Advertisement

தூறல் – 19
பூத்து குலுங்கும் பூந்தோட்டமே,
உன் பூக்களை எனக்கு தருவாயா?
புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன்,
ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்;
சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??
      கௌதம் தனக்கு முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கண்டு “என்ன ருத்ரா இதுல என்ன இருக்கு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க” என்றான் புரியாது.
     “கௌதம் இந்த புக்ஸ் இது சத்யா வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தது” என்றாள் ஆரு ஒருவித எதிர்பார்ப்புடன்.
      அப்போதும் புரியாது பார்த்த கௌதமை “கௌதம் இந்த புக்ஸ் நேம் சொல்றேன் கேளுங்க. ஆலிவர் ட்விஸ்ட், ஐ ஏம் அ டேக்ஸி, இக்பால்.
      இதுலாம் சில்ட்ரன் லேபர் அன்ட் அப்யூஸ் நாவலஸ். இப்ப புரியுதா” என்றாள் மீண்டும் அவன்‌ முகம் பார்த்து.
      இப்போது எதுவோ கௌதமிற்கு தெளிவானது போல் இருந்தது. சிறிது நேரம் யோசித்த கௌதம் “ருத்ரா யு ஆர் ரியலி பிரில்லியண்ட டா.
      இப்ப எனக்கு இந்த பிரச்சினையோட நுனி கிடைச்சிருச்சுனு தோனுது” என்றான் அர்த்தத்துடன். ஏனெனில் ஒரு ஆர்ட்டிகல் எழுதி முடிக்க வேண்டும் என்றால்
      சத்யா பல விதத்தில் விஷயங்களை சேகரிப்பான். அதில் ஒன்று புத்தகங்கள். அந்த புத்தகத்தில் இருக்கும் சூழ்நிலைகளை ஆராய்ந்து நிஜத்தில் எதாவது ஒத்து வருமா என்று தான் முதலில் ஆராய்வான்.
       அதை வைத்தே கௌதம் ‘சத்யா குழந்தை  அப்யூஸ் நாவலஸ் படிச்சிருக்கான்னா அப்போ அதை பத்தி தான் எதோ அவனுக்கு விஷயம் கிடைச்சிருக்கு.
      சோ இது மூலமா சத்யா என்கிட்ட சொன்ன விஷயம் குழந்தைங்க’ என்ற முடிவுக்கு வந்தான்.
      இப்போது ஆரு‌ “கௌதம் நான் சும்மா இந்த புக்ஸ்ல ஞிஸ்ட் மட்டும் தான் படிச்சு பார்த்தேன். அன்ட் அதை வச்சு தான் சொன்னேன்.
      அன்ட் நீங்க இப்ப சத்யா டைரியில எதாவது டீடெயில்ஸ் கிடைக்காதானு பாருங்க. நான் லேப்டாப்ப ஓபன் பண்றேன். ஓகே” என்றாள்.
      “ஓகே” என்ற கௌதமும் அதை எடுத்து ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டான். ஆருவும் மடிக்கணினியை எடுத்து அமர்ந்து விட்டாள்.
      சுமார் ஒரு மணி நேரம் சென்ற பின் தான் தன் வேலையை முடித்த ஆரு‌ தலையை நிமிர்ந்து பார்த்தாள். அவள் எதிரே கௌதம் சத்யாவின் டைரியை விரிந்து வைத்து அமர்திருந்தான்.
      மேலும் கையில் ஒரு நோட்டை வைத்து சீரியசாக அதில் எதுவோ எழுதிக் கொண்டிருந்தான். ‘அப்படி என்ன எழுதுரார்’ என்று யோசித்த ஆரு
      “கௌதம் என்ன செய்றீங்க” என்றாள். ஆருவின்‌ சத்தத்தில் தன் கவனம் கலைந்த கௌதம் “ஹான் என்ன ருத்ரா” என்றான் தலையை தூக்கிப் பார்த்து.
