Advertisement

தூறல் -27
காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே,
காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்;
வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும்,
நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே;
பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!
     ஆருத்ரா தன் வாயை மூடிய நபரை கண்டு பயத்திற்கு பதில் நிம்மதி தான் அடைந்தாள். ஏனென்றால் அது அவள் தோழி மீரா தான்.
      ஆருவின் பின்னால் ஆட்டோவில் தொடர்ந்து வந்த மீரா ஆட்டோ உள்ளே அமர்ந்து கொண்டே ஆரு என்ன செய்கிறாள் என்று தீவிரமாக கண்காணித்தாள்.
     ஆரு‌ அவள் வந்த ஆட்டோவை அனுப்பி விட்டு யாரிடமோ போனில் பேசியதை பார்த்தவள் ‘யாரிடம் பேசிகிறாள்’ என்று யோசித்தாள்.
      பின் அவள் அங்கேயே இவ்வளவு நேரமும் நிற்கவும் போய் என்னவென்று கேட்டு விடுவோம் என இறங்கி வந்தாள்.
     வந்தவள் அவள் தோளில் கை வைத்ததில் அலறப் போனவளை தன் கைக் கொண்டு அவளின் வாயை மூடி விட்டாள். ஆரு மீராவை பார்த்தவுடன் தான் அவள் மூச்சு சீரானது.
     மீராவின் கையை நகற்றியவள் “ஹே மீரா குட்டி நீ இங்க என்ன செய்ற. ஏன்டி இப்படி தோள்ல கை வச்சி என்ன பயமுறுத்துன” என்றவள் அப்போது தான் மீரா முறைப்பதை கண்டாள்.
     “என்ன பேச்சை நீ ஆரம்பிச்சா நான் கேட்க மாட்டனா. ஒழுங்கா சொல்லு இங்க என்ன வேலை உனக்கு. என்ன பண்ற. யாருகிட்ட பேசுன. இங்க எதுக்கு நிக்கிற” என்று அடுக்கிக் கொண்டே சென்றாள்.
     மீராவின் கேள்விகளை கேட்டு திருதிருவென முழித்த ஆரு‌ “அது.‌.” என ஆரம்பிக்கும் நேரம் அவள் முன் வந்து வண்டியை நிறுத்தினான் கௌதம்.
     அவனை கண்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டாள் ஆரு. தன் தோழியை விடுத்து கௌதமை நோக்கி திரும்பிய ஆரு‌
     “கௌதம் வந்துட்டீங்களா. என்ன டென் மினிட்ஸ்ல வந்துட்டீங்க. பக்கத்துல தான் இருந்தீங்களா. இல்லை ஸ்பீடா வந்தீங்களா” என்றாள் அவனை பேச விடாது.
     “என்ன நீயே பேசி என்னை டைவர்ட் பணண்லாம்னு பாக்குறியா. என்ன தாண்டி உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்க. தன்னந்தனியா இங்க வந்து நிக்கிற.
     எவனாவது வந்து பிரச்சினை பண்ணா என்ன பண்ணிருப்ப. கொஞ்சம் கூட மூளை வேலையே செய்யாதா.
     ஏதோ நான் பக்கதில இருக்கவும் உடனே வந்து சேர்ந்தேன். இதுவே தூரமா இருந்தா என்ன பண்ணிருப்ப.
      எப்ப பார்த்தாலும் இப்படி கேன தனமா எதுவும் செய்றத தான் உன் வேலையா வச்சிருக்க” என்று தாறுமாறாக திட்டிக் கொண்டு இருந்தான்.
     “சாரி கௌதம் சாரி சாரி இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்ற ருத்ராவின் குரல் அவன் செவியை அடையவே இல்லை.
     இதில் அருகில் ஈ உள்ளே போகும் அளவு அதிர்ச்சியில் வாயை பிளந்து கொண்டிருந்த மீராவை கவனிப்போர் யாரும் இல்லை.
