“புகழோட அலைபேசி உங்ககிட்ட தான இருக்கு?” ஸ்ரீநிதி அவள் அம்மாவிடம் கேட்டு வாங்கி அதை எடுத்தவள் அதிர்ந்து,
“ம்மா இதுல இருந்த வீடியோஸ் எங்க?” கேட்டாள்.
நக்கலாக சிரித்த ஜானி, “என்ன நிது செல்லம். எந்த வீடியோவ கேக்குற? உன்னோட காதல் கை கூடிய சந்தோசம் நிலைக்காமல் போகப் போகுது” அவன் ஸ்ரீநிதி கன்னத்தை தட்ட,ச்சீ..என்றாள்.
தர்மேந்திரன் அவன் கையை திருகி, “யார் மேல கையை வக்கிற? வெட்டி போட்ருவேன் ராஸ்கல்” சத்தமிட்டார்.
“வீடியோன்னு சொல்லி இவனை காப்பாற்ற பார்க்கிறாயா? பாவம் அந்த சரவண மூர்த்தி. இவனுக்காக சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்” என்றான் ஜெகதீஸ்.
தன்வி சந்தேகமுடன் அவன் முன் வந்து, சரவணன், மூர்த்தி இருவர் தான? நீ ஒருவர் போல கேக்குற? அவனிடம் கேட்க, ஆருத்ரா அவளது உதட்டசைப்பை பார்த்து, “இல்ல அவங்க இருவர் தான்” பதறினாள்.
சந்திரமுகன் சினமுடன் ஆருத்ரா அருகே வந்து, “இதில் உங்களுக்கு சம்பந்தம் இருக்கா?” கேட்டார்.
இல்ல..இல்ல அங்கிள். நான் அன்று போதையில் பப்பில் தான் இருந்தேன். இவனுக…இல்ல காதை தட்டிக் கொண்டு..ரிஷி ரிஷி தான்…
ஸ்ரீநிதி அவளை நெருங்கி, “அவர்ன்னு எப்படி சொல்ற? நீ தான் பப்புல போதையில இருந்தேல்ல?”
“ஏய், உனக்கு நடந்தது தெரிஞ்சிருக்குல்ல?” பவிதா அவள் கழுத்தை பிடிக்க, “விடு வீ” என்ற ஜோ ஜெகதீஸை பார்த்து புன்னகைத்தான்.
எல்லாரும் அவனை புரியாமல் பார்க்க, ரிஷி பற்றிய வீடியோ என்னிடமிருக்கு குரல் கேட்க, எல்லாரும் குரல் வந்த திசையை பார்த்தனர். ரிஷி அதிர்ந்து வந்தவனை பார்த்தான்.
“கிஷோர் சீனியர்” ஸ்ரீநிதி அவனிடம் சென்று, “என்ன வீடியோ? இவங்களுக்கு காட்டுங்க. அப்பவாது எல்லாரும் இவரை நம்பட்டும்”.
கிஷோர் அவளை பார்த்து, “உன்னால எப்படி இவனை இவ்வளவு நம்ப முடியுது?”
ஸ்ரீநிதி ரிஷியை பார்த்தாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.
சொல்லு? நான் இந்த வீடியோவை ப்ளே செய்றேன்.
ஏன்னா என்று அவள் தன் அம்மாவையும் ஜோவையும் பார்க்க, அவன் அவளை முறைத்து பார்த்தான். ஸ்ரீநிதி புன்னகைத்தாள்.
கிஷோர் கையிலிருந்த அலைபேசியை பார்த்த ஜானி அவனை மெதுவாக நெருங்க, “எங்கடா போற?” ஜெய் அவனை அழுத்தி பிடித்தான். டேய் இவனுகள பிடிங்க..
சொல்லும்மா? எனக்குமே என்னோட பேரன் பப்பிற்கு அடிக்கடி செல்வதால் மற்றவர் கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை..
