பரணி அவர்கள் குடில் பக்கம் செல்ல, பல்லவிக்கோ ஈஷ்வரை காணாமல் மனம் சோர்ந்தது. நேரில் விஷ் பண்ணும்ன்னு தான் போன்ல கூட சொல்லலை.. ஒருவேளை வரலையோ..? தேடி கொண்டு அவர்களின் குடில் சென்றனர்.

“இங்க தான்..”  அவர்களுக்கான குடில் வந்தது. உணவு பபே முறையில் எடுத்து வைத்து கொண்டிருந்தனர். “ரொம்ப நல்லா இருக்கு பரணி, பீச், அந்த காற்று.. நல்லா இருக்கு..”  ரத்னா சொல்ல,

“ம்ம்.. சாப்பிட்டு பீச் போலாம்மா..” என்றார் மூர்த்தியின் தங்கை.

“ஈவினிங்  போலாம்.. இப்போ வெயிலா இருக்கும்..” சரண் சொல்ல,

“சாப்பிட்டு முடிச்சிட்டு போர்ட் ரைடிங் போலாம்..” என்றான் பரணி.

“அப்படி தான் செய்யலாம்..” மொத்த குடும்பமும் பேசி கொண்டிருக்க, பல்லவி கண்களை சுழலவிட்ட படி நின்றிருந்தாள்.

“பல்லவி.. ஏன் நின்னுட்டிருக்க..? இங்க வா..?” பரணி தங்கையை கூப்பிட, பக்கத்தில் திடீர்  ஓவென்ற சத்தம். என்ன என்று எட்டி பார்த்தனர். அவர்கள் குடிலில் இருந்து இரண்டாவது குடிலில் தான் அந்த சத்தம்.

நிறைய கல்லூரி மாணவர்கள். இதுல தான் அவர் இல்லையே.. பல்லவி திரும்பும் நேரம், ஈஷ்வர் வந்து கொண்டிருந்தான். அவனை பார்த்து தான் கத்தியிருக்கிறார்கள் புரிந்தது.

ஜீன்ஸ்,  லைம் யெல்லோ டிஷர்ட்டில் முன் உச்சி முடி பறக்க வந்து கொண்டிருந்தான்.    “ம்ம்.. இன்னும் சார்ம் ஆயிட்டார்..”  வேடிக்கை பார்ப்பது போல அவனை தான் ரசித்து பார்த்தாள் பல்லவி.

“ஏய் பர்த் டே பாய்..”  நண்பர்கள் ஓடி சென்று ஈஷ்வரை சூழ்ந்து கொள்ள, பல்லவிக்கு அவன் தெரியவில்லை.

“ஏதோ செலிப்ரேஷன் போல.. வா பல்லவி..” பரணி அவளை குடிலுக்குள் அழைத்து செல்ல, மறுக்க முடியாமல் உள்ளே சென்றாள்.

அங்கு தொடர்ந்து சத்தம். கேக் வெட்டி, கன்ஸ் வெடித்து கொண்டாட்டம் ஜோராக நடந்து கொண்டிருந்தது. பல்லவி சும்மா நடப்பது போல பார்க்க, ஈஷ்வர் முகத்தில் கேக் பூசி, நண்பர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர்.

“பல்லவி.. எங்க போற வா சாப்பிடலாம்..”  சரண்  அவளின் கையில் சூப் கொடுத்தான்.

“MLA பையனுக்கு பர்த் டே, அதை   கொண்டாடுறாங்க..”  உணவு எடுத்து வைத்தவர் சொல்ல,

“அதான்.. இவ்வளவு ஆட்டம்..” என்றார் கோமதி வெறுப்பாக.

“அரசியல்வாதிங்க சமாச்சாரம் நமக்கெதுக்கு..? நாம சாப்பிடலாம்..” மூர்த்தி சொல்ல, பல்லவி மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிட்டாள்.

மிக அருகில் தான் இருக்கிறான். ஆனால் பார்க்க முடியவில்லை. பேச முடியவில்லை. இதில் அவளின் குடும்பத்தினர் பேசுவது வேறு உள்ளத்தை சோர்வடைய வைத்தது.

“ம்மா.. ரெஸ்ட் ரூம் போகணும்..” முகத்தில் இருக்கும் கேக்கை வாஷ் செய்ய, ஈஷ்வர் அந்த பக்கம் செல்வது பார்த்து பிளேட்டை வைத்துவிட்ட  பல்லவி கேட்டாள்.

“எங்க இருக்குன்னு தெரிலையே..?”

“நான் பார்த்துட்டேன்ம்மா..”  சொன்னவள், அவர் சரியெனவும் ஈஷ்வர் சென்ற பக்கம் வேகவேகமாக சென்றாள். அங்கு சென்று பார்த்தால் அவன் இல்லை. உள்ளே இருப்பான் போல. சற்று தள்ளி நின்று கொண்டாள்.

