“மகா.. என்ன கைன்ட் ஆப் திங்கிங் இது..? நமக்கு விரும்பி செய்ற ஒரு விஷயத்துலையே நம்மால ஜெயிக்க முடியலன்னா வேறெதுல நாம  ஜெயிப்போம்..? எது வந்தாலும் சமாளிச்சு சக்ஸஸ் பண்றது தான் நம்ம விருப்பத்துக்கு நாம கொடுக்கிற மரியாதை..”

மகா பதில் சொல்லாமல் உர்ரென்று வந்தாள். விஷ்ணு அப்படியே நின்றுவிட, இவரோட.. எரிச்சல் கொண்ட மகா அவன் முன் சென்று நின்றாள்.

“ஒருத்தர் நம்மகிட்ட பேசும் போது நல்லதோ, கெட்டதோ பதில் சொல்விடணும், அதென்ன அமைதியா இருக்கிறது..”

{சுடு தண்ணி கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு..}

“இனி பதில் சொல்லிடறேன்..”

“இப்போ ஏன் சொல்லலை..?”

{பதிலா வேணும் வாங்கிக்கோ..}

“நான் என்ன பதில்  நினச்சேன் சொன்னா நீங்க குதிப்பீங்க..”

“எப்படியும் லூஸு மாதிரி தான் நினைச்சிருப்ப.. என்ன சொல்லு..”

“நீங்க எப்படி எனக்கு அட்வைஸ் பண்ண முடியும் நினைச்சேன்..? வாரத்தில பாதி நாள் கிளாஸ்க்கு போறதில்லை.. MBBS ல தான் அப்படின்னா இப்போ  MD யும் அப்படித்தான் பண்றீங்க..”

“என் பிரச்சனை வேற..?”

“ஆமா எதிர்ல உள்ளவர்களை  படிச்சிகிட்டே இருக்கிறது..”

“மகா  இதுக்கு மேல  பேசாத..”

“ஏன்..?  நான் பேசுவேன், நமக்குள்ளே ஆயிரம் சைத்தான் இருக்கு, ஆயிரம் தேவதை இருக்கு.. நாமளே ஒரு மிராக்கிள் பீஸ் தான், அப்புறம் என்ன மத்தவங்களை ஜட்ஜ் பண்றது..”

“நான் யாரையும்  ஜட்ஜ்  பண்றது இல்லை..”

“ஆமா.. அவங்களை ஒரு ரிசர்ச் பொருளா பார்க்க ஆரம்பிச்சிடுறது..”

“என்னை ரொம்ப பாலோவ் பண்ணாத..”

“ஏன் நீங்க மட்டும் தான் மனுஷங்களோட மனசை ரிசர்ச் பண்ணனுமா..?”

“ஹாஹா.. அப்போ நீயும் ரிசர்ச் பண்றியா..? அதுவும் என்னை..? நல்லது.. பண்ணிட்டு எனக்கும் ரிப்போர்ட்   சொல்லு.. ரிசல்ட்  என்னன்னு தெரிஞ்சுக்கிறேன்..” கேலியாக சிரித்து செல்ல, மகா அவனையே பார்த்து நின்றாள்.

“இப்படியே சென்றால் இவன் கண்டிப்பாக காயப்பட்டு போவான்.. ஓய்ந்து போவான்..” அவளின் ரிசல்ட் இப்போதே தயாராக தான் இருந்தது.

“எனக்கு விஷ்ணுவை நினைச்சு வர வர ரொம்ப பயமா இருக்கு மகா..” அவளின் அத்தை.. விஷ்ணுவின் அம்மா கவலைப்பட்டது நினைவிற்கு வந்தது.

என்னதான் அவளுக்கு விஷ்ணு மேல் ஒருவிதமான கோவம், போட்டி இருந்து கொண்டே இருந்தாலும், அத்தை மகன் என்ற கரிசனமும், கவலையும் நிச்சயம் உண்டு. ஆனால் அதை சொல்லவோ, கேட்டுக்கொள்ளவோ இருவருமே அந்த நேரம் தயாராக இல்லை.