“பாட்டி” அவள் ரிஷியை பார்த்து விட்டு தனுவை பார்த்து, “எனக்கு அவரை தெரியும். என்னோட மனசு சொல்லுது. அவரை பற்றி யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்” சொல்லி விட்டு கிஷோரை பார்த்து சீனியர், “அதை வைத்து நிரூபிக்க முடியும்ல்ல?” கேட்டாள்.
ரிஷி கண்ணீருடன் அவளை பார்த்தான்.
“ம்ம்! உனக்காக செய்றேன்” அவன் ஜோ கையில் பென்டிரைவ்வை கொடுத்து போட சொன்னான்.
அதில் இருந்த வீடியோவில் பொண்ணுங்க தான் ரிஷியை குடிக்க வைத்து அழைத்து சென்றார்கள். ஆனால் அடுத்த நொடியே ரிஷி மயக்கமாக நிலையில் வெளியே வந்து விழுந்தான்.
“என்ன இது? புரியலையே!” ஒருவர் கேட்க, “வெயிட் பண்ணுங்க” கிஷோர் நம்பர் கவுண்ட் செய்தான்.
“பைவ்..
ஃபோர்
த்ரீ
டூ
ஒன்”
சொல்லி முடிக்க அறைக்கதவை திறந்து வெளியே வந்தான் புகழமுதன்.
“புகழ்” அழகி வாயில் கை வைக்க, கண்ணீருடன் பார்த்தார்கள் ஸ்ரீநிதி, பவிதா, பனிமலர், ஜோ. அந்த பொண்ணும் பின்னாடியே வாயில் இரத்தம் வழிய வந்தாள்.
“அக்கா, புகழ் எதுக்கு செய்தான்?” ஜோ கேட்க, “உன் கேள்வியிலே பதில் இருக்குடா” பவிதா ஓரிடத்தில் சோர்வுடன் அமர்ந்தாள்.
ம்ம்! ஜோ ஸ்ரீநிதியை பார்க்க, கண்களை அகற்றாமல் புகழ் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின் கிஷோரை பார்த்து, “வேற வீடியோ இல்லையா?” கேட்டாள்.
ஸ்பெசல் இருக்கு நிது. ஆரு டார்லிங் வீடியோ பார்க்கலாமா? அதை அவன் ப்ளே செய்ய, அவள் நண்பர்கள் கிஷோரை நெருங்கினார்கள். அவர்களுக்கு இடையே வந்து நின்றான் ரிசாத்பவன்.
“ரிஷி அவ நம்ம ஆருடா?” ஜெகதீஸ் கூற, “நம்ம ஆரு இல்லை உன்னோட ஆரு. அங்க பாரு” ஜோ கூறினான்.
ஜெகதீஸ் இருந்த இடத்தில் தான் ரிஷியை வைத்திருப்பார்கள்.
ஆருத்ரா சினமுடன், “எல்லாமே இவளால் தான்” ஸ்ரீநிதியை கை காட்டினாள்.
என்னோட அக்கா உன்னை என்ன செய்தா?
ஹ..அவ எதுக்கு ரிஷியை காதலித்தா?
“ஆரு” ரிஷி உடைந்து அவளை அழைத்தான்.
பேபி.. ஜெகா என்னை பயமுறுத்திட்டான். அந்த ஸ்ரீநிதி உன்னை அவள் பக்கம் அழைச்சிட்டு போயிட்டா நீ என்னோட பேசவே மாட்டன்ன்னு சொன்னான். அதனால் அவங்கள பிரிக்கும் பொறுப்பை நான் பார்த்துக்கிறேன். நீ ஒரு நாள் என்னோட இரு என்று சொல்ல,
“ச்சே” உறுமினான் ரிஷி.
ரிஷி, உனக்காக தான் நான் செய்தேன்.
கிஷோர் சினமுடன் ஜெகதீஸ் சட்டையை பிடித்து, அப்படின்னா நிது கிளாஸ் ஃபயர் விபத்து நீ தான் காரணமா? சீறலுடன் கேட்டான்.