     தன் திட்டுக்களை எல்லாம் முடித்த பின்னே தான் கௌதம் பக்கத்தில் இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்த மீராவை கண்டான்.
     ஆருவை நோக்கி “இவங்க யாரு” என்றான். “இவ என் பெஸ்ட் பிரண்ட் மீரா” என்றாள் இப்போது துணைக்கு ஆள் இருக்கும் குதூகலத்தில்.
     “ஓஓ. அப்போ தனியா வந்தேன்னு சொன்ன” என்ற கௌதமின் கேள்விக்கு இங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.
     “சரி நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்புங்க. மிஸ்.மீரா நீங்க வந்த ஆட்டோ அங்க தானே நிக்குது சீக்கிரம் கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினான்.
     மீராவும் சரி வீட்டிற்கு சென்று ஆருவிடம் எல்லாவற்றையும் கேட்டு கொள்ளளாம் என்று எண்ணியவள் கிளம்ப தயாரானாள்.
     ஆனால் ஆருவோ‌ கௌதமை பார்த்து “கௌதம் நான் சொல்றத பர்ஸ்ட் கேளுங்க. அந்த ஆள் உள்ள தான் இருக்கான்.
      அன்ட் இந்த செட்டப்லா பார்த்தா இங்க தான் நம்ம கேள்விக்கான பதில் எல்லாம் கிடைக்கும்னு தோனுது” என்றாள் அங்கிருந்த கட்டிடத்தை காட்டி.
     “இங்க பாரு ருத்ரா என் கோவத்தை இதுக்கு மேல ஏத்தாம ஒழுங்கா கிளம்பற புரியுதா. நான் எப்பையும் சொல்றது தான் இதலாம் நான் பாத்துக்கிறேன். கிளம்பு” என்றான் பற்களை கடித்தவாறு.
     ஆனால் இதை எதையும் ஒரு பொருட்டாக மதிக்காத ருத்ரா “ஹலோ கௌதம் நான் நீங்க சொல்லி கேட்டுருவேனா என்ன.
     நீங்க மட்டும் இல்லை நானும் என்ன கேட்டுச்சா நானும் சேர்ந்து தான் உள்ள போறோம். ஆரம்பத்தில இருந்து உங்க கூட தானே இருக்கேன்.
     அப்படிலாம் பாதியில விட்டுட்டு போக முடியாது. நானும் வருவேன்” என்றவள் மீராவை பார்த்து “நீ கிளம்பு மீரா நான் வந்தர்றேன் ஓகே” என்றாள்.
     இருவரும் தன்னை முறைப்பதை கண்டு கொள்ளாமல் அவள் தன்னை போல் உள்ளே சென்றாள். இதை கண்ட கௌதம் தலையில் அடித்து கொண்டான்.
     ‘இவ இதுக்கு மேல கேக்க மாட்டா’ என்று எண்ணிய கௌதம் மீராவை பார்த்து “நீங்க கிளம்புங்க நான் ருத்ரா வ சேப்பா வீட்ல கொண்டு வந்த விட்டர்றேன்” என்றான்.
      ஆனால் ஆருவை கௌதமுடன் தனியே விட பயந்த மீரா தானும் வருவதாக கூறி ஆருவுடன் சேர்ந்து கொண்டாள்.
      ருத்ரா மட்டுமல்லாது அவள் தோழியும் சொல் பேச்சு கேட்டகாதவர்கள் போல் என்று கடுப்புடன் எண்ணிய கௌதம் தன் விதியை நொந்து கொண்டே இருவருடனும் சென்றான்.
     அந்த கட்டிடத்தை அடைந்தவர்கள் பின் எப்படி உள்ளே நுழையலாம் என்றும் ஏதேனும் வழி உள்ளதா என்றும் ஆராய்ந்தான் கௌதம்.
     அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் இருந்த சுவரை கண்டவன் ஏறி குதித்து விடலாம் என்று நினைத்து இருவரையும் பார்த்து கடைசி முறையாக
     “இங்க பாருங்க நான் சுவர தாண்டி குதிச்சு தான் போக போறேன் புரியுதா. சோ நீங்க இங்கையே இருங்க” என்றான்.
     ஆனால் அதை கொஞ்சமும் கேட்காத ஆரு‌ முதல் ஆளாக ஏறி குதித்து விட்டாள். இதை கண்ட கௌதம் தான் நொந்து விட்டான்.
     “இவ எப்ப தான் நான் சொல்றத கேக்க போறா. ச்சே நம்ம அம்மா தான் நம்மல பேச விட மாட்டாங்க. வரப்போற பொண்டாட்டியும் அப்படியே இருக்காளே.
     கௌதம் உனக்கு மட்டும் ஏன்டா இப்படி” என்று தான் நொந்தான். தன் எண்ணத்தை விடுத்து திரும்பி மீராவை பார்க்கும் போது அவளும் சுவரை தாண்டிக் கொண்டிருந்தாள்.
     ‘நீயுமா’ என்று தன் விதியை நொந்தவாறு தானும் சுவரை தாண்டினான். அங்கே தனக்காக நின்றிருந்த ஆருவிடம் சென்றான்.
     பின் ஒவ்வொரு மரத்தின் பின்னால் மறைந்தவாறு அவர்களை அழைத்து கட்டிடத்தின் அருகே சென்றான். அங்கிருந்த ஒரு ஜன்னலை திறந்து பார்த்தான்.
      அது ஏதோ ஒரு லேப் போன்ற அமைப்பில் இருந்தது. அப்போது தன் பென் கேமராவை ஆன் செய்தவன் வீடியோ எடுக்க ஆரம்பித்தான்.
     “என்ன செய்றீங்க கௌதம்” என்று ஹஸ்கி குரலில் தன் காதருகே கேட்ட ருத்ராவை திரும்பி பார்த்தவன் “ஸ்ஸ்” என்றான் அவள் வாயில் தன் விரலை வைத்து.
     இதை பார்த்து மீரா தான் கடுப்பானாள். பின்பு அந்த ஜன்லை மூடி விட்டு நகர்ந்தான் கௌதம். அவர்கள் சென்ற இடத்தில் சிலர் சிறுவர்களை வேன் ஒன்றில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
     “ஐயோ கௌதம் அங்க பாருங்க” என்ற கத்த ஆரம்பித்த ஆருவின் வாயை அடைத்த கௌதம் “பிளீஸ் ருத்ரா கத்தாத.
     விட்டா நீயே நம்மல மாட்டிவிட்ருவா போலையே‌. தயவுசெஞ்சு எதுவும் பேசாத. நானும் பாத்த்துட்டு தான் இருக்கேன். புரியுதா” என்றான்.
     அவன் பேசும்போது தன்னோடு அவ்வளவு நெருக்கத்தில் நின்று அதை சொல்வதை கேட்டு இப்போது உண்மையாகவே ஆரு பேச்சிழந்தாள்.
     ஆனால் முன்னே தன் கவனம் முழுவதையும் வைத்திருந்த கௌதம் அவளின் எண்ணத்தை கவனிக்கவில்லை.
     இங்கே இவர்கள் இப்படி நின்று பார்த்துக் கொண்டிருக்க அங்கே மாறன் தன் போனில் இருந்த அனைத்தையும் முகிலனிற்கு “லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்” என்ற குறுஞ்செய்தியோடு அனுப்பி வைத்தான்.
     இங்கே நின்றிருந்த மூவரும் சிறுவர்களை ஏற்றுவதை பார்த்துக் கொண்டிருக்க அவர்களை பார்த்து சென்ற நபரை கவனிக்காது விட்டனர்.
