தாரகை 13

பவிதா ஸ்ரீநிதியை பார்த்து, இதுக்கு மேல அவனுக்கு உன்னோட காதலை புரியவைக்க முடியாது. அவன் உன்னுடைய கணவனாக சந்தோசமா வாழணும். உன்னை நல்லா பார்த்துக்கணும். உன்னோட மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்லிடு..

“நம்ம ஐஸூ போல அப்படியே பண்ணனும் ஓ.கேவா?” பவிதா கேட்க, “அவங்க உங்க ஐஸூன்னா பச்சன் பேமிலி உங்களோட சண்டைக்கு வந்துருவாங்க” தனு கூறி சிரித்தாள்.

“இவ வேற. நாங்க தயார்” பவிதா தனுவை பார்த்தாள்.

எல்லாரும் அமைதியாக, ரிஷி கண்கள் பவிதாவையே நோக்கியது. திடீரென அவனை பார்த்த தன்வி முகம் சுணங்கியது. நிதுவை கஷ்டப்படுத்திருவானோ? பயத்துடன் ஆர்.ஜேவிடம் பாடலை போட சொல்லி, மைக்கில் இடையில நாமும் அவங்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றாள் தன்வி.

 

“கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

நான் கண்ணாடி பொருள் போலடா…”

ஸ்ரீநிதியை பார்த்து புன்னகையுடன் பவிதா வாயசைக்க, பெருமூச்சை இழுத்து விட்ட ஸ்ரீநிதியும் அவளுடன் சேர்ந்து நடனமாட ஆயத்தமானாள்.

“அந்த நதியின் கரையை நான் கேட்டேன்

அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன். (2)

வான்வெளியில் கேட்டேன்.. விடையே இல்லை

இறுதியில் உன்னை கண்டேன் உன் இருதய பூவில் கண்டேன்……

கண்ணாமூச்சி ஏனடா……(1)

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?…..(2)

எனக்கென உணர்ச்சிகள் தனியா இல்லையா?

நெஞ்சின் அலை உறங்காது..

உன் இதழ் கண்டு என் வாய் மூடவா என் கண்ணா..( 2)

உன் இமை கண்டு விழி மூட வா…..

உன்னுடல் தான் உனையள்ள வா….

………………………………………………..

நானின்று பெண்ணில்லையா கண்ணா?

அதை நீ காண கண்ணில்லையா?

உன் கனவுகளில் நானில்லையா?

தினம் ஊசலாகுதென் மனசு

அட ஊமையில்லை என் கொலுசு..

என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே

இரு உயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே

உயிர்த் தர வா…….

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…..(1)

பாடலில் வரும் வரிகளின் மூலமும், ஸ்ரீநிதி அவள் உணர்வுகள், முகபாவனைகள் வாயிலாகவும் ரிஷி மீதுள்ள காதலை வெளிப்படுத்தினாள்.

மகிழ்வுடன் அனைவரும் பார்க்க, பவிதாவை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி ஸ்ரீநிதி அவனிடம் காதல் கூறிய விதத்தில் அவனை மீறியும் உறைந்து ரசித்தான். அவனை பார்த்த தனு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அவளருகே வந்த ஜோ, இதுக்கெல்லாம் உன் அண்ணா நிது பக்கம் வர மாட்டான்.

ஏன் வர மாட்டான்? வருவான். மோதிரம் நிதுவிற்காக வாங்கிய அவனுக்கு கண்டிப்பாக நிது காதல் புரியும்.

“இல்லை” தலையசைத்த ஜோ, நான் தான் உன் அண்ணாவை கட்டாயப்படுத்தி மோதிரம் வாங்க வைத்தேன். என்னோட அக்கா வருத்தப்படக் கூடாதுன்னு செய்தேன். பார்த்தேல்ல அவளது சந்தோசத்தை ஜோ கூற, தனு மனம் விக்கித்து அவனை பார்த்தாள்.