எனக்கு எதுவும் தெரியாது. நான் ஆருவை காதலித்தேன். அவளுக்கு ரிஷியை பிடித்தது. நான் அவளுடன் எண்ணியது போல நடந்து கொண்டேன். மற்றபடி எனக்கு அந்த விபத்துக்கும் சம்பந்தமில்லை.
ஏய், உண்மையை சொல்லு? ஆருத்ரா கழுத்தை கிஷோர் பிடிக்க, “விடு அவள” ரிஷி கத்தி விட்டு தலையை பிடித்து அமர்ந்தான்.
டார்லிங், “நிஜமாகவே உன்னை நான் லவ் பண்றேன்” ஆருத்ரா ரிஷியை அணைக்க வர, கையை உயர்த்திய ரிஷி “பக்கத்துல வராத அருவருப்பா இருக்கு” என்றான்.
டார்லிங்? நான் உனக்காக தான்..
எனக்காகன்னா நீ உன்னோட காதலை தான் காட்டி இருக்கணும். மற்றவனுடன் படுத்தன்னு என்னிடமே சொல்ற?
நான் உனக்காக எவ்வளவு செய்துருக்கேன் ஆருத்ரா கூற,
அதை நீ சொல்ல வேண்டாம். நான் சொல்றேன் என்ற தன்வியின் தோழி இமையா, ரிஷி அண்ணா உங்கள யாராவது சைட் அடிச்சா கூட அந்த பொண்ணுங்க உங்க பக்கம் கூட திரும்ப முடியாதபடி செய்திடுவா..
என்னடி வச்சிருக்க? எல்லாம் மறந்து சினமுடன் அவளருகே வந்து அவளது அலைபேசியை பிடுங்கினாள்.
“சீனு சீனியருக்கு என்னாச்சு? தலையில இப்படி அடிபட்டிருக்கு” பதட்டமாக பேசுவது போல இமையா நடிக்க, “சீனுவா? அடிபட்டிருக்கா? அச்சோ அவனுக்கு ஏதாவது ஆனால் என்னோட பேபிக்கு என்னாவது?” உலறிக் கொண்டே தேடினாள்.
“வாட்? பேபியா?” தன்வி கேட்டுக் கொண்டே இமையாவை பார்த்தாள்.
இமையா புன்னகைக்க, தன் குட்டு வெளிப்பட்டதை உணர்ந்த ஆருத்ரா ரிஷியை பார்த்தாள்.
ரிஷி டார்லிங், சீனு..சும்மா..அவள் பேச, பளாரென அவள் கன்னத்தில் அறைந்து, “இதுக்கு மேல என் முன்னாடி வந்த நான் மனுசனா இருக்க மாட்டேன்” கத்தினான்.
ஆருத்ரா சினமுடன் ஸ்ரீநிதியை முறைத்து செல்ல, அவன் நண்பர்கள் நகர, “ஜெகா நில்லு” அழைத்தான் ரிஷி.
அதான் போக சொல்லீட்டேல்ல?
நீ ஆருவை காதலித்தால் சீனுவின் குழந்தையை எப்படி ஏத்துப்ப?
ஜெகதீஸ் திருதிருவென விழித்தான்.
சொல்லுடா? சீற்றமுடன் கத்தினான் ரிஷி.
அவ என்னோட ஆருடா?
நிமிர்ந்து அவனை பார்த்து, “நீ அவள வச்சி பிசினஸ் எதுவும் செய்றீயா?” பட்டென கேட்டான் ரிசாத்பவன்.
“ரிஷி” அவன் சத்தமிட, “போயிரு. எனக்கு யாருமே வேண்டாம். ப்ரெண்டுன்னு யாரும் இனி என் வாழ்க்கையில் இல்லை” சினமுடன் கூறி விட்டு எழுந்தான்.
ஜெகதீஸ் சினமுடன் வெளியேறினான். பூபாலன் செல்லும் ஜெகதீஸை புன்னகையுடன் பார்த்தான்.