**********

“பல்லவி.. எக்ஸாம் எப்போ முடியுது..?” ரத்னா காலேஜ் கிளம்பி கொண்டிருந்த மகளிடம் கேட்க,

“இன்னும் ஒரு வாரத்துலம்மா.. ஏன்..?” பல்லவியின் டிகிரி பைனல் இயர் எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது.

“பரணிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பல்லவி, அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போலாம்ன்னு இருக்கு, அதான் நீயும் கூட இருக்கணும் இல்லை..”

“கண்டிப்பா.. பல்லவி இல்லாமலா.. அவ எக்ஸாம்ஸ் முடியட்டும், பொறுமையா போலாம்..” பரணி வந்தான்.

“ஆமா நான் வந்து அண்ணியை பார்த்து செலெக்ட் பண்ணனும்..” பல்லவியும் உற்சாகத்துடன் சொன்னாள்.

“க்கும்.. நல்லா இருக்கு, முதல்ல இவளை கல்யாணம் செஞ்சு அனுப்புங்கன்னா பையனுக்கு கல்யாணம் பண்ண எழுந்துட்டீங்க..” கோமதி கோபத்துடன் வந்தார்.

“பாட்டி.. இதை பத்தி முதல்லே பேசியாச்சு, பாப்பா படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போனதுக்கு அப்பறம் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு தானே சொல்றா. அப்பறம் ஏன் திரும்ப திரும்ப அதையே பேசுறீங்க..?” பரணி ஆயாசத்துடன் சொல்ல,

“ஆமா அத்தை.. பல்லவிக்கு பார்த்தா பரணிக்கு  வயசாகிடும், அதான் அவனை சரிக்கட்டி பொண்ணு பார்த்திருக்கு, எல்லாம் கூடி வர நேரத்துல  திரும்ப ஆரம்பிக்கிறீங்க..” ரத்னா மனத்தாங்கலுடன் கேட்டார்.

“மூணு பேரும் கூட்டு சேர்ந்து என்னமும்  பண்ணுங்க, அப்பறம் எனக்கும், என் மகனுக்கும் என்ன இருக்கு..?”  அங்கு வந்த மூர்த்தியை பார்த்து வேண்டும் என்றே பேசினார் கோமதி.

“ஆரம்பிச்சிட்டாங்க..” பரணி, ரத்னா, பல்லவி மூவரும் கோமதியை எரிச்சலுடன் பார்த்தனர்.

“ம்மா.. பல்லவி கவெர்மென்ட் வேலைக்கு தானே படிக்கிறேன்னு கேட்கிறா, படிக்கட்டும் நல்லது தானே.. அவளுக்குன்னு ஒரு சப்போர்ட் இருக்கும் இல்லை..” மூர்த்தி மகளுக்கு ஆதரவாக சொன்னார்.

“க்கும்.. நீயும் சேர்ந்துட்டியா அவங்களோட..? பொம்பளை பிள்ளையை ஏதோ ஒரு டிகிரி படிக்க  வச்சோமா, கட்டி கொடுத்தோமான்னு இல்லாம.. கவர்மெண்ட் வேலைக்கு படிக்க வைக்கிறானாம், எல்லாம் சேர்ந்து என்னவோ பண்ணுங்க,  இவ உங்க மூஞ்சில கரி பூசாம இருந்தா சரி தான்..” கோமதி பேசிவிட்டு செல்ல, பல்லவிக்கு உள்ளுக்குள் ஏதேதோ செய்தது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தான் செய்தது.

ஆயிற்று மூன்று வருடங்கள் ஈஷ்வர் அவளுக்கான நேரம் கொடுத்து விலகியிருப்பது. அவளின் டிகிரியும் முடியும் நிலையில்.

ஆனால் இன்னமும் இந்த தடுமாற்றம் மட்டும் பல்லவிக்கு தீறவில்லை.  வருவான் ஈஷ்வர்.. இன்னும் ஒரு வாரம்.. எக்ஸாம் முடிந்த அடுத்த நாள் முன்பும் போல இந்த முறையும் வந்து நிற்பான்.