ரிஷி அண்ணிக்கு வாங்கித் தரலையா?

ஜோ அவளை பார்த்து, “பணம் கொடுத்தது அவன் தான். ஆனால் அவனுக்கு இப்பொழுதில்லை எப்போதும் நிது மீது காதல் வராது. நிது இந்த மகிழ்ச்சியில் திருமணம் வரை இருந்திருவா. அடுத்து நடக்கப் போவதை அந்த கடவுள் தான் பார்த்துக்கணும்” தனுவிடமிருந்து நகர்ந்தான்.

தனு ரிஷியை பார்த்து சினம் கொண்டாலும் ஏதும் பேசாமல் அவள் அம்மாவிடம் நின்று கொண்டாள். அவர் அவளை பார்த்து விட்டு ஜோவை பார்க்க, அனைவரின் கைதட்டலில் ஒருவர் மட்டும்..உன்னோட காதலை இப்பவே மாப்பிள்ளகிட்ட சொல்லும்மா..கூட்டத்திலிருந்து சத்தமிட்டார்.

ஸ்ரீநிதி கைக்கு மைக் வரவும் அதை வெடுக்கென புடுங்கிய தனு, “அதெல்லாம் இனி அவங்க குடும்ப விசயம். என்னோட அண்ணி என்னோட அண்ணாவை காதலிப்பதை காட்ட தான் நான் இந்த ஏற்பாட்டை செய்தேன்” சொல்லி விட்டு, “சாரி நிது நீ காதலை சொல்லி அவன் ஏத்துக்கலைன்னா இந்த திருமண வாழ்க்கை மொத்தமாக முடிந்து விடும்..சாரி” மனதில் எண்ணி ஸ்ரீநிதியை பார்த்துக் கொண்டே நின்றாள்.

அவள் கையிலிருந்த மைக்கை பிடுங்கிய ஜெய் அவன் காதலை பவிதாவிடம் கூற, அவர்கள் இருவரும் கட்டிக் கொண்டனர். ரிஷி கண்ணீரை சுட்டி விட்டு அவர்களை பார்த்தான்.

அனைவரும் சாப்பிட, ஜோடிகளும் உணவுண்ண அமர்ந்தனர். தனு அமைதியாக இருக்க, அவள் அம்மா அவளது கையை தட்டி அவங்கள ஊட்ட சொல்லுடி..

ம்ம்! அவள் இரு ஜோடிகளையும் பார்க்க, ஜெய்யும் பவிதாவும் புன்னகையுடன் பேசியும் கொஞ்சியும் கொண்டிருந்தனர். ஆனால் ரிஷி ஸ்ரீநிதி பக்கம் கூட திரும்பவில்லை. அவன் அவ்வப்போது பவிதாவை பார்ப்பதை கவனித்து அதிர்ந்த தன்வி அவன் முன் சென்று நின்றாள். அவனிடம் எதையும் கேட்க விருப்பமில்லை.

“நிதுவுக்கு ஊட்டி விடு” தன்வி சொல்ல, “வேண்டாம் தனு. நான் சாப்பிட்டுப்பேன்” என்றாள் ஸ்ரீநிதி.

அழகியும் தர்மேந்திரனும் அவர்களை பார்த்து அருகே வந்து தன்வியை பார்த்து, “வேண்டாம்ன்னா விட்டுரும்மா” என்றனர்.

இருவரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க. ஊட்டி விடுறதுல்ல என்ன இருக்கு? சினமுடன் அவனை தன்வி பார்க்க, ரிஷி ஏதும் கூறாமல் தன் இலையில் இருந்த உணவை ஸ்ரீநிதிக்கு ஊட்டி விட, தன்வி அவளை பார்த்தாள்.