     உள்ளே சென்ற பிரசாத்தின் ஆள் வெளியே யாரோ நிற்கிறார்கள் என்று கூறிவிட்டான். இதை கேட்டு பிரசாத் “அவங்கள உள்ள இழுத்துட்டு வா.
     யாரு என்னன்னு பாக்கலாம்” என்றான். இப்போது கௌதமை சுற்றி ஆட்கள் வந்தனர். தாங்கள் மாட்டிக் கொண்டோம் என்று சிறிது நேரம் கழித்து உணர்ந்த கௌதம் தன்னையே நொந்து கொண்டான்.
     ஏனெனில் தன்னோடு சேர்த்து மேலும் இரண்டு பேரின் உயிரையும் தற்போது பிரச்சனையில் சிக்க வைத்திருப்பதை எண்ணியே மிகவும் கவலை கொண்டான்.
     இதற்கு காரணமான ஆருவை பார்த்து முறைத்த கௌதம் “நான் சொன்னத கேட்டு போய்ருக்க வேண்டியது தானே. இப்ப பாரு மாட்டிக்கிட்டோம்.
     நான் மட்டும் வந்திருந்தா எவ்ளோ நேக்கா தப்பிச்சுருப்பேன் தெரியுமா. இப்ப நீயும் வந்து இப்படி ஈசியா மாட்ட வச்சிட்ட” என்றான் கோபமாக.
     ஆருவு‌ம் பயந்து தான் இருந்தாள். ஆனால் உடன் கௌதம் இருப்பதால் கொஞ்சம் தைரியமாக தான் இருந்தாள்.
     இதில் மீராவின் நிலை தான் படுபயங்கரம். ஏன் இங்கு வந்தோம்? யார் இவர்கள்? எதற்கு நம்மை சுற்றி நிற்கிறார்கள்‌. என்னடா நடக்குது இங்க” என்ற கேள்விகள் சூழ அழும் நிலைக்கு சென்றாள்.
      இப்போது வந்தவர்கள் அவர்களை அந்த கட்டிடத்திற்குள் அழைத்து சென்றனர். இவர்களை அழைத்து வருவதை பார்த்த மாறன் “யாரு இவங்க புதுசா” என்று பார்த்தான்.
     “எப்படியோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டாங்க போல. முகில் எல்லாம் ரெடி பண்ணி வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை.
     இப்ப என்ன பண்றது” என்று யோசித்து கொண்டிருந்தான். அங்கே வந்தவர்களில் இருவர் பெண்கள் வேறு.
     அதுவும் ஒரு பெண் அரண்டு போய் இருப்பது பார்க்கும் போதே தெரிந்தது. இதில் தான் என்ன செய்ய என்று நினைத்தவன் சரி என்ன நடக்குதுன்னு பாக்கலாம் என்று நின்றான்.
     இப்போது மூவரும் உள்ளே வந்தனர். அவர்களை பார்த்த சக்தியின் சிரிப்பிலே தெரிந்தது அவர்களின் நோக்கம் தங்களை இங்கிருந்து உயிரோடு அனுப்ப கூடாது என்பது என.
     அவர்களில் கௌதமை கண்ட விஷ்ணு தான் “ம்ம் வெல் ஐ கெஸ் நீ கௌதம் சத்யாவோட ஃபிரண்ட் ரைட். ஐ எக்பெக்டட் யூ ஏர்லி.
     பட் என்னை கண்டுபிடிக்க உனக்கு இவ்ளோ டைம் எடுத்துருக்கு. உன் பிரண்ட் என்னவோ நீ அப்படி இப்படின்னு என்னன்னவோ சொன்னான்.
     சாகும் போது கூட உன் பேரை தான் சொன்னான்” என்றவனை சக்தி மாறன் உட்பட அனைவரும் சற்று அதிர்வுடன் தான் பார்த்திருந்தனர் கௌதமை தவிர்த்து.
-தொடரும்

Advertisement