Advertisement

தூறல் – 17

சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ,
உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்;
கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே,
உன் நோக்கம் தான் என்னவோ?
விடுதலை என்று தான் தருவாயோ!!

     கௌதம் மடிக்கணினி பற்றிய பிரச்சினையை சொன்னவுடன் ஆரு சொன்ன பதில் இதுதான்‌ “நான் திறந்து தருகிறேன்” என்று‌. அதை கேட்ட கௌதம் ஆருவிடம் “உன்னால முடியுமா ருத்ரா.

     பிகாஸ் நான் ஒரு திரீ ஆர் போர் டைம்ஸ் பாஸ்வேர்டு போட்டு ராங்னு காட்டுச்சு. அகைன் நீ டிரை பண்ணி எல்லாம் இரேஸ் ஆகிட்டா என்ன பண்றது” என்றான்.

     அதை கேட்ட ஆரு “நீங்க என்னை என்னன்னு நினைச்சீங்க. நான் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர். எனக்கு இதுலாம் ரொம்ப ஈசி தெரியுமா” என்றாள் மிடுக்குடன்.

     அதை ஒதுங்கிய கௌதம் “இங்க பாரு ருத்ரா நீ சாப்ட்வேர் எஞ்சினியராவே இருக்கலாம். பட் இதுல இருக்க டீடெயில்ஸ் டெலிட் ஆகாம எடுக்க முடியுமா.

      ஏனா இப்போ வர என்ஜினியர்ஸ்லா பேப்பர் சேஸ் பண்ணி அப்புறம் அப்படியே மக் அடிச்சு பாஸ் பண்றவங்க தானே” என்றான் உசாராக.

      அவனின் பதிலில் கடுப்பின் உச்சிக்கு சென்ற ஆரு‌ “ஹலோ ஹலோ நிறுத்துங்க. என்ன விட்டா பேசிட்டே போறீங்க. என்னை பார்த்தா பேப்பர சேஸ் பண்ணி பாஸ் பண்றவ மாதிரியா இருக்கு.

     நான்லாம் நல்லா புரிஞ்சு படிச்சு பாஸ் செஞ்ச ஆளு. அதுமட்டும் இல்லாம எனக்கு ஹேக்கிங் கூட நல்லாவே தெரியும்” என்றாள் ரோஷமாக.

     அவளின் பதிலில் வாய் விட்டு சிரித்த கௌதம் “ஓகே ஓகே நான் ஒத்துக்கிறேன் நீ பெரிய அறிவாளினு. அதனால தான் சேப்டி மெஷர் எதுவும் எடுக்காம அர்த்த ராத்திரியில சுவரும் ஏறி குதிச்சன்னு” என்றான் இன்னும் கிண்டலாக.

     “ஓஹோ நான் தான் அறிவு இல்லாதவ நடுராத்திரியில சுவர் ஏறி குதிச்சேன். சார் தான் பெரிய அறிவாளி ஆச்சே நீங்க என்ன சார் செஞ்சீங்க, சுவர தாண்டாம கதவ திறந்தா போனீங்க” என்று ஆரு‌‌ பதிலுக்கு கிண்டல் செய்தாள்.

      “அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மிஸ்டர்.அறிவாளி நான் சேப்டி மெஷர் எதுவும் எடுக்காம போனேன்னு நான் சொன்னேனா.

      அதுலாம் நான் பக்காவா எல்லாம் செட் பண்ணிட்டு தான் செவுத்த தாண்டுனேன். இன்பாக்ட் உங்களை கூட நான் தான் தப்பிக்க வைச்சேன்.

      ஞாபகம் இருக்கா இல்லை மறந்து போச்சா” என்றாள் இன்னும் நக்கலாக. “ஹே அது நான் அப்ப கொஞ்சம் எமோஷனலா லாக் ஆகி இருந்தேன்.