“அவருக்கு விருப்பமில்லாததை நான் செய்ய மாட்டேன்” ஸ்ரீநிதி தன்வியை முறைத்து உணவை எடுத்து உண்ண சென்றாள். ரிஷி அவள் கையிலிருந்த உணவை அவன் வாயில் வாங்கிக் கொண்டான். ஸ்ரீநிதி அதிர்ந்து அவனை பார்த்தாள். ஆனாலும் தன்விக்கு அவன் மனமொத்து செய்யவில்லை என்று நெஞ்சம் குறுகுறுத்தது.

“போதுமாம்மா. வா சாப்பிடலாம்” அழகி அழைக்க, “எனக்கு பசிக்கலை” என்று சொல்லி தனு நகர, அவள் கையை பிடித்த ரிஷி அவன் உணவை தனுவிடம் நீட்டினான். அவள் முகத்தை திருப்ப, “தனு” ஸ்ரீநிதி சினமுடன் அழைத்தாள்.

ஏதும் பேசாமல் வாங்கி விட்டு அவள் நகர, ரிஷிக்கு கஷ்டமாகிப் போனது.

அழகி அவள் பின்னாலேயே சென்றார்.

ஆன்ட்டி, என்னை தனியா விடுங்க. எனக்கு மனசே சரியில்லை..

“சாப்பிட்டு தனியா நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்” அழகி சொல்லிக் கொண்டிருக்க, நளினி தன் மகளை பார்த்து, சாப்பிடலையாடி? கேட்டார்.

“எனக்கு பசிக்கல. என்னை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க” மணமகள் இருந்த அறைக்கு ஓடினாள். வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்த தாத்தாவும் ஜோவும் அவளை பார்த்தனர்.

“ஜோ போ என்னன்னு கேளு” அமரேசன் கூற, “அவளுக்கு தான் பெரிய குடும்பமே இருக்காங்கல்ல? நான் எதுக்கு போகணும்?” அவன் சொல்லி அவன் வேலையை கவனித்தான். ஆனால் மனதினுள் தன்வியின் எண்ணமே ஜோவிற்கு ஓடிக் கொண்டிருந்தது.

கால்பந்து மைதானத்தின் பின் அவள் வந்து பேசினாலும் ஜோ தன்வியை தவிர்த்து வந்தான். அவனுக்கு தன்வி மீது காதல் இருப்பதை புரிந்து கொஞ்சமாவது விலகி இருக்கணும் என்று தீர்மானமாக முடிவெடுத்து இருந்தான்.

“நீங்க சாப்பிடுங்க. நான் பார்த்துக்கிறேன்” நளினி தன்வி பின் செல்ல, அழகி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். தர்மேந்திரன் அவர் தோளில் கை வைக்க, அவர் மார்பில் சாய்ந்து கொண்டார்.

வாம்மா..சாப்பிடலாம்..

“ஜோ” அவர் அவனை பார்க்க, “நீ முன்னாடி போ. நான் எல்லாரையும் அழைத்து  வாரேன்” நகர்ந்தார் தர்மேந்திரன்.

என்னடி ஆச்சு? நளினி அறையில் குப்புற விழுந்து அழுது கொண்டிருந்த தன்வியிடம் கேட்டுக் கொண்டே அறைக்கதவை மூடினார்.

அம்மா..அண்ணா எதுவுமே செய்யல. எனக்கு பயமா இருக்கு. அவனை பின் தொடர்ந்து சென்று தான் இந்த ஒரு வருசமா ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க. இப்ப அவங்க வாழ்க்கையே பாழாகிடுமோன்னு பயமா இருக்கு அழுதார்.

“இருவரும் ஒரே அறையில் இருந்தால் எல்லாம் சரியாகிடும்மா” நளினி கூற,

இல்லம்மா, கண்டிப்பா ஆகாது. ரிஷி அண்ணாவுக்கு பவிதாவை பிடிச்சிருக்கும்மா அழுதாள். அவர் அதிர்ந்து, என்னடி சொல்ற? கேட்டார்.

