Advertisement

தூறல் – 13
வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய்,
என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா?
அல்லது அந்த எண்ணங்களை என்னுள்,
விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?
      “ருத்ரா.. ஹேய் ருத்ரா” என அதிர்வுடன் நின்றிருந்த ருத்ராவின் முன் தன் கையை ஆட்டினான் கௌதம். “என்னாச்சு ஏன் இப்படி பாக்குற” என்றான்.
     “ஆன்… அது நீ நீங்க என்கிட்ட என்ன கேட்டீங்க” என்றாள் ஆருத்ரா தடுமாற்றத்துடன். அவளிடம் அப்படி என்ன தப்பா சொன்னோம் என்று யோசித்தான் கௌதம். 
      பின் அவள் தான் கூறியதை தவறாக புரிந்து கொண்டு இருப்பாள் போல் என்பதை புரிந்து கொண்டான். அவளின் தயக்கம் எதனால் என்று புரிந்த கௌதம் 
      “உங்கள என்னோட வீட்டுக்கு இன்வைட் பண்ணுறேன். டோன்ட் வொர்ரி வீட்ல எங்க அம்மா இருக்காங்க. சோ நீங்க பயப்பட வேண்டாம்” என்றான் சிரிப்புடன்.
      அவனை தான் தவறாக புரிந்து கொண்டோம் என்று உணர்ந்த ஆரு “சாரி என்ன விஷயம்னு நீங்க சொல்லாம  திடீர்னு வீட்டுக்கு கூப்பிடவும்” என்று இழுத்தாள் ஒரு அசட்டு புன்னகையுடன். 
     “என்ன என்னைய தப்பா நினைச்சிடீங்களா. பரவாயில்லை இதுல என்ன இருக்கு. இப்ப உலகம் இருக்க நிலைமைல யாரையும் எடுத்த உடனே நம்பினா தான் தப்பு.
     சந்தேகப்பட்டு கேள்வி கேக்குறது கரெக்ட். அதனால நீங்க இதுல அன் ஈசியா பீல் பண்ண ஒன்னும் இல்லை” என்றான் கௌதம் அவளை புரிந்தவனாய்‌.
     “அன்ட் நீங்க இன்னும் என்னை இன்வைட் பண்ணுறதுக்கான ரீசன் சொல்லல கௌதம்” என்றாள் கேள்வியாக. “அது..” என்று இழுத்து விட்டு “வீட்ல போய் பேசிக்கலாமே. இங்க வேண்டாமே புரிஞ்சுக்க ருத்ரா பிளீஸ்” என்றான் தயக்கமாக. 
     “அவன் ஏதோ முக்கியமான விஷயத்தை தன்னிடம் பகிரவே எண்ணுகிறான் போல. அது இங்கே வைத்து பகிரும் விஷயம் இல்லை போல” என்று அவனின் எண்ணத்தை சரியாக புரிந்த ஆரு‌ “ஓகே” என்றாள் புன்னகையுடன்.
     “வா ருத்ரா என் பைக்கிலே போகலாம். உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே” என்றான் கௌதம் ஆருவிடம்‌. “அதுலாம் ஒன்னும் இல்லை கௌதம். 
     அப்புறம் அன்னைக்கு கூட நீங்க தானே பத்திரமா என்னை வீட்டில‌ விட்டீங்க. உங்கள நான் நம்புறேன் கௌதம். பைக்லையே போகலாம்” என்றாள் ஆரு கௌதமை அறிந்தவளாக.
     தன்னை பற்றிய ருத்ராவின் எண்ணத்தை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் கௌதம். பின் ஆருத்ராவை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான் அவன். 
      அவன் வரும் போது இருந்த மனநிலை தற்போது அப்படியே மாறியது போல் இருந்தது. ருத்ராவின் அருகாமை அவனின் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. 
      அவளிடம் ஏன் தன் மனம் பெரிதும் ஆறுதல் தேடுகிறது என அவன் உணரவில்லை. ஆனால் உணரும் நாள் வெகு அருகில் வரப் போவதையும் அவன் அறியவும் வாய்ப்பில்லை.
      அதே குதூகலமான மனநிலையுடன் அவளுடன் தன் வீட்டின் முன் சென்று நின்றான் கௌதம். அப்போது தான் அவனுக்கு தன் அன்னையின் நினைவே வந்தது.
      ‘ஐயையோ இதை எப்படி நான் மறந்தேன். இந்த அம்மா ஒரு பொண்ணை பார்த்தேனு நான் சொன்னதுக்கே கடத்தல் வரைக்கும் போச்சு.
     இப்ப இவளை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கேன். என்ன செய்ய போறாங்களோ’ என மனதிற்குள் புலம்பியவன் ஆருவிடம்‌ எச்சரிக்கை செய்யலாம் என எண்ணி திரும்புவதற்குள்,
     ஆரு யோசனையாக நின்ற கௌதமை கண்டு ‘சரி நாமலே காலிங் பெல்லை அழுத்துவோம்’ என்று மணியை அழுத்திவிட்டாள்.
