Advertisement

அத்தியாயம் – 14
     சஹிக்கு இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை. எப்படி எப்படி என மனதில் ஆயிரம் கேள்வி முளைத்தாலும் எல்லாம் தெய்வமாகிய தன் அன்னையின் செயல் தான் என புரிந்தது.
     “பானு ம்மா தான் உன் அம்மாவா?” என கேட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு தன் அன்னை பானுமதியை தெரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்ட சஹி
      “விஜய் எப்படி என் அம்மாவ உங்களுக்கு தெரியும்?” என்றாள் ஆச்சரியமான குரலில். “மூனு நாளா ஃபிளாஷ் பேக் கேட்டே நொந்து போய் இருப்பாங்க எல்லாரும்.
     இதுல என்ன பத்தி வேற தெரிஞ்சக்கனுமா” என கிண்டல் செய்தாலும் “வா எல்லாரையும் சேர்த்து வைச்சே சொல்லிடறேன்” என அழைத்து சென்றான்.
     சோகமாக சென்ற சஹி சிரித்துக் கொண்டு வரவும் அனைவரும் புரியாது பார்க்க “நம்ம விஜய் அவரை பத்தி சொல்ல போறாரு” என்றாள் ஆர்வமாய்.
     மற்றவர்களும் அதே ஆர்வத்துடன் கேட்க தயாரானர். இந்த இடைவெளியில் “ஹே நம்ம அம்மாவை இவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு ஸ்ரே” என்றாள் வியப்பாய் சஹி.
     எல்லாருக்கும் ‘எப்படி’ என்ற கேள்வி வந்த போதும் அவன் வாயில் இருந்தே உண்மை வர காத்திருந்தனர். “என்னை பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை. ஆனா நான் இப்போ இவ்ளோ பெரிய ஆளா இருக்க காரணம் என் பானு ம்மா தான்” என்றான் பூரிப்பாக.
     “என்னை பெத்தவங்க யாருன்னே எனக்கு தெரியாது. சின்ன வயசுல ரோட்ல பிச்சை எடுத்துட்டு சுத்திட்டு இருந்திருக்கேன். யாரோ ஒரு நல்ல மனுஷன் என்னை பார்த்து ஆசிரமத்தில கொண்டு போய் விட்டுருக்கார்” விஜய் இதை சொல்லவும் அனைவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி.
     ஆனால் அதையெல்லாம் கவனிக்காத விஜய் மேலே தொடர்ந்தான். “அது ஒரு கிரிஸ்டியன்‌ மிஷனரி. அவங்க தான் எனக்கு விஜய் லூப்ரினு பேர் வைச்சாங்க.
     ஏன்னா அப்போ எனக்கு என்னோட பேரே தெரியாதாம்” என்றான் சிரித்தபடி. “அந்த ஆர்பனேஜ்ல தான் வளர்ந்தேன். அவங்க ஆர்பனேஜோட ஸ்கூலும் வச்சிருந்தாங்க. சோ என்னால‌ படிக்க முடிஞ்சது.
     அப்போ நான் எட்டாவது படிச்சிட்டு இருந்த டைம் அந்த நாள் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. அன்னைக்கு தான் பானு ம்மா எங்க ஆசிரமத்துக்கு வந்தாங்க.
     அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லையா இல்லை என்னன்னு தெரியலை. என்னால சாப்பிடவே முடியலை‌. அதை பார்த்த பானு ம்மா தான் எனக்கு ஊட்டி விட்டாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க தான் பர்ஸ்ட் எனக்கு ஊட்டி விட்டவங்க” இதை சொல்லும் போதே அவன் முகத்தில் அத்துனை மகிழ்ச்சி.
     “எங்க ஆர்பனேஜ் வரவங்க மோஸ்ட்டா எதோ கடமையா இல்லை பேர் புகழ்க்குன்னு செய்ரவங்க தான். ஆனா பானு ம்மா அப்படி இல்லை. எங்களுக்காவே வருவாங்க.
     எங்க கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க. அவங்க வர நாள நான் எதிர்ப்பார்த்து காத்திருக்க எல்லாம் செஞ்சிருக்கேன். எங்கலை எல்லாம் அவங்க அம்மா ன்னு கூப்பிட சொல்வாங்க. அது அப்படியே பானு ம்மா ஆகிருச்சு.
     நான் அப்போ பிளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தேன். அப்போல இருந்து தான் பானு ம்மா வரத நிறுத்திட்டாங்க. ஆனா அவங்களுக்காக நாங்க தினமும் காத்திட்டு தான் இருந்தோம்.
     ஆனா அவங்க ஏன் வரலைன்னு இப்போ புரியுது” என்றான் சஹி மற்றும் ஸ்ரே இருவரையும் பார்த்து. “பிளஸ் டூ முடிச்சிட்டேன். அதோட என்னை ஆசிரமத்திலையும் வச்சிருக்க முடியாது.
      வெளியே போய் ஆகனும்ற சிட்டுவேஷன். என்ன செய்றதுன்னு யோசிச்சப்போ தான் ஒரு டைம் பானு ம்மா தந்த அட்ரெஸ் நியாபகம் வந்திச்சு. சோ நான் அவங்களை போய் பார்த்தேன்‌.