ஆமாம்மா, அண்ணா பவிதா உடன் தான் வேலை பார்த்துட்டு இருந்திருக்கான். அப்பவே காதல் வந்துருக்கு. ஆனால் பவிக்கு முன்னிருந்தே நம்ம ஜெய் அண்ணாவை தான் பிடிச்சிருக்கு. இப்ப அவரும் அவங்கள தான் காதலிக்கிறார். எல்லாரும் ஒரே வீட்டில். பயமா இருக்கு. இதை விட நிது மீண்டும் அண்ணாவால் காயப்படப் போறாங்க அழுதாள்.

“அப்படியெல்லாம் ஒன்றுமாகாதும்மா” தன்விக்கு ஆறுதல் கூறினாலும் நளினி மனதிற்கு நன்றாக தெரிந்தது. இது எல்லாம் மொத்தமாக நிதுவை தான் பாதிக்கப் போகுது எண்ணினார். ஆனால் தன் மகளிடம் அதை பற்றி சொல்லாமல் அவள் மனதை சமாதானப்படுத்தி உண்ண அழைத்து வந்தார்.

பனிமலரும் அப்பொழுது தான் உணவுண்ண வந்து கொண்டிருந்தார். பெரிய பெரிய ஆட்களெல்லாம் சென்ற பின் அவர் உணவுண்ண வந்தார்.

“இன்னுமாம்மா சாப்பிடலை?” தன்வியிடம் அவர் கேட்டுக் கொண்டே நளினியை பார்த்தார்.

“சாப்பிட தான் போறோம்” அவர் தலையை நிமிர்ந்து கூட பாராமல் தன்வியுடன் அமர்ந்தார்.

இந்த பொண்ணு இவனை வச்சி எப்படி சமாளிக்கப் போறா? சிந்தனையுடன் உணவுண்ணாமல் உணவை வெறித்தவாறு அமர்ந்திருந்தார் நளினி.

“ஏடி நள்ளூ, சாப்பிடாமல் என்ன பண்ணீட்டு இருக்க?” பாட்டி அவரிடம் வந்து நிற்க, நளினி கண்கள் கலங்கி இருந்தது. இவர்களுக்கு எதிரே அமர்ந்து உண்டு கொண்டிருந்த ஜோ புருவம் சுருங்கி தன்வியையும் அவள் அம்மாவையும் பார்த்தான்.

“ஒன்றுமில்லை அத்தை. அவர் நினைவு வந்திருச்சு. சாப்பிட முடியல” நளினி மேலும் கண்கலங்க, கையில் எடுத்த உணவுடன் தன்வி அவள் அம்மாவை பார்த்தாள்.

“புள்ள சாப்பிடாம உன்னை பார்த்துட்டு இருக்கா” பாட்டி கூற, தன்வி நளினியை பார்த்துக் கொண்டே உண்டாள். சரியாக உண்ணவில்லை. பாதியிலே எழுந்து சென்ற அவள் முன் இலையில் வைக்கப்பட்ட குலோப்ஜாமூனை நீட்டினான் ஜோஜித்.

“வேண்டாம்” தலையை மட்டும் ஆட்டினாள்.

யாருமில்லா இடத்திற்கு அவளை தனியே இழுத்து சென்ற ஜோ, “ஏதும் பிரச்சனையா?” கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த அவள் அவனை பார்க்க கூட திராணியில்லாது தலையை கவிழ்ந்து கொண்டாள்.

“தனு” மென்மையாக அழைத்து அவளது முகத்தை ஜோ அவன் கைகளால் நிமிர்த்தினான்.

“தான் பிக்பாவிடம் பேசியதால் தான் எல்லாம்” மனதில் எண்ணம் தோன்ற, ஜோவின் மிருதுவான அழைப்பும் அவள் கண்ணிலிருந்து தாரைதாரையாக நீர் கொட்டியது.

“ஹேய்ய்..என்னாச்சு?” அவன் பதறி தனு கண்ணீரை துடைத்து விட்டான்.

