Advertisement

தூறல் – 21
கண்களின் காட்சி பிழையென கடந்து சென்றாலும்,
காண்பது நிஜமென உன் நறுமணம் கூறியதே;
காத்திருந்த நேரம் காற்றில் உன் வாசத்தை சேர்த்தாயோ,
முகர்ந்து கொண்டே நகர்க்கிறேன் என் அருமை தோட்ட முல்லையே!!
      மாறன் இப்போது இங்கே நடக்கும் வித்தியாசமான காரியங்களை எண்ணி கொண்டு இருந்தான். அவனுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
     இத்தனை நாள் அவன் மாறுவேடத்தில் தன் அடையாளத்தை மறைத்து இங்கு வந்து நாய் படாதபாடு பட்டு தான் சேகரித்த விபரங்கள் அனைத்தின் மூலம் இது ஒரு சாதாரண கடத்தல் என்றே எண்ணினான்.
     ஆனால் இப்போது இருக்கும் சூழலில் தான் சேகரித்த விபரங்கள் அனைத்தும் பொய்யோ? இங்கு நடப்பது அப்படி இல்லையோ? என்றே எண்ண வைக்கிறது.
     ஏனெனில் இன்று காலையில் நடந்த ஒரு நிகழ்வு தான் அவனை இப்படி எண்ண வைத்ததற்கு காரணம்.
     காலையில் வந்த ஒரு கும்பல் சித்து விக்கி மற்றும் ரோஹித் ஆகிய மூன்று சிறுவர்களையும் இன்று அழைத்து சென்று விட்டனர்.
     மேலும் இப்போது எல்லாம் குழந்தைகளை கூட்டி வருவதற்கு இவர்கள் யாரும் செல்ல அனுமதிப்பதில்லை. வேறு யாரோ சிலர் தான் போகின்றனர்.
     அதுவும் தாங்கள் தரும் லிஸ்ட்டில் பாதி பேரையே இங்கு கொண்டு வந்து விடுகின்றனர். மீதி பசங்களை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை.
      தான் காலம் தாழ்த்துகிறோமோ என்று அவனுக்கு தோன்ற தொடங்கி விட்டது. இந்த சிறுவர்களை என்ன செய்ய போகிறார்கள் என்று எல்லா விதத்திலும் விசாரிக்க முயன்றான்.
     ஏன் இன்று காலை கூட அந்த சிறுவர்களை அழைத்து செல்கையில் தானும் அவர்களை பின்தொடர முயற்சி செய்யலாம் என்றே நினைத்தான்‌.
     ஆனால் அவனை யாரும் அந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதுவும் வந்த தடியன்கள் ஒருவரும் இவர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாது தடுத்தனர்.
      அதுவும் போன சிறுவர்களின் அந்த சோகமான முகம் அவன் மனதை இப்போதும் பிசைகிறது. அவர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
      எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்தவன் குமாரிடமும் சென்று மறைமுகமாக கூட கேட்டு பார்த்தான்.
      அவனுக்கு தனக்கு தெரிந்த உண்மை கூட தெரியாமல் இருப்பதை கண்டு பல்லை கடிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
     இதில் குமார் வந்து இவனிடம் “என்ன நடக்குது இங்க” என்று கேட்ட போது அவன் தலையை கொண்டு சுவற்றில் முட்டி உடைத்து விடலாமா என்றே தோன்றியது.
     இங்கே இவன் புலம்ப அங்கே அந்த சிறுவர்கள் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அவர்கள் பயத்தில் நடுங்கிய வண்ணம் நின்றிருந்தனர்.
      சித்து, விக்கி மற்றும் ரோஹித் ஆகிய மூன்று சிறுவர்களையும் அந்த கட்டிடத்திற்குள் அழைத்து சென்றனர். புதிய இடத்தை கண்டு மேலும் சுருங்கினர் சிறுவர்கள்.
     அங்கு தன் கையில் இருந்த கோப்பையில் ஏதோ திரவத்தை ஊற்றி கலந்து கொண்டிருந்த பிரசாத் அப்போது கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.
     அவன் தலையை நிமிர்ந்து பார்க்கும் வரை அமைதியாக நின்றிருந்தனர் சிறுவர்களை அழைத்து வந்தவர்களும்.
     அந்த நேரம் புயல் போல் உள்ளே வந்தான் மற்றொருவன்‌. வந்தவன் அங்கே நின்றுக் கொண்டிருந்தவர்களை போல் பொறுமை இல்லாது நேராக அந்த அறைக்குள் சென்று விட்டான்.
     அதற்கு அங்கே இருந்தவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. நடந்த அனைத்தையும் பார்க்காதது போல் முக பாவத்துடன் நின்றிருந்தனர்‌‌.