சில நிமிடங்கள் சென்று ஈஷ்வர் வெளியே வந்தான்.  நண்பனுடன்  பேசியபடியே கர்சீப்பால் முகம் துடைத்து கொண்டே வந்தவன், அவளை பார்க்காமல்  கடந்து சென்றுவிட்டான்.

“அச்சோ.. போயிட்டாரே..” பல்லவி அவனை பார்த்து நின்றாள்.  ஈஷ்வர் அவன் குடில் செல்ல, நண்பர்கள் எல்லாம் கிப்ட் கொடுத்தனர். அதில் ஒரு பெண் ரெட் ரோஸ் போக்கே கொடுக்க, சுற்றி இருந்தவர்கள் ஓவென்ற சத்தம் கொடுத்தனர், அதிலே புரிந்தது அது தான் ஹீனா என்று.

“இங்க எதுக்கு நின்னுட்டிருக்க பல்லவி..” ரத்னா வர,

“சும்மா தான்ம்மா.. நல்லா இருந்தது அதான்..” அம்மாவுடன் சென்றவள் ஓரக்கண்ணால் ஈஷ்வரை  பார்க்க, அவன் அந்த பெண்ணிடம் ஏதோ பேசி கொண்டிருந்தான்.

“பல்லவி.. ஐஸ்க்ரீம்..” பரணி கொடுக்க, வாங்கி கொண்டவள் ஓரமாக அமர்ந்துகொண்டாள்.   எல்லாம் சாப்பிட்டு முடிக்க, பல்லவி குடும்பம் அங்கேயே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

“எப்படியாவது ஈஷ்வருக்கு விஷ் செய்து, கிப்ட் கொடுத்திடணும்..” பல்லவி யோசித்து கொண்டிருக்க, “போர்ட் ரைடிங் போலாம்..” என்று அவளின் குடும்பம் கிளம்பியது.

“சரி வந்து கொடுத்திடலாம்..” போர்ட் ரைடிங், கேம்ஸ் என்று சில மணி நேரங்கள்   கழிய, மாலை போல பீச் வந்தனர். அதிகம் பேர் இருந்தனர். ஈஷ்வர் நண்பர்கள் ஒரு பக்கம் பீச்சில் குளித்து ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்

விஷ்ணுவுடன் கடற்கரை மணலில்  நின்றிருந்த   ஈஷ்வரை பார்க்க பார்க்க அவளின் ஹாண்ட் பேக்கில் இருந்த கிப்ட் மிகவும் கனத்தது. ஈஷ்வரோ,  காலையில் ஒரு இருந்து ஒரு போன் கூட செய்யாத  பல்லவியை  நினைத்தபடி அலையை வெறித்திருந்தான்.

“ஈஷ்வர்.. வா  நடக்கலாம்..” விஷ்ணு அவனின் மனநிலை உணர்ந்து கூட்டி வந்தான். பல்லவி இருக்கும் பக்கம் நடந்து வந்த ஈஷ்வர் பல்லவியையே நினைத்து கொண்டிருக்க, பல்லவியோ எப்படி ஈஷ்வரிடம் தனியே பேச என்று யோசித்து கொண்டிருந்தாள்.

 வீட்டின் பெண் என்ற நிலையில் எல்லார் பார்வையும் அவளை கவனத்தில் கொண்டு தொடர்ந்து கொண்டே இருக்க, எப்படி தனியே பேசுவதாம்..? ம்ப்ச்.. ஈஷ்வர் இருக்கும் பக்கம் பார்வையை திருப்ப..  அவளின் முகத்தில் சில்லென்ற நீர் வேகமாக பட்டது.

“ஆஹ்ன்..”  பல்லவி கத்தி பார்க்க, முன்னால் சரண் சிரித்தபடி நின்றிருந்தான்.

பல்லவி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்ட ஈஷ்வர்க்கு அவளின் குரல் கேட்க, “ச்சு.. உன் பிரம்மை, அவளையே நினைச்சிட்டிருந்தா இப்படி தான்.. இங்க எப்படி வருவா..?”  நினைத்தவன் மேலும் நடக்க, திரும்ப அவளின் சத்தம்.

“சரண்ண்ண்..” பல்லவி முகத்தில் இருந்த தண்ணீரை துடைக்க, மீண்டும் கடல் தண்ணீரை வாரி இறைத்த சரணை பார்த்து கத்தி கொண்டிருந்தாள் பல்லவி.

இந்த முறை ஈஷ்வர் அவளை தேட, சற்று முன் நின்றிருந்தாள். லவியா..? அவளின் அருகில் சென்று நின்றான்.

“டேய்.. பாவம்டா பிள்ளை..”  சரண் அம்மா பல்லவிக்காக பேச, அவனோ மீண்டும் வாரி இறைக்க, பல்லவி அங்கிருந்து நகர்ந்து, ஷாலால் முகம் துடைத்து நிமிர, ஈஷ்வர் அவள் முன்.

