Advertisement

தூறல் – 28
திண்டாடி திணறும் திங்களே,
ஏனோ காற்றும் தற்போது வெட்டி செல்ல,
காணலும் தான் நமை கண்டு சிரிக்க,
காலம் நேரம் வந்துவிடும் கலங்காதே பெண்ணே;
ஆருடமே சொல்லி செல்லிடுதே வெற்றி அருகேயென!!
    விஷ்ணு பிரசாத் கௌதமை தெரிந்தது போல பேச பேச அதிர்வுடன் பார்த்திருந்தனர் அனைவரும். ஆனால் கௌதம் மட்டும் எந்த உணர்வையும் காட்டாது அமைதியை கடைப்பிடித்தான்.
     “வெல் கௌதம். இங்க என்ன பண்ற நீ. நீ தனியா வருவேன்னு நினைச்சேன். கூட ரெண்டு பொண்ணுங்கள கூட்டிட்டு வந்திருக்க.
      ம்ம் தைரியம் தான். சரி எனக்கு எதுக்கு அதுலாம்‌. எனக்கு தேவை என்னோட டாக்குமெண்ட்ஸ் அன்ட் ரிப்போர்ட்ஸ் தான்.
     உன் பிரண்ட் திருடிட்டு போனது எனக்கு வேனும். எங்க இருக்குன்னு சொன்னா போதும் நான் உங்க எல்லாத்தையும் அப்படியே சேஃபா அனுப்பி விட்டர்ரேன்.
     என்ன சொல்ற கௌதம்” என்றான் பிரசாத். ஆருத்ரா மாறன் ஏன் சக்தி உட்பட அனைவரும் ‘இவன் எந்த டாக்குமெண்ட்ட கேக்குறான்’ என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
     இதை எல்லாம் கேட்ட கௌதமின் பதில் என்னவென தெரிந்து கொள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அதுவும் ஆரு‌ ‘எனக்கு தெரியாம என்ன டாக்குமெண்ட்.
     நம்மகிட்ட மறைச்சிட்டாறா. இல்லையே கண்டிப்பா அவருக்கும் எதுவும் தெரியாது. கௌதம் என்ன சொல்லி சமாளிக்க போறாறோ.
     பாவம் அவர் மட்டும் வந்திருந்தா கூட இப்படி நின்னுட்டு இருக்க மாட்டாரு. எல்லாம் என்னால தான்” என தன் போக்கில் யோசித்திருந்தவள் கௌதமை பார்த்தாள்‌.
      மாறனுக்கோ அவனை கடைசியாக சந்தித்து சென்ற சத்யாவின் முகமே மனதில் வந்து சென்றது. சத்யா குழந்தைகள் அடைந்து வைத்திருந்த இடத்தில் மாறனின் பிடியில் சிக்கினான்.
     தன் நண்பன் எனவும் தான் மனது சமன்பட்டது. அங்கிருந்து சத்தியாவை பத்திரமாக அனுப்பி வைத்தான் மாறன். அதன் பின் என்ன நடந்தது அவன் எப்படி மாட்டினான் என்று அவனுக்கும் தெரியவில்லை.
     ஆனால் அவன் அறியாதது தான் சேகரித்த விபரங்கள் பத்திரப்படுத்திய சத்யா மீண்டும் அங்கே வந்ததை. அங்கிருந்து சென்ற சக்தியை பின்தொடர்ந்து அவன் விஷ்ணுவின் வேலைகளை கண்டறிந்தான்.
     அவனே அறியாது அங்கிருந்து பல முக்கியமான பையில்களை எடுத்துக் கொண்டான். ஆதாரம் என எதுவும் வரக்கூடாது என விஷ்ணு பிரசாத் கேமரா பொருத்தாதது அவனுக்கு மேலும் வசதியாய் போயிற்று.
     ஆனால் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வரும் போது அவன் ஆட்கள் கண்ணில் பட்டு விட்டான். மாட்டும் முன் அதையும் பத்திரப்படுத்தி விட்டான் என்பதையும் மாறன் அறிய வாய்ப்பில்லை.
     மாறனுக்கு ‘இப்போது இது என்ன புதிதாக டாக்குமெண்ட்ஸ்’ என்று குழப்பமானது. அதை தன் கண்ணில் காட்டாதவாறு மறைத்து கௌதமை பார்த்திருந்தான்.