     அவ்ளோ நாள் கழிச்சு என்னை பார்த்தும் என் பேரை நியாபகம் வச்சு என்னை உள்ள கூட்டிட்டு போனாங்க. நான் என் பிரச்சினையை சொல்லவும் அவங்க தான் என் மார்க்க பார்த்துட்டு உனக்கு கவர்மென்ட் காலேஜ்லையே சீட் கிடைக்கும்னு சொல்லி எஞ்சினியரிங் அப்ளை செஞ்சாங்க” என்றான் நிறைவான புன்னகையுடன்.
     பானுமதி அதே போல் கவுன்சிலிங் அழைத்து செல்ல நல்ல அரசு கல்லூரியிலே சீட்டும் கிடைத்தது. அவனின் கல்லூரி பீஸ் அரசு கல்லூரி என்பதால் மிகவும் குறைவாகவே இருந்தது.
     அந்த செலவை எல்லாம் பானுமதியே ஏற்றுக் கொண்டார். ஆனால் தன் செலுவுக்கு விஜய் பகுதி நேர வேலை ஒன்றை தனக்கு பார்த்து கொண்டான். பானு எவ்வளவு தூரம் தான் செய்வதாய் கூறியும் இந்த விஷயத்தில் மறுத்து விட்டான் விஜய்.
     அந்த ஒரு செயலே அவன் குணத்தை சொல்லிவிட்டது. அதனால் பானுமதிக்கு அவன் மேல் தனி மரியாதை வந்தது. அதே போல் இயல்பிலே புத்திசாலியான விஜய் படிப்பில் முதலாகவே வந்தான்.
     நான்கு வருட படிப்பை முடித்து விட்டு வேலைக்கான இரண்டு மூன்று கால் லெட்டர்களுடன் பானுமதியிடம் வந்திருந்தான் விஜய் ஆசிர்வாதம் வாங்கி செல்ல.
     அவனை மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்த பானுமதி எந்த எந்த கம்பெனி என பார்த்தார். அதில் அவர்கள் கம்பெனியும் இருக்க “எந்த கம்பெனிக்கு போக பா முடிவு பண்ணிருக்க‌?” என்றார் அதை பார்த்துக் கொண்டே.
     அவன் “நான் இன்னும் முடிவு செய்யலை பானு ம்மா” என்றான் சிறுவன் போல். அவன் தலையை பரிவுடன் தடவி கொடுத்த பானுமதி அவர்களின் கம்பெனியை தேர்வு செய்தார்.
     “இந்த கம்பெனிக்கு போப்பா” என்று சொல்ல அவர் வாக்கை வேத வாக்காக எண்ணி கொண்டு அங்கேயே சேர்ந்தான்.
     “அப்போ எனக்கு தெரியலை சஹி அவங்க தன்னோட சொந்த கம்பெனிக்கு தான் என்னை போக சொல்றாங்கன்னு” என்று சிரித்து விட்டான் விஜய்.
     கடைசியாக “இவ்ளோ தான் என்னோட பாஸ்ட். அதுவும் நீங்க என் பானு ம்மா பொண்ணுங்க அப்படின்னு தெரியவும் அவ்ளோ சந்தோஷம்” என்றவன் முகத்தில் உண்மையாகவே அவ்வளவு மகிழ்ச்சி.
     வெற்றியை பார்த்து “என் பாஸ்ட நான் கேவலமா நினைச்சு உன்கிட்ட சொல்லாம இருக்கலை வெற்றி. ஆனா என்னை பத்தி கேட்டு நிறைய பேர் பாவமா பார்ப்பாங்க.
     சோ அதான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன்” என்றான் விஜய். வெற்றிக்கும் புரிந்தது. விஜய் கூறுவது போல் வெற்றி தானும் பாவமாக தான் பார்த்திருப்போம் என்றே யோசித்தான்.
     அதனால் புரிந்தது என்பது போல் தலை அசைத்தவன் விஜய்யை கட்டிக் கொண்டான். இதை எல்லாருமே புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
     சிறிது நேரம் சென்றது. அப்போது தான் தன் தலையில் பல்ப் எரிந்தது போல் “அப்போ நீங்க எங்க ஆபிஸ்ல தான் வேலை செய்றீங்களா?” என்றாள் சஹி ஆச்சரியமாக.
     “ம்ம் ஆமாம்” என்றார்கள் விஜய் வெற்றி இருவரும் சிரிப்புடன். அதை கேட்டு “ஆனா பாருங்களே! எனக்கு உங்களை சுத்தமா அடையாளமே தெரியலை” என்றாள் வியப்பாக.
     விஜய் வெறுமனே சிரித்தானே அன்றி வேறு எதுவும் சொல்லவில்லை. ஆனால் வெற்றி “அதான் எங்களுக்கு தான் அது தெரியுமே. உங்க மேனேஜரே சொன்னாரு.
