Advertisement

தூறல் – 9

வீழும் நொடியிலும் எழுவேன் நான்,
அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்;
விரைந்து வந்திடு பெண்ணே,
சாகும் என் உயிரை மீட்டிட!!

     “ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருக்க அப்படி அதுல என்ன தான் இருக்கோ” என ஒரு தாய் தன் மகனைக் கண்டித்து கொண்டு இருந்தார்.

     ஆனால் அவனோ மிகப் பதட்டத்துடன் இருந்தான். என்ன செய்யவென புரியாத மனநிலையில் இருந்தான். அவன் அன்னை அவனின் முகத்தை சிறிதும் கவனிக்காது பேசிக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.

     அவர் உள்ளே சென்றவுடன் ‌இவன் தன் கண்ணில் இருந்த நீரை துடைத்துக் கொண்டான். இதை தனக்காக இல்லையெனினும் தன் குடும்பத்துக்காக செய்ய வேண்டும் என தனக்கு பிடிக்காத முடிவாய் இருந்தும் அந்த முடிவை எடுத்தான்.

     அன்று இரவு தன் தாய் தந்தை சகோதரன் என அனைவரும் உறங்கிய பின், அவர்களை கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு மொத்தமாக வெளியேறினான்.

     அங்கே அவனுக்காக காத்திருந்தது ஒரு கார். அந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டான். பின் அந்த கார் நிதானமாக தன் பயணத்தை ஆரம்பித்தது.

     தன் வீடு கண்ணை விட்டு மறையும் வரை அதை பார்த்துக் கொண்டே சென்றான் அச்சிறுவன் கண்ணில் வழியும் நீரோடு. இனி தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடு.

     “டேய் சத்தம் போடாம வாங்க. இல்லனா நல்லா அடி வாங்கிட்டு போவீங்க. என்ன வாங்குனதுலா மறந்து போச்ச” என அமைதி படுத்தி விட்டு “இப்ப நான் சொல்றத கவனமா கேக்கனும்.

      நீங்க போகப் போற இடம் புது இடம் மட்டும் இல்லை. அந்த இடத்துல வேற புது ஆளுங்க இருப்பாங்க. இங்க மாதிரிலா அங்க இருக்காது. ஆனா நல்ல சாப்பாடு எல்லாம் குடுப்பாங்க பசங்கலா.

      ஆனா அதுக்கு அங்க போய் நீங்களாம் அழாம அவங்க சொல்ற வேலை மட்டும் செஞ்சா போதும் புரியுதா. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.

      அங்க இருந்து நீங்க தப்பிக்க கனவுல கூட நினைக்க கூடாது. அப்படி நினைச்சா கொன்னே போட்ருவேன். நேத்து கூட தப்பிக்க நினைச்சவன் எப்படி எங்ககிட்ட மாட்டி

      அடி வாங்கி படுத்து கிடக்குரானு பார்த்திங்கல்ல. எங்களுக்கு எல்லா பக்கமும் ஆளுங்க இருக்காங்க. யாராவது தப்பிச்சு போக மட்டும் நினைச்சிங்க அவ்வளவு தான்.

      கொன்னு போட்டுட்டு போய்கிட்டே இருப்போம் புரியுதா” என்று மிரட்டினான் அந்த ரௌடிகளின் தலைவன் குமார். அதை கேட்டு பயத்துடன் தலையை ஆட்டினர் அந்த சிறுவர் சிறுமியர்.

     பின் தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் அந்த அறையில் இருந்து அழைத்து சென்றனர். தங்கள் உடனிருந்தவர்களை அழைத்து செல்வதை கண்ணீருடன் பார்த்தனர் சித்துவும் அவன் நண்பன் விக்கியும்.

     சிறிது நேரம் கழித்து சித்துவிடம் அவன் நண்பன் விக்கி “சித்து இப்ப உனக்கு உடம்பு எப்படி இருக்கு டா” என்றான் வாஞ்சையாக. “இப்ப கொஞ்சம் ஓகே டா” என்றதற்கு

       “உன்னால இப்ப வெளிய போக முடியுமா சித்து. அப்படி நீயாவது தப்பிக்க பாரு டா. முதல் தடவை போல நீ போனப்பவே திரும்ப வராம இருந்துருக்கலாம்‌. நீயாவது தப்பிச்சு போயிருப்ப.

        எங்களுக்காக பார்த்து இப்ப பாரு நீயும் மாட்டிக்கிட்ட” என்றான் வருத்தம் மேலிட்ட குரலில். ” உங்கள விட்டுட்டு நான் எப்படி டா போவேன்.

      நான் தப்பிக்க பார்த்ததால காவல்க்கு நிறைய ஆளுங்க வேற இப்ப வந்துட்டாங்க நான் நினைச்சாலும் இனி தப்பிக்க வழியில்லை டா.