     இல்லைனா போலீஸ் வரது கூட தெரியாம பீல் பண்ணிட்டு நின்னுட்டு இருந்திருக்க மாட்டேன். ஏதோ ஒன்ஸ் என்னை காப்பாத்திட்டு அதை இத்தனை டைம் சொல்ற” என்றான் தன் கெத்தை விடாமல்.

     “எது ஒன்ஸ் காப்பாத்தினனா சின்ன திருத்தம் டுவைஸ்” என்றாள் மிடுக்காக. “ஹே உளறாத ருத்ரா ஒரு டைம் தான்” என்றான் கௌதமும் ஸ்திரமாக.

     “அப்படியா” என்று ஒரு மாதிரி இழுத்த ஆரு‌ “கௌதம் நீங்க போனது போலீஸ் புல் புரெக்சன் கொடுத்த வீட்டுக்கு. அங்க கேமரா எதுவும் இல்லைனாலும்,

      அந்த தெருவில யார் வீட்லையுமா கேமரா இல்லாம இருக்கும். அப்புறம் எப்படி நீங்களும் உங்க வண்டியும் அங்க எந்த கேமராலையும் மாட்டாம வந்தீங்க” என்று முடித்தாள்.

      கௌதம் ‘ஆமால்ல இதை நாம யோசிக்காம விட்டுட்டோம். அந்த வீட்டுக்குள்ள நம்ம மூமென்ட்டால போலீஸ்க்கு சந்தேகம் வந்ததால தானே மேல ஏறி வந்தாங்க.

       சப்போஸ் அந்த சின்ன சந்தேகத்தை அவங்க ஹையர் ஆபிசர் கிட்ட சொல்லிருந்தா கூட அந்த ஏரியா புல்லா இருக்க எல்லார் வீட்டு சிசிடிவிலையும் செக் பண்ணிருப்பாங்கல’ என்ற அவனின் மனதின் கேள்விக்கு

   ‌  ‘ஆமா அந்த சமயத்தில நீ இதெல்லாம் விலாவரியா யோசிக்கிற நிலைலையா இருந்த கௌதம். ஆமா இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்’ என்று அவனே கௌன்டர் கொடுத்து கொண்டான்.

      கௌதம் அமைதியாக இருக்கவும் ஆருவே‌ தொடர்ந்தாள். “என்ன எப்படி எனக்கு இதுலாம் தெரியும்னு மண்டை வெடிக்குதா கௌதம்.

      நான் ஒரு உண்மைய சொல்லட்டா. நான் தான் அந்த ஏரியால உள்ள எல்லா கேமராவையும் ஹேக் செஞ்சேன்.

      அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நான் உங்களுக்கு முன்னாடியே அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன். ஆனா நீங்க தான் எதையும் கவனிக்கலை.

      அன்ட் உங்களை பார்க்கவுமே நீங்க எமோஷனல் ஆகிட்டீங்கனு புரிஞ்சுக்கிட்டேன். அதான் நான் உங்கள டிஸ்டர்ப் செய்யாம சைலன்டா இருந்தேன்.

      அப்புறம் போலீஸ் வரதை பார்க்கவும் தான் உங்கள பெட்க்கு கீழ இழுத்துட்டு போனேன்” என்று முடித்தாள் அன்று நடந்தவைகளை கூறி.

     அனைத்தையும் கேட்ட கௌதமிற்கு தான் ஆச்சரியமும் அன்பும் அதிகமாய் அவன் ருத்ரா மீது பெறுகியது. சிறிது நேர அமைதிக்கு பின் “சரி ருத்ரா நான் இப்ப ஒத்துக்கிறேன் நீ உண்மையாவே ஜீனியஸ் தான்னு.

      ஆமா எப்படி ஹேக்கிங்லா கத்துக்கிட்ட” என்றான் சிரித்தபடி. ஆருவும்‌ அவன் நிலை உணர்ந்து “அது சும்மா ஜாலிக்காக கத்துக்கிட்டேன்.

      உண்மைய சொல்லனும்னா என் பிரண்ட்ஸ் ஒரு பெட் வச்சாங்க யார் காலேஜ் சிஸ்டம ஹேக் பண்றதுன்னு. ஆனா தப்பாலா எதுவும் செய்யல.