     ரேவதியும் உடனே கதவை திறந்து விட்டார். மற்ற தாயாக இருந்தால் வெளியே தன் மகன் ஒரு பெண்ணுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சண்டை இடுவர் குறைந்தது யாரென கேட்டிருப்பர்.
     இங்கு ரேவதியும் அதிர்ச்சி அடைந்தார் தான்‌. ஆனால் ஆனந்த அதிர்ச்சி. தன் மகன் ஒரு பெண்ணுடன் நிற்கவும் அவள் தன் மகன் விரும்பும் பெண்ணாக தான்‌ இருப்பாள் என்று வழக்கம் போல் ஒரு முடிவுக்கே வந்து விட்டார் ரேவதி. 
       கௌதம் அவள் யாரென அறிமுகப்படுத்தும் முன் “கௌதம் கண்ணா பரவாயில்லை டா நீ தேரிட்ட” என கௌதமை நோக்கி சொல்லி விட்டு “நீ வலது கால் எடுத்து வச்சு உள்ள வாமா” என்றார் ஆருவிடம்‌.
     ஆனால் அதற்கும் அவளுக்கு அந்த வாய்ப்பலிக்காது அவளை தானே கையே பிடித்து அழைத்து வந்தார். “ஆமா உன் பேர் என்னம்மா தங்கம்” என்றார் கன்னத்தில் கை வைத்து திருஷ்டி கழித்தவாறு.
     “என் பேரு ஆருத்ரா ஆன்டி” என்று ஆருவின்‌ பதிலிற்கு ரேவதி திரும்பி கௌதமை ‘என்கிட்ட பொய் சொல்லிட்டல டா மகனே’ என்று ஒரு பார்வை பார்த்து வைத்தார்.
      ‌ “அம்மா” என்று ஆரம்பித்த கௌதமை கை நீட்டி தடுத்து விட்டு ஆருவை‌ நோக்கி திரும்பி “அழகா லட்சணமா இருக்க டா. அப்புறம் ஆன்டிலாம் வேணாம் தங்கம், சும்மா அத்தைனே கூப்பிடு என்ன” என்றார் வாஞ்சையுடன்.
      அவரை புரியாத பார்வை பார்த்த ஆரு‌ எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள். இதற்கு மேலே தன் அன்னையை பேச விட்டாள் அவ்வளவு தான் என்று உணர்ந்த கௌதம்,
     “அம்மா எங்களுக்கு குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரியா. ரொம்ப டயர்டா இருக்கு” என்று தன் அன்னையை ஆருவிடம்‌ இருந்து அப்புறப்படுத்த நினைத்து சொன்னான்.
     “அட இருடா மகனே. கொஞ்ச நேரம் நான் என் மருமகள்ட் பேசக் கூடாதா. நீ மட்டும் தான் பேசுவியா என்ன. உனக்கு ஏன்டா இவ்ளோ பொறாமை” என கௌதமை முறைத்தார் ரேவதி.
     தன் அன்னையை நினைத்து தலையில் அடித்துக் கொண்ட கௌதம் “மா தயவு செஞ்சு போய் எங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரியா” என்றான் பல்லை கடித்து கொண்டு.
      தன் மகனை முடிந்த அளவு முறைத்து விட்டு ஆருவை‌ பார்த்து “இருடா தங்கம் நான் போய் காபி எடுத்துட்டு வர்றேன். நான் யார்கிட்டேயும் பேசுனா அவனுக்கு பொறுக்காது” என்று திட்டி விட்டு சென்றார்.
      தன் அன்னை சென்றவுடன் ஆருவிடம்‌ “சாரி ருத்ரா என் அம்மா கொஞ்சம் ஆர்வ கோளாறு. நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் நாம லவ் பண்றோம்னு நினைச்சு இப்படி பேசிட்டு போறாங்க.
      ரியலி சாரி ருத்ரா” என்றான் சங்கடத்துடன். அப்போது தான் ஆருவிற்கு புரிந்தது ஏன் கௌதமின் அன்னை தன்னிடம் அப்படி நடந்து கொண்டார் என.
     “ஏன் நீங்க இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததே இல்லையா” என்றாள் கேள்வியாக. “இல்லை ருத்ரா எனக்கும் பொண்ணுங்களுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்.
      என்னமோ எனக்கு இந்த வேலை பிடிச்ச அளவு வேற எது மேலையும் இன்ட்ரஸ்ட் வரலை. என் அம்மா மேரேஜ் பண்ணிக்க சொல்லியும் நான் அவங்கல கண்டுக்கல.
      அதனால நான் எந்த பொண்ணை பத்தியாவது பேசுனாலே போதும் சம்மந்தம் பேசட்டானு கேட்பாங்க. இதுல உன்ன நான் வீட்டுக்கே கூட்டிட்டு வரவும் இப்படி நினைச்சிட்டாங்க‌. அகைன் ரியலி சாரி ருத்ரா” என்றான் கௌதம்.
      இவர்கள் இங்கு பேசிக் கொண்டு இருக்கும் போதே ரேவதி காஃபியோடு வந்துவிட்டார். “எடுத்துக்கடா தங்கம்” என்று கொடுத்து விட்டு 
      “சரி மா நீயும் என் பையனும் எப்பைல இருந்து லவ் பண்றீங்க. நான் எப்ப உங்க வீட்டுக்கு வந்து பேசட்டும்” என்றார்.
