Advertisement

தூறல் – 12

விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே ,
வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல,
அடியோடு என்னை சாய்த்து சென்றாளே,
அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!

     தன் முன்னே நீண்டிருந்த கடலை கண்ட கௌதம், தன் மனம் சமன்பட கடற்கரை மணலில் சிறிது தூரம் நடப்பது சிறந்த வழி என எண்ணி சென்றான்.

     கடற்கரையை அடைய சாலையை கடந்து கடல் மணலில் கால் புதைய நடந்து கடலின் அருகே சென்றான். பரந்து விரிந்த கடல் அவனின் மனதை சாந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

      கால் தொடும் அலைகள் அவன் மனதையும் இதமாய் வருடி சென்றது. இவ்வளவு நேரம் அலை பாய்ந்த மனம் சற்று திசை மாறியதை உணர்ந்தே இருந்தான் கௌதம்.

     கௌதம் ஹோட்டலை விட்டு தலையை பிடித்து கொண்டு வெளியே வந்தது முதல் கடல் அலையில் மனதை அமைதிபடுத்தியது வரை அவன் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

     “ஏய் ஆருத்ரா அங்க என்ன வெறிச்சு பார்த்துட்டு இருக்க” என தன் தோழி அணுவின் கேள்விக்கு “நீங்க வீட்டுக்கு போங்க டி. எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு.

     நான் ஒருத்தரை பார்க்கனும். ரொம்ப இம்பார்டன்ட் மேட்டர். இப்ப தான் ஞாபகம் வந்துச்சு. நான் பாத்துட்டு வந்தர்ரேன். பாய்” என்று அனைவரிடமும் பொதுவாக சொல்லியவள்,

       “ஏய் ஆரு… ஏய் ஆரு எங்க டி போற… அடியே ஆருத்ரா நில்லு” என தோழிகள் கூப்பிட கூப்பிட கிளம்பி விட்டாள் அவள் கௌதம் இருக்கும் இடம் நோக்கி.

     தோழிகள் ‘இவளை என்ன செய்தால் தகும். இப்படி எங்கே என்று சொல்லாமல் கூட ஓடுகிறாள். எப்படியும் வீட்டிற்கு தானே வந்தாகனும். அங்க வச்சு அவளை பாத்துக்கலாம்’ என

      தங்கள் பார்வையில் இருந்து நொடியில் கூட்டத்தில் மறைந்த ஆருவை திட்டி விட்டு, தங்கள் தோழியை நினைத்து தலையில் அடித்து கொண்டு கிளம்பி சென்றனர்.

      அங்கே ஆருவோ தோழிகள் பார்வை வட்டத்தில் இருந்து தப்பித்த பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். ஏனெனில் கௌதம் பக்கத்தில் தான் இவர்கள் இருந்தனர்.

     எனவே அவள் தன் தோழிகளுக்கு போக்கு காட்டி விட்டு எதிர் திசையில் சென்று மறைந்தாள். பின் அவர்கள் தன்னை திட்டிக்கொண்டே செல்வதை அவர்கள் வாய் அசைவை வைத்தே அறிந்த ஆரு‌,

      அவள் தோழிகளை நினைத்து சிரித்துக் கொண்டே கௌதமை நோக்கி சென்றாள். கௌதம் இன்னும் கடல் அலையில் காலை நனைத்த வண்ணமே நின்றிருந்தான்.

      அவன் அருகில் சென்ற ஆரு தொண்டையை செறுமினாள் அவன் கவனத்தை ஈர்க்க. உடலை இங்கு வைத்து விட்டு கனவு உலகில் மனதை பறக்க விட்டிருந்த கௌதம் ஆருத்ரா வந்ததை கவனிக்கவில்லை.

     மீண்டும் தொண்டையை செறுமி பார்த்தாள் ஆரு‌. கௌதமிடம் மீண்டும் மௌனமே மிஞ்ச, கடுப்பான ஆரு “ஹலோ கௌதம்… கௌதம்ம்ம்” என கைகளை அவன் முன் ஆட்டினாள்.

      இப்போது தான் கௌதம் ஆருத்ராவை பார்த்தான். “ஹே ருத்ரா நீ எங்க இங்க. என்ன ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து லீவ்ல ஊர் சுத்த கிளம்பியாச்சா” என்றான் கௌதம்.

     “ம்ம் ஆமாம் கௌதம். மூவி போய்ட்டு அப்படியே பீச் வந்தோம்” என்றாள் ஆரு. “ஃபிரண்ட்ஸ் கூட தானே வந்த ருத்ரா ஆனா நீ மட்டும் தனியா இருக்க மத்தவங்க எங்க” என்று கௌதம் கேட்டான்.

     “என் ஃபிரண்ட்ஸ்க்கு நான் உங்க கூட பார்த்த சி.ஐ.டி வேலைலாம் தெரியாது கௌதம். அதான் ஒரு முக்கியமான வேலை வந்திருச்சுனு சொல்லி தப்பிச்சு வந்துட்டேன்” என்றாள் சிரிப்புடன்.