      “லேப் பாஸ்வேர்ட பிரேக் பண்ணி ஓப்பன் பண்ணிட்டேன் கௌதம். நீங்க என்ன செய்றீங்க இவ்ளோ சீரியசா. அப்படி அதுல உங்களுக்கு என்ன ஹின்ட் கிடைச்சிது” என்று வினவினாள் ஆரு‌.
      “அதை அப்புறம் சொல்றேன் ருத்ரா. இப்ப நம்ம லேப்ப பார்க்கலாம். சத்யா ஏதோ முக்கியமான விஷயம் இதுல இருக்கவும் தான் இவ்ளோ சேப்பா வச்சிட்டு போய் இருக்கனும்.
      சோ பர்ஸ்ட் நாம இதை பார்ப்போம்” என்ற கௌதம் ஆருவின் அருகே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
      பின் சத்யாவின் மடிக்கணினியை தன் பக்கம் திருப்பியவன் அதில் சத்யா இது சமந்தமாக ஏதும் வைத்திருக்கிறானா என்று ஆராய ஆரம்பித்தான்.
      பார்த்து கொண்டே வந்தவன் ஒரு போல்டர் சத்யா இறந்த தேதியில் இருந்து ஒரு வாரம் முன்பு பதிவு செய்திருந்ததை பார்த்தான்.
      ‘சரி இதற்குள் சென்று பார்ப்போம்’ என்று முடிவு செய்த கௌதம் அந்த போல்டரை திறந்தான். அதில் ஒரு காணொளியும் ஒரு வேர்ட் பையிலும் சில புகைப்படங்களும் இருந்தது.
      முதலில் வீடியோவை ஆன் செய்யலாம் என ஹெட்செட்டை இணைத்து கொண்டான். அதில் தான் ஒன்று எடுத்து திரையையே பார்த்திருந்த ஆருவிடம் ஒன்றையும் தந்தான்‌.
     அதன் பின்னே காணொளியை ஓட விட்டான். அது ஒரு சிறுவன் பேசிய காணொளி. அந்த சிறுவன் தன்னை போல் பலரை கடத்தி அடைந்து வைத்திருப்பதை கூறிக் கொண்டு இருந்தான்.
      மேலும் தங்களை வெளிநாடு வெளி மாநிலம் போன்ற இடங்களுக்கு வேலைக்கு அடிமையாக அனுப்பி வைப்பதையும் சொல்லி கொண்டு இருந்தான். முழு காணொளியும் முடிந்த பின்
      ஆருவை ஒரு பார்வை பார்த்த கௌதம் அடுத்திருந்த புகைப்படங்களை பார்த்தான். அது எல்லாம் குழந்தைகள் படங்கள்.
      அதுவும் ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பது போல் இருந்தது. அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றி செல்வது போன்ற படங்களும் இருந்தது.
       மேலும் வேறு சிலரின் படங்களும் இருந்தது. அவர்களை பார்த்த கௌதமிற்கு அது யாரென தெரியவில்லை. ஆனால் பார்த்தால் ரவுடி கும்பலை போல் இருந்தது.
      அதை எல்லாம் பார்த்தவன் ‘சரி அடுத்து உள்ள வேர்ட் பையிலை பார்ப்போம்’ என்று திறந்து உள்ளே சென்றான்.
       அதில் சத்யா முதலில் இருந்த வீடியோ, புகைப்படம் என்று தான் சேகரித்த விஷயங்களை தொகுத்து எழுதி இருந்தான்.
        எல்லாவற்றையும் பார்த்து முடித்த கௌதம் அதை தன் கைப்பேசியில் ஏற்றி வைத்து கொண்டான். பின் லேப்டாப்பை மூடி வைத்தான்.
      சிறிது நேரம் அமைதி நீடித்தது. அதை உடைத்த ஆரு‌ “கௌதம் இதை எல்லாம் பாக்கிறப்ப நாம கெஸ் செஞ்சது கரெக்ட்னு புரியுது.
      யாரோ குழந்தை கடத்துறத தான் சத்யா கண்டு பிடிச்சிருக்கார். அவங்க தான் சத்யாவ ஏதோ செஞ்சிருக்கனும்” என்று தன் யூகத்தை முன் வைத்தாள்.
