“பாட்டி சொல்லு..”  கங்கா பேத்தியிடம் கேட்டு கொண்டிருக்க, நரசிம்மன் முகம் ஓரமாக தெரிந்தது. மருமகளின் முகத்தை அவதானித்து கொண்டிருந்தார் மாமனார்.

“சீக்கிரம் பாட்டிகிட்ட வந்துடணும்..” கங்கா அனுவிற்கு சொல்வது போல மருமகளுக்கு சொல்லி போனை வைத்தவர், 

“ஏங்க.. பல்லவி முகமே சரியில்லை..”  கணவனிடம் சொன்னார். 

“ம்ம்..” அவருக்கும் யோசனை தான். மகன் இரவு அங்கு சென்றான் என்று தெரியும். 

“நாம அவங்களை அங்க அனுப்பியிருக்கவே கூடாது.. உங்களால தான்.. நீங்க தான் என்னை பேச வேண்டாம்ன்னு கண் காமிச்சுட்டிங்க..”

“அவங்க வீட்ல கூப்பிடும் போது எப்படி நாம வேண்டாம்ன்னு சொல்ல..?  சொல்ல வேண்டிய ஈஷ்வர் அமைதியா இருக்கார்..”

“அவன் அப்படி தான் இருப்பான், நாம தான் கூட்டிட்டு வந்திருக்கணும்..”

“ம்ப்ச்.. அவங்க பாட்டி ஏதாவது பேசியிருக்கணும்..”

“ஓஹ்.. தெரிஞ்சும் ஏன் அனுப்புனீங்க..? உங்களுக்கும், உன் மகனுக்கும் இடையில மாட்டி நான் தான் கஷ்டப்படணும் பார்த்தா என் மருமகளும், என் பேத்தியும் கூட கஷ்டப்படணுமா..?”

“கங்கா..”

“நான் எதுக்கும் கொடுத்து வைக்கல போல, முத்தா ஆண் ஒன்னு, பொண்ணு ஒன்னு ரெண்டு பிள்ளைங்க பெத்தேன், ரெண்டும் என் கூட இல்லை.. பிச்சுக்கிட்டு போயிடுச்சுங்க, இழுத்து பிடிக்க வேண்டிய நாம  விட்டுட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதா இருக்கு, எல்லாம் உங்களால தான்..”

“அவங்களுக்கு நம்மளை விட அவங்க காதல், வேலை தான் பெருசுன்னா நாம என்ன செய்ய..?”

“அந்த மகா.. பொண்ணு வேணும்ன்னு வேண்டி வேண்டி பெத்தேன் அவளை, இப்போ என்னை பார்க்க கூட வர மாட்டேங்கிறா..”  கங்கா நிறுத்தாமல் அழுக, நரசிம்மனுக்கு உள்ளுக்குள் வேதனை தான். 

“என்ன செய்ய முடியும்..? இருவருமே தலைக்கு மேல வளர்ந்துவிட்டனர்..” வெளியே அரசியல்வாதியாக இருப்பவருக்கு வீட்டில் தந்தையாக இருக்க முடியாமல் போனது.

“ம்மா.. பாத்தி..” அனு போன் காட்டி சிரிக்க,  பல்லவி மகளின் தலை தடவி கொடுத்தாள். இவ்வளவு பெரிய போனை முதல் முதலாக பார்க்கிறாள் மகள். அதில் முகம் பார்த்து பேச குஷியாகி போனது குழந்தைக்கு. 

ரத்னா மதிய உணவு அறைக்கே எடுத்து வந்துவிட்டார். பல்லவி அன்று முழுதும்   கீழிறங்கிவில்லை. ஸ்னேக்ஸ், இரவு உணவு மேலே வந்தது. ரத்னா,  பரணி  ரூமிற்கு வந்து  நேரம் பேசி சென்றனர். இரவு அனுவிற்கு பால் கொடுத்து தூங்க வைத்தவள், பெட்டில் சாய்ந்து அமர்ந்தாள். 

ஈஷ்வர் வருவான் என்று தெரியும். பத்து மணி ஆனது வரவில்லை.  கிளம்பும் போது பார்த்த அவனின் பார்வை கண்டிப்பாக வருவான் என்று தெரிய, பல்லவி முழித்தே இருந்தாள். பதினோரு மணி போல வந்தான். தெரு முனையில் கேட்ட அவன் கார் சத்தத்தில் வேகமாக கீழே வந்து கதவை திறந்துவிட்டாள். 

