தூவானம் தூவக் கண்டேன் 



அத்தியாயம் 22

அன்று குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால் கீர்த்தி அதிகாலையே எழுந்து விட்டாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்டு வரஅவரையே கீர்த்தி வீட்டு வேலைகளைச் செய்ய வைத்தாள். இவர்கள் இல்லாத நாட்களிலும், தினமும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு, வாரத்தில் ஒருநாள் வீடு சுத்தம் செய்து வைத்து விட்டு செல்வார்


திருமணத்திற்குச் சமைத்தவர்களில் தான் இருவர் வீட்டில் சமைக்கவும் இருந்தனர். பக்கத்திலேயே அவர்கள் தங்க வசதி செய்து கொடுத்திருந்ததால்இங்கே வேலை முடித்ததும் அங்கே சென்று விடுவார்கள். அவர்களும் காலையே எழுந்து வேலையை ஆரம்பித்து இருந்தனர். சமையலுக்கு ஆள் இருந்ததால் தான் வீட்டில் இத்தனை பேர் இருந்தாலும் சமாளிக்க முடிந்தது


கார் ஓட்டுனரும் அவர்களுடன் தான் தங்கி இருந்தார். அவர் தான் விமானத்தில் மற்றும் ரயிலில் திருமணதிற்கு வந்த உறவினர்களை அழைத்து வந்து விட்டது. அதே போலத் திரும்பச் செல்லும் போதும், அவர்தான் சொன்ன இடத்தில் சென்று விட்டும் வந்தார்


பொதுவான சமையல் வெளியே நடக்கடீ காபி போடுவது மற்றும் ஜமுனாவுக்கு உடல்நலம் சரி இல்லாததால்அவருக்கு உணவு மட்டும் கீர்த்தியே செய்தாள். எளிதாக ஜீரணம் ஆகும் வகையில் கஞ்சி அது போலத்தான் செய்து கொடுத்தாள்


சமையலுக்கு ஆள் இருந்தாலும், வேலைக்கு எல்லோருக்கும் பார்த்து பரிமாறுவது, உண்ண, குடிக்கக் கொடுத்து உபசரிப்பதே கீர்த்திக்கு பெரிய வேலையாக இருந்தது.
கீர்த்தி குளித்துவிட்டு வந்து பால்காய்ச்சி கொண்டிருக்கத் தர்மா எழுந்து வந்தார்


என்ன கீர்த்தி இன்னைக்குச் சீக்கிரம் எழுந்திட்ட?” 


எல்லோரும் எழுந்துக்கிறதுக்கு முன்னாடி எழுந்து கொஞ்ச வேலைகளை முடிச்சு வச்சிடலாம்னு பார்த்தேன். எல்லோரும் எழுந்திட்டா பேசிட்டே இருக்கோம், எங்க வேலை ஓடுது. வேலை செய்யுற பெண்ணையும் இப்ப பிடிச்சாத்தான் உண்டு. வேற வீட்டுக்கு போனா அவ்வளவு சீக்கிரம் வரமாட்டாஅதுதான் அவ வரும் போதே எழுந்துட்டேன்.” 


நீதான் கீர்த்தி, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடிட்டே இருக்கஉனக்குத்தான் பாவம் ரெஸ்ட் இல்லை.” 


நமக்கு வசதி இருக்கிறதுனால தேவையான வேலைக்கு ஆள் வச்சுக்கிறோம். அதுவும் முடியாதவங்க அவங்க தானே செய்யணும். கல்யாண வீடுன்னா இந்த வேலைக் கூட இருக்காதாதினமுமா செய்யப் போறேன்.” 