      அனைவரும் தன்னை குழப்பத்துடனும் எதிர்ப்பார்ப்புடன் பார்ப்பதை கண்ட கௌதமிற்கு பயத்திற்கு பதில் சிரிப்பே வந்தது.
     “ம்ஹூம். நீ பிரசாத் தானே. உன்னை இங்க இன்னைக்கு பார்ப்பேன்னு நினைக்கல. கிரேட் டிவிஸ்ட் பார் மீ டூ.
      பட் உன்னை இப்படி பாக்கறத விட அப்படியே ஜெயில் கம்பிக்கு பின்னாடி, ஒன் டூ திரினு என்னிட்டு இருந்தத பாத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
     எனக்கும் அப்படியே சும்மா குளுகுளுன்னு இருந்திருக்கும். டோன்ட் வொர்ரி கண்டிப்பா உன்னை அந்த கோலத்தில சீக்கிரம் பாத்திருவேன்.
     அப்புறம் நீ தானே சக்தி பிரசாத். ஹான் உன்னையும் சேர்த்து தான்” என்று கௌதம் கூறியதை கேட்டு நமட்டு சிரிப்பு சிரித்தான் மாறன்.
     உடன் இருந்த ஆருவோ ‘கௌதமுக்கு இவனுங்களை தெரியுமா. என்கிட்ட கூட சொல்லல. வெளியே வரட்டும் பாத்துக்கிறேன்’ என்று எண்ணினாள்.
     சக்திக்கோ கோபம் எகிறியது. எனவே கௌதமை பார்த்து “டேய் யாருடா நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா. உன்னால இல்லை யாராலையும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது.
     நீ எங்களை ஜெயிலுக்கு அனுப்ப போறியா இல்லை நாங்க உன்னை பரலோகம் அனுப்ப போறமானு பார்க்கத் தானே போற” என்றான்.
     சக்தியை நோக்கி திரும்பிய விஷ்ணு பிரசாத் “நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா” என்றவன் மீண்டும் கௌதமிடம்
     “இங்க பாரு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்ட் பிரச்சினையும் கிடையாது. இதுல நமக்கு நடுவுல எதுக்கு சண்டை சொல்லு.
     எனக்கு என் டாக்குமெண்ட்ஸ் கிடைச்சா போதும். உனக்கு இந்த பொண்ணுங்க உயிரோட கிடைச்சா போதும்.
      சோ இப்ப உன்னோட டெசிஷன் என்ன” என்று அவன் பத்திரங்களை தரவில்லை என்றால் அந்தப் பெண்களை கொன்று விடுவதாக மறைமுக எச்சரிக்கை செய்தான்.
      மனதில் பயம் எழுந்தாலும் அதை வெளியில் காட்டாத கௌதம் “என் கிட்ட எந்த டாக்குமெண்டும் இல்லை. இன்பாக்ட் நீ எதை பத்தி கேக்குறனு கூட எனக்கு தெரியலை” என்றான்.
     கடுப்பான பிரசாத் “இங்க பாரு நான் என் பொருமையை புடிச்சு வைச்சு பேசிட்டு இருக்கேன். அதை தாண்ட வச்சிருறாத‌.
     என் பொருமை ரொம்ப நேரம் இருக்காது. ஒழுங்கா நான் சொன்னத கேளு இல்லை நான் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது.
     உன் ஃபிரண்ட் என்னன்னா என இடத்துக்கே வந்து என்னோட பொருளையே திருடிட்டு போறான். எவ்ளோ தைரியம் அவனுக்கு.
     அவனை கண்டுபிடிச்சு போட்டு அந்த அடி அடிச்சும் வாய திறக்க மாட்டேன்னு இருக்கான். ஆனா உன் பேரை தாண்டா சொன்னான். அவனை கொன்னும் எனக்கு பிரச்சினை தான்.
       இந்த லூசு பசங்க செத்தவன் பாடிய பக்கத்துலையே வேற போட்டு எனக்கு இன்னும் பிரச்சினைய தான் ஏத்தி இருக்கானுங்க” என்று தன் ஆட்களையும் திட்டிவிட்டு,
      “கண்டிப்பா உனக்கு தெரியாம இருக்காது. ம்ம் சொல்லு எங்க அந்த டாக்குமெண்ட் எல்லாத்தையும் வச்சிருக்கன்னு” என்றான்.
     இதை கேட்டு சுற்றென்று கோபம் ஏறியது கௌதமிற்கும் மாறனுக்கும். தங்களை கட்டுப்படத்திக் கொண்டு நின்றிருந்தார்கள்.
