Advertisement

தூறல் – 10

இருள் அது துவங்கிய நேரம்,
ஒளியென வாந்தாய் பெண்ணே;
நிரந்தர கலங்கரை விளக்காய்,
நீடித்திடுவாய் என்றும் என் வாழ்வில் நீயே!

      அன்று காலை பத்து மணி, அந்த கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அங்கே ஒருவர் வெகு நேரமாக யாரையே எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தார்.

     அவரிடம் வந்த போலீஸ் ஒருவர் “சார் கமிஷனர் வர கொஞ்சம் நேரம் ஆகும். ஏசி இருக்காரு வேனும்னா நீங்க அவரைப் பாருங்களேன்”என்றார்.

     சிறிதும் யோசிக்காமல் “இல்ல சார் வேணாம்.நான் அப்பாயிண்மென்ட் வாங்கிட்டு வந்திருக்கேன் சார். அது இல்லைனாலும் நான் அவரை தான் மீட் பண்ணுவேன்.

      எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்லை நான் வெய்ட் பண்ணி கமிஷனர் சாரையே பார்த்திட்டுப் போறேன் சார்” என்றார் வந்தவர்.

     அதுக்கு மேல உங்க இஷ்டம் என்பது போல் தோளைக் குலுக்கி விட்டு போய்விட்டார் அவர். முழுதாக ஒரு மணி நேரம் சென்ற பின் வந்தான் கார்முகிலன்.

     கார்முகிலன் ஐ.பி.‌எஸ், 28 வயது ஆண்மகன் சென்னையின் கமிஷனர். தன் பதவிக்கு ஏற்றார் போல் உடல்வாகு கொண்டவன். பார்த்தாலே மரியாதை தரும் தோற்றம் கொண்டவன்.

     தான் வாங்கும் சம்பளத்திற்கு எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவன்‌‌. அதனால் மற்றவர்கள் அனைவருக்கும் அவன் ஒரு ஸ்ரிக்ட் ஆபிசர்.

      அவன் அறை சென்று பத்து நிமிடம் கழித்து, முன்பு வந்த அதே போலீஸ் வந்து அவரை அழைத்து சென்றார் முகிலனிடம்‌. வந்தவரை அமர சொல்லிட்டு அந்த போலீஸ் வெளியே கிளம்பி விட்டார்.

     “வணக்கம் சார். நான் ராஜேஷ் பஜார்ல நகைக்கடை வச்சிருக்கேன்” என வந்தவரே ஆரம்பித்தார். “சொல்லுங்க என்னை தான் பார்த்துட்டு போவேனு வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்க போல. என்ன விஷயம்” என்றான் முகிலன்.

     “ஆமா சார்” என்றபின் சிறிது நேரம் மெளனம். “எனக்கு யாரையும் நம்ப முடியல சார். நீங்க ரொம்ப நேர்மையான போலீஸ் ஆபிசர்னு கேள்வி பட்டேன் அதான் உங்கள பார்க்க வந்தேன்” என்றுவிட்டு சொல்ல துவங்கினார்.

     “ஒரு மூணு நாள் முன்னாடி ஒரு வேலைய முடிச்சிட்டு நான் முட்டுகாடு வழியா வந்துட்டு இருந்தேன். அப்ப ஒரு சின்ன பையன் வந்து என் காரை தேக்கினான் சார்.

      அவனை யாரோ கடத்தி அடைச்சு வச்சிருக்கறதா சொன்னான். அவனோட நிறைய சின்ன பசங்களையும் கடத்தி அடச்சு வச்சுருக்காங்கனு சொன்னான்.

     அவன் பேசிட்டு இருக்கும் போதே யாரோ ரெண்டு பேர் வந்து அவன் அவங்க வீட்டு பையன் அப்டின்னு சொல்லி கூட்டிட்டு போய்டாங்க.

     அதுமட்டுமில்லாம அவன் மனநிலை சரியில்லை அதனால அப்படி அடிக்கடி வீட்ட விட்டு ஓடி வந்துருவானு சொல்லிட்டு போனாங்க.

     ஆனால் அந்த பையன பாத்தா மனநிலை சரியில்லாத மாதிரி ஒன்னும் இல்லை. நல்லா தான் இருந்தான். அவன காப்பாத்த ஏதாவது செய்ய சொல்லி ஹெல்ப் கேட்டான்.

      அதான் நான் உங்கள பார்க்க வந்தேன் சார்” என்று முடித்தார் வந்த ராஜேஷ் என்பவர். அனைத்தையும் பொருமையாக உள்வாங்கிய கார்முகிலன்

     “சரி ஏன் மூனு நாள் கழிச்சு வந்து கம்ப்லைன் பண்றீங்க. அப்பவே பக்கத்துல இருக்க ஸ்டேஷன் போயிருந்தா அப்பவே அந்த பையன காப்பாத்தி இருக்கலாமே” என்றான்.