“என்ன பதில் சொல்வாள்..? இப்பொழுதும் அந்த தடுமாற்றம் இருக்கிறது என்றா..?”

“அவன் மேல் உள்ள காதலில் சந்தேகம் இல்லை. ஆனால்..? போதும் பல்லவி திரும்ப திரும்ப யோசிச்சு..? அவன் மேல உள்ள லவ் அக்சப்ட் பண்ணிக்கோ..” மனம் கட்டளையிட, அவள் முகம் தெளிந்தது.

“பல்லவி.. இப்போ முதல்ல எக்ஸாம்ஸை நல்ல படியா முடி, அப்பறம் பார்ப்போம்..” மனதை அடக்கியவள்,  படிப்பில் கவனம் செலுத்தினாள்.

அங்கு ஈஷ்வரும், “ம்ஹ்ஹம்.. இன்னும் ஏழு நாள் இருக்கு மேடம் பைனல் இயர் எக்ஸாம் முடிய..”  பல்லவியை நினைத்து  பெரு மூச்சோடு மகாவின் காலேஜில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தான்.

அவனும்  இளநிலை படிப்பு முடித்து, முதுகலை முதல் வருடத்தில் இருந்தான். நரசிம்மன் அவனை UPSC கோச்சிங் கிளாஸ் சேர செல்ல சொல்லி கேட்டு கொண்டே இருக்க, தள்ளி போட்டு கொண்டே வந்தான்.

அவன் மனம் முழுதும் பல்லவி தான். அவளிடம் பேசாமல் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. மூன்று வருடங்கள் அவளை விட்டு தள்ளி நின்றது போதும், இனியும் முடியாது, அதற்கே அவன் பட்ட பாடு.. எப்போ அவளோட எக்ஸாம் முடியும் என்று நாட்களை எண்ணி கொண்டே இருக்கிறான்.

அவனுடைய எதிர்பார்ப்பு எல்லாம் அவளுடன் சேர்ந்து நேரம் செலவிட வேண்டும் என்பதே தவிர, அவனின் காதலுக்கு அவள் ஓகே சொல்வாள்.. மாட்டாள் என்றெல்லாம் இல்லை. அவ்வளவு நம்பிக்கை அவர்களின் காதல் மேல் அவனுக்கு.

வீட்டிற்கு சென்றவன், தன் ஏக்கத்தை தள்ளி வைத்து, படிக்க ஆரம்பித்தான். அவனுக்கும் முதல் வருட செமஸ்டர் ஆரம்பித்திருந்தது.

ஒரு வாரம் முடிய,  ஈஷ்வர் மிகவும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. அவனின் முகத்தில் அவ்வளவு வெளிச்சம்.

“அவளை எங்க வர சொல்ல..? மால்.. பீச்..” அவனுள்ளே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“எங்க மீட் பண்ணாலும் ஓகே.. அவளோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும், எந்த அவசரமும் இருக்க கூடாது, அவ பக்கத்துல உட்கார்ந்து பொறுமையா இத்தனை வ்ருஷ கதை சொல்லணும், அவ முகத்தை பார்த்து பேசணும், கை பிடிச்சு உணரணும்..” உள்ளுக்குள் பல கனவுகள், ஆசைகள் கணக்கில்லாமல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

அவளுக்காக மிகவும் பார்த்து வாங்கி வைத்திருந்த கிப்ட் எடுத்து தடவி கொடுத்தான். முதலில் அவளுக்கு  மெசேஜ் அனுப்ப வேண்டும். நம்பர் டெலீட் செய்திருந்தாலும் இதயத்தில் பதிக்கப்பட்டிருத்த அவளின் நம்பர் மொபைலில்  மீண்டும் குடியேறியது.

