Advertisement

தூறல் – 24
மிதக்கும் காகித கப்பலே,
நீரில் உன் மிதவை கண்டு மகிழும்
என் மதியை திருடி சென்றவளிடம்,
என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ?
அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?
      அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம் வரவில்லை. அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கடந்து சென்றுவிட்டது. அவர்களுக்கு பின் ஒருவரே வந்தார்.
     அவரும் வந்தவர் ஒரு இடத்தில் அமர்ந்தவர் என்னவோ செய்து கொண்டிருந்தார். அதை பார்த்தவன் ‘சரி அவரும் நம்மல மாதிரி தான் போல’ என்று எண்ணி கொண்டான்.
     அனைத்தையும் கவனித்து வந்தான் கௌதம். ஆருவும் தன்னை முழுதாக ஈடுபடுத்தி ஒரு மணி நேரத்தில் ஸர்வரை ஹேக் செய்து உள்ளே நுழைந்து விட்டாள்.
     “எஸ்” என்ற ஆரு‌ சத்தத்தில் திரும்பிய கௌதம் “என்ன ஆச்சு ருத்ரா” என்றான். ‘நம்ம அவ்வளவு சவுண்டாவா சொன்னோம்’ என்று நினைத்த ஆரு அதையே கௌதமிடம் கேட்டாள்.
      “இல்லை அவ்ளோ சத்தமாவா கேட்டுச்சு” என்றாள்‌. அவள் கேட்ட விதத்தில் சிரித்த கௌதம் “இன்னும் கொஞ்சம் வால்யூம் குறைச்சிருக்கலாம்” என்றான்.
       “சரி என்ன ஆச்சு எதுக்கு எஸ் சொன்ன?” என்றவனின் கேள்விக்கு “நான் ஸர்வர் பிரேக் பண்ணி உள்ள போய்ட்டேன்” என்றாள்.
     “ஹே ருத்ரா சூப்பர். யூ ஆர் ரியலி அமேசிங்” என்றான் உள்ளத்தில் இருந்து. “தேங்க்ஸ் கௌதம். சரி நீங்களும் பாருங்க நம்ம இப்ப சத்யா நம்பர்குல்ல போய்ட்டோம்”
      என்று சத்யாவின் நம்பரை ஓப்பன் செய்தாள்‌. “ஹான் ருத்ரா மா இந்த ஒன் மன்த் டேட்டா புல்லா எடுத்துரு என்ன. ஏனா டவுட்னா மறுபடியும் நீ தான் வந்து எடுத்து தரனும்” என்றான் அவளை கடுப்பேற்றும் விதமாக.
     அவனை பார்த்து முறைத்தாள் “தயவு செஞ்சு ஆள விடுங்க கௌதம். ஒரு தடவை இந்த வேலை பாக்கறதுக்குள்ளயே எனக்கு கை கால்லாம் உதறிருச்சு.
     எத்தனை மாசம் என்ன வருஷம் டீடெயில்ஸ் கூட எடுத்து தந்தர்றேன் போதுமா” என்றாள் அரன்டவளாக. அவளை பார்த்து கௌதம் சிரித்து விட்டான்.
      அதன் பின் எல்லாம் ஜெட் வேகம் தான். சத்யாவின் கடந்த மாத லொக்கேஷன் போன் கால்ஸ் போன்ற எல்லாவற்றையும் தனியாக சேவ் செய்து கொண்டாள் ஆரு‌.
     பின் ஸர்வர் உள்ளே போன தடம் தெரியாது வெளியே வந்துவிட்டாள் ஆரு. அதை டாக்குமெண்டாக மாற்றிவிட்டு ” கௌதம் ஆல் செட். இதை யாருக்கு அனுப்பறது” என்றாள்.
      கௌதமும் தன்னுடைய ஈ மெயிலுக்கு அனுப்ப சொன்னவன் தன்னுடைய மொபைலில் அதை பதிவிறக்கி கொண்டான்.
     “ஓகே ருத்ரா. நாம கிளம்பலாம் ரொம்ப நேரமா இருக்கோம். யாருக்காவது டவுட் வந்தரப் போகுது.
      அன்ட் உன் லேப்ல ஒரு டேட்டா இது சமந்தமா இருக்க வேண்டாம். எல்லாத்தையும் இரேஸ் செஞ்சிறு என்ன புரியுதா” என்றான் தன் பொருட்களை எடுத்து கொண்டு.
      “ம்ம் ஓகே கௌதம். நான் இரேஸ் பண்ணிர்ரேன்” என்ற‌ ஆரு கௌதமுடன் தன் பொருட்களை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
      வெளியே வந்தவுடன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்த கௌதம் “ஆரு‌ வா வண்டியில ஏறு நான் உன்னை ஆபிஸ்ல டிராப் பண்ணிடறேன்” என்றான்.