மாமியார் நாத்தனாருக்கு டீ கொடுத்துவிட்டு, தனக்கும் கணவனுக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்த கீர்த்தி, கணவனின் அருகே உட்கார்ந்தவள், “தர்மா, கோவிலுக்குப் போக இன்னும் சாமான் எதுவும் வாங்கலை. பொங்கல் வைக்க அப்புறம் கோவிலுக்குப் பூ, பழம், தேங்காய் எல்லாம் வாங்கணும்.” என்றாள்


மத்தவங்க எல்லாம் எழுந்து ரெடி ஆக லேட் ஆகும். நான் குளிச்சிட்டு போய் வாங்கிட்டு வந்திடுறேன்.”
சரி அருணா அண்ணிகிட்ட கேட்டுக்கோங்க. அவங்களுக்கு என்னை விட நல்லா தெரியும்.” என்றதும், தர்மா சரி என்றார்


தர்மா குளிக்கச் செல்லகீர்த்தி மாமியாருக்கு கஞ்சி செய்து வைத்து விட்டு அதன் பிறகு வேலை எதுவும் இல்லாததால்அப்போதே சென்று கோவிலுக்குச் செல்ல புடவை மாற்றிவிட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றினாள்


அபி குளித்து விட்டு வெளியே வர.. அதே நேரத்துக்குக் கார்த்தியும் குளித்துத் தயாராகிக் கீழே வந்திருந்தான். அவர்கள் இருவருக்கும் கீர்த்திக் குடிக்கக் கொண்டு வந்து கொடுக்கமூவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்


தர்மா சென்று அருணாவிடம் என்ன வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, காரில் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்தார். அவர் திரும்பி வந்த போதும் விஷாகன் வந்திருக்கவில்லை


கார்த்தித் தம்பியை கைப்பேசியில் அழைத்தான். ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பார்களேஅது போல ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு விஷாகனும் ரியாவும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்


அலைபேசியின் சத்தத்தில் தான் விஷாகன் எழுந்தான்


ஹலோ….” 


என்ன டா இன்னும் எழுந்துக்கலையா?”

 
டைம் என்ன?” 


எட்டாகப் போகுது. இன்னைக்குக் கோவிலுக்குப் போகணுமே…” என்றதும்


ஆமாம் இல்லமறந்திட்டேன். எல்லோரும் ரெடியா?” 


இல்லை இப்போதான் ரெடி ஆகிட்டு இருக்காங்க.” 


நாங்க அரை மணி நேரத்துல வந்திடுறோம்.” என்றவன், வேகமாக எழரியாவும் உறக்கம் களைந்து எழுந்தாள்


நான் போய் முதல்ல குளிச்சிட்டு வரட்டுமா?” என்றதும் ம்ம்என்றவள், “ஒரு நிமிஷம் இங்க வாங்க.” எனச் சொல்லஎதற்கோ என விஷாகன் அவள் அருகில் செல்லரியா அவனை அனைத்துக் கொண்டாள்


அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், “குட் மார்னிங்…” என, ரியாவுக்கு அந்தக் காலை பொழுது மிக இனிமையாக இருந்தது


அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் குளித்துவிட்டு ஒன்றாகவே கீழே இறங்கி வந்தனர். அதற்குச் சற்று முன்னர்த் தான் ஆர்த்தியும் வந்திருந்தாள். கீர்த்தி அவளுக்குக் குடிக்கப் பால் கொண்டு வந்து கொடுத்து விட்டு உட்கார்ந்தவள், இளைய மகனையும் மருமகளையும் பார்த்து புன்னகைத்தாள்


நீதான் டா புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி இருக்க.” என ஆதி விஷாகனைப் பார்த்துக் கேலியாகச் சொல்லஅதைக் கேட்டு விஷாகன் புன்னகைத்தான்


ரியா எதுவும் குடிக்க மாட்டேங்கிறா? உனக்குக் காபி கொண்டு வரேன்.” எனக் கீர்த்தி எழுந்துகொள்ளசற்று முன்னர்த் தான் அவர் ஆர்த்திக்குக் கொண்டு வந்து கொடுத்ததைப் பார்த்திருந்தான். அம்மாவை வேலை வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில், “எனக்கு ரியா காபி போடுவா…” என்றதும் கீர்த்தி மகனை ஆச்சர்யமாகப் பார்க்க… 


அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அவனுக்கு வாயில் வாஸ்த்து சரி இல்லை போல… 

என்ன அப்படிப் பார்க்கிறீங்க? உங்களை விட அவ நல்லா போடுவா. நீங்களே எல்லாம் பண்ணும்னு நினைக்காதீங்க. இப்ப எனக்கும் ஆள் இருக்கு.” என்றதும்


