Advertisement

தூறல் – 18
வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ,
உயிர் பெற்று நடக்கையிலே
புவியும் புது வர்ணம் அடைந்திடுதே;
புண்ணாய் போன என் மனதிற்கும்,
உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே!
ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை. ஆனால் ஒரு சிக்னலில் அவள் பின்னால் வந்த மீராவின் ஆட்டோ நின்றுவிட ஆரு வந்த ஆட்டோ முன்னே சென்றுவிட்டது.
     இதை எதையும் அறியாத ஆரு‌ கௌதமை காண போகும் உற்சாகத்தில் சென்றாள். ஏன் தனக்கு இவ்வளவு மகிழ்ச்சி என்பதும், அது கௌதமை காண செல்வதாலும் என அவள் உணர்ந்தாள்.
    ஆனால் அந்த உணர்வு என்னவென்று அவள் யோசிக்கவில்லை. முன் சத்யாவின் வீட்டில் இருந்து கௌதம் தன்னை பாதுகாப்பாய் அழைத்து சென்றதில் அவளின் தந்தையை நினைவு கூர்ந்தான்.
      அவனோடு இருக்கையில் தான் பாதுக்காப்பாய் இருப்பதை அவள் எப்போதும் உணர்வதை மகிழ்வுடன் உள்வாங்கி கொள்பவள் அத்துடன் அதை விட்டு விடுகிறாள்.
     கௌதமை பற்றியே நினைத்து கொண்டு வந்தவள் அவன் இல்லம் வந்தவுடன் தான் தன் மனதின் சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள்.
     அங்கே வீட்டில் தன் அன்னையின் முன் அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது விழி பிதுங்கி நின்று கொண்டிருந்தான் கௌதம்.
      நடந்தது இதுதான். கௌதம் காலையிலே தன் அன்னையிடம் சென்றவன் “அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்றான் தயக்கமாக.
     ‘என்ன இவன் இன்னைக்கு இவ்ளோ பணிவா பேசுறான். இப்படிலாம் நம்ம புள்ள பேச மாட்டானே ம்ம்’ என்று யோசித்த ரேவதி வெளியே ஜன்னலை எட்டிப்பார்த்தார்.
     தன் அன்னையின் செய்கையை புரியாது பார்த்த கௌதம் “அம்மா என்னம்மா செய்ற?” என்றான் குழப்பத்துடன்.
     “இல்ல டா வெளிய மழை எதுவும் வருதானு பாக்குறேன்” என்றார் இன்னும் தன் நடிப்பை தொடர்ந்தவாறு.
     அது புரியாத கௌதம் “அம்மா வெளியே வெய்யிலு பல்ல‌ காட்டுது‌. நீ என்ன உளறிக்கிட்டு இருக்க” என்றான் கடுப்புடன்.
     “அது ஒன்னும் இல்லடா நீ என்கிட்ட இவ்ளோ பணிவா பேசிறியே அதான்” என்றார் நக்கலாக. இப்போது தான் தன் அன்னை தன்னை கிண்டல் செய்கிறார் என்று புரிந்து
      “அம்மா பிளீஸ் என்னை கிண்டல் பண்ணாம நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்றான் கெஞ்சலாக. “சரி சொல்லு” எனறார் ரேவதி போனால் போகிறது என்பது போல்.
     “அது மா ருத்ரா இருக்கால அவ நம்ம வீட்டுக்கு இப்ப வரப்போறா மா. அதனால அவளுக்கும் சேர்த்து கொஞ்சம் பிரேக் பாஸ்ட் பண்ணிரு என்ன” என்றான் தன் அன்னையிடம்.
     “என்னடா சொல்ற நேத்து தானே கூட்டிட்டு வந்த. இப்ப என்ன திடீர்னு. இது சரியில்லை கௌதம். உங்க ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா அந்த   பொண்ணு வீட்ல நான் பேசறேன்.
     ஆனா இப்படி அடிக்கடி அவள வீட்டுக்கு கூப்டாத கௌதம். யாராவது பார்த்தா அந்த பொண்ணை தான் டா கண்ணா தப்பா நினைப்பாங்க. புரியுதா” என்றாள் பொறுப்பான தாயாக.
      தன் அன்னை கூறியதை சிரிப்புடன் கேட்டு கொண்ட கௌதம் “அம்மா என்னை பத்தி தெரியாதா. நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பலாம் இல்லை மா.
      என்னோட லேப்டாப்ல பாஸ்வேர்டு போட்டத மறந்துட்டேன். ருத்ரா சாப்ட்வேர் இன்ஜினியர் அதான் அவகிட்ட ஹெல்ப் கேட்டேன்.
      அவளும் ஹெல்ப் பண்றேன்னு சொன்னா மா. சோ அதான் இப்ப வந்திட்டு இருக்கா போதுமா. டவுட் கிளியர் ஆகிருச்சா” என்றான் சிரிப்புடன்.
      சிறிது நேரம் கழித்து “ஆனா மா நான் என்ன சொன்னாலும் அங்க சுத்தி இங்க சுத்தி என் கல்யாணத்துலையே வந்து நிக்கிற” என்று வம்பு வளர்ந்து கொண்டிருந்தான்.
