Advertisement

தூறல் – 15
கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட,
காற்றும் ஆசை கொள்ளுதடி;
ஏனோ அதனால் தான் காற்றும்,
உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?
     ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்தாள். ஒரு முடிவில் தன் யோசனையை கைவிட்ட ஆரு கௌதமை நோக்கினாள்‌
      “கௌதம்” என்று அழைத்தும் தன்னை பார்த்து கொண்டே ஏதோ யோசனையில் இருந்த கௌதமை வித்தியாசமாக பார்த்தாள் ஆரு‌.
     ‘சரி அவரும் இந்த கொலை எப்படி நடந்ததுனு யோசிக்கிறார் போல’ என எண்ணிய ஆரு “கௌதம்” என்றாள் சத்தமாக. ஆரு அழைத்ததில் அவனை சுற்றிய மாயவலையை அறுத்தது.
      “ஆங்… ஆ என்ன ருத்ரா. என்ன சொன்ன” என்றான் கௌதம். “என்னாச்சு கௌதம் உங்களுக்கு என்ன யோசிச்சீங்க. நான் கூப்டத கூட கவனிக்காமா” என்றாள் ஆரு.
    “அது ஒன்னும் இல்லை ருத்ரா சும்மா தான். நீ சொல்லு இவ்ளோ நேரம் என்ன யோசிச்ச” என்றான் தன் தடுமாற்றத்தை மறைத்தவாறு.
     “நீங்க சொன்னத தான் ஒன்னோடு ஒன்னு கனெக்ட் பண்ணி பாத்தேன் கௌதம். இதுல நீங்க கொஞ்சம் முயற்சி செஞ்சு ஸ்டெப் எடுத்தா,
      நமக்கு இந்த கேஸ்ல கிளாரிபிக்கேசன் கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு” என்றாள் ஆரு. அவளை குழப்பமாக ஏறிட்ட கௌதம்
     “நீ என்ன சொல்ல வர ருத்ரா எனக்கு புரியல. இதுல நான் என்னால முடிஞ்ச ஸ்டெப் எடுத்துட்டு தான் இருக்கேன். உனக்கே தெரியும்ல” என்றான் இயலாமையுடன்.
     “கௌதம் நீங்க தான் சத்யாவோட பெஸ்ட் ஃபிரண்ட். இன்னும் சொல்ல போனா ஆல்மோஸ்ட் டென் இயர்ஸ் நீங்க உங்க ஃபிரண்ட் கூட ஸ்பென்ட் பண்ணி இருக்கீங்க.
     சோ சத்யா உங்கிட்ட மோஸ்ட்லி எல்லாத்தையும் சொல்லி இருப்பார். அப்ப அவர் ஸ்கூல் மேட் ஆர் இடையில இண்டர்டுயூஸ் ஆன ஃபிரண்ட் இந்த மாதிரி யாராவது ஐ.பி.எஸ் ஆபிசரா இருக்கறத உங்கிட்ட சொல்லி இருக்கலாம்.
     ஜஸ்ட் நீங்க நல்லா உங்க மெமரிய நல்லா ரீவைண்ட் பண்ணி பாருங்க. உங்களுக்கு தெரியாம போக சான்ஸே இல்ல” என்றாள் ஆருத்ரா.
     “நீ சொல்றது சரிதான் ருத்ரா. அவன் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருவான் எதையும் மறைச்சது இல்லை.
     ஆனா அதுமாதிரி அவன் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் பத்தி நான் அவ்வளவா அவன்கிட்ட கேட்டதும் இல்லை அவன் சொன்னதும் இல்லை மா” என்றான் கௌதம் தலையை பிடித்து கொண்டு.
     “கௌதம் ஒரு நிமிஷம் என்னை பாருங்க” என அவன் தாடையை பிடித்து நிமிர்த்தினாள் ஆரு. அவனின் இந்த வருத்தம் சுமந்த முகம் ஏதோ செய்தது அவளை.