     “நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா ஆரம்பத்தில நான் கொஞ்சம் பயந்துட்டேன். அதான் போகல. ஆனா என் பையன பாத்த அப்புறம் போகனும்னு முடிவு பண்ணிட்டேன்.

      ஏனா எனக்கும் அதே வயசில ஒரு குழந்தை இருக்கான் சார். நான் டிசைட் பண்ணின அப்புறம் பக்கத்தில இருந்த ஸ்டேஷன் போனேன். அங்க அந்த ஆள மறுபடியும் பாத்தேன் சார்.

     இதை என் பிரென்ட் கிட்ட சொல்லி சஜஷன் கேட்டப்பா தான் அவன் உங்கள பத்தி சொன்னான். நீங்க ரொம்ப நேர்மையான ஆபிசர்னு‌. அதான் உங்கள பார்க்க வந்தேன் சார்” என்றார் ராஜேஷ்.

     “எந்த ஆள பார்த்தீங்க, கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்க” என்றான் முகிலன். “அந்த பையன வந்து கூட்டிட்டு போன ரெண்டு பேத்துல ஒருத்தன சார்” என்றார் ராஜேஷ்.

     “எந்த ஸ்டேஷன் போனீங்க” என்றதற்கு “முட்டுகாடு ஏரியாவில் சார். அந்த பையன அங்க பார்த்ததால அங்கையே நான் போனேன் சார்.

     ஆனால் போலீஸ் அவன் கூட சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க அதை பார்க்கவும் பயந்து திரும்பி வந்துட்டேன் சார்” என்றார் ராஜேஷ்.

     “ஓகே இனமே நான் பாத்துக்கிறேன். நீங்க கவலைப் படாம போங்க. அன்ட் தேங்க்ஸ் சார் ரோட்ல நடந்தத பார்த்துட்டு எனகென்னனு போகாம இவ்ளோ தூரம் வந்து சொல்லி இருக்கீங்க”என்றான் பாராட்டாய்.

      “அது பரவாயில்லை சார். அந்த குழந்தை முகம் இன்னும் என் கண்ணுக்குளையே இருக்கு சார். அவ்ளோ பாவமா இருந்துச்சு சார்.

      அதுக்காக தான் வந்தேன். இப்ப நான் வந்து சொன்னதால எனக்கு பிரச்சினை எதுவும் வராமல் இருந்தாலே போதும் சார்” என்றார் கடைசியாய்.

      “கவலை படாதீங்க. உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பாத்துக்கிறேன்” என்ற கார்முகிலன் அவர் சென்ற உடன் அவர் வந்தது முதல் ஆன் செய்து ரெக்கார்டு செய்திருந்த டேப்பை ஆஃப் செய்தான்.

      சிறிது நேர யோசனையின் பின் யாருக்கோ போன் செய்து பேசிவிட்டு வைத்தவன் முகம் யோசனையை விடுத்து ஒரு முடிவுக்கு வந்தது.

     “ஆரு ஏய் ஆரு என்ன பண்ணிட்டு இருக்க” என கத்திக் கொண்டே வந்தாள் அணு‌ கூடவே வினிதாவும். இவர்கள் அலப்பறையாய் வர மீரா மட்டும் சற்று அமைதியாய் வந்ததாள்.

     அப்போது தான் அவள் அன்று சத்யா வீட்டில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் ஒன்றை படிக்க கையில் எடுத்தாள், அதற்குள் வானர படை வந்துவிட்டது.

     “சொல்லு அணு” என புத்தகத்தை மூடி வைத்து கொண்டே கேட்டாள். “கிளம்புடி நாம இன்னைக்கு வெளியே போறோம்” என்றாள் வினிதா.

     “இன்னைக்கு என்ன டி ஸ்பெஷல். இப்படி திடீர்னு வந்து போலாம்னு சொல்றீங்க” என்றாள் ஆரு. “ஸ்பெஷலாம் ஒன்னும் இல்லை டி. நாமலாம் வெளியே சேர்ந்து போய் ரொம்ப நாள் ஆச்சுல.

     அதான் இன்னைக்கு சும்மா ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்னு கிளம்பட்டோம். சும்மா நைநைனு பேசாம கிளம்பு டி” என்றாள் அணு.

     “அவளுக்கு ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு வெளிய ஊர் சுத்த நேரம் இருக்கும். நடுராத்திரியில வாக்கிங் போக நேரம் இருக்கும்.

     ஆனா நம்ம கூட வரதுக்கு மேடம்க்கு நேரம் இருக்கோ என்னவோ. எதுக்கும் கேளுங்க டி வேற எதாவது இம்பார்டன்ட் வொர்க் இருக்க போகுது” என கடுப்புடன் மொழிந்தாள் மீரா.

     ஏனெனில் மீராவும் சில நாட்களாக அவளிடம் கேட்டு கொண்டே தான் இருக்கிறாள் அவளின் வித்யாசமான நடவடிக்கையை. ஆனால் ஆருவோ கழுவும் மீனில் நழுவும் மீனாக பிடிக் கொடுப்பேனா என்று இருக்கிறாள்.