     உள்ளே சென்ற மற்றவனோ “டேய் பிரசாத் என்ன செய்ற” என்றான் குதூகலமான குரலில்.  வந்தவனை திரும்பி முறைத்த பிரசாத்
     “உனக்கு எத்தனை தடவை சொல்றது சக்தி நான் வேலை பார்க்கும் போது உள்ள வராதன்னு” என்றான் உக்கிரமாக.
     அதை என்னை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை என்ற முகபாவத்தில் வந்த சக்தி “இதுலாம் என்கிட்ட நீ பேசக் கூடாது. புரியுதா” என்றான் நக்கலாக.
     சக்தியை முறைத்த பிரசாத் “என்ன ஆச்சு நான் சொன்ன வேலை. முடிச்சுதா இல்லை சொதப்பீட்டியா” என்றான் தன் வேலையை பார்த்துக் கொண்டே.
     “என்னை என்னன்னு நினைச்ச. நான் உன் அண்ணன் டா அதுலாம் பக்காவா முடிச்சிட்டேன். இனிமே எவனும் நம்மல நெருங்க முடியாது” என்றான் கெத்தாக.
     அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்த பிரசாத் “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. யாரோ ஆப் உள்ள பூந்து ஹேக் பண்ண டிரை‌ செஞ்சிருக்காங்க.
     அதை ஆரம்பத்திலேயே பார்க்காம விட்டுட்டு ரொம்ப பேசாத. புரியுதா” என்றான் காட்டமாக. அதை அசட்டை செய்தவன் “அதான் இப்ப எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டேன்ல.
     சும்மா பேசாத. சரி உன் வேலை எப்படி போய்கிட்டு இருக்கு” என்றான் சோஃபாவில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு. அவனை ஒரு பார்வை பார்த்தவன்
     “அது உனக்கு தேவை இல்லாத விஷயம். நீ உன் லிமிட்ல இரு” என்றான் அதிகாரமாக. இது எனக்கு பழக்கம் தான் என்பதை போல் அமர்ந்திருந்தான் சக்தி பிரசாத்.
     இவன் விஷ்ணு பிரசாத் சக்தி பிரசாத்தின் தம்பி. இரண்டு வயது சிறியவன். அண்ணன் சக்தி பொருப்பில்லாது ஊரை சுற்றுபவன் என்றால்,
     விஷ்ணு பிரசாத் பொருப்பானவன் என்ற போர்வையில் அனைத்தும் செய்பவன். ஆனால் இருவரும் தங்கள் மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு எதையும் செய்பவர்கள்.
     விஷ்ணுவிற்கு தன்னை மட்டுமே பிரசாத் என்று அழைக்க வேண்டும் என்ற பிடிவாதம் அதிகம். தன் அண்ணனை கூட அப்படி கூப்பிடுவதில் விருப்பம் இல்லாதவன்.
     எனவே அவன் சக்தி இவன் பிரசாத் என்றே அழைக்கப்பட்டனர். இந்த விஷ்ணு வெளிநாடு சென்று தன் படிப்பை முடித்து வந்தவன்.
      இரண்டு பேரையும் படிப்பில் மட்டும் யாராலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு படிப்பில் சிறந்து தான் விளங்கினர்.
     இப்போது வெளிநாட்டில் இருந்து பிரசாத் வந்தவுடன் அவன் பெற்றோர்கள் சக்தியை பற்றி புகார் வாசித்தனர்.
      தன் பெற்றோர்கள் தன்னுடைய அண்ணனின் நடவடிக்கையை கூறவும் “இவன் அப்படி என்ன தான் பண்றான்” என்று இவனும் கவனிக்க ஆரம்பித்தான்.
     அப்படி தான் சக்தி தன் செலவிற்காய் சிறிய அளவில் குழந்தைகளை கடத்துவதை கண்டு பிடித்தான். அதில் முதலில் அதிர்ந்து போனான்.
      பின் அவன் எண்ணத்தில் ஒரு விகாரமான யோசனை தோன்றியது. அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்தினால் என்ன என்று நினைத்தான். அவன் வீட்டிற்கு வந்தவுடன் அதை பற்றி கேட்டும் விட்டான்‌.
     சக்தியை தன் அறைக்கு அழைத்தவன் “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்றான் கோபமாக. “என்னடா பண்ணிட்டேன். இவ்ளோ கோபப்படுர” என்றான் அசட்டையாக.
     “நான் என்ன கேக்கேறேன்னு உனக்கு புரியலை. சரி நேராகவே கேக்குறேன்‌. எதுக்கு இப்படி குழந்தைகளை கடத்தி வித்துட்டு இருக்க.
     இது வெளிய தெரிஞ்சா நம்ம குடும்ப மானம் தான் போகும். நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல” என்றான் ஆவேசமாக.
     பிரசாதுக்கு உண்மை தெரிந்ததால் பெரிதும் அதிர்ந்தவன் “இல்லை அது வந்து இல்லை டா நான் எதுவும் அப்படி பண்ணலையே” என்றான் திக்கி தினறி.