ரொம்பத் தேறிட்ட டாகல்யாணம் ஆகி ஒரு நாளுக்கே இப்படியா?” என ஆதி கேலி செய்யகார்த்திக் அபி இருவரின் முகமும் மாறியது. உணவு மேஜையில் உட்கார்ந்திருந்த தர்மாவும் மகனை கூர்ந்து கவனிக்கஅவன் விளையாட்டுக்கு பேசுவதாகத்தான் அவருக்குத் தோன்றியது


இதே கீர்த்தியின் இடத்தில் வேறு ஒருவர் இருந்தால்மகன் சொன்னதற்கு மருமகளைத்தான் தவறாக நினைத்திருப்பார்கள். வந்ததும் என் பையனை மாத்திட்டா, இப்படித்தான் நினைப்பார்கள். இல்லையென்றால் மகன் மீது இருக்கும் கோபத்தை மருமகள் மீது காண்பிப்பார்கள். அப்படி எதுவும் ஆகி விடக் கூடாது என்று தானே கீர்த்தியும் பயந்து இருந்தாள். ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை


மகன்களைக் கவனிக்க மனைவிமார்கள் வந்துவிட்டார்கள். இனி அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள், “நீ ரியாவை போடா சொல்லியே குடி.” என்றவள், அங்கிருந்து எழுந்துகொள்ளஉடனே ரியா எனக்குக் காபி போட தெரியாது என்றாள்


என்னது தெரியாதா?” என அதிர்ச்சியான விஷாகன், “டீ போட தெரியலைனா கூடப் பரவாயில்லைகாபி போட கூடவா தெரியாது?” என்று கேட்க… 


நான் காபி டி குடிக்க மாட்டேன். அதனால தெரியாது.” என்றால் ரியா. ஆனால் அவள் சொல்வது பொய் என்று தர்மாவுக்கும் ஆர்த்திக்கும் தெரியும்


அப்போ நீ சாப்பிடலைனா எங்களுக்குச் சோறு கிடையாது.” என விஷாகன் சொல்ல… “ரொம்பப் பேசின இல்லஉனக்கு நல்லா வேணும்.” என்றால் அபி


உனக்குத் தெரியலைனா பரவாயில்லை ரியாவிஷாகன் நல்லா காபி போடுவான்.” என்ற கீர்த்தி, “நீதான் எதுவும் குடிக்க மாட்டஉனக்குப் பசிச்சா டிபன் ரெடியா இருக்கு. நீங்க எல்லாம் சாப்பிடுங்க.” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்


எல்லோரும் இருக்கும் போது சேர்ந்து தான் உண்பது. இன்று அவர்களை உண்ண சொல்லிவிட்டுக் கீர்த்திச் சென்றதும், எல்லோருக்கும் சற்று வித்தியாசமாக இருந்தது. அப்போதுதான் அம்மாவை காயப்படுத்தி விட்டோம் என்பதை விஷாகன் உணர்ந்தான்


நீங்க போய்க் கிளம்புங்க.” என அபி ஆதியை அனுப்பி வைத்தாள்


உனக்குக் காபி போட தெரியுமா ஆர்த்தி?” கார்த்திக் கேட்கஅவள் தெரியுமென்றாள்


நீ போய்ப் போட்டுட்டு வா.” என்றவன், “ரியா, நீயும் போய் எப்படிப் போடுறதுன்னு பார்த்துக்கோ.” என இருவரையும் அனுப்பி வைத்தான்


உனக்கு உன் பொண்டாட்டி போட்டு காபி குடிக்கணுமா குடிக்க வேண்டியது தானஅதுக்கு எதுக்கு டா அம்மாவை வம்பிழுக்கிற?” 


இத்தனை நாள் அப்பாவை தான் எதாவது சொல்லுவஇப்போ அம்மாவையும் சொல்ல ஆரம்பிச்சுட்ட…” எனக் கார்த்திக் குற்றம் சொல்ல… 


சொல்றதை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் புலம்ப வேண்டியது. இதுதான் இவன் வேலை.” என்றால் அபியும்.