      அவள் கௌதமை திரும்பி பார்த்தாள். அங்கே அவன் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அதை சிரிப்புடன் பார்த்து விட்டு “ஆன்டி ஆன்டி ஒரு நிமிஷம்.
     நான் உங்க பையனோட ஃபிரண்ட் மட்டும் தான். நாங்க லவ்லாம் பண்ணலை.‌ அன்ட் உங்க மனசு புரியுது நான் உங்க பையன்கிட்ட கண்டிப்பா இத பத்தி பேசறேன். ஓகேவா” என்றாள் ஆதூரமாய்.
     “ஓஓஓ ஃபிரண்ட் மட்டும் தானா” என்றார் ஏமாற்றத்துடன். பார்த்த இருவருக்கும் ஏதோ போல் ஆகி விட்டது சட்டென அவர் முகம் மாறிய விதத்தில். “அம்மா பிளீஸ் எப்பவும் நீங்களே இப்படி ஒரு முடிவுக்கு வந்து அப்செட் ஆகுறீங்க.
      பர்ஸ்ட் நான் என்ன சொல்ல வரேன்னு கேட்டுட்டு அப்புறம் பேசுங்க. அம்மா பிளீஸ் முகத்தை இப்படி வச்சிக்காதீங்க” என்றான் கௌதம் தன் அன்னையை அனைத்தவாறு.
     ஒரு வழியாக சமாதானம் அடைந்த ரேவதி “போடா போக்கத்தவனே நான் எங்க பீல் பண்ணுனேன். ரேவதி சோகமா இருந்தா வரலாறு தப்பா பேசாதா டா. அதுலாம் ஒன்னும் இல்லை.
     தங்கம் நீ போறப்ப அவனுக்கு நல்லா புத்தி சொல்லிட்டு போமா. அவன் ஒரு கல்யாணத்த செஞ்சானா நான் நிம்மதியா இருப்பேன்ல” என்று ஆருவிடம் தன் மனக் குமறலை சொல்லி கௌதமை முறைத்து விட்டு சென்றார்.
     “சாரி ருத்ரா” என்றான் மீண்டும் கௌதம்.‌ “பரவாயில்லை கௌதம். ஆனா அம்மா சொல்றதையும் கேட்கலாம்ல. பாவம் அவங்க எப்படி அப்செட் ஆனாங்க பாத்திங்கல” என்றாள் ஆரு‌. 
      “நீயுமா‌. ம்ம் எனக்கும் புரியுது தான் ருத்ரா. அம்மாட்ட நான் பேசிக்கிறேன். அதை விடு நான் எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்தேனு கேக்க மாட்டியா” என்றான் கௌதம்.
      “ஆமா சொல்லுங்க கௌதம். நானும் பீச்ல இருந்து கேட்டுட்டு தான் இருக்கேன். நீங்க தான் இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க” என்று விட்டு “சத்யா பத்தின நியூஸ் எதுவுமா” என முடித்தாள் ஆரு‌. 
     “எஸ் ருத்ரா இது சத்யா பத்தின நியூஸ் தான். அதான் என்னால ஜஸ்ட் லைக் தட்னு எங்கையும் பேச முடியலை. அந்த அளவுக்கு கொஞ்சம் சீரியஸ் கூட. என்னால யார்கிட்டேயும் இதை ஷேர் கூட பண்ண முடியாது.
      யாரையும் நம்பவும் முடியல ருத்ரா. இதே இது நீனா எனக்கு பிரச்சினை இல்லை. உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. சோ அதான் வீட்டுக்கு போலாம்னு சொன்னேன்” என்றான் கௌதம். 
     ‘தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து உள்ளானுனா’ என்று எண்ணிய ஆருவிற்கு சொல்ல முடியாத இதம் மனதினுள் சாரலாய் பரவுவியது.
     “என்ன நடந்துச்சு கௌதம்” என்றாள் ஆரு தன்னை மீட்டு கொண்டு. “சத்யா யாரையோ பார்க்க போய்ட்டு வரப்ப தான் மிஸ் ஆகி இருக்கான்” 
      என அவன் தனக்கு கிடைத்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவும் அவள் முகம் ஏதோ யோசனையை தத்தெடுத்தது.
      அவளின் அமைதியை கண்ட கௌதம் யோசனையின் போது அவள் முகம் காட்டும் வர்ணஜாலத்தை தன்னை மறந்து பார்த்திருந்தான். இதில் தூரத்தில் இருந்து தன்னையே குறுகுறுவென பார்த்தா அன்னையை அவன் கவனிக்கவில்லை.
      ‘உன்னை எனக்கு தெரியாதா மகனே. சீக்கிரம் நீயே என்கிட்ட வந்து சொல்லுவ பாரு’ என அவனை கண்ட ரேவதி மகிழ்வுடன் எண்ணி கொண்டு தன் அறைக்கு சென்றார்.
-தொடரும்

Advertisement