“ஐ அம் சாரி ஜோ” அவனை அணைத்து அழுதாள். சுற்றும் முற்றும் பார்த்தவன் யாருமில்லை என்றதும் அவளை அணைத்து, “எதுக்கு அழுற? உன்னோட அம்மாவின் முகமும் சரியில்லை. பெரிய பிரச்சனையா?” கேட்டான்.

“இல்லை. எனக்கு தனியா இருக்கணும் போல இருக்கு. தொண்டை அடைக்குதுடா. முடியல” அழுதாள்.

அதான் ஏன்?

இவனிடம் சொன்னால் இவனுக்கும் ரிஷிக்கும் சண்டை முற்றி விடும் என்று எண்ணி, அவனை இறுக அணைத்து பின் நகர்ந்து “தேங்க்ஸ் ஃபார் கன்சோலிங்” சொல்லி விட்டு நிற்காமல் ஓடி விட்டாள். ஜோவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சிந்தனையுடன் நகர்ந்தான்.

குடும்பமே அமர்ந்திருந்தனர்.

இரண்டாவது வாரமே திருமண தேதியை முடிவு செய்தனர். பின் அனைவரும் சொல்லி விட்டு கிளம்ப, “டாட் நான் பப்ளிம்மாவிடம் பேசிட்டு வாரேன்” ஜெய் பவிதாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“போதும்டா பேரான்டி. மீதியை அலைபேசியில் வச்சுக்கோ” அவர் அவனை இழுத்து சென்றார். பவிதா புன்னகையுடன் திரும்பினாள்.

ரிஷி பவிதாவை பார்த்து விட்டு ஸ்ரீநிதியை பார்த்தான். ஏதும் கூறாமல் காரில் ஏறினான்.

“அக்கா, நீயும் அம்மாவும் ஆட்டோவில் வந்துருங்க” ஜோ கூற, “டேய்..ரிஷி நீயும் அவங்களோட போ” என்றார் சந்திரமுகன்.

“இல்ல அங்கிள். இருக்கட்டும்” ஜோ கூற, ரிஷி காரிலிருந்து இறங்கி ஆட்டோவில் ஸ்ரீநிதி அருகே அமர்ந்தான்.

இவர் தான் மாப்பிள்ளையாக்கா? ஆட்டோ டிரைவர் கேட்டார்.

ஆமா சுரேந்தர். நம்ம நிதுவை இவர் தான் கல்யாணம் செய்துக்க போறார் என்று அமைதியானார் பனிமலர்.

ஸ்ரீநிதிக்கு அவனின் அருகாமை மனதினுள் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் அவளுக்கு நெருடலாக ஏதோ செய்தது. அவளின் ஆடையை இறுக பற்றியவாறு அமர்ந்திருந்தாள்.

ரிஷி அதனை பார்த்து, அவள் ஆடையிலிருந்து அவள் கையை எடுத்து விட்டான். இருவரும் அவனை பார்த்தனர்.

“எதுக்கு டென்சன்? நார்மலா இரு” என்றான்.

புன்னகைக்க முடியாமல் அவள் புன்னகைக்க ஆட்டோக்காரர் அவர்களை கவனித்துக் கொண்டே வந்தார்.

வீடு வரவும் அவர்கள் இறங்கினார்கள். ரிஷி அவனது வாலட்டை எடுத்தான்.

“இருக்கட்டும்ப்பா” பனிமலர் பணத்தை கொடுத்து ஆட்டோவை அனுப்பி விட்டு ரிஷியை பார்த்தார்.

நான் கிளம்புகிறேன் ஆன்ட்டி.

ம்ம்..

எப்படி போவீங்க? ஸ்ரீநிதி அவனிடம் கேட்க, பனிமலர் அவளை பார்த்தாள்.