     தனக்கு நேரமானதை உணர்ந்த ருத்ரா ‘சரி’ என்று கௌதமோடு பயணத்தை தொடர்ந்தாள். போகும் வழியில் திடீரென நினைவு வந்தவளாக,
      “கௌதம் நீங்க சத்யாவோட மெயில செக் பண்ணீங்களா” என்றாள்‌ . அவளை கண்ணாடியின் வழியே பார்த்தவன்,
      “மெயில் ஐடி, கிளைவுட் எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன். லேப்ல இருந்தத தான் ஒரு காபி ஏத்தி வச்சிருக்கான்” என்றான் கௌதம் தான் பார்த்ததை.
     பின்பு அவளை அலுவலகத்தில் இறக்கி விடும் வரை எந்த பேச்சும் இல்லை. ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய அலுவலகத்திற்கு அரை மணி நேரத்தில் கொண்டு சேர்ந்தான் அவன்.
     தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்த ஆரு “வாவ் கௌதம் ஹாப் அன் அவர்ல கொண்டு வந்து விட்டுட்டீங்க. செம ஸ்பீட் தான்.
      நான் இதுவே பஸ் இல்லை ஆட்டோல வந்திருந்தா ஒன் அவர் ஆகிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் கௌதம்” என்றாள் அவன் கையை பிடித்து ஆட்டிக் கொண்டே.
     ஒரு சிரிப்புடன் “ஓகே நீ போ ருத்ரா உனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு பாரு. உன் பிரெண்ட்ஸ் வந்திருக்க போறாங்க” என்றான் கௌதம்.
     “ம்ம் ஆமாம். சரி கிளம்பறேன் கௌதம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க ரிட்டர்ன் போறப்ப இவ்ளோ ஸ்பீட் போக கூடாது புரியுதா” என்றாள் உரிமையான மிரட்டலில்.
     அதை கேட்டு சிரித்தவன் “சரிங்க மேடம் நான் மெதுவாவே போறேன். நீங்க முதல்ல முன்னாடி பாத்து போங்க யார்மேலையும் இடிக்காம” என்று நக்கல் செய்து விட்டே கிளம்பினான்.
     போகும் அவன் மனதில் ஆருவே நிறைந்திருந்தாள்‌‌. ‘அவள் ஏன் தன் மேல் இவ்வளவு உரிமை எடுத்து கொள்கிறாள். அவளுக்கு நம்மை பிடிக்கிறதோ?’ என்று யோசித்தான்.
     ஆனால் அவள் தன்னுள்ளே ஏற்படுத்திய மாற்றத்தை சிறிதும் கவனிக்கவில்லை. ஏனெனில் இப்போது வண்டியை கிளம்பிய கௌதமிற்கு வேகமாக வண்டியை ஓட்ட மனம் வரவில்லை.
      ஆரு‌ சொன்ன ஒற்றை வார்த்தைக்காக தினம் ஐம்பது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் பறப்பவன்,  இன்று முப்பதை தாண்டாமல் செல்கிறான்.
     தன் அன்னை நண்பன் சத்யா என யார் சொல்லியும் கேட்காத கௌதம் இன்று ஆரு‌ சொன்னதை கேட்பதை அவனே உணராது போனான்.
     ஆனால் அவன் உணரும் தருணம் அவனுடைய ருத்ரா தானே வழிய சென்று ஒரு பெரிய பிரச்சினையை இழுத்து வைத்திருப்பாள் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டான்.
      அங்கே அப்படி இருக்க இங்கே ஆருத்ராவின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே. ஆனால் அவள் கௌதமை போல் அல்லாது தன் நிலையை உணர தொடங்கினாள்.
     அலுவகத்தில் வந்து அமர்ந்த ஆரு‌ தன் தோழிகளும் வராமல் இருக்கவே கௌதமுடன் தனக்கு கிடைத்த முதல் சந்திப்பில் இருந்து நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
     அதுவும் அவன் வீட்டிற்கு சென்ற போது கௌதமின் அம்மாவின் பேச்சு அதை இன்று வரை யோசித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
     ஏனெனில் ரேவதியின் பேச்சை கேட்ட ஆருவிற்கு கோபம் சங்கடத்திற்கு பதில் ஒருவித ஆனந்தமே ஆட்கொண்டது.
     கௌதமை காணப் போவது அவளிற்கு அதிகமான மகிழ்ச்சியை தான் தருகிறது. இப்போது கூட அவனோடு வண்டியில் வந்தது ஒரு நல்ல நினைவை தான் தந்தது.
      நினைவு என்பதை தாண்டி எப்போதும் போல் பாதுகாப்பு உணர்வே அதிகரித்தது. அவனின் ஒவ்வொரு செயலிலும் அது அப்படியே பிரதிபலிக்கிறது.
     மேலும் அது மிகவும் பிடித்து போய் இருந்தது. அவனிடம் தான் ஏன் இவ்வளவு தூரம் உரிமை எடுத்து பேசி வந்தோம் என்று பலவாறு யோசித்தாள்.
     அப்படி வந்த சிந்தனைகளின் முடிவில் அவளின் மனதை ஓரளவு புரிந்து கொண்டாள் ஆரு. அதாவது தான் அவனை நேசிக்கிறோம் என்று.