     ஆனால் எனக்கு அப்படி எதாவது வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா உங்களை எல்லாம் சேர்ந்து கூட்டிட்டு போய்ருவேன். என்னால அது முடியலையே” என்றான் அழுகையுடன்.

      “இப்ப வந்த பசங்களை எல்லாம் கூட்டிட்டு போய்ட்டாங்க. ஆனா நம்ம வந்து ரொம்ப நாள் ஆச்சுல. ஆனா ஏன்டா நம்மல இங்கையே வச்சருக்காங்க” என்றான் விக்கி கேள்வியாக.

      “தெரியலை டா. ஒரு வேளை கஷ்டமான வேலைக்கு எதுவும் நம்மல அனுப்ப போறாங்க போல். அப்படி போனா கூட போற வழியில தப்பிக்கலாம் இல்ல” என்றான் சித்து இன்னும் அழுகையுடன்.

     “நீ அழாத டா. வா நாம சாமிக்கிட்ட போய் வேண்டிக்கலாம். கண்டிப்பா அவர் நமக்கு உதவி பண்ணுவாரு” என எப்போதும் போல் கடவுளிடம் முறையிட அழைத்து சென்றான்.

     “கௌதம் கொஞ்சம் என்னோட ரூமுக்கு வந்துட்டுப் போங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என எடிட்டர் நாராயணன் கௌதமை அழைத்தார்.

     ‘என்னவா இருக்கும்” என்ற யோசனையோடே அவரின் அறையை அடைந்தான் கௌதம். “என்ன சார். எதுக்கு கூப்டீங்க” என்றான் அவரின் முன் சென்று.

     “வாங்க கௌதம். உக்காருங்க” என்றுவிட்டு அவர் எதையோ யோசித்து கொண்டு இருந்தார். ‘என்ன நம்மல வர சொல்லிட்டு இவர் ஒன்னும் பேசாமல் இருக்கார்’

     ” சார் சார் எடிட்டர் சார். என்ன சார் எதுக்கு என்ன வர சொன்னீங்க. என்ன விஷயம் சார் சொல்லுங்க” என்றான் அவரின் அமைதியை கலைக்கும் விதமாக.

     “ம்ம் கௌதம்” என இழுத்து பின் “சத்யா டெத் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்றார். “எனக்கு புரியலை சார்.

     அவன் டெத் தான் ஆக்சிடென்ட் அப்டின்னு போலீஸே சொல்லீட்டாங்க. அதுக்கு மேல நான் நினைக்க என்ன இருக்கு” என்றான் பிடிக் கொடுக்காமல்.

     “கமான் கௌதம். இத மத்தவங்க வேணா நம்பலாம், பட் நான் நம்ப மாட்டேன். சத்யாவ பத்தியும் எனக்கு தெரியும் உன்னை பத்தியும் எனக்கு தெரியும் பா” என்றார்.

     ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான் கௌதம். அவனை பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட நாராயணன்,

     “இங்க பாரு கௌதம் சத்யாவோட டெத் ஆக்சிடென்ட் இல்லை அப்டின்னு உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன். ஏனா அவன் அநாவசியமா எதுக்கு அவ்ளோ தூரம் போகனும்.

     அதுவும் அந்த அன்டைம்ல. அப்படி இருந்தாலும் டூ டேஸா யார்க்கிட்டையும் சொல்லாம எங்க போயிருந்தான். அது மட்டும் இல்லாம அவன் ஆபிஸ்க்கு என்ன செய்றானு ஒரு டீட்டெயிலும் சொல்லல.

     அந்த விஷயத்தை ரொம்ப சீக்ரெட்டாவே மெயின்டெய்ன் பண்ணுணான். அதுல இருந்தே தெரியிது அவன் எதோ பெரிய விஷயத்தை நம்மட்ட சொல்லாம மறைச்சு இருக்கான்னு.

     கண்டிப்பா நீ அந்த விஷயத்தை தான் தேடிட்டு இருப்பனு எனக்கு தெரியுது. அப்படி இருக்கப்ப நீ என்னை கூட நம்பமாட்டனும் எனக்கு புரியுது.

     ஆனால் நீ அப்படி ஒரு விஷயத்தை தேடுரனா, இது உனக்கு நிச்சயமாக ஹெல்ப்பா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார் ஏதோ தெரிந்தவராக.

     கௌதம் அமைதி காக்கவும் அவரே தொடர்ந்தார். “கௌதம் அண்டர்கிரவுன்ட் கேங்கல ஒரு ஆள் ஸ்பையா இருந்து இருக்கான். அவன்கிட்ட சத்யா ஏதோ ஹெல்ப் கேட்டருக்கான்.