     சும்மா ஸிஸ்டம் உள்ள போய்ட்டு வரனும் அவ்ளோ தான். அப்ப ஸ்டார்ட் ஆச்சு. இப்ப இவ்ளோ தூரம் வந்துருக்கு.

      அப்ப இப்படி ஆரம்பிச்சது அது ஏதோ ஒரு ரீசன்காகன்னு இப்ப புரியுது” என்றாள் ஆரு‌ பெருமூச்சு ஒன்றை விட்டு. “சரி ருத்ரா எதுக்கு இப்ப கால் செஞ்ச அதை சொல்லு.

      வேற பேசிட்டு இருந்துட்டோம்” என்றான் நினைவு வந்தவனாக கௌதம். அதற்கு “அது கௌதம் இப்ப சொல்லலாம்னு தான் போன் செஞ்சேன்.

      பட் ஒரு நாளைக்கு ஒரு சப்பிரைஸ் தான். சோ நான் நாளைக்கு நேர்ல உங்களை பார்க்க உங்க வீட்டுக்கு வரேன் அப்ப அந்த செகண்ட் சப்பிரைஸ் ரிவீல் பண்றேன்.

       ஓகே. பாய் கௌதம். குட் நைட்” என்ற ஆரு‌, கௌதம் “ஹே ருத்ரா ருத்ரா ஒன் மினிட்” என்று கூப்பிட கூப்பிட தன் அலைபேசியை அணைத்து விட்டாள் சிரிப்புடன்.

     அந்த புறம் கௌதமிற்கு ‘அது என்ன சர்பிரைஸா இருக்கும்’ என்று தலை வெடித்தது. ஆனால் இருவருக்கும் இந்த உரையாடல் மனதிற்கு இதம் தந்தது என்னவோ உண்மை.

      வாழ்வில் ஒருவர் மற்றவரின்‌ அருகாமையில் தான் அன்பு அரவணைப்பை உணர முடியுமா என்ன.

      தன் குரலாலும் தொலைவில் இருந்தே அந்த அன்பையும் ஆதரவையும் தர முடியும் என இருவரும் அறிந்து கொண்டனர் அந்த நிமிடத்தில்.

      பின் மனம் முழுவதும் நிறைந்த மகிழ்வுடன் உறங்க சென்றனர். அடுத்த நாள் கண்டிப்பாக சத்யாவின் விஷயத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என இருவரும் நம்பினர்.

       மறுநாள் காலை ஆருத்ரா அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தாள். பார்த்த தோழிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

      அவளிடம் வந்த அணு “ஏய் ஆரு‌ எங்க பா கிளம்பிட்டு இருக்க அதுவும் இவ்வளவு ஏர்லியா. ஆபிஸ்க்கு போக தான் டைம் நிறைய இருக்கே” என்றாள்.

     கிளம்பிக் கொண்டே ஆரு‌ “அது கொஞ்சம் வெளியே வேலை இருக்கு அணு அதான் சீக்கிரம் போறேன். ஹாப் டே பர்மிசன் போட்ருக்கேன்.

      சோ அந்த வேலையை முடிச்சிட்டு அப்படியே ஆபீஸ் வந்திருவேன் டோன்ட் வொர்ரி. நீங்க கிளம்பிருங்க” என்றவள் தான் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் எல்லாம் சரியாக உள்ளதா என பார்த்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாள்.

      “வாட் ஹாப் டே லீவா. அப்படி லீவ் போட்டுட்டு செய்ற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கு உனக்கு. அதுவும் எனக்கு தெரியாம” என்றாள் இவள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த மீரா.

      மீரா மற்றும் மற்ற இரு தோழிகளையும் ஒரு பார்வை பார்த்த ஆரு‌ “இங்க பாரு மீரா நான் எதாவது தப்பு பண்றனா என்ன. இப்பலாம் எப்ப பாரு நிக்க வச்சு கேள்வி கேக்கறதையை வேலையா வச்சிருக்க நீ.