     பின் கௌதம் மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என சாதிக்க கடுப்பின் உச்சம் சென்ற பிரசாத் தன் ஆட்களை நோக்கி “ம்ம்” என்றான்.
      பிரசாத் கண்ணை காட்டவும் அடியாள் ஒருவன் முன்னே வந்தான்‌. கௌதமின் கழுத்தில் அவன் கத்தி வைக்க வரும் போது அந்த அடியாளை அடித்து கீழே தள்ளினான் கௌதம்.
      விஷ்ணு பிரசாத்தை பார்த்தவன் “என்ன பயந்து போய்ருவேன்னு நினைச்சியா. இல்லை என்னை சாதாரண பத்திரிகைகாரன்னு நினைச்சியா.
     எப்படிடா ஒரு உயிரை எடுக்க மனசு வந்துச்சு” என்றவன் பின் “அதானே தினம் தினம்  சின்ன சின்ன பசங்களை கொல்லும் போதே மனசு உறுத்தல.
     என் பிரடண்ட கொல்றதுலா உனக்கு சர்வசாதாரணம் இல்லை. நான் தான் மறந்துட்டேன் நீ ஒரு மனுஷ மிருகம்னு” என்றான் பிரசாத்தை பார்த்து.
     இப்போது பிரசாத் “ஓஓ அப்போ நான் என்ன பண்றேங்கற வரைக்கும் உனக்கு தெரிஞ்சிருக்கு இல்ல. அப்ப உன்னை வெளியே விடுறது எனக்கு டேஞ்சர் ஆச்சே.
     சரி போனபோகுது‌ நான் உனக்கு ரெண்டு ஆப்சன் தறேன்‌. அது என்னன்னா ஒன்னு நீ என் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து தர.
      அப்ப நீ கூட்டிட்டு வந்தியே ரெண்டு பொண்ணுங்க அவங்க சேப்டிக்கு நான் கேரண்டி. அவங்கள சேப்பா நான் அனுப்பி வச்சிருவேன்.
     பட் அப்போவும் உன்னை என்ன பண்ணனுங்கறத நான் தான் டிசைட் பண்ணுவேன். அன்ட் ஆப்ஷன் டூ அது என்னோட சாய்ஸ் ஓகே.
     இங்க என்ன நடக்குங்கிறதுக்கு நான் சூயரிட்டி தர முடியாது. இப்ப சொல்லு உனக்கு இருக்கிறது நான் சொன்ன இந்த சாய்ஸ் தான்.
     நவ் டிசைட் இட். சொல்லு கௌதம் என்ன உன் முடிவு” என்று முடித்தான். கௌதமும் தன் நிலையில் இருந்து இறங்கி வராது ‘நீ என்ன செய்து விடுவாய்’ என்ற பார்வை பார்த்தான்.
     இப்போது பிரசாத் பார்த்த பார்வையில் அவன் ஆட்கள் சட்டென கௌதமின் அருகே இருந்த ஆரு‌ மற்றும் மீராவின் கழுத்தில் கத்தியை வைத்து விட்டனர்.
      அங்கே கத்தியின் பிடியில் இருந்த மீராவோ ஏற்கனவே பயத்தில் இருந்தவள் தற்போது வெளிப்படையாக நடுங்கி வேர்த்து வடிய நன்றிருந்தாள்.
      ஆருவோ மனது முழுவதும் பயம் இருந்தாலும் அருகில் கௌதம் இருக்கும் தைரியத்தில் “ஹேய் இங்க பாரு டா தடியா” என்றாள்.
     அவளை பார்த்த பிரசாத் “ஏய் நான் பிரசாத். மரியாதை மரியாதை முக்கியம்” என்றான் அவள் முன் வந்து.
     அதை அலட்சியம் செய்தவள் “நீ யாரா வேணா இருந்துட்டு போ. ஆனா நீ ஜெயிலுக்கு போறது மட்டும் உறுதி டா. என்ன நெனச்ச எங்கள.
     உன்னால எங்களை ஒன்னும் பண்ண முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்தில பாரு என் கௌதம் உங்க எல்லாத்தையும் அடிச்சு போட்டுட்டு எங்களை கூட்டிட்டு போவார்”
     என்று வீர வசனம் பேசினாள். இதை கேட்டு தலையில் அடித்த கௌதம் ‘இவ எதுக்கு இப்படி டைலாக் பேசுறா.