ஜோ பைக்குடன் வந்து, “நான் டிராப் பண்ணீட்டு வாரேன். வீட்டை உள்ப்பக்கமா லாக் பண்ணீட்டு இருங்க. கால் பண்றேன். பின் வெளிய வாங்க” சொல்லி ரிஷியுடன் கிளம்பினான். ரிஷி திரும்பி ஸ்ரீநிதியை பார்த்துக் கொண்டே சிந்தனையுடன் சென்றான்.

மனதில் இருக்கும் வலியை யாரிடமும் காட்ட முடியாமல் தவித்து நிற்காமல் அறைக்கு ஓடினான் ரிஷி. நளினி அவன் பின் செல்ல, அவர் கையை பிடித்த தன்வி “வேண்டாம்” தலையசைத்து அவள் மனதில் உள்ளதை கூறினாள்.

தாத்தா வீட்டிற்கு சென்றவுடன் பனிமலரை அழைத்து பேசி விட்டு சந்திரமுகனை அழைத்து, சில விசயங்களை பேச அவர் வீட்டிற்கு நாளை வருவதாக கூறி வைத்து விட்டார்.

பவிதா ஜெய்கிரிஷ் மகிழ்ச்சியுடன் இருக்க, ரிஷியோ எல்லாவற்றையும் இழந்தது போல அறையினுள் ஒளியிழந்து தரையில் அமர்ந்திருந்தான். தன் நண்பர்களின் கேவலமான செயல்களை எண்ணியவனுக்கு புகழ் அவனை பாதுகாத்தது ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீயை அவன் காதலிக்கிறான். அவள் என்னை காதலிக்கிறான்னு தெரிந்தும் அவனால் எவ்வாறு எனக்காக உதவ முடிந்தது. என்னிடமிருந்து பவியை பறித்த என் அண்ணன் மீது எனக்கு கோபம் தானே வருகிறது. ஸ்ரீநிதியை பற்றி சிந்தித்தான்.

யாரும் என்னை நம்பாத நேரத்தில் அவள் மட்டும் தான் என்னை நம்புகிறாள். எனக்காக எல்லாரிடமும் பேசுகிறாள். கோபப்படுகிறாள். எனக்காக நடனம் கூட…என்று அவளது காதலை எண்ணினான்.

எழுந்து அலமாரியை திறந்து அதிலிருந்த ஒரு பைல்லை எடுத்தான். அதை பிரித்தவன்..இது ஸ்ரீக்கு தெரிந்தால் என்ன செய்வாள்? என் மீது கோபப்படுவாளா? அடிப்பாளா? அழுவாளா? இல்லை…சிந்தித்தவாறு அதனை உள்ளே வைத்து பூட்டி சாவியை எடுத்து அவனது மியூசிக் அறையின் பெட்டி ஒன்றில் வைத்தான்.

மறுநாள் காலை பனிமலர் தயாராகிக் கொண்டிருந்தார்.

ஜோ நீயும் என்னோட வரணும்.

அம்மா, நான் வரலை.

“என்ன நினைச்சிட்டு இருக்க? நீயில்லாமல் எப்படி போறது?” பனிமலர் சத்தமிட்டார்.

சரி வாரேன். நிது வெளிய எங்கேயும் போகாத.

அம்மா, நான் நம்ம கார்மென்ட்ஸூக்கு போகவா? ஸ்ரீநிதி கேட்க, தனியா இருக்கிறத விட இது நல்ல ஐடியா ஜோ கூற, இரு வாரத்துல திருமணத்தை வச்சிட்டு வெளிய போகக் கூடாது..

“அம்மா” ஸ்ரீநிதி அழைக்க, அக்கா அந்த ஆடையை கம்பிளீட் பண்ணலாமே! ஜோ கேட்க,

ம்ம்! நீங்க போயிட்டு வாங்க. நான் அந்த ஆடையை இரு வாரத்திற்குள் முடிக்கப் பார்க்கிறேன்..

அப்படின்னா உன்னோட டிசைனிங் கோர்ஸ்ஸிற்கு எதை செய்யப் போற? பனிமலர் கேட்டார்.