     ஆனால் எப்போதிருந்து என்று மீண்டும் யோசிக்க செல்லும் நேரம் பட்டென்று அவள் முதுகில் ஒரு அடி விழுந்தது. அடித்தது வேறு யார் அவள் தோழிகளே.
     வலியில் “ஆ..ஆ….” என்று கத்தியவள் தன் தோழிகளை பார்த்து “ஏன்டி இப்பிடி அடிச்சீங்க. வலிக்குது. ஏன் என்னை கூப்டா திரும்பி பார்கத்திருக்க மாட்டனா” என்றாள் முறைத்துக் கொண்டே.
     அவளை விட அதிகமாக முறைத்த தோழிகள் “என்ன நாங்க கூப்டல” என்று ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு “உன்னை எத்தனை டைம் கூப்பிடுறது.
     மேடம் நீங்க தான் ஏதோ பகலையே கனவு கண்டுட்டு உக்காந்து இருந்தீங்க. அதான் அடிச்சோம்” என்றாள் அணு. ‘ஐயயோ நாம தான் கவனிக்கலையா.
     போச்சு போச்சு என்ன ஏதுன்னு கேட்டே நம்மல போட்டு படுத்தி எடுக்க போறாளுக’ என்று எண்ணிய ஆரு‌ சமாளிக்கும் விதமாய்
     “இல்லப்பா சும்மா தான். நான் லைப்ரரி போய் இருப்தேன்ல அங்க ஒரு புது ஆள பார்த்தேன். சரியான தலைவலி கேஸ்.
     ஹாய்னு ஆரம்பிச்சவன் நிறுத்தவே இல்லை. தனியா இருக்கவும் போட்டு அறுத்து எடுத்துட்டான்.
     எப்படியோ தப்பிச்சு ஓடி வந்துட்டேன். அதுல எனக்கு தலைவலியே வந்திருச்சு. சோ சும்மா அப்படியே உக்காந்திருந்தேன்.
     நீங்க வந்ததையும் கவணிக்கல” என்றாள் புதிய காரணத்தை உருவாக்கியவள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
      தோழிகள் தன்னை சந்தேகமாய் பார்க்கவும் “ஹே வொர்க் நிறைய இருக்கு பா. சீக்கிரம் வாங்க வேலையை ஆரம்பிப்போம்” என்று தோழிகளை திசை திருப்பினாள்.
     இந்த காரணம் சரியாக வேலை செய்தது. பின் பேச்சு சிரிப்புடன் அவர்கள் வேலை தொடர்ந்தது‌.
      ஆனால் மீராவிற்கு மட்டும் அவள் மேல் இருந்த சந்தேகம் குறையவில்லை. எதுவோ அவள் மறைப்பது போல் தெரிந்தது.
      சிரிப்புடன் வேலையை பார்த்திருந்த ஆரு‌வை திரும்பி பார்த்தவள் ‘இவ நல்லா தான் இருக்கா. ஒரு வேளை நமக்கு தான் தப்பா தெரியுதா’ என்று யோசித்துக் கொண்டே தன் வேலையை பார்த்தாள்.
      அங்கே அலுவலகம் செல்லாது கௌதம் தன் வீட்டாற்கு சென்றான். தன் அறைக்கு சென்று அமர்ந்தவன் முதலில் தன் கைப்பேசியை எடுத்து ஆரு‌ அனுப்பிய டாக்குமெண்டை திறந்து பார்த்தான்.
      கடந்த ஒரு மாதம் முழுவதும் சத்யா எங்கே போனான் என்று தீவிரமாக அதையே பார்த்தான். அவன் அதிகமாக நகரத்திற்கு வெளியே தான் சுற்றியிருக்கிறான் என்பதை கவனித்தான்.
      ‘இவன் என்ன சிட்டி அவுட்டர்லையே சுத்திருக்கான். அதிக லொக்கேஷன் கூட அங்கதான் காட்டுது. அப்ப இந்த ஏரியால தான் ஏதோ இருக்கு போல‌” என்று யோசித்தான்.
      பின் கடைசியாக அவன் கைப்பேசி அலைவரிசை எங்கு நின்றது என்று பார்த்தான். பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியா அல்லது சிறு நம்பிக்கை ஒளியா என சொல்ல முடியாத உணர்வில் நின்றான்.
      ஏனெனில் கடைசியாக வெள்ளி இரவில் இருந்து சனி மதியம் வரை ஒரே இடத்தை தான் காட்டியது. அதுவும் எந்த இடத்தில் சத்யாவின் உடல் கிடைத்ததோ அதற்கு வெகு அருகில்.
     இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை ஆரு நேற்று கூறிய சந்தேகம் உண்மையாக இருந்தால் என்ற எண்ணம் தற்போது அவனது மனதிலும் எழுந்தது.
      இதை எப்படி முடிவு செய்வது என்று யோசித்து கொண்டே வந்தவன் ‘ம்ம் அது கிடைச்சா என்னால கெஸ் பண்ண முடியும்’ என்று எண்ணியவன் தன் அலுவகத்தை நோக்கி கிளம்பி விட்டான்.
-தொடரும்

Advertisement