Advertisement

தூறல் – 20
காற்றில் கலந்த உன் சுகந்தத்தை சுவாசித்தேன்;
காற்றும் நீ அருகே இருக்கிறாயென,
என்னை தேற்றிக் கொண்டே நகர்கிறது;
காத்திருக்கிறேன் காற்று கூறியது
உண்மையா என்று அறிந்திட!!
மாறன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்முகிலனின் அறை வாயிலில் யாரோ அவன் பேசுவதை கேட்பது தெரிந்தது.
     போன முறை மாறன் அழைப்பு விடுத்து எச்சரிக்கை செய்தபின் தன் அறையை நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தான்.
     அப்போது அவன் பேனாக்கள் வைக்கும் இடத்தில் ஒரு பேனா மட்டும் வித்தியாசமாக இருக்க எடுத்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. ஏனெனில் அதில் மைக்ரோ போன் வைக்கப்பட்டிருந்தது.
     அதை பார்த்த உடன் கண்டு கொண்டான் அவனையும் யாரோ கண்காணித்து வருகின்றனர் என்பதை. அதை அந்த நிமிடமே அகற்றி விட்டான்.
      ஆனால் கோபம் தான் ஏகத்துக்கும் ஏறியது “என்னோட ரூம் வரைக்கும் வந்துட்டீங்கலா” என்று. அன்று முதல் இன்று வரை அவன் அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அவர்களுக்கு தெரியாமல் கண்காணிக்கிறான்.
     அவர்களிடம் பேசி தன் அறைக்கு அடிக்கடி யார் செல்வது என்ற செய்தியை கேட்டு எல்லோரிடமும் மறைமுகமாக கேட்டு பார்த்தான். யாரென கண்டு பிடிக்க முடியவில்லை.
      இப்போது தன் அறை வாசலிலிற்கே வந்து விட்டனரா என்று எண்ணிய முகிலன் “ஒன் மினிட் மாறன்‌. பிளீஸ் ஸ்டே ஆன் த லைன்” என்றுவிட்டு எழுந்து கதவருகில் மெல்ல சென்றான்.
       பின் மெதுவாக கதைவை திறந்தவன் பார்த்தது குழுவாக நிற்கும் ஐந்து ஆறு போலீஸ் அதிகாரிகளை தான்.
      அவர்கள் இவன் வந்ததைக் கூட கவனியாது “நீங்க தட்டுங்க இல்லை நீங்க தட்டுங்க” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.
      பார்த்த முகிலனுக்கு தான் கோபம் கோபமாக வந்தது. அவர்களை பார்த்து “இங்க நின்னுக்கிட்டு என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்” என்றான் கோபமாக.
      அவனை கண்டவர்கள் பயத்தில் எச்சிலை விழுங்கியவர்கள் “சார்” என்றனர். “என்ன சார்னு இழுக்குறீங்க.
     என் ரூம் முன்னாடி என்ன வேலை உங்களுக்கு. போய் வேலைய பாருங்க” என்றான் இன்னும் கோபமாய்.
       அப்போது ஒருவர் மட்டும் முன்னே வந்து “சார் இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாள். அதான் விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம் சார்” என்றார் தயக்கமாக.
      “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்” என்று விட்டு ஒரு மலர் கொத்தை தந்தார் அவர். பின் அனைவரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.
     அந்த மலர் கொத்தை வாங்கியவன் “தேங்க்ஸ்” என்று அனைவருக்கும் பொதுவாக சொல்லி விட்டு ” இப்படி வொர்க் டைம்ல வந்திருக்கீங்க.
      ஏன் லஞ்ச் டைம்ல வந்தா நான் எதாவது சொல்ல போறனா. இதுலாம் சரியில்லை. அப்படியே வந்ததும் வந்தீங்க டோர்ர ஒரு நாக் பண்ண முடியாதா.
     வாசல்ல வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க. போய் வேலைய பாருங்க” என்றான் இப்போது கோபம் இல்லாது ஸ்ரிட்டான குரலில்.
     கதவை அடைத்து உள்ளே வந்தவன் முதலில் பார்த்தது அந்த பூங்கொத்தில் சந்தேகிக்கும் படி எதுவும் இருக்கிறதா என்பதை தான்.
     ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் தான் நிம்மதி கொண்டான். பின்பே மாறனிடம் பேசச் சென்றான்‌.
      “சாரி மாறன் ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன். இங்க ஒரு சின்ன இஸ்யூ அதான். நீங்க சொல்லுங்க இப்ப என்ன பண்ணலாம்னு” என்றான் முகிலன் மாறனிடம்.
      “அதை விடுங்க முகில் இன்னைக்கு உங்க பிறந்தநாளா. சாரி நானும் போன் பண்ணி உங்களுக்கு டென்ஷன்  ஏத்தி விட்டுட்டேன்.