     அதில் அதிக கோபம் கொண்ட மீரா கிடைக்கும் நேரம் ஆருவை வசைப்பாட தவறவில்லை. ஆனால் பலன் இல்லாத நிலை தான். இது எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பதை போல் அமைதியாக எழுந்து கிளம்ப சென்றாள் ஆருத்ரா.

     “ஏ மீரா டென்ஷன் ஆகி நம்ம ப்ளான சொதப்பிடாத. அவளை வெளிய தள்ளிட்டு போய் மெதுவா பேச்சு கொடுத்து போட்டு வாங்கலாம்னு தானே முடிவு செஞ்சோம்.

     அவ எவ்ளோ நேரம் தான் வாயை திறக்காம இருக்கான்னு பார்ப்போம். நீ சைலன்டா இரு. அவ வர மாதிரி இருக்கு” என மீராவை அமைதி படுத்தினாள் வினிதா.

     இவர்கள் பேசி முடிக்கும் தருணம் சிரிப்புடன் வந்த ஆருவை பார்த்த தோழிகள் அவள் தாங்கள் பேசியதை கேட்கவில்லை என நிம்மதி கொண்டனர்.

     ஆனால் அவர்கள் அறியவில்லை அவர்கள் பேசிய அனைத்தையும் ஆரு கேட்டு விட்டாள் என்பதை. அவர்கள் திட்டம் தன்னிடம் பலிக்காது என்ற எண்ணத்தில் சிரிப்புடன் வந்தாள்.

     அதை அறியாத தோழிகளோ அவளிடம் எப்படியும் விஷயத்தை கறந்து விடலாம் என நம்பி சென்றனர். ஒரு வழியாக ஆருவும் அவள் தோழிகளும் ஆளுக்கொரு எண்ணத்துடன் ஒரு மால் சென்று அடைந்தனர்.

     அந்த மாலில் தியேட்டர் ஒன்றில் புகுந்து கொண்டு படத்திற்கு போகலாம் என்றாள் ஆரு. ஒரு மூன்று மணி நேரத்தை இப்படி ஓட்டி விடலாமென‌.

       வேண்டாம் என்று நினைத்தாலும் ஆரு சந்தேகிக்க கூடும் என மூன்று பேரும் மூன்று மணி நேரத்தை நெட்டி தள்ள முடிவெடுத்தனர் அவளின் திட்டம் அறியாது.

      மற்ற மூவருக்கும் மாறாக ஆரு ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்தாள். அல்லது அவளது தோழிகளை வெறுப்பேற்றினாள் என்றால் சரியாக இருக்கும்.

     படம் முடிந்த பின் அனைவரும் சாப்பிடும் இடம் வந்து அமர்ந்தனர். அங்கும் ஆருத்ராவே பேசினாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களை பேச விடவில்லை.

       அவள் தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக பெருமையை இழந்துக் கொண்டு இருந்தாலும், பொறுமையை இழந்து பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்.

      இல்லையெனில் ஆருவிடம் எப்படி விஷயத்தை கறக்க. தோழிகள் எங்கே அதை பற்றி பேச ஆரம்பித்து விடுவாரோ என அவள் அவர்களை பேசவே விடவில்லை.

     கடைசியாக பீச் செல்லலாம் என்ற முடிவை எடுத்தனர் தோழிகள். சரியென கிளம்பி இரவு மங்கிய இருட்ட தொடங்கிய நேரம் பீச்சை சென்று அடைந்தனர் தோழிகள்.

     இப்போது ஆரு சற்று அமைதியாக தான் வந்தாள். அந்த அமைதியை பயன்படுத்தி கொள்ள நினைத்த தோழிகள் மெதுவாக பேச்சை ஆரம்பித்தனர்.

     “ஆரு உனக்கும் மீராக்கும் என்ன பா பிரச்சினை. ஏன் அவ உன்னை முறைச்சிட்டே இருக்கா” என்று கேட்டு அவள் முகத்தை பார்த்தனர். முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

     “உங்க ரெண்டு பேரோட பிரண்ட்ஷிப் பாத்து நாங்கலாம் எவ்ளோ பெருமை பட்டுருப்போம். இப்ப ஏன்டி இப்படி இருக்கீங்க” என தோழிகள் இருவரும் இன்னும் தம் கட்டி பேசியதை தடை செய்த மீரா,

     “நிறுத்துங்க டி கொஞ்சம் திரும்பி அங்க பாருங்க” என்று அங்கு யாரையோ குறுகுறுவென பார்த்திருந்த ஆரு‌வை காட்டினாள்.

     இவ்வளவு நேரம் தாங்கள் பேசியது அனைத்தும் வீனா என அதிர்ந்த தோழிகள் கொலை வெறியோடு ஆருவை முறைத்திருந்தனர். அப்படி யாரை இவள் இப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறாளென.

-தொடரும்

Advertisement