      ஆரு கூறியதை கேட்ட கௌதமுக்கு டைரியில் படித்ததும் மடிக்கணினியில் பார்த்ததும் ஒன்று என புரிந்தது. ஆனால் வேறு எதுவோ எங்கோ சரியில்லை என்று தான் தோன்றியது.
      ஆனால் தன் சந்தேகத்தை முன் வைக்காது “ம்ம் இருக்கலாம் ருத்ரா” என்றான் ஏதோ யோசனையுடன். “சரி டைரியில என்ன இருந்தது”
       என்று தன் அடுத்த சந்தேகத்தை கேட்டாள். அவளை பார்த்த கௌதம் “நம்ம லேப்டாப்பில் என்ன பார்த்தோமோ அதையே தான் எழுதி இருந்தான் ருத்ரா” என்று முடித்து கொண்டான்.
      ஆனால் அதில் சத்யா இது சாதாரண கடத்தல் போல் தெரியவில்லை என்று தன்னுடைய சந்தேகத்தை எழுதி இருந்ததை சொல்லாமல் விட்டான்.
      தான் வந்த வேலை அனைத்தையும் முடித்த ஆரு தனக்கு நேரமாவதை உணர்ந்து “எனக்கு டைம் ஆகுது கௌதம். நான் கிளம்பட்டா இல்லை புல் டே லீவ் சொல்லிட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டா” என்றாள்.
      “இல்ல ருத்ரா நீ கிளம்பு. நீ இதுவரைக்கும் எனக்கு செஞ்ச ஹெல்பே ரொம்ப பெரிசு மா. சோ நீ கிளம்பு” என்றான் கட் அன்ட் ரைட்டாக.
     அவன் சொன்னதை கேட்ட ஆரு “இப்ப வேனா நீங்க என்னை துரத்தி விடலாம் கௌதம். பட் நான் மறுபடியும் வருவேன்” என்று விட்டு ரேவதாயிடமும் சொல்லி சென்றாள்.
      அவள் தன்னை மிரட்டுவது போல் சொல்லி செல்லும் தோரணையை கண்ட கௌதம் சிரிப்புடன் அனுப்பி வைத்தான்.
      மாறன் மிகுந்த பரபரப்புடன் கார்முகிலனிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தான். இரண்டாம் முறை தான் கைப்பேசியை எடுத்தான் முகிலன்.
     “ஹலோ முகிலன் என்ன ஆச்சு ஏன் போன் எடுக்க இவ்ளோ நேரம்” என்றான் பரபரப்பாக. “சாரி மாறன். இங்க ஏ.சி இருந்தார்.
      அதான் அவர்‌ போன அப்புறம் எடுக்கறேன். என்ன ஆச்சு. ஏன் இவ்ளோ டென்ஷனா பேசிறீங்க” என்றான் முகிலன்.
     “ரொம்ப முக்கியமான விஷயம் முகில். நான் எப்படி இதை சொல்லுவேன். இவ்ளோ நாள் நாம எல்லாரும் முட்டாள் ஆகிட்டோம் முகில்” என்றான் கோபமான குரலில்.
     “என்னாச்சு ஏன் இந்த கோபம் மாறன். என்ன சொல்றீங்க நாம எப்படி முட்டாள் ஆனோம்னு சொல்றீங்க. கொஞ்சம் கோபப்படாம சொல்லுங்க” என்றான் முகில்.
      “நாம முட்டாள் ஆகிட்டோம்னு சொல்றத விட நம்மல நல்லா முட்டாள் ஆக்கிட்டான் அந்த பிரசாத்” என்றான் பல்லை கடித்து கொண்டு.
     “கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க மாறன்” என்றான் இப்போது முகிலனும் பரபரப்புடன். அதற்கு மாறன் “நாம‌ இதுவரைக்கும் பிரசாத்னு நம்பிக்கிட்டு இருந்தவன் உண்மையான பிரசாத்தே இல்லை முகில்” என்றான் ஆவேசமாக.
     ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மை தானா என்று சந்தேகம் அடைந்த முகிலன் “என்ன சொல்றீங்க மாறன். எனக்கு புரியலை” என்றான் வெளி வராத குரலில்.