சந்திரமுகனிடம் வந்த ரிசாத்பவன், சாரி டாட். எனக்கு இதெல்லாம் தெரியாது..
விரக்தியுடன் அவனை பார்த்தார் அவர்.
“இப்ப என்ன செய்றது?” ஜோ கேட்க, ரிஷி அவனையும் ஸ்ரீநிதியையும் பார்த்தான்.
சிவப்பு நிற லெஹங்காவை துக்கிக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.
“இன்று என்ன நடக்க இருந்ததோ நடக்கட்டும்” அங்கேயே அமர்ந்தான் ரிஷி.
சொல்லிட்டு இப்படி அமர்ந்தால் எப்படி அண்ணா? அனன்யா கேட்டாள்.
“என்ன பண்ணனும்?” ரிஷி கேட்க, “நிது கையை பிடித்து மேடை ஏறணும்” தன்வி கூறினாள்.
ஜெய் ஜோவை பார்க்க, அவன் ரிஷியை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜெய் பவிதா அருகே வந்து அவள் கையை பிடித்து, “வா” அழைத்தான்.
“வேண்டாம்ன்னா விட்ருங்க” பனிமலர் ரிஷியிடம் கூறி விட்டு ஸ்ரீநிதி கையை பிடிக்க அவளருகே சென்றார்.
ரிஷி ஸ்ரீநிதி கையை பிடித்து அழைத்து செல்ல, அனைவர் முகமும் மகிழ்ச்சியை தத்தெடுத்தது. இரு ஜோடிகளும் மேடை ஏறினார்கள்.
ஸ்ரீநிதி ரிஷியை பார்த்துக் கொண்டே மேடை ஏறினாள். ஏறிய பின் அவனும் அவளை பார்த்தான்.
“என்ன?” அவன் புருவம் உயர்த்த, “ஒன்றுமில்லை” தலையசைத்து மேடையில் ஏறிய அனைவரையும் பார்த்தாள்.
ராகவன் கேக் எடுத்து வந்தான். அவனுடன் ஜோவும் தனுவும் வந்தனர். பின் சந்திரமுகன், மான்விழி வந்தனர்.
ஜெய் பவிதா கையை பிடித்து கேக் வெட்ட சென்றான். ரிஷியும் அவன் அண்ணனை பார்த்து ஸ்ரீநிதி கையை பிடித்தான். அவள் விழித்து அவனை பார்த்தாள்.
“கேக் வெட்டணும்” அவன் கூற, “ஒ…ஒ..ஒரு நிமிசம்” திக்கிய ஸ்ரீநிதி கண்கள் அலைபாய்ந்தது.
“உன்னோட அம்மா, பாட்டி. என்னோட அம்மாவை காணோம்” சொல்லிக் கொண்டே அலைபாய்ந்த கண்ணில் நளினியும் பாட்டியும் ஓரமாக நின்று இவர்களை பார்ப்பது தெரிந்தது.
“அவங்க வரக் கூடாதும்மா” மான்விழி கூற, ஏன் அத்தை அவங்க வரக் கூடாது. நம்ம குடும்பத்துல்ல இருக்கிறவங்க இல்லாமல் நாம மட்டும் எப்படி கொண்டாட முடியும்? கேட்க, ஜோ தன் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சந்திரமுகன் தன் மருமகளை மெச்சிவாறு பார்க்க, மான்விழி கையை பிடித்து “வேண்டாம்” தலையசைத்து, “ஜோ நம்ம வீட்ல எல்லாரையும் புகழ் பெற்றோரையும் சேர்த்து அழைச்சிட்டு வா” என்றார்.
ஆனால் அங்கிள்.. “அம்மா” அவன் தயங்க, “ஏங்க யாராவது ஏதாவது சொல்லப் போறாங்க” மான்விழி கூற,
“அத்த…நிதுகேட்டது சரிதான? மத்தவங்க வாழ்க்கையில் நம்முடன் பயணிக்க மாட்டாங்களே! அவங்களும் வரட்டும்” பவிதா கூறி ஜெய்யை பார்த்தாள்.
