திகம்பரனின் திகம்பரி அவள் 4

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். ஒருகால தீவிர காதலர்கள், பின்னால் ஈருடல் ஓருயிர் கணவன், மனைவி..  அவர்களின் இந்த நெடிய பிரிவின் பின்னாலான சந்திப்பு எப்படி இருக்க வேண்டும்..? 

கண்ணும் கண்ணும் காதல் பாஷை பேச, உதடுகள் தங்களின் இணையின் நலத்தை விசாரிக்க துடிக்க, உடல்கள் இரண்டும் தீப்பற்றி கொள்ள.. இதயங்கள் அணைப்பால் இணைய.. ம்ஹூம்.. இங்கு எப்படி எதுவும் இல்லை. ஒருவரின் பார்வையில் கோவம் என்றால் மற்றவரின் பார்வையில் அச்சம்

திகம்பரனோ நின்ற இடத்திலே நின்று தன் நெற்றி கண்ணை திறக்க, திகம்பரியோ அந்த ஜுவாலையில் அச்சம் கொண்டு பிடிப்பிற்காக மகளை அணைக்க, அந்த குளிர் பிரதேசம் அந்த நொடி வெண்மையாக தான் மாறி போனது

இருவருக்கும் உள்ள ஐந்தடி இடைவெளியை முதலில் கடப்பது யார்..?  ஈஷ்வர் கடக்கும்  எண்ணத்தில் இல்லை என்பதை அவனின் அழுத்தமான ஊன்றிய கால்கள் தெரியப்படுத்த, பல்லவி தான் அந்த தூரத்தை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள்

ம்மா.. “அனு திரும்பவும் அம்மாவின் கன்னம் பிடித்து தன்னை பார்க்க செய்ய, மகளை திரும்பி பார்த்தவள், அடுத்து கணவனை பார்த்தாள்.

அனுவை பார்க்கிறானா என்ற எதிர்பார்ப்புடன், பதட்டத்துடன் பார்க்க, ம்ஹூம்.. அவனின் கண்கள் மகள்  புறம் நகரவே இல்லை

ஏன்..?” பல்லவிக்கு அந்த நொடி ஈஷ்வர் மேல் சிணுங்கலான கோவம். “நம்ம மகள் ஈஷ்வர்.. நம்ம ஏஞ்சல்.. அவளை ஏன் பார்க்க மாட்டேங்கற..?” கண்கள் கேள்வியை பிரதிபலிக்க, ஈஷ்வரிடம் கடுமை கூடி தான்  போனது.   

கைகளை  மிகவும் இறுக்கமாக கட்டி கொண்டான். நிச்சயம் நீட்டிவிடும் அபாயம் உண்டு. அவனின் கட்டுப்பாட்டிலே அவன் இல்லை.

அவன் வரமாட்டான் என்று புரிந்து பல்லவி இருவருக்குமான இடைவெளியை கடக்க ஆரம்பித்தாள். கால்கள் கொஞ்சம் லேசாகவும் இருந்தது.. கனமாகவும் இருந்தது. ஒரு அடி ஈஷ்வரின் மேல் உள்ள காதலில் வேகமாக வைக்கமறு அடியோ  தன் சத்தியத்தை மீறி தன் முன் நிற்கும் கணவனின் நிலை குறித்த அதிருப்தி, அச்சம் என்று மிக மெதுவாக சென்றது

இப்படியே அந்த ஐந்தடி தூரத்தை சில நொடி சென்றே கடந்தவள் ஈஷ்வர் முன் நிற்க, அவனின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது இருவருக்குமான தூரம் ஒரு அடி மட்டுமே இருக்கும்

என்னதான் அவளின் சத்தியத்தை கணவன் மீறி வந்துவிட்டாலும்பல்லவியின் காதல் மனதுக்கு கணவனிடம் பேச அப்படியொரு துடிப்பு, ஆசை. ஆனால் பேச தான் முடியவில்லை

ஈஷ்வர்..” மிக மெல்லியதாக வாய் அசைத்து திணற

பேசு.. பேசித்தான் பாரேன்..” ஈஷ்வரோ அவளையே பார்த்து நின்றான்

அது.. நீ.. நீங்க..”  மேலும் திணற, ஈஷ்வரின் கண்கள் இன்னும் கோவத்தை கக்கியது

எப்படி உன்னால என் முன்னாடி நின்னு பேச முடியுது..? 