     அதெல்லாம் உங்களை அவங்களுக்கு சுத்தமா தெரியாதுன்னு” என்று வார்த்தையை விட்டான். வெற்றி சட்டென இப்படி எல்லாவற்றையும் உளறுவான் என தெரியாத விஜய் அவன் கையை பிடித்து ‘ம்ஹூம்’ என்று தலை அசைத்தான்.
     ஆனால் காலம் கடந்திருந்தது. அதான் இவை எல்லாம் அனைவரின் காதிலும் விழுந்திருந்ததே. இப்போது தடைகள் எல்லாம் நீங்கி இருக்க ரயிலும் தன் இயக்கத்தை தொடங்கியது.
      வெற்றி சொல்லியது புரிந்த உடன் “என்ன” என்று எழுந்து நின்று விட்டனர் சகோதரிகள் இருவரும். ரயில் செல்ல ஆரம்பிக்கவும் சிறிது தள்ளாடி அமர்ந்தனர்.
     “அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பாடி கார்ட் வேலை பார்க்க வந்திருக்கீங்க. அப்புறம் இந்த ஐ.ஏ.எஸ் இன்டர்வியூ எல்லாம் சும்மா அடிச்சு விட்டீங்களா?” என்று கொதித்தாள் ஸ்ரே.
      இப்போது பதறிய வெற்றி “எம்மா ஆத்தா! நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு. நாங்க ஐ.ஏ.எஸ் இன்டர்வியூக்கு தான் போறோம். அது உண்மை தான். வேணும்னா எங்க ஹால் டிக்கெட் கூட காட்டுறோம் பார்த்துக்க” என்று அவர்களை சாந்தபடுத்திய பின்
      “என்ன நடந்துச்சுனா. நாங்க ரெண்டு பேரும் லீவ் கேக்க அந்த சொட்டை தலை மேனேஜர் கிட்ட போனா நாங்க ரெண்டு பேரும் டெல்லி போறோம்னு தெரியவும் உங்க கூட போக சொன்னாரு.
     பர்ஸ்ட் எனக்கு புரியலை. ஆனா அப்புறம் தான் நீங்க நார்த் இந்தியா டிரப் போறத சொன்னாரு. சோ டெல்லி வரைக்கும் டிரைன்ல எங்களை பார்த்துக் சொன்னாரு.
     அதுக்கு மேல நம்பிக்கையான ஆட்களை ஏற்பாடு செய்றதா சொல்லிட்டு இருந்தார். சோ இந்த இடைப்பட்ட நேரத்தில எங்களை அவர் தான் உங்க கூட கோர்த்து விட்டாரு. சரி நாமலும் போற போக்குல ஒரு சமூக சேவைன்னு ஒத்துக்கிட்டோம்” என்றான்.
      பின் என்னவோ நினைத்து “ஆனா அவர் சொன்னது உண்மை தான். உங்களால எங்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதுன்னு அடிச்சு சொன்னாரு. அதை நீங்க புரூவ் பண்ணிட்டீங்க” என்று கூறி சிரித்தான் வெற்றி.
     இப்போது ஓரளவு எல்லாம் புரிந்து விட நிம்மதி ஆனார்கள் சகோதரிகள். அப்படியே அனைவரும் உறங்க சென்றனர். ஆனால் இன்று நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத சஹி தூங்காது முழித்துக் கொண்டிருக்க விஜய் பார்த்துவிட்டான்.
     அவனுக்கும் புரிந்தது இன்றைய நிகழ்வுகள் அவளை பாதித்து இருக்கிறது என. அவளை தனியே அழைத்தவன் “என்ன ஆச்சு. தூக்கம் வரலையா?” என்றான்.
     அவன் எண்ணியது போலையே “அது இன்னைக்கு இவ்ளோ நடந்திருச்சு‌. அதைலாம் என்னால டக்கன்னு ஏத்துக்க முடியலை‌‌. அதான் தூக்கம் வரலை” என்று உண்மையை உரைத்தாள்.
     “ஓகே அப்போ என் கூட வா” என்று கதவருகே அழைத்து வந்தான். “என் கையை புடிச்சிக்கோ. இப்போ கண்ணை மூடி அப்படியே வர காத்தை முகத்தில‌ வாங்கிக்கோ‌.
     அந்த காத்து எப்படி மோதி போகுதோ அப்படியே உன் மனசுல இருக்க குழப்பமும் காணம போய்ரும் பாரு” என்றவன் சில மணி துளிகள் அவளின் கையை தாங்கியிருந்தான்.
     விஜய் கூறுயது போல் சஹியின் மனதும் லேசானது. இப்போது கண்ணை திறக்க “என்ன ஓகேவா” என்றான் விஜய் புன்னகை முகத்தோடு. அவன் முகத்தை அப்படியே சில நிமிடம் பார்த்திருந்தாள் சஹி.
     விஜய் “என்ன” என என்று விழியை தூக்கி கேட்க “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா விஜய்?” என்றாள் அவன் முகத்தை பார்த்து ஆவலாக எந்த வித மேல் பூச்சும் இல்லாமல். விஜய் தான் அதிர்ந்து நின்றுவிட்டான்.
-பயணம் தொடரும்

Advertisement