     கழுத்துல கத்தி வச்சுருக்கானுங்க இப்பக் கூட வாய் மூடுறாளா பாரு” என மனத்திற்குள் அவளை திட்டியவன் திரும்பி முறைத்தான்.
     அவளை பார்த்த மீராவும் மனதிற்குள் கிட்டத்தட்ட இதோ போல் ஏன் இன்னும் கேவலமாக திட்டிக் கொண்டு இருந்தாள்.
     கௌதம் தற்போது ஆருவிடம் “ஏய் வாய மூடுடி. எங்க வந்தாலும் உன் வாய் மட்டும் குறைய மாட்டேங்குது” என்றான் மெல்ல.
     அதற்கு ஆரு “என்ன கௌதம் நீங்க இப்பக் கூட ஒருத்தனை அடிச்சீங்க. இவங்களை எல்லாம் போட்டு அடிச்சு எங்களை இங்க இருந்து கூட்டிட்டு போங்க” என்றாள்.
     இப்போது நன்கு அவளை முறைத்தவன் ஏதும் சொல்லும் முன் மீரா “ஏன்டி பயத்துல உனக்கு மூளை எதுவும் குழம்பி போச்சா.
     அவனுங்க நம்ம கழுத்துல கத்தி வச்சாருக்காங்க டி” என்றாள் சத்தமாக. இதை அனைத்தையும் கண்ட பிரசாத் “நிறுத்துங்க எல்லாரும்.
     என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க பஞ்சாயத்தை வேற எங்கையாவது போய் வச்சுக்கோங்க. இப்ப கௌதம் நீ எனக்கு வேணுங்கறத குடுத்துட்டு போ” என்றான்.
     இதை கேட்ட ஆரு‌ “கேட்டத குடுத்துட்டு போங்கறான். என்னமோ கௌதம் அவன் லவ்வர் மாதிரி” என மனத்திற்குள் பேசுவதாக எண்ணி சத்தமாக பேசி பிரசாத்தை முறைத்தாள்.
     இதை பார்த்த கௌதம் “கடவுளே இவளை என்ன பண்றது. எங்க வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கா” என்று எண்ணியவன் ஆருவிடம்‌ “ஏய் நம்மல புடிச்சு வச்சிருக்காங்க டி.
     அவன் கேக்குறத கொடுக்கலைனா கொன்னுறுவேன்னு பயமுருத்துறான். நீ என்னன்னா டயலாக் அடிச்சிக்கிட்டு இருக்க. கொஞ்ச நேரமாவது வாயை மூடுடி” என்றான் பற்களை கடித்து கொண்டு.
     இதை கண்டு எரிச்சல் அடைந்த பிரசாத் “ஏய் என்னங்கடா இவங்கள பேச விட்டு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க.
     இன்னும் ஒரு வார்த்தை அந்த பொண்ணு பேசுச்சு கழுத்தை அறுத்து போடுங்க டா” என்றான் ஆருவின் பேச்சின் விளைவால்.
     இப்போது கௌதம் மாறன் இருவரும் பயந்து விட்டனர் அவனின் ஆக்ரோசத்தில்.
     மாறன் தான் இனியும் தாமதிப்பது சரியல்ல மற்றும் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்தது என்று முடிவு செய்தான்‌.
     அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஆரு மற்றும் மீராவின் கழுத்தில் கத்தி வைத்திருந்த இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
     சத்தம் வந்த திசையை பார்த்த அனைவரும் கண்டது துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரசாத்தை தான்.
     அனைவரும் அதிர்வுடன் அவனை பார்த்த நேரம் “எவனாவது அவங்க மேல கைய வச்சீங்க. இவன் செத்துருவான்” என்றான் அவன்.
      “ஏய் உனக்கென்ன பைத்தியமா. அவன் என் தம்பி அவனை விடு. நமக்கு எதிர்ல இருக்க அவங்க மேல துப்பாக்கிய வை” என்றான் சக்தி.
     அதற்கு “நீ சொன்ன வேலையை இதுவரை பார்த்ததால என்னை என்ன உன் வேலைக்காரன்னு நினைச்சியா. நான் மாறன் டா.
     உங்க ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன்” என்றவனை நீயா அது என்று அனைவரும் அதிர்ந்து பார்த்திருந்தனர் பிரசாத் உட்பட.
-தொடரும்

Advertisement