     “அதுசரி அப்ப யாருக்கும் தெரியாம தான் என்னை பார்க்க வந்தது, நடுராத்திரியில் சுவர்லாம் ஏறி குதிச்சதா” என்றான் கௌதம் நக்கலாக.

     “ஆமா” என்று சிரித்தாள் ஆரு. “சரி நீங்க ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க” என்றாள் கேள்வியாக. “என்ன நான் டல்லா இருக்கனா. என்னாச்சு ருத்ரா உனக்கு. காமெடி பண்ணாத. நான் நார்மல் தான்” என்று விட்டு சிரித்தான்.

     “ரொம்ப நடிக்க டிரைப் பண்ணாதீங்க. நீங்க ஹோட்டல்ல இருந்து வரும் போதே நான் உங்களை பார்த்துட்டேன். நீங்க என்னை கிராஸ் பண்ணி தான் போனீங்க.

      ஆனால் நீங்க என்னை பாக்குல. ஏன் எதிர்ல என்ன இருக்குன்னு கூட பாக்குல. ரொம்ப ஒரு மாதிரி ரெஸ்ட் லெஸா இருந்தீங்க. என்ன ஆச்சு. விருப்பம் இருந்தா சொல்லுங்க.

     சொல்ல இஷ்டம் இல்லைனாலும் ஒன்னும் இல்லை. நோ இஸ்யூஸ்” என்றாள் ஆருத்ரா. ஒரு நிமிடம் அமைதியில் கழிந்தது. கௌதம் ஒன்றும் சொல்லவில்லை.

     “ஒரு வேளை உங்க ஃபிரண்ட் சத்யா பத்தின எதாவது இம்பார்டன்ட் டீடெயில்ஸ் கிடைச்சு இருக்கா என்ன” என்றாள் ஆர்வமாக. அவளை திரும்பி பார்த்த கௌதம் அப்போதும் எதுவும் சொல்லவில்லை.

      சிறிது நேரம் மெளனத்திகு பின் “ருத்ரா என்னோட வீட்டுக்கு நீ என் கூட வரியா” என்றான் கௌதம் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல். அதை கேட்ட ஆருவிற்கு‌ தான் ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது.

      ஆரு‌ அடைந்த அதிர்ச்சியில் “என்னாது…” என்று வாயை பிளந்து விட்டாள். ஆனால் கௌதமோ தான் கேட்டது போல் ‘நீ வருவாயா மாட்டாயா’ என்ற கேள்வியோடு நிதானமாக ஆருவை பார்த்திருந்தான்.

     கமிஷனர் முகிலன் அலைப்பேசியில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான். “என்ன ஆச்சு மாறன். இன்னும் ஏன் டிலே பண்றீங்க.

     நமக்கு தேவையான அளவுக்கு நீங்க எவிடென்ஸ கலெக்ட் பண்ணி எனக்கு அனுப்பி இருக்கீங்க. அன்ட் நிறேய குழந்தைகளையும் நாம ரெஸ்கூ செஞ்சிருக்கோம்.

      இதுக்கு மேல நீங்க ரிஸ்க் எடுத்து அங்க இருக்க வேண்டாம். கிடைச்ச எவிடென்ஸ் வச்சு புரசீட் பண்ணலாமே. இன்னும் நாம‌ எதுக்காக வெயிட் பண்ணனும்” என்றான்.

      “நீங்க சொல்றது எனக்கு புரியுது முகிலன். ஆனால் நாம கைவைக்க போறது பிரசாத் மேல‌. அவன் தப்பிக்க என்ன வேணாலும் செய்வான். அவன கையும் களவுமா பிடிக்கனும்‌.

     அதுக்காக தான் நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் முகிலன். அதுமட்டுமல்ல இங்க சித்து விக்கினு ரெண்டு பசங்க. அவங்கள மட்டும் எங்கையும் அனுப்பாம வச்சிருக்கான் அந்த பிரசாத்.

     இவங்கள வச்சு என்ன பிளான் போட்டு இருக்கானு தெரியல. எங்க யார்க்கிட்டையும் சொல்லாம சீக்ரெடா வச்சிருக்கான் முகில். மத்த வேலைக்கு அனுப்பின பசங்களைளாம் எப்படியும் நாம ரெஸ்கூ பண்ணிடலாம்.

      ஏனா அந்த பசங்க எங்க அனுப்பராங்கனு புல் டீடெயில்ஸ் எனக்கு தெரியும். ஆனால் இந்த ரெண்டு பசங்க விஷயம் தான் எங்கையோ இடிக்குது முகில்.

     அந்த பிரசாத் சரியான கிருக்கன் ஏடாகூடமா எதாவது யோசிச்சு செஞ்சுருவான். சோ அந்த விஷயத்தை நாம கொஞ்சம் பாத்து தான் டீல் பண்ணனும் முகில்” என்று முடித்தான் மாறன்.