      அன்ட் மெனி மோர் ஹேப்பி பர்த்டே முகில்” என்றான் மாறன் தானும் கோபம் குறைந்தவனாய். “தேங்க்ஸ் மாறன்.
      நீங்க பேசவும் நான் டென்ஷன் ஆகலை. நீங்க அங்க எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. என்னை நம்பி எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கீங்க.
     இங்க என்னடானா எவனோ ஒருத்தன் நம்ம கூட இருந்துட்டு நமக்கு எதிரா வேலை பார்த்து கிட்டு இருக்கான்.
     நீங்க லாஸ்ட் டைம் சொன்ன அப்புறம் தான் என் ரூமை நல்லா தரோவா செக் பண்ணேன். ஒரு மைக்ரோ போன் இருந்தது.
      அதான் இபப் டென்ஷன் ஆகிட்டேன்” என்றான் முகிலன் சமாதானமாக. பின் “இங்க என்னவோ ஒன்னு சரியில்லை முகில்.
     எனக்கு அந்த டவுட் ஆரம்பத்தில இருந்தே இருந்துக்கிட்டு தான் இருக்கு” என்றான் மாறன் யோசனையாக.
     “ஒரு வேளை உங்க ஃபிரண்ட் சத்யாக்கு இதை பத்தி ஏதோ டீடெயில்ஸ் கிடைக்க போய் தான் அவனுங்க இப்படி பண்ணீட்டாங்களோ” என்று தன் சந்தேகத்தை முன் வைத்தான் முகிலன்.
     “ஆமா முகில். அப்படி இருந்தா சத்யா கண்டிப்பா நமக்கு ஏதாவது ஒரு ஹின்ட விட்டுட்டு தான் போய்ருப்பான்னு எனக்கு தோனுது முகில்
     அதை கண்டிப்பா நான் தேடி போகப்போறேன்” என்று தன் மனதின் எண்ணத்தை கூறினான் மாறன். “நீங்க செய்ங்க மாறன். பட் நிதானமா செயல்படனும்.
      அன்ட் நீங்க இன்னும் சேப்பா இருங்க. உங்க சேஃப்டியும் முக்கியம். ஓகே டேக் கேர்” என்று முடித்தான் முகிலன். “ம்ம் புரியுது முகில். ஓகே நான் பாத்துக்கிறேன்.
      அன்ட் சீ யூ சூன் முகில்” என்று அழைப்பை அணைத்தான் மாறன். அவன் அறியவில்லை அவன் தேடி செல்லும் முன்னர் அவனை தேடி
       அவன் நண்பன் சார்பில் ஒருவர் அல்ல இரண்டு நபர்கள் வரப்போகிறார்கள் என்று. அவர்களின் துணை கொண்டே தன் ஆட்டத்தை முடிப்பான் என்றும்.
      அங்கே கௌதம் இல்லத்தில் ஆருத்ரா கிளம்பிய பின் தன் வேலையை தொடங்கி விட்டான் கௌதம்.
     முதலில் தன் பத்திரிகை அலுவலகத்தின் தலைமையகத்திற்கு அழைப்பு விடுத்தான். அங்கே அவனுக்கு வேண்டிய ஒரு நபர் உள்ளார்.
     அவன் என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார். அவரிடம் தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நடந்த கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களின் விவரங்கள் தனக்கு வேண்டும் என்றான்.
     குழந்தைகள் என்று குறிப்பிட்டு கேட்காமல் பொதுவாக சொல்லி விட்டான் தன் மீது சந்தேகம் வராத அளவு. அந்த நபரும் பலர் ஆராய்ச்சி செய்வதற்காக இப்படி கேட்பார்கள் என்பதால்,
     கௌதமும் அதற்கு தான் கேட்கிறான் என்று நினைத்து நாளை தருவதாக சொல்லி வைத்தார். சரியென்று வைத்த கௌதம் தன் அடுத்த வேலையாக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றான்.
     இது எப்போதும் நடக்கும் ஒன்று தான். பத்திரிகையாளர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று அங்கே வந்த புதிய கேஸ்களின் விபரம் பெற்று கொள்வர்.
     இது எல்லா இடத்திலும் நடக்கும் ஒரு நிகழ்வே. கௌதமும் தன் அலுவலகத்தில் அழைத்து இன்று தான் செல்வதாக கூறிவிட்டு சென்றான்.
     அங்கே செய்திகளை வாங்கிக் கொண்டு அவர்களே அறியாது தனக்கு தேவையான தகவல்களை சேகரித்து கொண்டான்.
     பின் அங்கிருந்து புறப்பட்டு நேரே தன் அலுவலகத்திற்கு சென்றான். அங்கு தான் சேகரித்த செய்திகளை தந்துவிட்டு பின்பு உடனே வெளியே வந்து விட்டான்.
     அங்கு இருப்பவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் பத்திரிகையாளர்கள் வேலை அலுவலகத்தில் இல்லாமல் வெளியே தானே.
