மேப்பை பின் தொடர்ந்து வந்து காரை செலுத்திக் கொண்டிருந்த பவன் கார் செல்லும் திசையை கவனித்து, “மேம் நாங்க எங்க போறோம்?” கேட்டான்.
படபடப்புடன் இருந்த பவிதா “போ” சீறினாள்.
அவளை பார்த்து விட்டு அவன் காரை நிறுத்தி அவ்வீட்டை பார்த்து திகைத்து விழித்தான். ஆனால் பவிதா தயக்கமில்லாமல் வேகமாக கதவை திறந்து ஓடினாள்.
வாட்ச்மேன் அவளை தடுக்க, அங்கே வந்த ஒரு பெண்மணி பவிதாவை பற்றி கூற, அவன் உள்ளே விட்டான்.
“அவளை தடுக்காமல் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” அந்த பெண்மணியிடம் கத்திக் கொண்டே ஓடினாள். பைக் ஒன்று சர்ரென வீட்டினுள் நுழைந்தது.
“மாமனார் வீட்டுக்கு வர்ற மாதிரி வரிசையா வாராங்க” வாட்ச்மேன் புலம்பிக் கொண்டே பைக்கின் பின் ஓடினார்.
ஜோ ஹெல்மேட்டை கழற்றி பைக் மீது வைத்து நகர, அவனை பிடித்த வாட்ச்மேன் “நீ யாருப்பா?” கேட்டார்.
“என்னோட அக்கா உள்ள இருக்கா. விடுய்யா” அவரை தள்ளி விட்டு அவனும் பதட்டமாக வீட்டை நோக்கி ஓடினான்.
காரிலிருந்து பவன் இறங்கி வீட்டை நோக்கி நடக்க, பவனை பார்த்த வாட்ச்மேன், “தம்பி வந்துட்டீங்களா? எப்படி இருக்கீங்கய்யா? பெரியய்யா கிட்ட சொல்ல போகிறேன்” என ஓட இருந்தவனை நிறுத்திய பவன்..
“வேண்டாம். நான் போய்க்கிறேன்” நடந்தான்.
பவிதா வீட்டிற்குள் நுழைய, “பைத்தியக்கார ஹாஸ்பிட்டலில் இருந்து தப்பி வந்துட்டு ஏதேதோ உலறீட்டு இருக்க?” நளினி ஒரு பெண்ணை சினமுடன் தள்ளி விட்டார்.
“நள்ளூ” பாட்டி சத்தமிட, “என்ன பண்றீங்க?” சினமுடன் ஜோ நளினியை பிடித்து தள்ளினான்.
“மாம்” சத்தமிட்டவாறு தன்வி வேகவேகமாக படியில் இறங்கினாள். கால் இடறி விட கீழே விழ இருந்தவளை பிடிக்க ஜெய்யும் அவன் தந்தை சந்திரமுகனும் அவளிடம் வந்தனர்.
ஜெய்க்கு முன் தன்வியை தாங்கிய சந்திரமுகன், “தனும்மா. மெதுவா வாங்க”
பிக்ப்பா..பிக்ப்பா..அவங்க..நிது…நிது..
தன்வி கண்ணீருடன் அவரை பார்த்து விட்டு கீழே விழுந்திருந்த ஸ்ரீநிதியை பார்த்து, அவரை நகர்த்தி விட்டு ஸ்ரீநிதியிடம் ஓடி வந்து அவளை தூக்கி விட்டாள்.
நிது, “நீங்க ஓ.கே தான? மாம்..உனக்கு என்ன பைத்தியமா? எதுக்கு நிதுவை தள்ளி விட்ட?” அவள் அம்மாவிடம் கேட்க,
வீ, “இவங்க நான் சொல்றதை நம்ப மாட்டேங்கிறாங்க. ரிஷி மேல எந்த தப்பும் இல்லை. சொல்லு வீ? நீ என்னை நம்புவேல்ல? என்னை பைத்தியம்ன்னு சொல்றாங்க?” அழுது கொண்டே பேசினாள்.
“இப்ப கூட உனக்கு அவன் தான் முக்கியமா தெரியுறான்ல்ல?” ஜோ விரக்தியுடன் கேட்டான்.
ஜோ..நிது..தன்வி ஜோவை பார்த்து அவனை நகர்த்தி, “நிது..உங்களுக்கு எங்களை தெரியுதா? நான்..நான்..” ஸ்ரீநிதியை உலுக்கினாள் தன்வி.