“நியூ டிசைன் ட்ரை பண்ணணும்மா” அவளும் புகழும் பாதியிலே நிறுத்திய ஆடை இருக்கும் அறைக்கு சென்றாள். பனிமலரும் ஜோவும் ரிஷி வீட்டிற்கு கிளம்பினார்கள்.

எல்லாம் அப்படியே இருந்தது. கண்கலங்க அதை தொட்டுப் பார்த்தாள் ஸ்ரீநிதி.

புகழ், “நீயில்லாமல் என்னோட ஒரு கை அறுபட்டது போல இருக்குடா” மடிந்து அமர்ந்து அழுதாள்.

சற்று நேரத்தின் பின் அமர்ந்து அவள் ஆடையை வடிவமைக்கத் தொடங்கினாள்.

சந்திரமுகன் வீட்டிற்கு அமரேசன் வந்த பின் தான் ஜோவும் பனிமலரும் வந்திருந்தனர்.

ரிஷியை சந்திரமுகன் அழைக்க, அவனறையிலிருந்து அவனும் வந்தான். ஜெய் மட்டும் வீட்டில் இல்லை. மற்ற எல்லாரும் அங்கே குழுமி இருந்தனர்.

வந்தவர்களை பார்த்து “வாங்க” தலையசைத்து மான்விழி அருகே அமர்ந்தான் ரிசாத்பவன்.

“பொண்ணுங்களுக்கு செய்யவிருக்கும் சீர் பற்றி தான் பேச வந்தோம்” அமரேசன் கூற, “எதுக்கு அதெல்லாம் உங்களுக்கு விருப்பமானதை மட்டும் பிள்ளைங்களுக்கு கொடுத்தணுப்புங்க” பாட்டி கூறினார்.

“செய்ற முறை இருக்குல்லம்மா” பனிமலர் அமரேசனை பார்த்தார்.

ம்ம்..நாங்க புள்ளைங்களுக்கு கலந்து செய்கிறோம்.

கலந்தா? நளினி கேட்க, ஆமா..நான் நூறு பவுன் சரிசமமாக நிது பவிக்கு போடுகிறேன் என்று பனிமலர் கூற, அமரேசன் அவரை பார்த்து விட்டு..நான் பவிக்கும் நிதுவுக்கும் சில பிராப்பர்ட்டீஸ் எழுதித் தாரேன். இருவருக்கும் சரிசமமாக நகை போடுகிறேன் என்றார் தாத்தா.

“நிது, பவியோட தோழி தான! நீங்க எதுக்கு இவ்வளவு செய்யணும்?” நளினி அமரேசனிடம் கேட்டு விட்டு பனிமலரை பார்த்தார்.

எனக்கு இருவருமே என்னோட பேத்திகள் தான். அதே போல தான் ஜோவும் புகழும் என்று ஜோவை பார்த்தார் தாத்தா.

ஜோ அமைதியாக இருந்தான்.

“உங்க பேத்திகளா? உங்களுக்கு பெரிய மனசு தான்” நளினி கூற,

மாம்..உங்களுக்கு தெரியாது. நிதுவும் பவியும் காலேஜ்ல்ல ட்வின்ஸ்ன்னு தான் பேசிப்பாங்க. இருவருக்கும் அவ்வளவு அன்பும் ஒத்துமையும் இருக்கும். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை என்பது போல தான் இருப்பாங்க..

என்ன புகழ் அண்ணாவுக்காக பவி அடிக்கடி அவங்கள தனியா விட்டு ஜோவோட சுத்துவா என்று ஜோவை பார்த்தாள் தன்வி.

“ஆமா, புள்ளைங்கள பார்த்ததிலிருந்து இருவரும் அக்கா தங்கை போல தான் இருக்காங்க” மான்விழி புன்னகையுடன் கூற, அப்படியாக்கா..அப்ப யாரு அக்கா? யாரு தங்கை?