     “என்னை இத நம்ப சொல்றியா. நானே நேர்ல பார்த்தேன்” என்று தான் எடுத்த புகைப்படங்களை காட்டினான். அதை பார்த்து இன்னும் அதிர்ந்த சக்தி
     “சாரி பிரசாத் சாரி. செலவுக்கு பணம் இல்லைன்னு தான் இப்படி பண்ணிட்டேன். அப்பாவும் பணம் தரதை நிருத்திட்டார் நான் என்ன செய்வேன் சொல்லு.
      நீயும் சின்ன வயசுல இருந்து வெளிநாட்டுலையே இருக்க. நான் யார்கிட்ட கேட்பேன் சொல்லு. நான் வேனா இதை இப்பவே விட்டர்ரேன்டா. அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிராதடா. பிளீஸ்” என்று கெஞ்சினான்.
     அவன் கெஞ்சலை கவனியாதவன் போல் “வாட் நான் ஏன் சொல்லாம இருக்கனும். அதனால எனக்கு என்ன கிடைக்கும்” என்றான் குரூரமான சிரிப்புடன்.
      புரியாது பார்த்த சக்தியிடம் “என்ன புரியலையா இதனால எனக்கு என்ன யூஸ்னு கேக்குறேன்” என்றான் மீண்டும்.
     இப்போது ஓரளவு யூகித்த சக்தி சிரிப்புடன் “நீ தான்டா என் தம்பி. நீ சொல்லு நான் என்ன செய்யனும்” என்றான் அவனின் மனவோட்டத்தை புரிந்தவனாக.
     அப்போது அவன் கூறியது இது தான் “நான் ஒரு வேலை பார்க்க போறேன். அதுக்கு எனக்கு கொஞ்சம் குழந்தைகள் தேவை புரியுதா.
     அப்புறம் என்ன வேலை ஏது என்ன இது எதுவும் நீ கேட்க கூடாது. அன்ட் நீ குழந்தைகளை நேர்ல போய் இனிமே கடத்த கூடாது வேற எதாவது வழி யோசி” என்றான்.
     பின் இருவரும் இணைந்து வேலையை பார்த்தனர். இந்த ஆஃப் குறித்த யோசனையை சக்தி கூறிய போது மெச்சுதலாக தான் பார்த்தான்.
     இதன் ஆழம் போக போக சக்திக்கு தான் இந்த கடத்தல் சாம்ராஜ்யத்தில் ராஜாவாக இருக்க வேண்டும் என்று வெறியே வந்தது.
     இதில் அதிக பலன் என்னவோ பிரசாரத்திற்கு தான். ஏனெனில் எல்லா இடத்திலும் தன்னுடைய அடையாளமாக கூட சக்தியையே முன் நிறுத்தானான்.
     பிரச்சினை வந்தால் கூட அதில் அவனை மாட்டி தான் தப்பித்து விடலாம் என்று அவன் ஒரு கணக்கை போட்டிருந்தான்.
     இதை எதையும் அறியாத சக்தியும் தன் தம்பி எல்லா இடத்திலும் தன்னை மதிக்கிறான் தன்னையே முன்னிலை வகிக்க வைக்கிறான் என்று தவறாக எண்ணினான்.
     இவ்வளவு எச்சரிக்கையாக இருந்த போதும் பிரசாத்தின் இடத்தை ஒருவன் கண்டு பிடித்து விட்டான்.
     அவனுக்கு தக்க பதில் கொடுத்தாலும் அவர்களுக்கு பிடிக்காத பல விஷயங்கள் அதன் பின் தான் நடக்கிறது.
      எனவே அவனுக்கு நெருடலாக இருக்கும் விஷயமும் அவன்‌ மரணமே. தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ண வைப்பதும் அதுவே.
     இதில் என்ன செய்வது என்று தினமும் யோசித்து கொண்டு இருக்கிறான். தன்னுடைய ஆட்களின் மடமை தனத்தால் இன்று தனக்கு பிரச்சினை வரும் சாத்தியம் இருப்பதால் அதிக கோபமும் கொள்கிறான்.
      என்றும் ஒரு குற்றவாளி ஒரு சிறு விஷயத்தை விட்டு செல்வான் என்பது சரி என்பதை போல் தன் திட்டத்தில் ஓட்டை விழுந்தது என்று எண்ணினான்.
      சரி இதன் மூலம் யார் வந்தாலும் பார்த்து கொள்வோம். எந்த எல்லைக்கும் செல்வோம் இதில் அண்ணன் என்ன தம்பி என்ன என்று முடிவு செய்து விட்டான்.
     இவன் செய்த சிறு பிழை தான் இவனை நெருங்குவதற்கும் உதவப் போகிறது என்ற இவனின் பயமே மெய் ஆகப் போவதையும் விரைவில் காணப்‌ போகிறான்.
-தொடரும்

Advertisement