      “ம்ம் புரியுது மாறா நீங்க எப்பவும் அலார்டாவே இருங்க என்ன. அங்க இருந்து டீடெயில்ஸ் மட்டும் எடுத்து நீங்க மெயில் பண்ணுங்க. ஓகே வா” என்றான் கார்முகிலன்.

     “சரி முகில் நான் இங்க பாத்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க. அந்த பிரசாத் எந்த எக்ஸ்டிரீம்க்கு போனாலும் அவனை நான் ஒரு வழி பண்ணி தான் ஆவேன்.

     எனக்கும் அவனுக்கும் தீர்க்கப்படாத கணக்கும் ஒன்னு பாக்கி இருக்கு. எல்லாத்துக்கும் அவன் பதில் சொல்லி தான் ஆகனும் முகில். நான் சொல்ல வைப்பேன்” என்றான் சுவற்றை குத்தி பற்களை கடித்தவனாய்.

     “உங்க பீளிங்க்ஸ் எனக்கு புரியுது மாறா‌. பொறுத்து அடிப்போம். ஆனா அது அவனுக்கு மரண அடியா தான் இருக்கனும்” என்ற முகிலன்

     “ம்ம் ஓகே மாறா டேக் கேர் எதாவதுனா உடனே என்னை கூப்பிடுங்க என்ன எந்த நேரமா இருந்தாலும் என் டீமோட நான் அங்க இருப்பேன்” என்று முடித்தான்.

     “புரியுது முகில். நான் இப்ப ஒரு வேலையா தான் வெளியே வந்தேன். சீக்கிரம் போகலைனா அங்க இருக்கவங்களுக்கு டவுட் வந்துரும். ஏற்கனவே அந்த குமார் எல்லாரையும் சந்தேகப்பட ஆரம்பிச்சுடான்.

     அவன் பார்வை என் மேல திரும்பறதுக்கு முன்னாடி நாம‌ எல்லாரையும் முடிக்கனும்” என்றுவிட்டு “ஓகே அடுத்த டைம் நான் கால் பண்ணும் போது எல்லாத்தையும் முடிச்சிட்டேன்ற நியூஸோட கால் பண்றேன்” என்று வைத்து விட்டான்.

     முகிலனிடம் கூறியதை தன் மனதிலும் உருவேற்றிய மாறன் தான் பிரசாத்திற்கு திருப்பி கொடுக்கும் நாள் வெகு தொலைவு இல்லை என எண்ணி கொண்டு கிளம்பினான்.

     “சித்து அந்த பையன பாக்க பாவமா இருக்கு டா. வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கான். நாம‌ போய் அவன்கிட்ட பேசலாமா” என்றான் விக்கி.

     “எனக்கும் பார்க்க பாவமா தான் இருக்கு. வா போய்  பேசலாம்’ என்ற சித்து விக்கியுடன் அழுதுக் கொண்டிருந்த சிறுவனிடம் சென்றான்.

      “தம்பி உன் பேர் என்ன” என்றான் சித்து. “என் பேர் ரோஹித்” என்றான் தேம்பி தேம்பி அழுதுகொண்டே. “நீ எந்த ஊரு ரோஹித். என்ன கிளாஸ் படிச்ச. நீ எப்படி இவங்க கிட்ட மாட்டுன” என்றான் சித்து கேள்வியாக.

      “எங்க ஊரு சேலம். அங்க தான் எங்க ஸ்கூலும் இருக்கு. நான் போர்த் ஸ்டான்டர்டு படிக்கிறேன். எனக்கு ஒரு தம்பியும் இருக்கான். அப்பா அம்மா தம்பியலாம் விட்டுட்டு வந்துட்டேன்.

     அவங்க என்னை தேடுவாங்கல பாவம்” என இன்னும் அழுதவன் பின் “நான் அந்த கேம் விளையாடாம இருந்துருக்கலாம். எங்க அம்மா அப்பவே சொன்னாங்க கேம் விளையாட வேண்டாம்னு.

      நான் தான் கேக்கல. இப்ப இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” என்று அழுதான். “உண்மை தான் நாங்களும் அந்த கேம் விளையான்டு தான் இங்க வந்து மாட்டிக்கிட்டோம்.

     நீ அழாத ரோஹித் நாம இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடலாம். கவலைப் படாதே” என்றான் சித்து தனக்கு தெரிந்த ஆறுதல் மொழியில்.

      “ம்ம்” என்றான் ரோஹித். “சரி வா ரோஹித் நாங்க எப்பவும் கடவுள் கிட்ட காப்பாத்த யாரையாவது அனுப்பி வைங்கனு வேண்டுவோம்.

      கடவுள் நமக்கு ஹெல்ப் பண்ணுவார். நீயும் வா நாம வேண்டிக்கலாம். சீக்கிரம் இங்க இருந்து தப்பிக்க வழி செய்வார் கடவுள்” என விக்கி எப்போதும் போல் கடவுளிடம் முறையிட அழைத்து சென்றான்.

-தொடரும்

Advertisement