தனு, “அவரு மேல எந்த தப்பும் இல்லை. நீயாவாது நான் சொல்றதை நம்பு” ஸ்ரீநிதி சொல்ல, அவளை இழுத்து அணைத்து அழுதாள் தன்வி.
“நாங்க எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? உங்களுக்கு எங்க நினைவே இல்லைன்னு ரொம்ப கஷ்டப்பட்டோம்” தன்வி சொல்ல, அவள் குடும்பத்தில் எல்லாரும் அவளை விழித்து புரியாமல் பார்த்தனர்.
“எதுக்குடி இங்க வந்த? நீயில்லாமல் அம்மா, ஜோ, நான் எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? இப்ப கூட எங்களை பற்றி நீ யோசிக்கவேயில்லை. அவனுக்காக வந்திருக்க? உன்னோட காதலுக்கு அவன் வொர்த்தே இல்லடி. ஏன்டி நிது?” பவிதா ஸ்ரீநிதியை அணைத்து அழுதாள்.
திமிருடனும் கர்வமுடனும் தெளிவான சிந்தனையுடனும் பவிதாவை பார்த்த ஜெய்கிரிஷூம் அவன் தந்தை சந்திரமுகனும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.
வாசலில் நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் ரிசாத்பவன்.
எஸ். பவன் சந்திரமுகனின் இரண்டாவது மகன் ரிசாத்பவன் தான்.
நாங்க ஒரே காலேஜ் தான் என்ற தனு, பவி சீனியர் சொன்னது உண்மைதான் நிது. என்னோட அண்ணா ரிசாத் உங்க காதலுக்கு கொஞ்சமும் அருகதை இல்லாதவன். நீங்க இப்ப உங்க அம்மாவை பார்க்க போயிருக்கணும். அவங்க உங்கள நினைச்சு எவ்வளவு வேதனை பட்டாங்க தெரியுமா? கண்ணீருடன் தன்வி அவள் முன் வந்தாள்.
ஸ்ரீநிதி அவளை பார்த்து, தனு..உனக்கு தான் அவரை பிடிக்கும்ல்ல? நீ கூடவா அவரை நம்பலை. நிஜமாகவே ரிஷி எந்த தப்பும் செய்யலை..
மான்விழி அவளருகே ஓடி வந்து, “சொல்லும்மா… நான் எத்தனை முறை எல்லாரிடமும் சொல்லி இருக்கேன் தெரியுமா? யாருமே என் பிள்ளைய நம்பலை” அழுதார்.
தன்வியின் வார்த்தையில் எல்லாரும் அதிர்ந்து ஸ்ரீநிதியை பார்க்க, பவனாக வந்த ரிசாத்பவனுக்கு ஸ்ரீநிதிக்கு அவன் மீது காதல் என பவி கூறியதில் அதிர்ந்தவன் “நிதியும் அவன் அம்மாவும் மட்டும் அவனை நம்புறாங்க” என மூளை அவனுக்கு உரைத்தது.
அய்யோ, “எல்லாரும் பேசுறத நிறுத்துங்க. என்னை பைத்தியம் பைத்தியம்ன்னு சொல்லீட்டு நீங்க தான் அப்படி இருக்கீங்க?” கத்தினாள் ஸ்ரீநிதி.
ஏம்மா, “எங்க வீட்டுக்கு வந்து எங்களையே பைத்தியம்ன்னு சொல்ற?” பாட்டி கேட்க,
மன்னிச்சிருங்க. கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன்.
ஜோ, அன்று நாங்க ரிஷியை பின் தொடர்ந்து பப்புக்கு போனோம்ல்ல. அவர் குடி போதையில் நினைவிலே இல்லை..
ஆமா, “அதனால தான் ஒரு பொண்ணோட வாழ்க்கையையே பாழாக்கிட்டான்” ஜெய் சினமுடன் கூற, சார்..இல்லை என்று அவனிடம் வந்து…
அன்று டிரைவர் சீட்டில் இருந்தது ஜெகதீஸ் தான். அவன் பக்கத்துல… தலையை பிடித்து கண்ணை மூடி திறந்து ஜானி..ஜானி தான் இருந்தான். அவரோட மத்த ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவரை போல போதையில் நினைவிழந்து இருந்தாங்க. இவங்கள அவனுக காருக்கு இழுத்துட்டு வந்து தான் போட்டானுக. மத்த யாருக்கும் எதுவும் தெரியாது.