     “கௌதம் ரிலாக்ஸ். நான் சொல்ற மாதிரி யோசிச்சு பாருங்க. சத்யா உங்ககிட்ட அவர் ஃபிரண்ட் யாராவது இந்த காம்படீடிவ் எக்சாம்க்கு படிக்கிறாங்க அந்த மாதிரி சொல்லிருக்காரா‌.
     இப்படி யோசிங்க. நான் என்ன சொல்றேன்னு புரியுதா” என்றாள் ஆரு கௌதமின் முகம் கண்டு கெஞ்சலாக. அதை கேட்ட கௌதமும் சத்யா தன்னிடம் எப்போதாவது அப்படி சொல்லி இருக்கானா என யோசிக்க ஆரம்பித்தான்.
     அவன் நினைவுகள் கடந்த பத்து ஆண்டுகளாக சத்யாவோடு கழித்த நாட்களை எண்ணி பார்த்தது. அவன் தன்னிடம் அது போல் ஏதும் கூறி இருக்கிறானா என பலவாறு யோசித்து பார்த்தான் கௌதம்.
     அவன் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல் வந்து சேர்ந்தார் ரேவதி. “என்னடா கண்ணா ரொம்ப யோசிக்கிற‌. எந்த கோட்டைய பிடிக்க போற” என்றார் கிண்டலாக.
     “அம்மா கொஞ்சம் சும்மா இரேன். நாங்க முக்கியமான ஒரு விஷயத்தை பேசிட்டு இருக்கோம். நீ இடையில பூந்து‌ கலைச்சு விட்ராத” என்றான்‌ முன்னெச்சரிக்கையாக.
     இல்லையெனில் ரேவதி கதை பேச அமர்ந்து விட்டால் அனைத்தையும் குழப்பி விட்டு சென்று விடுவாரே. “சரி சொல்லு நானும் எனக்கு தெரிஞ்ச எதாவது யோசனை சொல்றேன்” என்றார் ரேவதி.
     “ஐயோ அம்மா நீ முதல்ல கிளம்பு இருக்கறதையும் குழப்பி விடாம” என்றான் கௌதம். இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆரு
      “ஆன்டி கௌதம் சும்மா சத்யாவோட ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துட்டு இருக்காரு” என்றாள். “உனக்கும் அவனை தெரியுமா தங்கம். அவன் நல்ல பிள்ளை டா.
     திடீர்னு இப்படி ஆக்சிடென்ட்ல போவானு எதிர்பாக்குல” என்றுவிட்டு “ஆமா எதுக்கு அவன் பிரண்டலாம் எதுக்கு மா லிஸ்ட் எடுக்குறீங்க” என்றார்.
      “அது ஒன்னும் இல்லை ஆன்டி சத்யாவோட காரியத்துக்கு சிலர கூப்படலானு கௌதம் நினைக்கிறாரு அதான்” என்றாள் ஆரு விளக்கமாக.
     “கூப்பிட வேண்டியது தானே அதுக்கு ஏன் இவன் தலைல கைய வச்சிட்டு உக்காந்துட்டு இருக்கான்” என்றார் ரேவதி கேள்வியாக.
     “அது ஆன்டி சத்யாவோட பெஸ்ட் பிரண்ட் ஒருத்தர் போலீஸா இருக்கார். அவரை கண்டிப்பா இன்வைட் பண்ணி ஆகனும். ஆனா அவர் பேரு மறந்து போச்சு. அதான் யோசிக்கிறார்”
     என்று விளக்கிக் கொண்டிருத்த ஆருவையும்‌ கேள்வி கேட்ட அன்னையையும் முறைத்து கொண்டு இருந்தான் கௌதம். தன் மகனை கண்ட ரேவதி இதற்கு மேல் ஏதேனும் கேட்டாள் அவ்வளவு தான் என் எண்ணினார்.