     அந்த ஆள பார்த்துட்டு வர்ரப்ப தான் அவன் காணாம போய் இருக்கான். அதுமட்டுமில்ல சத்யா பாடி கெடச்சது மண்டே. ஆனால் அவன் மிஸ் ஆனது ஃப்ரை டே.

      சோ இடையில ஏதோ நடந்திருக்கு. ஒரு வேளை அந்த ஸ்பைய நீ கண்டுபிடிச்சா, சத்யா வெளியே கொண்டு வர நினைச்ச ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை நம்ம வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம்.

     அன்ட் இந்த நியூஸ் எனக்கு வந்தது ரொம்பவே நம்பகமான சோர்ஸ்ல இருந்து. அதனால இதுல டௌட் அநாவசியம்” என்றார். அவர் இவ்வளவு பேசிய பிறகும் கௌதமின் முகம் எந்த வேறுபாடும் காட்டவில்லை.

     ஆனால் அவனின் மனது அவர் கூறிய அனைத்தையும் உள்வாங்கி கொண்டது. அவர் கூறுவதில் சத்யா காணமல் சென்ற நாளும் இறந்த நாளும் சரியே.

     ஆருவும் அதையே தான் கூறி இருந்தாள். ஆனால் அவன் தன்னை அன்றி வேறு யாரையும் நம்ப தயாராக இல்லை. அதே சமயம் எடிட்டர் கூறியது உண்மை தானா என விசாரிக்க முடிவு செய்தான்.

      அதற்கு முன் தானே சென்று எதிலும் சிக்கிக் கொள்ள முயலவில்லை. ஏன் இதுக் கூட அவனுக்காக விரிக்கப்பட்ட வலை என்றால், அதோடு ஆபத்தும் அல்லவா வந்து சேரும்.

     இதில் அவன் மட்டும் இல்லையே இந்த ருத்ராவும் அல்லவா வந்து உடன் சேர்ந்து உள்ளாள். ருத்ராவை பற்றிய நினைவு எழும் போதே அவன் முகம் மென்மையுற்றது.

     “நீங்க என்னலாமோ சொல்றீங்க சார். ஆனால் என்னால நம்ப தான் முடியல. நீங்க சொன்னத என் மனசு அக்செப்ட் பண்ண கொஞ்சம் டைம் வேணும் சார். சோ ஒரு ஹாஃப் டே லீவ் வேணும் சார்” என்றான் இப்போது எடிட்டரை பார்த்து.

       நாராயணன் ஒரு சிரிப்புடன் “ம்ம் நீ என்னையும் நம்ப தயாரா இல்லை சரி விடு. ஆனால் எதாவது பிராப்லம்னா எனக்கு ஒரு கால் பண்ணு. நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.

      ஒருத்தன் தான் யாரையும் நம்பாத இப்படி பாதியிலேயே போய்ட்டான். நீயும் அப்படி பண்ணாத பத்திரமா மூவ் பண்ணு. போ போய் லீவ் சொல்லிட்டு போ” என்றார்.

    அந்த அறையை விட்டு வெளியேறிய கௌதமிற்கு சிறு வழி கிடைத்த நம்பிக்கை. ஆனால் இதில் ஒவ்வொரு அடியும் அவன் கவனமாக வைத்ததாக வேண்டும் என்பதை அறிந்தே இருந்தான்.

     நாராயணன் தன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி சிரித்து வைத்தான் மனதில். பின் அரை நாள் விடுமுறை அளித்து வெளியேறினான் கௌதம்.

    அலுவலகம் விட்டு வெளியேறிய கௌதம் தனக்கு நன்கு தெரிந்த அண்டர்கிரவுன்டில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு கூட உதவும் நம்பகமான உளவாளி ஒருவரை அழைத்தான்.

     எடிட்டர் நாராயணன் கூறிய அனைத்தையும் சொல்லி கிடைத்த தகவல் அனைத்தும் உண்மை தானா, அப்படியென்றால் சத்யா பார்க்க சென்ற நபர் யார் என்று

     மொத்த விஷயத்தையும் கண்டறிய சொன்னான். நாராயணன் கூறியபடி சத்யா சந்தித்த நபர் இவராக இருந்தால் நிச்சயம் ஏதாவது பயனுள்ள தகவல் கிடைக்கும் என நம்பினான்.

     கடைசி முடிவாக ‘இதை எதையும் ருத்ரா கிட்ட சொல்லவே கூடாது. அவள எந்த பிரச்சனையிலையும் இழுத்து விடக் கூடாது’ என்ற முடிவை எடுத்தான் மனதிற்குள்.

     ஆனால் இவன் முடிவுகளுக்கு ஒத்துக் கொள்பவளா ஆருத்ரா, அவனையே தன் வழிக்கு திருப்பி விடுபவள் என அறியாமல் போனான்.

​–தொடரும்

Advertisement