     வெளியே வந்தவன் நேரே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வந்தவன் நேரே தன் அறைக்கு சென்றான். அங்கே இருந்த கரும்பலகையை எழுதுவதற்காக எடுத்து தன் முன்னே வைத்தான்.
     பின் அதில் தான் சேகரித்த விபரங்கள் தன் சந்தேகங்கள் என்று அனைத்தையும் அதில் எழுத தொடங்கினான்.
     முதலில் நடுவில் ஒரு வட்டம் போட்டு அதில் குழந்தை கடத்தல்கள் என்று எழுதினான். பின் குழந்தைகளை எதற்காக கடத்துவார்கள் என்று தன் சந்தேகங்களை வரிசைப்படுத்தினான்.
     “பெண் குழந்தைகள் மட்டும்னா வேற காரணத்துக்காக கடத்துவாங்க. பட் நமக்கு தெரிஞ்ச வரை ஆண் பெண் ரெண்டு குழந்தைகளும் கடத்தி இருக்காங்க.
     ஏன்னா சத்யா வச்சிருந்த வீடியோல அந்த பையன் அப்படி தான் சொன்னான். சோ அந்த ரீசனா இருக்காது‌” என்று தன் பட்டியலில் இருந்த முதல் காரணத்தை அடித்து விட்டான்.
     “அடுத்து பார்த்தா குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்க கடத்துவாங்க. அது இங்க இருக்க லோக்கல் ரவ்டீஸ் ஒரு கேங் நடத்துறது.
     அந்த கேங்க கூட கடைசியா நாம எழுதின ஆர்ட்டிகல் மூலமா தான் வெளியே வரவச்சோம். அவனுங்க எல்லாம் இப்ப ஜெயில்ல இருக்கானுங்க.
     சோ அவனுங்க இருக்க சேன்ஸ் இல்லை. பட் ஒரு வேளை புது ஆளுங்க அதுக்குள்ள இந்த வேலை செய்ய ஆரம்பிச்சிருந்தா. சரி அது ஒரு இருபது சதவீதம் சான்ஸ் இருக்கலாம்” என்று குறித்து கொண்டான்‌.
     “அடுத்து இருக்க டவுட்ஸ்படி பார்த்தா ஒன்னு ஆர்கன் திருடரது அன்ட் இன்னொன்னு பான்டட் லேபர்ஸ்.
     இதுல ஆர்கன் திருடரது அப்படினா குழந்தைகளை விட பெரியவங்களை தான் டார்கெட் பண்ணுவாங்க.
       அப்படியே ஆர்கன்காக குழந்தைகளை கடத்துராங்கன்னு எடுத்தாலும் அது ஒரு பத்து சதவீதம் இருக்கலாம்” என்று அதையும் குறித்து கொண்டான்‌.
      “இதுல பான்டட் லேபர்ஸ் கடைசி. அன்ட் குழந்தைகளை இதுக்கு கடத்தறது கொஞ்சம் கம்மி தான். இதுல போரண்ட்ஸோட சேர்த்து வச்சி தான் குழந்தைகள கூட்டிட்டு போவாங்க.
     நாம‌ அப்படி தான் கேள்விபட்டு இருக்கோம். சரி இதுக்காக தான் இவனுங்க கடத்துராங்கனா ஒரு இருபது சதவீதம் சான்ஸ் இருக்கு” எனறு குறித்து கொண்டான்‌.
     அனைத்தையும் எழுதி முடித்து பார்த்தவன் “மொத்தம் ஐம்பது சதவீதம். அப்ப மீதி ஐம்பது என்னவாக இருக்கும்” என்று ஒரு வட்டம் போட்டு அதில் ஒரு கேள்வி குறியை போட்டு பார்த்தான்.
     அவனை பொருத்த வரை சத்யாவின் மரணம் வெறும் குழந்தை கடத்தல் கும்பலால் நடந்தது என்று இப்போதும் நம்ப முடியவில்லை.
     “ஏனெனில் அதற்காக கொலை செய்யும் அளவுக்கு யாராவது செல்வார்களா” என்று ஒரு எண்ணம். மேலும் இது போல் வழக்கில் பணம் இருந்தால் எளிதாக கையாண்டு விடலாம்.
      அதற்கான சாத்தியம் அதிகம். அதற்காக கொலை செய்யும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பார்கள் என்ற எண்ண முடியவில்லை.
     இவன் எண்ணம் இப்படி வட்டமடித்துக் கொண்டு இருக்க அதற்கு சளைக்காது மாறனும் அதே போல் தான் எண்ணிக் கொண்டு இருந்தான்.
     இவர்களுக்கு இப்படி தலை வேதனையை கொடுத்த அந்த பிரசாத்தோ அங்கு தன் இடத்தில் முக்கியமான ஒரு கலவையை பரிசோதித்து கொண்டிருந்தான்.
-தொடரும்

Advertisement