     ஆனால் அவரின் வாய் அப்போதும் சும்மா இராமல் “என்ன பேரு பொல்லாத பேரு. இப்ப வைக்கிறதுலா பேரானே.
       எனக்கு போலீஸ் பேருனா சும்மா விஜய் குமார், வெற்றி மாறன் இப்படி இருக்கனும். அப்பதான் நல்லா கெத்தா இருக்கும்” என்று கூறி விட்டு ஓடிவிட்டார்.
     இருந்தால் தன் மகனிடம் யார் வாங்கி கட்டி கொள்வது. தன் அன்னையை அதுவரை முறைத்து கொண்டிருந்த கௌதமின் முகம் அப்போது பளிச்சிட்டது.
     “எஸ் ஐ காட் இட் ருத்ரா. ஐ காட் இட். அம்மா தேங்க்ஸ் மா. லவ் யூ மா” என்றான் சென்ற தன் அன்னையிடமும் அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆருவிடம்‌.
       “என்ன என்ன கண்டுபிடிச்சீங்க” என்றாள் ஆருத்ராவும் ஆர்வமாக. “சத்யா நாங்க வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒரு டைம் சொன்னான். அவன் ஃபிரண்ட் ஒருத்தன் சிவில் சர்வீஸ் எக்சாம் எழுத போறான்னு.
     ஒரு வேளை அவனா கூட இருக்கலாம்” என்றான் கௌதம் மகிழ்வுடன். “எப்படி ஞாபகம் வந்துச்சு” என்ற ஆருவின் கேள்விக்கு “எல்லாம் என் அம்மாவால தான்” என்றான் கௌதம் சிரிப்புடன்.
      புரியாது பார்த்த ஆருவிடம்‌ “அந்த ஃபிரண்ட் நேம் மாறன்” என்றான். இப்போது ஆருவிற்கு புரிந்தது ஏன் தன் அன்னையை காரணம் சொல்கிறான் என.
      “ஹலோ முகில் நான் தான் மாறன்” என்று ஆரம்பித்தான் மாறன். “சொல்லுங்க மாறன் என்ன விஷயமா கால் பண்ணி இருக்கீங்க” என்ற முகிலனின்‌ கேள்விக்கு,
     “முக்கியமான விஷயம் தான் முகில். அந்த பிரசாத் நேத்து வந்திருந்தான். அவனுக்கு நான் இந்த கும்பல்ல இருக்கிறது தெரிஞ்சு போச்சு” என்றான் மாறன்.
     “என்ன சொல்றீங்க மாறன். எப்படி அவனுக்கு தெரிய வந்துச்சு” என்று கேட்டான் முகிலன். “உங்க கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து தான் விஷயம் வெளிய வந்திருக்கு முகில்.
     பிரசாத்தும் அததான் சொன்னான். அவனுக்கு வேண்டிய ஆள் உங்க ஆபிஸ்ல இருக்கிறதா. அங்க என்ன நடக்குது முகில்” என்றான் கோபமாய் மாறன்.
     “கூல் மாறா. அது யார்னு நான் கண்டு பிடிக்கிறேன். நீங்க கொஞ்சம் கேர்புல்லா இருங்க. மாட்டிக்காதீங்க ஓகே” என்று முடித்தான் முகிலன்.
     “உங்களுக்கு இதை  பண்ண தான் இப்ப காண்டேக்ட் செஞ்சேன்‌. அதை யார்னு பாருங்க முகில். இப்படியாபட்ட ஆட்கள் டிபார்ட்மெண்ட் உள்ள இருக்க தேவையில்லை” என்றான் கோபம் குறையாதவனாய்.
     “கண்டிப்பா மாறா நீங்க டென்சன் ஆகாதீங்க. நான் பாத்துக்கிறேன். அப்புறம் பிரசாத் அந்த பசங்கல ஏன் இன்னும் அடைச்சு வச்சிருக்கான்னு எதாவது தெரிஞ்சுதா” என்றான் கேள்வியாக.