“நீயே திறந்துட்டியா..?” ஈஷ்வர் உள்ளே வர குப்பென்ற ஸ்மெல். பல்லவிக்கு உச்சகட்ட அதிர்ச்சி. அவனே கதவை லாக் செய்துவிட்டு மனைவியின் கை பிடித்து மேலேறினான். 

ரூமிற்குள் நுழைந்தவுடன் மகளிடம் செல்ல போனான். பல்லவி அவனுக்கு முன் நின்றாள். “வழி விடுடி.. அவ ஞாபகமா இருந்துச்சு..”

“என் மகள் மேல உன் காத்து கூட  படக்கூடாது..” மிகவும் திட்டவட்டமாக சொன்னாள் பெற்றவள்.

“ஓஹ்.. அப்போ என் பொண்டாட்டி மேல படலாமா..?” 

பல்லவி அவனை தீர்க்கமாக பார்த்து நின்றாள். அவளின் பார்வை ஈஷ்வரை புருவம் தூக்க வைத்தது. 

“என்ன பார்வை பலமா இருக்கு..?” அவளை வளைக்க கை கொண்டு வர, மின்னலாக தள்ளி நின்றாள். 

“ஓஹ்.. நான் தொட கூடாதா..?”

“கண்டிப்பா கூடாது..  ஒரு குடிகாரன் என் பக்கத்துல வரதை கூட  நான் விரும்ப மாட்டேன்..” பல்லவியின் குரலில் அப்படி ஒரு தீவிரம். 

“ஹாஹா..  குடிகாரன்..” ஈஷ்வர் சிரிக்க, பல்லவி முகம் இறுக நின்றாள்.

இவன் அவள் காதலித்த ஈஷ்வர் இல்லை. நேற்றிரவு அவளின் மறுப்பு மறுக்கப்பட்ட நொடியே புரிந்தது தான்.  இவனை அவள் காதலிக்கவில்லை. காதலிக்கவும் முடியாது

அதிலும் நேற்றிரவு அவளின் காதில் அவன் சொன்ன வார்த்தைகள்.. நினைத்த நொடி உடல், மனம் இரண்டும் எரிந்தது.

“என்னடி.. பார்வையாலே எரிக்க ஏதும் பிளானா..?” ஈஷ்வர் அவளிடம் நெருங்க முனைய, பல்லவி உடலில் அப்படி ஒரு இறுக்கம், விலகல். 

“ம்ப்ச்.. இப்போ எதுக்கு இப்படி பண்ற..? அதான் சொன்னேன் இல்லை என்னோட அடையாளம் ஒன்னு இருக்குன்னு அது தான் நீ சொன்ன அந்த குடிகாரன்..?”  அலட்சியமாக.. அதே நேரம் ஒருவித திருப்தியுடன் சொன்னான். 

“உனக்கும், உன் மாமனாருக்கும் இந்த ஐடன்டிட்டி போதுமா..? எனக்குன்னு ஒரு அடையாளம்.. அதுவும் பெருசா ஒரு அடையாளம் வேணும்ன்னு தானே எல்லாம் செஞ்சிங்க.. போதுமா..? சேட்டிஸ்பைடா..?”

“நீங்க எதை காட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க..?”

“ஏன் உனக்கு புரியலையா..?”

“நிறைய புரிஞ்சிடுச்சு.. உங்களோட செயல், அந்த தேர்ட் ரேட் பேச்சு..  போதும்.. கிளம்புங்க முதல்ல.. போங்க..” 

“ஏன் கிளம்பணும்..? கல்யாணம் முடிச்சு, ஒரு குழந்தை பிறந்ததுக்கு அப்புறமும் நீ இவங்க வீட்டு பொண்ணுன்னு உன் அம்மா, அண்ணன் உன்னை இங்க கூட்டிட்டு வருவாங்க, நீயும் இவங்க  பேச்சை கேட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்க.. உங்களுக்கு  என் உரிமை அளவு தெரியலயா..?”

அப்பறம் ஏன் நேத்து நைட் என்னை உன் ரூமுக்குள்ள விட்டாங்க, என்னையும் உன்னை அன்னிக்கு வெளியே அனுப்பின மாதிரி அனுப்ப வேண்டியது தானே..? அனுப்ப முடியாது, ஏன்னா நான் உன் புருஷன்..”