“எனக்கு தெரிந்து நிதி தான் அக்காவா இருப்பா. அவங்ககிட்டவே கேளுங்க” மான்விழி கூற, ஜோ சிரித்தான்.

எதுக்கு சிரிக்கிற? தன்வி கேட்க, உங்க யாருக்கும் நிதுவை பற்றி இன்னும் தெரியல. அவ பொறுப்புடன் இருப்பா தான். எல்லாமே தெளிவா செய்வா தான். ஆனால் அவ தான் எங்களை விட குட்டி பேபி என்றான்.

குட்டி பேபியா? பாட்டி கேட்க, சந்திரமுகன் புன்னகைத்தார்.

ம்ம்! அவள இந்த இரு வாரங்கள் நாங்க பார்த்துக்கிறோம். அதன் பின் நீங்க எல்லாரும் தான் பார்த்துக்கணும். அவளுக்கு டிரஸ்ஸிங் சென்ஸ் மட்டும் தான் இருக்கும். சிறுவயதிலிருந்து எல்லாமே அவளுக்கு புகழ் தான். அவனில்லாமல் வீட்டில் கூட தனியே இருந்ததில்லை. என்னோட கெஸ் சரின்னா இப்ப அழுதுட்டு தான் இருப்பா என்று தன் அம்மாவை பார்த்தான்.

நிதுவுக்கு அவளோட பொருளை பத்திரமா பார்த்துக்கத் தெரியாது. ஹேர் கூட மெயிண்டைன் பண்ண தெரியாது.

மத்தவங்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாமே அவ செய்வா. அவளுக்கு வேண்டியதை அவளுக்கு செய்யத் தெரியாது. அப்படி செய்தாலும் சொதப்பி விடும்..

நிதுவுக்கு வேண்டிய எல்லாமே புகழ் தான் செய்வான். அவளோட தலை முடி நன்றாக வளரவும் அவன் தான் காரணம். அவளுக்கு தலையை பின்னி விடுவான்.

மான்விழியை பார்த்து, எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் நீங்க செய்யணும்..

நிதுவுக்கு பிரீயட்ஸ் டைம் சரியாக எந்த வேலையும் செய்ய முடியாது. வலியால ரொம்ப கஷ்டப்படுவா. அந்த நேரம் மட்டும் அவள நல்லா பார்த்துக்கோங்க..

கண்டிப்பா என்னோட மருமகள நான் பார்த்துக்கிறேன் என்றார் மான்விழி.

உங்க பையனை அவ கல்யாணம் பண்ணிக்கிறதை என்னால இப்ப கூட ஏத்துக்க முடியல. ரிஷி எப்போதும் அவரோட விசயத்துல்ல மட்டும் தான் கவனமா இருப்பார். அவரை பார்த்துக்க அவளால் முடியும். அவளை பார்த்துக்க அவரால் முடியாது.

புகழை தான் என்னோட நிதுவுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு எல்லாரும் ஆசையோட இருந்தோம். அவனை விட யாராலும் அவளை பார்த்துக்க முடியாது கண்ணீர் வர அதை துடைத்த ஜோ, அவன் இல்லைன்னு அவ இன்னும் ஏத்துக்கலை. அவளுக்கு தெரியுது பட் ஏத்துக்க முடியாம இருக்கா.

ஒரு வேளை புகழை பற்றி அவ பேசினால் யாரும் தப்பா ஏதும் பேசிறாதீங்க பட்டென மண்டியிட்டான் ஜோ.

எல்லாரும் அதிர்ந்து அவனை பார்க்க, பனிமலரும் தாத்தாவும் கண்ணீருடன் அவனை பார்த்தனர்.

சந்திரமுகன் எழுந்து ஜோவை எழுப்பி, “யாரும் என்னோட மருமகளை பற்றி ஏதும் பேச மாட்டாங்க. நீங்க எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்” அவர் கூற, “தேங்க்ஸ் அங்கிள்” அவரை அணைத்துக் கொண்டான் ஜோ.