இருந்து இரண்டு சொட்டு நீர் கூட விழுந்து விட்டது. சந்தோஷமாக ஆம் என தலை அசைக்க அந்த மோதிரத்தை அவளின் விரலில் அழகாய் போட்டு விட்டான்.
     “என்னோட தேடல் என் மன நிம்மதி எதுல இருக்குன்னு உணர்த்தின நீங்க இப்போ எனக்கே எனக்குன்னு லைஃப் லாங் வந்து என் லைஃப்ப புல்பில் பண்ண போறீங்க விஜய். ஐ லவ்‌ யு” என்றாள் ஆத்மார்த்தமாக.
     தன் காதல் நிறைவேறிய இடம், உலகில் இதற்கு மேல் வேறொரு சிறந்த இடம் இருக்க‌ முடியும் என்று சஹிக்கு‌ தோன்றவில்லை. மனநிறைவுடன் விஜய்யின் தோளில் சாய்ந்தாள் சஹி.
     அன்று நிலவு வெளிச்சம் நன்றாகவே இருக்க தாஜ்மகாலின் பிம்பம் அழகாக யமுனை ஆற்றில் விழுந்து கிடந்தது. அதை பார்த்தவாறு தங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறக்கும் என்ற எண்ணத்தில் மகிழ்வுடன்‌ அமர்ந்திருந்தனர் அந்த ஜோடி புறாக்கள்.
     கானல் நீரென இருந்த மனம்
      சுனை நீரின் மீனாய் துள்ள,
காடு மலை கடந்ததாய் எண்ணம்;
      மலை முகட்டில் மனம் நிற்க
          எஞ்சியது என்னவோ
            சிறு கண்ணீர் துளி;
   உரிய இடம் சேர்ந்த களிப்பில்…….
-தேடல் முடிந்துவிட்டது ஆனால் வாழ்வில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

Advertisement