அவள் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து கொண்டே இருந்தான். நேரிலே பார்க்க பஸ் ஸ்டாப்  சென்றிருப்பான் தான். ஆனால் கண்டிப்பாக தூரத்தில்  நின்று யாரோ போல பார்த்துட்டு வர முடியாது என்பது நிச்சயம். தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தவன் நேரத்தை விரட்டி கொண்டிருந்தான்.

அங்கு பல்லவிக்கோ உள்ளுக்குள் அவ்வளவு குழப்பம் இருந்தாலும், ஈஷ்வரை பார்க்க மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தாள். இந்த இடைப்பட்ட மூன்று வருடத்தில் அவனை தூரம் இருந்து பார்த்திருக்கிறாள் தான். ஆனால் நேரில் உரிமையாக பார்ப்பது போல இருக்குமா..?

“கண்டிப்பா வந்திருப்பார்..” அன்றோடு டிகிரி பைனல் எக்ஸாம் முடித்து காலேஜ் பஸ் விட்டு இறங்கியவள் அவனை தேட இல்லை. “வரலையா..? தெரியலையா..? மறந்துட்டாரா..?” கேள்விகள் முளைத்து கொண்டே இருக்க, அவனை தேடி கொண்டே வீடு சென்றாள்.

ரத்னா உணவு கொடுக்க, பேருக்கு சாப்பிட்டவள், ரூம் சென்றாள். மொபைல் எடுத்து ஆன் செய்யும் எண்ணம் இருந்தாலும், செய்யவில்லை. “அதான் என்னை மறந்துட்டாரே..” ஈஷ்வர் மேல் கோவம் கொண்டு படுத்திருந்தவள், அப்படியே தூங்கி போனாள். நேற்று இரவு எக்ஸாமிற்கு முழித்து படித்ததின் விளைவு அந்த தூக்கம்.

அங்கு  ஈஷ்வர் அவள் ஆன்லைனில் வராததில் ஏமாந்து போனான். இன்னும் என்ன பண்றா..? போன் பண்ணிடலாமா..? யோசித்து கொண்டே இருந்தவன், நேரம் செல்ல செல்ல, பொறுக்க முடியாமல் கூப்பிட்டே விட்டான். ஆனால் மேடமின் மொபைல் ஸ்விட்ச் ஆப்.

“மொபைல் ஆன் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கா..? நான் கூப்பிடுவேன்னு தெரியாதா..?” ஏமாற்றம், கோவம். ரூமிற்குள்ளே நடந்தவன், திரும்ப திரும்ப போன் செய்ய, அதே பதில்.

“ம்ஹூம்.. இனியும் முடியாது..” தன் காத்திருப்பு நீண்டு கொண்டே போனதில் பொறுக்க முடியாமல் கிளம்பிவிட்டான்.

அன்று வந்த கார் இன்றும் பல்லவி  வீட்டு வாசலில் இருக்க, “கெஸ்ட் போல.. எங்கேயும் தென்படுகிறாளா..?” என்று மெல்ல பைக் ஓட்டியபடி வீட்டை பார்த்தான். எங்கேயும் இல்லை.. ஒரு  ஐந்து நிமிடம் சென்று திரும்ப போனான்.

“இல்லை..”  போன் எடுத்து அவள் வீட்டு லேண்ட் லைனுக்கு அடித்துவிட்டான். எடுத்தது  ரத்னா.. எரிச்சல் கொண்டவன் கட் செய்துவிட்டான். மீண்டும் அவளின் வீட்டு பக்கம் போக, அன்று வந்த அதே இளைஞன் வாசலில் நின்று போன் பேசி கொண்டிருக்க,  பல்லவி கையில் கப்புடன் வெளியே வந்தாள்.

“ஹப்பா..” பார்த்த ஈஷ்வர் மனதில் குளுகுளுவென இறங்கியது. ஹார்ன் அடிக்க, அவளோ இவனை கவனிக்காமல், அந்த இளைஞனனுக்கு அந்த கப்பை கொடுத்தாள். அவன் ஏதோ சொல்ல சிரித்து உள்ளே சென்றுவிட்டாள்.