அவனின் பார்வை.. பல்லவிக்கு ஏனென்றே தெரியாமல் நெஞ்சு கூடு உலர்ந்து போனது.

“ஈஷ்வர் போலாம்..”  பல்லவியின் குடும்பம் இருப்பதை பார்த்து விஷ்ணு அவன் கை பிடித்து இழுத்து  சென்றான்.

“பல்லவி.. இந்தாம்மா  டவல்..”  ரத்னா கொடுத்து செல்ல, வாங்கி துடைத்தவள் கண்கள் நடந்து கொண்டிருந்த ஈஷ்வர் மேலே  இருந்தது. அவன் நின்று இவளை திரும்பி பார்த்தவன், மொபைல் எடுத்து கூப்பிட்டான்.

“சொல்.. சொல்லுங்க..” பல்லவி எடுத்து பேச,

“மூணாவது குடிலுக்கு வா..”   என்று வைத்துவிட்டவன், அங்கு செல்ல, அவனின் நடையிலே கோவம் தெரிந்தது.

“ம்மா.. நான் தண்ணீர் குடிச்சிட்டு வந்துடுறேன்..”  மறுக்கும் முன் நடந்து விட்டாள். ஈஷ்வர் இவளுக்காக காத்து கொண்டிருந்தவன் இவள் வரவும், பார்த்தே நின்றான்.

“அது..”  அவனின் பார்வையில் திணறியவள், ஞாபகம் வந்தவளாக, ஹாண்ட் பேக்கில் இருந்த கிப்ட் எடுத்து, “ஹாப்பி பர்த் டே..” என்று நீட்டினாள்.

ஈஷ்வர் வாங்காமல், “அப்போ உனக்கு என் பர்த் டே முன்னாடியே தெரியும்….” கண் சுருக்கி கேட்டான். ம்ம்..

“தெரியும்..”

நேத்து நைட்ல இருந்து இவ விஷ்க்காக நான் எவ்வளவு எதிர்பார்த்திட்டு இருந்தா, இவ இப்போ வந்து தெரியும்ன்னு ரொம்ப சாதரணமா  சொல்றா..

“ஓஹ்..  இங்க எப்போ வந்த..?..?” கேட்டான்.

“மதி.. மதியமே..”

நான் இங்க வரேன்னு சொல்லியும் என்னை பார்க்க வரல..

“என்ன இங்க..? ..?”

“அது சரண்க்கு ப்ரோமோஷன் கிடைச்சதால.. ..”

“அவன் பேரு சரணா.. உன் அத்தை பையன்.. முறைப்பையன்.. ம்ம்.. எப்படி எல்லா வீட்லயும் போல உங்க வீட்லயும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்றதா பேசியிருக்காங்களா..? எப்போ கல்யாணம்..? ..?”

“என்ன பேசுறீங்க..?” பல்லவி அதிர்ந்து கேட்டாள்.

“ஏன் என்ன தப்பா கேட்டுட்டேன்..? அவனுக்கு ப்ரோமோஷன் கிடைச்சதுக்கு உங்களை எல்லாம் வெளியே கூட்டிட்டு வந்திருக்கான், நீயும் வந்திருக்க….” அழுத்தி சொன்னான்.

“என்.. என்ன..?..?” ஈஷ்வர் சொன்ன விதத்தில்  பல்லவிக்கு கோவமும், வருத்தமும் பொங்கியது.

“அவர் என் அத்தை பையன், இது எங்க குடும்பத்துல பழக்கம் தான். ..”

“அதான் நானும் சொல்றேன், உங்ங்ககக  குடும்பத்துல இந்த பழக்கம் இருக்குன்னு.. நீங்க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு இல்லை, சொல்லு, உங்களுக்கு பேசி வச்சிருக்காங்க தானே..? ..?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. ..”

“அப்பறம் அவனுக்கு ப்ரோமோஷன் கிடைச்சதுக்கு நீ எதுக்கு வந்த.. சேர்ந்து செலிபிரேட் பண்ணவா..?”

“நான் வெளியே கூப்பிட்டதுக்கு முடியாது சொன்னது இதுக்கு தானா..?”  அடிக்குரலில் சீறினான்.

“உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” பல்லவி கிப்டை இறுக்கி பிடித்தாள்.

“உன்னால நான் இங்க பைத்தியம் மாதிரி சுத்திட்டிருக்கேன், நீ  என் கண் முன்னாடியே கொண்டாடிட்டி இருக்க..? என்கூட வர முடியாது,  ஆனா அவன்கூட விளையாட முடியும்..”  பல்லவி எதுவும் பேசாமல் விலகி நடக்க, எட்டி அவளின் கை பிடித்தான்.

“விடுங்க..”

“எனக்கு பதில் சொல்லிட்டு போடி..”

“முடியாது, எந்த பதிலும் உங்களுக்கு நான் சொல்ல போறதில்ல..”  அவனுக்காக வாங்கிய கிப்டை அங்கேயே விசிறிவிட்டு கிளம்பிவிட்டாள்.