      அப்போது தான் ஆட்டோவில் வந்திறங்கினாள் ஆரு‌. ஆட்டோ சத்தத்தில் எழுந்த கௌதம் “அம்மா ருத்ரா வந்தாச்சு” என்றான்.
     அதை கேட்டு அவனை முந்தி சென்ற ரேவதி தானே கதவையும் திறந்தார். தன் அன்னையின் செய்கையை பார்த்த கௌதம் சிரித்துக் கொண்டே அவரின் பின்னே சென்றான்.
     அங்கே வந்த ருத்ரா வாசலிலே வந்து தன்னை வரவேற்கும் கௌதமின் அன்னையை கண்டு சிரிப்போடு “குட் மார்னிங் ஆன்டி” என்றாள்.
     “வாடா தங்கம். உள்ள வா. நீ வரதா இந்த கௌதம் இப்போ தான் சொல்றான். எதோ லேப்டாப்ப திறந்து தரப் போறியாம்ல. நீ எவ்ளோ பெரிய அறிவாளி.
     இவனும் தான் இருக்கானே. நீ இரு நான் போய் டிபன் ரெடி பண்றேன் என்ன” என வழமை போல் தானே பேசிவிட்டு தன் மகனை பார்த்து தன் மேவாயை தோலில் இடித்து சென்றார்.
     இவ்வளவு நேரம் அவர் பேசியதை சிரிப்புடன் பார்த்திருந்த கௌதம் கடைசியாக தன் இமேஜை டேமேஜ் செய்து செல்லவும் கடுப்புடன் பார்த்தான்.
      ஆரு “கௌதம்” என்று அழைத்த பின் அவள் புறம் திரும்பியவன் “சாரி ருத்ரா எங்க அம்மா பண்ணுன அலப்பறைல நான் உன்னை இன்வைட் பண்ண மறந்துட்டேன்.
      வா ருத்ரா” என்றான் அவளிடம். “சரி நைட்டு டல்லா இருந்தீங்களே இப்ப ஓகே வா” என்றாள் கரிசனமாக. “உன்கிட்ட பேசின அப்புறம் நான்‌ ஓகே ருத்ரா” என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
     பின் ருத்ராவே “அப்புறம் கௌதம் நாம லேப்ப பார்க்கலாமா” என்றாள். “இல்லை ருத்ரா நாம பிரேக் பாஸ்ட்ட முடிச்சிட்டு போய் எடுக்கலாம்” என்றான் கௌதம்.
      “அன்ட் ஒரு முக்கியமான விஷயம் ருத்ரா” என்றவனின் கேள்விக்கு என்ன என்றாள் கண்களால்.‌ “அப்பா உன் கண்ணு செமையா பேசுது ருத்ரா” என்று விட்டு
     “என்ன முக்கியமான விஷயம்னா நைட்டு எதோ ஒரு சர்ப்ரைஸ் இருக்கு நாளைக்கு சொல்றேன்னு சொன்னியே அது என்ன” என்றான் ஆர்வமாய்.
     “ஓஓ நீங்க அதை கேக்குறீங்கலா அதையும் பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டே சொல்றேனே” என்றாள் பதிலுக்கு நமட்டு சிரிப்புடன். “ஹே வாட் இஸ் திஸ் ருத்ரா. பிளீஸ் ஸ்பீக் அவுட் யா” என்றான்.
     “என்னடா பண்றீங்க ரெண்டு பேரும். வாங்க டிபன்‌ ரெடி சாப்டலாம்” என்று ரேவதி அழைத்து விட்டார் பேச்சை தடை செய்யும் விதமாக. ‘சரி சாப்பிட்ட அப்புறம் தான் எல்லாம் கிளாரிபை ஆகும் போல’ என உண்ண சென்றான்.
     ‘லேப்டாப்பில் என்ன இருக்கும், ருத்ரா கூறப் போகும் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்’ என்ற சிந்தனையில் அரைகுறையாக சாப்பிட்டான் கௌதம்.
      ஆருவும்‌ கௌதமும் தங்கள் மனதின் அலைப்புறுதலில் அமைதியாக உணவை உண்ண அங்கு ரேவதி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.
      ஒருவழியாக காலை சிற்றுண்டியை முடித்த பின் இருவரும் தங்கள் வேலையை பார்க்க சென்றனர். கௌதம் முன்னெச்சரிக்கையாக “அம்மா நாங்க முக்கியமான வேலை பார்க்க போறோம்.
     இந்தா இருக்கு பார் டைனிங் டேபிள் அங்க தான் உக்காந்திருப்போம். நீ அங்க வந்து எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. சரியா” என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.
     அதை பார்த்த ஆரு சிரித்துக் கொண்டிருந்தாள். தன் மகனை பார்த்து முறைத்த ரேவதி ஆருவை பார்த்து “நீ வேலைய பாரு டா.
     நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரேன்” என சொல்லி சென்றார். தன் அன்னை செல்வதை கண்ட கௌதம்
      “ஓகே ஆரு நாம வேலைய ஸ்டார்ட் செய்வோம். இரு நான் போய் லேப்டாப்பை எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றான்.