சந்திரமுகன் முன் வந்த ஸ்ரீநிதி, சார் மத்த விசயம் போல இதுல உங்க பையனை நினைச்சுட்டீங்க. அவரு இப்படி எந்த பொண்ணு பின்னாடியும் போனதில்லை..
“அவன் போகலை நீ அவன் பின்னாடி சுத்துனீயா?” நளினி கேட்க, அவள் கண்கள் கலங்கியது.
சார்..நான் வந்து.. ஸ்ரீநிதி பேச முடியாமல் சந்திரமுகனை பார்த்து விட்டு தலைகவிழ்ந்தாள்.
நிது, “நீங்க தப்பா செஞ்சுட்டீங்க?” தனு அவள் கையை பிடித்து, “அவன் இனி எப்படியும் போகட்டும். நீ வா. உன்னோட வீட்டுக்கு போகலாம்” தன்வி அழைத்தாள்.
தனு, “நிஜமாகவே அவர் எந்த தப்பும் செய்யலை. தனு புகழும் என்னோட இருந்தான். அவனிடம் கேளு. அவன் உண்மை பேசுவான்னு உனக்கு தெரியும்ல்ல? அவனிடம் கேளு” ஜோ, பவியை பார்த்து..
“புகழ் எங்க?” அவள் கேட்க, கண்கலங்க மூவரும் அவளை பார்த்தனர்.
வெளிய இருக்கானா? அவள் நகர்ந்து வெளியே வர, நின்று கொண்டிருந்த ரிசாத்தை பார்த்து பின் நகர்ந்தாள் ஸ்ரீநிதி.
“இவன் எதுக்கு வந்தான்? வெளிய போடா” சந்திரமுகன் கூற, அங்கிள் நான் சொன்னேன்ல்ல இவர் மேல எந்த தப்பும் இல்லை.
உனக்கு இவனை பிடிச்சிருக்குன்னு இவனுக்கு சாதகமா நீ பேசுற?
“நோ அங்கிள், புகழ் எங்க? அவனிடம் கேளுங்க. அவனுக்கு எல்லாமே தெரியும்” ஸ்ரீநிதி சொல்ல, “செத்து போனவனிடம் என்ன கேட்குறது?” நளினி கேட்டார்.
“என்ன சொன்னீங்க?” அவரிடம் கேட்டுக் கொண்டே நளினியை சினமுடன் நெருங்கினாள் ஸ்ரீநிதி.
“அந்த புகழ் தான் உயிரோட இல்லையே! அவனையும் இவன் தான் ஏதாவது செய்திருப்பான்” நளினி கூற, “இல்ல புகழுக்கு ஒன்றுமில்லை. அவன் வெளிய தான் இருப்பான்” கண்கலங்க ஸ்ரீநிதி தன் தோழியிடம் வந்து பவிதா கையை பற்றினாள்.
அவ்வளவுதான் பவிதா உடைந்து கதறி அழுதாள்.
வீ, புகழ் வீட்ல இருக்கான் தான! இவங்க சும்மா விளையாட்டுக்கு தான பேசுறாங்க.
“இல்ல நிது” தன்வி ஸ்ரீநிதி கையை பற்றி உங்களுக்கு விபத்து நடந்த அந்த மலை உச்சியிலிருந்து புகழ் அண்ணா காரோட விழுந்துட்டார். காரின் பாகங்கள் கூட கிடைக்கவில்லை.
“அண்ணா அங்கேயே…” தன்வி தொண்டை அடைக்க கண்ணீருடன்.. “செத்துட்டாங்க. ஒரு வருசமாச்சு. உங்களுக்கு தலையில அடிபட்டு ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டாங்க” அழுதாள்.
“தனு” சந்திரமுகன் அழைக்க, “பிக்ப்பா புகழ் அண்ணா ரொம்ப நல்லவங்க. யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவங்க. அவங்க இப்ப இல்ல..நிதுவும்..” கண்ணீருடன் ஸ்ரீநிதியை பார்த்தாள்.