இது சம்பிரதாயம்மா அவர் கூற, “அம்மா யாருக்கும் ஏதும் ஆகாது. காதல் வலிமையாக இருந்தால் அந்த கடவுளே நினைத்தாலும் நாங்க பிரிய மாட்டோம்” ஜெய் பவிதா கையை பிடித்து ஸ்ரீநிதியை பார்த்தான்.
அவர்களின் இணைந்த கைகளை பார்த்த ஸ்ரீநிதி, “ஜெய் மாமா நீங்க வீ கையை பிடிக்கலைன்னாலும் உங்க காதல் நல்லா தெரியுது” புன்னகைத்தாள்.
“ஜோ” சந்திரமுகன் மீண்டும் அவனை அழைக்க, அவன் அழைத்து வந்தான். புன்னகையுடன் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டனர்.
முதன் முறையாக ஸ்ரீநிதியை பார்த்து புன்னகையுடன் ரிஷி அவள் கன்னத்தில் கேக்கை தடவி ஊட்டி விட்டான். ஜெய் நண்பர்கள் ஆர்ப்பரித்தனர். பின் ஜெய் நிறைய பரிசுகளை பவிதாவிற்கு கொடுத்தான்.
ஜோ ரிஷியை பார்க்க, அவன் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஜெய்யின் காதலில் பவிதா லயிக்கிறாள் என்பது ரிஷி மனதில் ஓரத்தில் வலி ஆழமாக இறங்கியது. அவன் கண்களில் வலி இருந்தாலும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.
இதனை கண்டுகொண்ட ஸ்ரீநிதியோ அவன் அண்ணன் போல தனக்கு அவன் தரவில்லை என்று வருத்தப்படுகிறான் என்று எண்ணினாலும் அவள் யோசனையுடன் ரிஷியை பார்த்தாள்.
“நீ மோதிரம் கூடவா வாங்கவில்லை” தனு சினமுடன் ரிஷி அருகே வந்து கேட்டாள். அவன் பாக்கெட்டில் கை விட்டு சிறிய நகைப்பெட்டியை எடுத்து ஸ்ரீநிதியை பார்த்துக் கொண்டே அதை பிரித்தான்.
இருவருக்கும் இடையே வந்த ஒருவன்….101 சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பெரிய ரோஜா மலர்ச்செண்டை ஸ்ரீநிதி கையில் கொடுத்து, “மேம் ஒரு சார் உங்களிடம் இதை கொடுக்க சொன்னார்” மலர்செண்டை கொடுத்து “ஹாப்பி என்கேஜ்மென்ட் வாழ்த்துக்கள்” என்றான். ரிஷி முகம் மாறியது.
யாரு கொடுத்தா? அவனிடம் ஸ்ரீநிதி கேட்க, ஜோ வேகமாக கீழிறங்கி சென்று வெளியே பார்த்து வந்தான்.
யாருமில்லை. எங்க அவன்? டெலிவெரி செய்தவனிடம் கேட்க, “முகம் தெரியலை சார். அவர் மாஸ்க் அணிந்திருந்தார்” அவன் சென்று விட்டான்.
“புகழ்” ஸ்ரீநிதி சொல்லி ஜோவை பார்த்தாள்.
பவிதா சினமுடன் அவளருகே வந்து, “புகழ் இல்லை. புரிஞ்சுக்கோ” பல்லை கடித்தாள்.
ஜோ எனக்கு என்ன கலர் ரோஜா பிடிக்கும்? ஸ்ரீநிதி கேட்க, ஜோவும் பவிதாவும் ஒன்று போல் வொயிட் ரோஸ் என்றனர். ஸ்ரீநிதி புன்னகைத்தாள். அவன் மனம் மகிழ்ச்சியடைந்தது.