       அவன் வருவதற்கு முன் தான் எடுத்து வந்த பையை எடுத்து அதில் இருந்த ஒன்றை மட்டும் எடுத்து டேபிலின் மேல் வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள் ஆரு‌.
      உள்ளே சென்ற கௌதம் மடிக்கணினியை எடுத்து வந்தவன் டைனிங் டேபிள் மேல் இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.
     “இது..இது.. எப்படி.. எப்படி ருத்ரா உன்கிட்ட வந்துச்சு” என்றான் கௌதம் கண்களில் துளிர்த்த நீருடன். அவன் குரலும் கம்மி மெலிதாக ஒலித்தது.
     அவனின் முகம் காட்டும் உணர்வுகளை உள்வாங்கிய ஆரு‌ மெல்லிய சிரிப்புடன் “நீங்க தான் கௌதம் என்கிட்ட தந்தீங்க” என்றாள்.
      புரியாது பார்த்த கௌதமிடம் “ஞாபகம் இல்லையா கௌதம் அன்னைக்கு சத்யாவோட வீட்ல வச்சு கொஞ்சம் புக்ஸ் குடுத்தீங்களே.
     அதோட தான் இதுவும் இருந்துச்சு” என்றாள் ஆரு. அது வேறொன்றும் இல்லை சத்யாவின் டைரி. ஆம் சத்யாவின் ஒரு பழக்கம் டைரி எழுதுவது.
      அவன் நிறைய பேச மாட்டான். அதற்கு பதில் தன் மனதில் இருப்பதை அந்த டைரியில் எழுதி விடுவான்.
      இப்போது இது கண்டிப்பாக தனக்கு பெரிதும் உதவும் என எண்ணினான் கௌதம். அதை கையில் எடுத்து ஆருவை பார்த்து
     “தேங்க்ஸ் ருத்ரா தேங்கியூ சோ மச் மா. இதை தான் நான் தேடிட்டு இருந்தேன். அங்க சத்யா வீட்டில டைரி இல்லைன்னு தெரியவும் எங்க போயிருக்குமோன்னு குழம்பிட்டு இருந்தேன்.
      தேங்க்ஸ்” என்றான் உள்ளிருந்து. இதை கேட்ட ருத்ரா மற்றதை விட்டு விட்டு “அப்போ நீங்க சத்யாவோட வீட்டுக்கு மறுபடியும் போனீங்களா” என்றாள் முறைத்தபடி.
       அவளை கண்டு சிரித்த கௌதம் “ஹையோ ருத்ரா அது அன்னைக்கு என்னால எதுவும் எடுக்க முடியல. எடுத்த லேப்டாப்பும் பாஸ்வேர்டு தப்புன்னு சொல்லுது.
      அதான் சத்யா வேற என்னலாம் யூஸ் பண்ணுவான்னு யோசிச்சேன். அப்பதான் அவனுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்குன்னு ஞாபகம் வந்துச்சு.
     அதான் மறுபடியும் வீட்டுக்கள்ள போனேன். பட் எங்க தேடியும் டைரி கிடைக்கில. அதோட அந்த ஜார்ஜ் வேற என்னனமோ சொன்னாரா. ரொம்ப அப்செட்.
      அதான் அப்படியே பீச் வந்தேன். அங்க நேத்து உன்ன பார்த்தேன். அப்புறம் தான் உனக்கே தெரியுமே. நேத்து வீட்ல என்கிட்ட அவ்ளோ என்கரேஜிங்கா பேசுனல்ல.
      ரியல்லி பெல்ட் பெட்டர் மா. அன்ட் நைட்டு அதையே யோசிச்சு கன்பூஸன்ல இருந்தேன். அப்பவும் நீ தான் என் மைன்ட ஹீல் செஞ்ச” என்று அனைத்தையும் ஒப்பித்தான்.
     அவனை பார்த்து தானும் சிரித்த ஆரு “சரி உங்க ஃபிரண்ட் டைரியில இருக்கறத அப்புறம் பார்க்கலாம். நான் இன்னொரு டீடெயில் வச்சிருக்கேன்.
     அது என்னோட கெஸ் தான் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கானு பாருங்க” என்றாள் புன்னகையுடன். ‘இன்னும் இருக்கா’ என ஆச்சரியமாய் நினைத்த கௌதம் சொல்லு என்றான் கண்களாலே.
     ஆரு‌ கூறப் போவதையும் தெரிந்த பின் கௌதம் என்ன முடிவு செய்வானோ என்ற ஆர்வத்தில் தன் பையில் கொண்டு வந்திருந்த மற்றதையும்‌ எடுத்து வெளியே வைத்தாள் ஆரு.
     ஆனால் அதை பார்த்த கௌதமிற்கு ‘இதில் போய் என்ன இருக்கு’ என்று குழப்பம் தான் வந்தது. அதையே தன் பார்வையிலும் வெளிப்படுத்தி ஆருவின் பதிலுக்காக காத்திருந்தான்.
-தொடரும்

Advertisement