அப்பா முன்னாடியே நம்மகிட்ட சொன்னாரு தானே…. நீ ரொம்ப அம்மா அம்மான்னு கொஞ்சிட்டு, நாளைக்கு எதாவது சொன்னா அம்மாவுக்குக் கஷ்ட்டமா இருக்கும்னு. அப்போ எதோ டயலாக் பேசின.” என்றான் கார்த்திக்


நான் அம்மாவை ஹர்ட் பண்ண நினைப்பேன்னு நீங்க ரெண்டு பேரும் நம்புறீங்களா? நான் அம்மாவே வேலை செய்றாங்களேரியா செய்யட்டும்னு நினைச்சு தான் சொன்னேன்.” என விஷாகன் சொன்னதும்


எங்களுக்கு உன்னைப் பத்தி தெரியும். ஆர்த்திக்கு உன்னைப் பத்தி தெரியுமா? அதுவும் அதை எப்படிச் சொன்ன?” என்றான் கார்த்திக் சூடாக


அப்போது ஆர்த்தி விஷாகனுக்குக் காபியோடு வர பேச்சு நின்றது.

கீர்த்திப் பெட்டியில் உடைகளை அடுக்கிக் கொண்டு இருக்ககதவை சாற்றி விட்டு வந்த தர்மா, “மாகார்த்தியும் அபியும் அவனை மாத்தி மாத்தி கண்டிக்கிறாங்க. இப்படி நீங்க எல்லாம் இன்னைக்கே அவனைப் போட்டு நெருக்கினா…. எதுக்குடா கல்யாணம் பண்ணோம்னு அவனுக்குத் தோணிடும். அவன் விளையாட்டுக்கு தான் பேசினான். உன் மேல உள்ள அக்கறையில தான் சொன்னான். ஆனா அதைச் சொல்ல தெரியாம சொதபிட்டான்.” என்றதும்,

நான் கோபமா எல்லாம் இல்லை தர்மா. புதுசா கல்யாணம் ஆனவங்க. அவங்க எதாவது ஜாலியா பேசிப்பாங்கன்னு விலகி இருக்கேன், அவ்வளவு தான்.” என்றால் கீர்த்தி


நல்லவேளை கீர்த்தி, நீ ரியாவை எதுவும் சொல்லிடலை.” 


இவன் பேசினதுக்கு அவ என்ன பண்ணுவா?” 


நீதான் இப்படி நினைக்கிறநிறைய மாமியார்கள் மகன் என்ன பேசினாலும் மருமகளைத் தான் குற்றம் சொல்லுவாங்க. ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா? ரியாவுக்குக் காபி போட மட்டும் இல்லை சமையலும் தெரியும்.” 


அப்புறம் என் அப்படிச் சொன்னா?” 


உனக்கும் உன் மகனுக்கும் நடுவுல வர வேண்டாம்னு நினைச்சு தான் அந்தப் பொண்ணு தெரியலைன்னு சொல்லிடுச்சு. இதே வேற யாராவது இருந்தாபுருஷன் புகழ்ந்த சந்தோஷத்துல காபி போட போயிருப்பாங்க. ஆர்த்திக்கும் இது தெரியும், அந்தப் பெண்ணும் எதுவும் சொல்லலைப் பாரு.” 


நீ எப்படிப் புரிஞ்சு நடந்துக்கிறியோ அப்படிதான் உன் மருமகள்களும் இருக்காங்க. அதனால உன்னையே ரொம்ப வருத்திகாத கீர்த்தி.” 


மகன் விளையாட்டுக்கு தான் பேசுகிறான் என்று கீர்த்திக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் இனி இப்படித்தானோ என்று தோன்றாமலும் இல்லை. எதையும் நினைக்க வேண்டாம் என்று நினைத்து தான், அவளே வேலைகளை இழுத்து போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

கணவன் வந்து சொன்னதும், தன்னால் பிரச்சனை வேண்டாம் என்று நினைத்தவள், அறையில் இருந்து வெளியே வர… “அம்மா, வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்ற கார்த்திக் கீர்த்தியை பிடித்து உட்கார வைத்தவன், தந்தையையும் அழைக்கதர்மாவும் வந்தார்.
கார்த்தி அவனே இலை எடுத்து போட, அதைப் பார்த்து ஆர்த்தி உதவ வரரியாவும் உதவிக்கு வந்தாள்