இப்படி பார்த்தா நான் என்னதான் பண்ண..?  

அம்மா யாரின் முன்போ  நிற்க, அனு இப்போது அந்த மனிதரை பார்த்தாள். முகத்தில் தாடி மீசை மட்டுமே. அவளுக்கு முகம் என்ற ஒன்று தெரியவே இல்லை

ம்மா.. ஆரு..” அனு பல்லவியிடம் கேட்க, அந்த குரல் ஈஷ்வர் உடலில் சிலிர்ப்பை கொடுக்க, கண்கள் நொடியில் கோவத்தை விட்டு கலங்கி தான் போனது

அவனையே பார்த்திருந்த பல்லவிக்கு அந்த நொடி மிக பெரிய குற்ற உணர்ச்சி. குழந்தை மீதான அவனின் ஆசை தெரிந்தவள். முக்கியமாக பெண் குழந்தை தான் வேண்டும் என்ற அவனின் எதிர்பார்ப்பும் புரிந்தவள்

அதுவரை என்ன பேச எப்படி பேச என்ற திணறி கொண்டிருந்தவள், “ஈஷ்வர்..” என்றாள்  அவளின் எப்போதுமான அந்த காதலான குரலில்

ஈஷூ..”  அனு அடுத்த நொடியே  தகப்பனின் பேர் சொல்ல, என்ன கட்டுப்படுத்தியும் ஈஷ்வர் கண்கள் மகளின் புறம் திரும்பிதான் விட்டது. மகளின் அழைப்பு அவனின் தீவிர  வைராக்கியத்தை சில்லு சில்லாக உடைத்தெறிந்து விட்டது

அவனின் ரத்தம் அவனின் கண் முன். போட்டோ கிடைத்தும் பார்க்காத மகளின் அழகு முகம் ஓர் அடி நெருக்கத்திலே

பிறந்த நாளிற்கான புது பிராக். அதுவும் அவளின் கலருக்கு ஏற்ற வெண்பட்டு ரோஜா வண்ண பிராக், தலையில் மேட்சான வெள்ளை பட்டாம்பூச்சி கிளிப், நெற்றியில் கோடாக திருநீறு, குங்குமம், கைகள், கால்களுக்கு வெள்ளை கலர் சாக்ஸ்  என்று தகப்பனின் கண்களுக்கு தேவதையே தான் மகள்

பனியில் மகளின் அழகு.. மலர்ந்த ரோஜாவின் அழகாக மின்ன.. ஈஷ்வரின் கைகள் துடிக்க ஆரம்பித்துவிட்டது மகளை தூக்கி உச்சி முகர. ஆனால் இவனுக்கு அந்த துடிப்பு எல்லாம் மகளுக்கு இல்லை. அவன் அவளுக்கு  அந்நிய மனிதனே. யாரோ போல பார்த்தாள்

புரிந்த ஈஷ்வர் திரும்பி மனைவியை பார்த்தான். அவனின் பார்வையில் கோவத்தை விட குற்ற சாட்டும், வேதனையும் தான் அதிகம். புரிந்த பல்லவியால் அந்த நொடி என்ன செய்ய முடியும்..? 

இப்படி அமேசான் காடு மாதிரி மூஞ்சி இருந்தால் அவளால எப்படி கண்டுபிடிக்க முடியும்..?” அவளிடம் இருக்கும் கணவனின் போட்டோவை வைத்தே அனுவிற்கு அவன் அப்பா என்று தெரியும். இப்படி முழுதும் தாடி மீசை என்று தெரிந்தால் மூன்று வயது பிள்ளையால் எப்படி கண்டுபிடிக்க முடியும்..? 

“இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்டி..” ஈஷ்வர் மனைவியை  பார்த்தான்

ஈஷ்வர்..” பல்லவி  பேசும் நேரம், இரண்டு கார்கள் அடுத்தடுத்து வந்து நின்றது. முதல் காரில் நரசிம்மன், கங்கா இறங்க, பின்னால் காரில் பரணியும், ரத்னாவும் இறங்கி வந்தனர்

எல்லோரையும் பார்த்த பல்லவியின் கண்கள் விரிந்தது. நரசிம்மனை பார்த்து அதிர்ச்சி, ஆச்சரியத்தில் விரிந்தது என்றால் தன் குடும்பத்தினரை பார்த்து உணர்ச்சி வசத்தில் விரிந்ததுகங்காவிற்கு  பல்லவி கையில் இருந்த அனுவை பார்த்ததும் அவ்வளவு ஆனந்தம். வேகமாக மகனிடம் சென்று நின்றார். விஷ்ணு எங்கிருந்தோ சகவாசமாக வந்தவன், காரில் சாய்ந்து நின்றான்

பரணி, ரத்னா இருவரும் தன்னை நெருங்க நெருங்க கண்கள் தன்னை போல கலங்க, “ம்மா.. ண்ணா..” என்றாள் பல்லவி உருக்கும் குரலில். அந்த நொடி யாரும் எதிர்பார்க்காமல் பரணி பல்லவியை அறைந்திருந்தான்

ஏய்..” ஈஷ்வர் உடல் அதிர தள்ளாடிய மனைவியை, மகளுடன்  தன்னுடன் சேர்த்து பிடித்தான்பல்லவி தலை கிறுக்க கிறுக்க, மகளை இறுக்க பிடித்த வண்ணம்அறைந்த அண்ணனை நம்ப முடியாமல் பார்த்தாள்

ம்மா..”  அனு பயந்து பல்லவியின் கழுத்தை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டாள்.

“பரணி.. என்னடா  இது..?” ரத்னா மகனை கோபத்துடன் அதட்ட, பரணியோ தங்கையையே உறுத்து பார்த்து கொண்டிருந்தான்

ம்மா.. ம்மா..” அனு அழுகை இருக்க இருக்க கூட

அனு.. ஒன்னுமில்லைடா, இங்க பாரு.. நிமிருடி..” கழுத்தில் புதைந்த மகளை நிமிர்த்த, அவள் இன்னும் ஒட்டி கொண்டாள். மகளின் அழுகையும், மனைவியின் நடுங்கிய உடலும்  ஈஷ்வரை சூடேற்ற, மனைவி, மகளை தள்ளி நிறுத்தியவன், நொடியில்  பரணியின் முகத்திலே ஒரு குத்து விட்டான்

ஈஷ்வர்..”  பல்லவி அதிர்ந்து கணவன் கை பிடிக்க, பரணி மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்து ஈஷ்வரை முறைத்தான்

இது தான் லாஸ்ட் வார்னிங் உனக்கு.. இன்னொரு முறை அவ மேல கை வச்ச, வைக்கிற கை இருக்காது..” ஒற்றை விரல் எச்சரிக்கவே செய்தான்

அவ என் தங்கச்சி..” பரணி பல்லை கடித்து பேச

அது முடிஞ்சு போச்சு..” என்றான் ஈஷ்வர்.

ஏன் அவ உடம்புல ஓடுற எங்க ரத்தம் நின்னு போச்சா..?”

அதில என் ரத்தம் கலந்துருச்சு..” மகளை பார்த்தான்  ஈஷ்வர்.  

பரணி.. ப்ளீஸ்டா..” ரத்னா மகனின் கை பிடித்து கெஞ்சியவர், “தம்பி.. விட்டுடுங்க..” என்று ஈஷ்வரிடமும் கேட்க, ஈஷ்வர் பொங்கும் கோவத்தை அடக்க முயன்றான்

கங்கா.. முதல்ல எல்லாம் வீட்டுக்கு போலாம்.. அனுவை கூட்டிட்டு வந்து கார்ல ஏறுமா..” நரசிம்மன்  பல்லவியிடம் சொல்லி  அவரின் காரின் கதவை திறந்துவிட்டார். பல்லவி திரும்பி கணவனை பார்க்க, அவனோ ஏறாமல் நின்ற இடத்திலே நின்றான்.