      “உண்மை தான் முகில் இவ்ளோ நாள் பிரசாத்னு சொல்லிக்கிட்டு இங்க வந்தவன் பிரசாத்தே இல்லை. இத இப்ப தான் நான் கன்பார்ம் செஞ்சேன்” என்றான் கடுப்புடன்.
      “என்ன மாறன் இது இவ்ளோ நாள் அவன் தானே உங்களுக்கு எல்லா வேலைகளையும் சொல்லுவான். அந்த ஆப்ப கூட இவன் தான் மேனேஜ் பண்றானு சொன்னீங்க.
      இப்ப எப்படி இவன் பிரசாத் இல்லைனு சொல்றீங்க. பிளீஸ் கொஞ்சம் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்று முடித்தான் முகிலன்.
      மாறன் இன்று காலை நடந்த நிகழ்வுகளை முகிலனிடம் கூற ஆரம்பித்தான். இன்று காலை வந்த பிரசாத் வழக்கம் போல் தன் அறைக்கு சென்றான்.
      அப்போது குமாரரையும் மணியையும் அழைத்த பிரசாத் அவர்கள் அடுத்த செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான்.
     பின் எப்போதும் போல் அவர்களை வெளியே அனுப்பி விட்டான். சிறிது நேரம் சென்று அவன் இருந்த அறையை கடந்து சென்றான் மாறன்.
     அந்த நேரம் அவன் அலைப்பேசியில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான். கிட்டதட்ட கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருந்தான்.
      ‘அப்படி யார்ட்ட இவன் இப்படி பேசிக்கிட்டு இருக்கான்’ என்று யோசித்த மாறன் அங்கையே நின்றான்.
      அப்படி பேசியவன் திடீரென சத்தமாக கத்தினான்‌. “போதும் பிரசாத் நீ இவ்ளோ டென்சன் ஆகாத. நான் பாத்துக்கிறேன்.
     நீ சொன்ன வேலை எல்லாம் இங்க நான் எக்சிகுயூட் பண்ணிட்டு தான் இருக்கேன் புரியுதா” என்றான். சிறிது மௌனத்திற்கு பின் “இங்க பாரு பிரசாத் அந்த ஆப்ப பில்ட் செஞ்சது நான்.
     எவ்ளோ ஸ்டார்ங்க பில்ட் பண்ணிருக்கேன் தெரியுமா. அந்த ஆப்பால நமக்கு எந்த ரிஸ்க் பேக்டரும் கிடையாது புரியுதா” என்றவன்
       “சரி நாம நேர்ல பாக்குறப்ப டீடெயில்லா சொல்றேன் ஓகே. இப்ப வைக்கிறேன்” என்று தன் அழைப்பை அணைத்தான்.
     ஒன்று விடாது அனைத்தும் கூறிய மாறன் “எனக்கு அப்படியே ஆத்திரமா வருது முகில்‌. இவ்ளோ நாள் நாம நினைச்சது எல்லாம் இப்ப ஒன்னுமே இல்லைனு ஆகிருச்சு.
     எனக்கு அந்த நிமிஷமே அவனை அப்படியே சுட்டு தள்ளனும் போல‌ வெறி ஏறுச்சு. எப்படி கன்ட்ரோல் பண்ணிட்டு வந்தேன்னு இப்ப கூட புரியல” என்று அனைத்தையும் சொல்லி முடித்தான் மாறன்.
     கேட்ட முகிலனுக்கு தலையே சுற்றி விட்டது ஒரு நிமிடம். என்ன சொல்வது என்று புரியாது அமைதி ஆனான் அதிர்ச்சியில்.
      அப்போது தன் அறை வாயிலில் நிழலாடுவதை கண்டவன் ‘இது வேறையா. யார்ரா நீங்கலா‌. எங்க இருந்து டா வரீங்க.
     ம்ம் எவனா இருந்தாலும் வாங்கடா நீங்களா நாங்களான்னு பாத்துகறேன்” என்று மனதில் சபதம் எடுத்தான்.
-தொடரும்

Advertisement