அது உனக்கும் மறக்க கூடாதுநீ என் பொண்டாட்டி மட்டும் தான், அவங்க வீட்டு பொண்ணு இல்லைங்கிறது உங்க வீட்டு ஆளுங்களுக்கும்  மறக்க கூடாது..”  அன்னிக்கு துரத்திட்டு இன்னிக்கு இவங்க வீட்டு பொண்ணாம்..?  இப்போதும் இரவு நேரத்தில் பல்லவியை வெளியே அனுப்பின கோவம் ஈஷ்வருக்கு குறையவில்லை. அன்று அவள் அழுத அழுகை

“இதை மனசுல வச்சு தான் என்கிட்ட நேத்து நைட் அப்படி நடந்துக்கிட்டிங்களா..?”

“ம்ஹா.. உன்னோட அந்த முத்தம் எனக்கு என் உணர்வை எழுப்பி விட்டுடுச்சு..”

“உங்களை பார்த்த சந்தோஷத்துல.. என்னோட காதல்ல கொடுத்த முத்தம் அது..”

“காதலா..? இனி அந்த வார்த்தையை என் முன்னாடி சொல்லாத.. எல்லாம் சுத்த ஹம்பக்.. அவங்கவங்க தேவைக்கு யூஸ் பண்ற வார்த்தை அது..”

“அப்பறம்  ஏன் என்னை தேடி வந்தீங்க..? அங்கேயே விட்டு தொலைக்க வேண்டியது தானே..? நானும் என் மகளும் நிம்மதியா இருந்திருப்போம் இல்லை..”

“நிம்மதியா..? ம்ம்.. அந்த ஒன்னு இல்லாம நான் இங்க தினம் தினம் தவிச்சிட்டிருக்க நீ மட்டும் என் மகளோட நிம்மதியா இருப்பியா..? நீ என்னை பிரிஞ்சு போனப்போ கூட எனக்கு உன் மேல இவ்வளவு கோவம் இல்லைடி.. என் அப்பா தான் ஏதோ கேம் பிளே பண்ணிட்டார் நினச்சேன்..”

“அதனால தான் நீ நம்ம காதல் மேல வச்ச சத்தியத்தை மீறி உன்னை தேடி வராம எனக்குள்ளே இங்க அழுதுட்டு இருந்தேன்.. ஆனா எப்போ உன் அண்ணா கேட்டான்னு விசாரிச்சேனோ அப்போ புரிஞ்சுது நீ எனக்கு செஞ்சது.. நீ முழு மனசோட தான் என்னை விட்டு போயிருக்கன்னு..”

“அதுவும் ஒரு ஐபிஸ்க்காக.. உனக்கு என்னை விட என்னோட அடையாளம் பெருசுன்னு புரிஞ்சது.. அதுக்காக தான் என் மக இருக்கிறதையே என் கிட்ட சொல்லாம என்னை விட்டு போன..”

“உனக்கு தெரியுமாடி போன வாரம் உன் பாட்டி, இந்நேரத்துக்கு எத்தனை குழந்தை பிறந்திருக்குமோ சொன்னப்போ,  அப்படி ஒன்னு இருந்திருந்தா என் லவி என்னை விட்டு போயிருக்க மாட்டாளேன்னு அன்னிக்கு நைட் முழுசும் அழுதேன்டி.. இப்போ அதை எல்லாம் நினைச்சா எனக்கு வெறுப்பா இருக்கு..” மகள் தூங்க அடிக்குரலில் வெடித்து கொண்டிருந்தான் ஈஷ்வர். 

அவனின் வேதனைகள் அவளுக்கும் வேதனை தானே, அவளும் தானே அவனை பிரிந்து அழுதாள். ஆனால் அதை எல்லாம் இப்போது சொல்லி புரிய வைக்க முடியும் என்று தோன்றவில்லை. 

“நீங்க கிளம்புங்க..”

“முடியாது.. ஏன் போகணும்..?”

“ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான்  ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..”

“ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க அவனை மிகவும் தீவிரமாக பார்த்த பல்லவி, 

“நேத்து நைட் நீ என் மறுப்பை மீறி என்னை தொட்டப்போ என்னோட அந்த காதல் தான் அதை சகிச்சுகிச்சு, ஆனா இன்னிக்கு உங்க மூச்சு காத்து என்மேல பட்டா கூட என்னை நான் எதாவது பண்ணிக்குவேன்..”

“உன்னை ஏண்டி..? என்னை கொன்னுடு.. நீயும் நிம்மதியா இருக்கலாம், நானும் நிம்மதியா போய் சேர்ந்துறலாம்..” ஈஷ்வர் குரல் கரகரக்க சொல்ல,  எவ்வளவு கட்டுப்படுத்தியும் பல்லவியின் கண்கள் கண்ணீரை சிந்தி தான் விட்டது.