    “அதுதான் என்னன்னு ஒன்னும் புரியல முகில். நான் அந்த குமார் கிட்ட கூட அப்படி இப்படின்னு கேட்டு பாத்தேன். ஆனா அவனுக்கே ஒன்னும் தெரியலை.
     பிரசாத் அதை மட்டும் யார்கிட்டேயும் சொல்லாம இருக்கான். பசங்கல கூட்டிட்டு போறப்ப நம்ம தப்பிக்க வச்சது வேற அவனுக்கு ரொம்ப சந்தேகத்தை குடுத்துருச்சு.
      அதனால அவன் யாரையும் நம்ப மாட்டேங்குறான். எல்லாத்தையும் சந்தேகப்படுறான். சோ அந்த டீடெயில் மட்டும் கலெக்ட் பண்ண முடியலை முகில்.
      அப்புறம் அந்த ஆப் பத்தி சொன்னனே. அதை ஹேக் பண்ண முடிஞ்சுதா. அவன் பசங்க லிஸ்ட் ஏத்திட்டே போறான். அது என்ன ஆச்சு முகில் ” என்றான் மாறன்.
      “நம்ம டிபார்ட்மெண்ட் சாப்ட்வேர் டீம் அதை தான் பாத்துட்டு இருக்காங்க மாறா. அவன் ரொம்ப ஸ்டார்ங்க ஆப்ப பில்ட் பண்ணிருக்கான். சோ டைம் எடுக்குது. முடிஞ்ச அளவு சீக்கிரம் முடிக்க சொல்றேன்” என்ற முகில்
      “அன்ட் நீங்க எப்பவும் அலார்டா இருங்க மாறன். சின்ன சந்தேகம் கூட உங்க மேல வராம பாத்துக்கங்க. ஏனா நீங்க என்னோட ஃபிரண்டும் தான். உங்க சேஃப்டியும் எனக்கு ரொம்ப முக்கியம்.
       அந்த பசங்க விஷயம் தெரிஞ்ச உடனே நாம ஆக்சன்ல இறங்கிறலாம். அப்பதான் பசங்களையும் நாம சேவ் பண்ண முடியும். ஓகே” என்று தன் முடிவை சொன்னான் முகிலன்.
      “ஓகே முகில். இங்க நான் பாத்துக்கிறேன். நான் ரொம்ப நேரம் வெளிய இருந்தா சந்தேகம் வந்துரும் நான் உள்ள போறேன். இப்ப வச்சிடுறேன் முகில்” என தன் அலைபேசியை அனைத்தான் மாறன்.
     பின் தன்னை சுற்றி யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து விட்டு யாரும் இல்லையென உறுதி செய்து கொண்டு சென்றான் மாறன்.
      அங்கே கமிஷனர் அலுவலகத்திலோ முகிலன் ‘யாரா இருக்கும். நம்ம கூடவே இருந்துகிட்டு நமக்கே துரோகம் செய்றது.
      எப்படி கவனிக்காம விட்டோம். யார் இந்த வேலையை பாக்குறதுனு முதல்ல கண்டு பிடிக்கனும்’ என எண்ணி கொண்டான்.
      இனி அனைவரையும் சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டும் என்ற முடிவும் எடுத்துக் கொண்டான். இவர்கள் இங்கே இப்படி முடிவு செய்ய,
       அங்கே ஆரு தான் கண்டுபிடித்ததை கூற கௌதமிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள். ‘என்ன ருத்ரா கால் பண்றா என்ன விஷயமா இருக்கும்’ என்ற யோசனையோடு அலைபேசியை காதிற்கு கொடுத்தான்.
       அந்த புறம் ஆரு சொல்லிய செய்தியில் தன் நண்பனை கொன்றவர்களை நோக்கி தாங்கள் முதல் அடி எடுத்து வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தான் கௌதம். அதில் இருக்கும் ஆபத்தை அறியாது.
-தொடரும்

Advertisement