கையிலிருந்த சிவப்பு ரோஜாவை ஆழ்ந்து கண்ணை மூடி முகர்ந்து புன்னகைத்தாள்.
எதுக்குடி சிரிக்கிற? பவிதா அவள் காதில் கேட்க, “ரகசியம் வீ” கண்ணடித்தாள். பின் ரிஷியை பார்த்து, மலர்ச்செண்டை அணைத்து, “தேங்க்ஸ் ரிஷி” என்றாள். அவன் புரியாமல் அவளை பார்க்க, யாரும் பார்க்காதவாறு அவன் கையை அழுத்தி பிடித்தி கண்ணசைத்தாள்.
“வொயிட் ரோஜா தான உனக்கு பிடிக்கும்? எதுக்கு சிரிக்கிற?” ஜோ புரியாமல் ரிஷியை பார்த்துக் கொண்டே கேட்டான்.
முதல்ல வொயிட் தான் பிடித்தது. பின் தான்…என்று ரிஷி கையை கோர்த்து, “இவருக்கு கூட தெரிஞ்சிருக்கு உனக்கு தெரியல என்ன தம்பிடா நீ?” என்றாள்.
எல்லாரும் அதிர, ரிஷி ஷாக் அடித்தது போல அவளை பார்த்தான்.
“ரிஷியா உனக்கு இந்த மலர்ச்செண்டை கொடுத்தான்?” நளினி கேட்டார்.
“ஆமா அத்த, இவர் கொடுக்க மாட்டாரா? இப்ப கூட ஆர்டர் கொடுத்திருப்பார். யார் மூலமாகவாவது கொடுக்க வைத்திருப்பார். அப்படி தான ரிஷி?” அவன் கையை கோர்த்துக் கொண்டே ஸ்ரீநிதி ரிஷி முகத்தை பார்த்தாள்.
“ஹ..ஆமா..நான் தான்..என் கையால் தான் கொடுக்க எண்ணினேன். பின் சர்பிரைஸ்ஸா இருக்கட்டும்ன்னு கொடுத்தேன்” ரிஷி அடித்து விட்டான்.
“ஸ்ரீ” ரிஷி ஸ்ரீநிதியை அழைக்க, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்து விட்டது.
“இப்பொழுதைக்கு என்னிடம் அதிகம் பணம் இல்லை. என்னால இது தான் முடிந்தது” மோதிரம் வைத்திருக்கும் பெட்டியை திறந்தான்.
மினுமினுக்க வைர மோதிரம் இருந்தது.
ஸ்ரீநிதி அதை பார்த்து அதிர்ந்து அவனை பார்க்க, ஜோ புன்னகைத்தான்.
“உங்களுக்கு இது எப்படி தெரியும்?” ஸ்ரீநிதி கேட்க, ரிஷி ஜோவை பார்த்து “தேங்க்ஸ்” என்றான்.
ஜோவை பார்த்து, நீ..
ஆமா அக்கா, என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டார். நாம அன்று ஷாப்பிங் சென்ற இடத்தில் நீ ஆசையுடன் அதை பார்த்ததை நான் கவனித்தேன். அதை இவரிடம் சொன்னேன்.
“என்னடா அவர் இவர்ன்னு? மாமான்னு சொல்லு” அவனுடைய சின்னப்பாட்டி கீழிருந்து கூறினார்.
ஜோ லேசான புன்னகையை மட்டும் காட்டினான். அவனுக்கு ரிஷி மீது நம்பிக்கையே இல்லை. ஆனால் நிதுவின் மகிழ்ச்சிக்காக ரிஷியுடன் சென்றான்.
ஸ்ரீநிதி ஜோவை அணைத்து விட்டு, ரிஷி முன் வந்து அவளது கையை காட்டினாள்.
நானும் மண்டியிடணுமா? ரிஷி அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்க, “வேண்டாம்” கையை காட்டினாள்.