     சும்மா சும்மா இப்படி என்னை டார்சல் பண்ணாத. பிளீஸ் என்ன விட்டுரு மீரா நான் கிளம்பறேன். உன்கிட்ட பேச எனக்கு தெம்பு இல்லை” என்று சொல்லி கிளம்பி விட்டாள் ஆரு.

     மீரா மற்றும் இரு தோழிகளும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டனர். தன்னை வார்த்தையால் காயப்படுத்தி செல்லும் தோழியை வேதனையோடு பார்த்திருந்தாள் மீரா.

      அவளை கண்ட தோழிகள் “ஹே மீரா கூல் டா. அவ ஏன் இப்படி பண்றானு தெரியலை டா” என்று அவளை சமாதானம் செய்தனர்.

      “ஹே அதுலாம் ஒன்னும் இல்லை. ஐம் ஆல்ரைட் கைஸ். நான் இப்ப வந்தர்ரேன்” என்று சொல்லி மீராவும் வெளியே கிளம்பினாள்.

      பார்த்த தோழிகளுக்குமே மனம் கனத்தது‌. “ஒரு வேளை நம்ம கண்ணே பட்டுருச்சுனு நினைக்கிறேன் அணு. எப்படி இருந்த ரெண்டு பேரும் இப்ப இப்படி சண்டை போட்டுகிறாங்க.

     கஷ்டமா இருக்கு டா” என்று வினிதாவும் வருத்தப்பட்டாள். “ம்ம் ஆமாம்” என்றாள் அணுவும் பதிலாக. அங்கே வெளியே வந்த ஆருவிற்கும் மனது மிகவும் வலித்தது.

      அவள் இதுவரை மீராவிடம் இப்படி கடுமையாக பேசியது இல்லை. எனவே அவளிடம் நிச்சயம் சாயந்திரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்தாள்.

      பின் ஒரு ஆட்டோ பிடித்து கௌதமின் இல்லம் நோக்கி சென்றாள். அவளை தொடர்ந்து வந்த மீரா‌ ஆரு ஒரு ஆட்டோவில் செல்வதை பார்த்தாள்.

     பின் தானும் ஒரு ஆட்டோவை பிடித்து அவளை பின் தொடர சொல்லி சென்றாள். அவள் முதல் நாளே எடுத்த முடிவின் பயனாக.

      ஆரு அப்படி எங்கே செல்கிறாள் என இன்று கண்டு பிடித்து விட வேண்டும் என்ற முடிவு தற்போது அவள் தன்னை திட்டிய பேச்சில் வலுப்பெற்றது.

      ஆட்டோ செல்லும் பாதையை பார்த்தவள் ‘இவ என்ன நம்ம ஆபீஸ் வீடுனு ரெண்டுக்கும் அப்படியே ஆப்போசிட்ல போறா.

      அப்படி யாரை பார்க்கப் போறான்னு தெரியலையே. இதை மறைக்கத்தான் என்னை திட்டுனாளா’ என யோசித்து கொண்டு இருந்த மீரா எதிரில் செல்லும் ஆட்டோவை தவற விட்டாள்.

     திடீரென ஆட்டோ டிரைவர் கூப்பிடவும் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவள் “ஆன் என்ன அண்ணா” என்றாள்.

     “அது முன்னாடி போய்கிட்டு இருந்த ஆட்டோவ இப்ப காணோம் மா. நாம தவற விட்டுட்டோம்” என்றார். “என்ன அண்ணா எப்படி தவற விட்டீங்க.

      எங்க போனான்னு தெரியலையே. இப்ப என்ன பண்றது” என தனக்குள் புலம்ப ஆரம்பித்தாள். பின் தான் செய்ய ஒன்றுமில்லை என்று உணர்ந்தவுடன் ஆட்டோகாரரை வண்டியை மறுபடியும் தன் வீட்டிற்கே திருப்ப சொல்லி சென்றாள் மீரா.

-தொடரும்

Advertisement