ஸ்ரீநிதி விரல் பிடித்து ரிஷி வைர மோதிரத்தை பூட்டினான். இவ்வளவு நேரம் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குணசேகரன், பூபாலன் முகம் சினமாக மாறியது.
“டாட், எனக்கு அந்த பொண்ணு வேணும்”
“தாராளமா எடுத்துக்கோ. கொஞ்சம் காத்திரு” என்றார் குணசேகரன்.
ம்ம்! பூபாலனின் விழிகள், புன்னகையுடன் தன் விரலில் இருக்கும் மோதிரத்தை பார்த்து ரிஷியை அணைக்கும் ஸ்ரீநிதியின் தேகத்தை வருடியது. அவன் பல்லை கடித்தவாறு, “நீ எனக்கு தான் சொந்தம்” எண்ணினான்.
பெரியவர்கள் ஆசி வழங்க..விழா முடியும் நேரம்..
இதுவரை நாம ஜோடிகளின் பிரச்சனை, அன்பை பார்த்தோம். ஆனால் இப்பொழுது நமக்காக எங்க அண்ணிகள் இருவரும் நடனமாடும் காட்சியை கண்டுகளிக்கலாம் தனு கூற, பவிதாவும் ஸ்ரீநிதியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“தனு” பவிதா அழைக்க, அண்ணி..நம்ம காலேஜ்ல்ல நீங்க இருவரும் உங்க குழுவினருடன் பர்ஃபார்ம் பண்ணீங்கள அதே தான்” ஸ்ரீநிதியை பார்த்து “அன்று போல அப்படியே இருக்கணும் நிது” என்றாள்.
வேகமாக தனுவிடம் சென்ற ஸ்ரீநிதி, வீ எனக்காக பண்ணுவா. நான் வேண்டாம்..
“கண்டிப்பாக இதை நீங்க செய்து தான் ஆகணும்” தனு கூற, பாவமாக ஸ்ரீநிதி ஜோவை பார்க்க, அவன் தோளை குலுக்கினான். அவள் எல்லாரையும் பார்க்க,
“ஏற்கனவே நடனமாடியதுன்னு தான் சொல்றால்ல. நாங்க பார்த்ததில்லைலம்மா பாட்டிக்காக” சௌபாக்கியம் கொஞ்சலுடன் கேட்டார்.
பாட்டி உனக்காக அல்ல என்ற தனு, அன்று ரிஷிகாக தான பண்ண? அன்று என்னோட அண்ணா உனக்கு யாரோ தான? இன்று நீ கல்யாணம் பண்ணிக்க போறவன் தான? யாரும் உன்னை ஏதும் சொல்ல மாட்டாங்க” தனு கண்ணடித்தாள்.
உதட்டை பிதுக்கி கண்கலங்க “வேண்டாம்” அழுவது போல தனுவை பார்த்தாள் ஸ்ரீநிதி.
“ஓ! அப்படின்னா நீ ஏற்கனவே இவனை பிரப்போஸ் செய்திருக்க? இவனுக்கு தான் தெரியல. இப்பவாது தெளிவா செய்” நளினி சொல்ல, ஸ்ரீநிதிக்கு கண்ணீர் வந்து விட்டது.
ரிஷிக்கு நடக்கும் எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தான் இருந்தது. எனக்காக நடனமாடி பிரப்போஸ் செய்தாளா? மனதில் எண்ணினான்.
“நிது, உன்னை யாரும் கடிச்சி முழுங்கிற மாட்டாங்க. அன்று அவ்வளவு தைரியமா பண்ண?” தனு சினமுடன் கேட்க, அன்று காலேஜ் பங்சன். உன் அண்ணனுக்கு அவனோட ஆருயிர் நண்பர்களுடன் எஞ்சாய் பண்ணவே சரியா இருக்கும். அவனுக்காக தான் நிது செய்றான்னு தெரியாது. தைரியமா பண்ணா” பவிதா சீற்றமுடன் ரிஷியை முறைத்தாள்.