அவளது கையை தள்ளி விட்டு, “புகழ் என்னை விட்டு போக மாட்டான். அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். சொல்லுடா ஜோ? அவன் நல்லா இருக்கான்னு சொல்லுடா?” ஜோவின் சட்டையை பிடித்து இழுத்து கதறி அழுதாள்.
“தனு சொன்னது உண்மைதான் அக்கா. நம்ம புகழ் இல்ல போயிட்டான்” அவனும் அழ, “இல்ல எல்லாரும் என்னை ஏமாத்த பாக்காதீங்க. அவனுக்கு ஒன்றுமில்லை. ஒன்றுமே இல்லை” அழுது கொண்டே அவள் இருக்க..
“வா என் உயிரே
வா என் அழகே
உன்னால்
என் ஜூவன் வாழுதே!” பாடல் வரிகள் வெளியே சத்தம் கேட்டது.
ஸ்ரீநிதி வேகமாக நிமிர்ந்து வெளியே நகர்ந்தாள்.
“நிது நில்லு” கண்ணை துடைத்து பவிதா அவள் பின் செல்ல, ஜோ தனுவும் அவள் பின் சென்றனர்.
ரிசாத்பவன் திரும்பி பார்க்க, ஸ்ரீநிதியின் அம்மா பனிமலர் கையிலிருந்த அலைபேசி ஒலிக்க, அவர் தன் மகள் அழுவதையே வெறித்துக் கொண்டிருந்தார்.
“ம்மா..புகழ்..உங்களோட வந்துருக்கான்ல்ல?” அழுது கொண்டே அவள் அம்மாவை அணைத்து, “புகழ் உயிரோட இல்லைன்னு எல்லாரும் சொல்றாங்கம்மா. அவன் வந்துருக்கான்ல்ல?” அவள் அம்மாவை நகர்த்தி கண்களால் அவ்விடத்தை அளந்தாள்.
“புகழ் செத்துட்டான். உன்னோட ஆன்ட்டி அங்கிள் உடைஞ்சு போயிட்டாங்க. உனக்கு எல்லாமே மறந்து இந்த பாவியை பற்றி மட்டும் தான் பேசிகிட்டே இருந்த…” சாதாரணமாக பேச ஆரம்பித்த பனிமலர் சீற்றமுடன் ஸ்ரீநிதியை பார்த்தார்.
ம்மா..புகழ் எங்கேயும் போகலைம்மா. நீயும் இவங்கள மாதிரி பேசாத..
ஸ்ரீநிதி கன்னத்தில் ஓங்கி அறைந்த பனிமலர், “உனக்காக எத்தனை பேரு துடிச்சு போயிருக்கோம். எனக்கு சந்தோசத்தை விட இப்ப கூட இவனுக்காக நீ வந்து நிக்கிறத பார்க்க பார்க்க நெஞ்சு வலிக்குதுடி..”
புகழ் இல்ல. அவன் செத்துட்டான்.
இந்த ஒரு வருசம் என்னோட புள்ளைங்க வாழ்க்கையை மொத்தமா சீரழிஞ்சு போச்சுடி..
லவ்வு லவ்வுன்னு இவன் பின்னாடி போய் உம் மேல உசுறயே வச்சிருந்தவன் உசுரு போனது தான் மிச்சம். ஜோ சிரிக்கிறதையே மறந்துட்டான். பவி எல்லாரிடமும் கடுமையா பேச ஆரம்பிச்சுட்டாடி..
நீ..நீ..என்றவர் உதடுகள் துடிக்க அழுகையுடன், அம்மான்னு ஆசையா கூப்பிடும் என்னையே யாரோ மாதிரி தான் பார்த்த. ஆனால் அந்த நிலையிலும் ரிஷி நினைப்பு தான். அப்படி இவன் உனக்காக என்ன செய்தான்?
பாருடா இவளுக்கு நாம தேவையே இல்லை. புகழ் இவளை எப்படி பார்த்துக்கிட்டான். எவ்வளோ லவ் பண்ணான். மொத்தமாக அவனை பறி கொடுத்துட்டு இப்ப வந்து அவனை தேடுறாடா..
“ம்மா..நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” பவிதா கூற, “இங்க பேசினால் என்னடி? இவனை போல பிள்ளை எனக்கு இருந்தால் கொன்னே போட்டுருப்பேன். என்னோட பிள்ளைங்க தங்கமான பிள்ளைங்க”.
ஏன்டா, “உன்னோட அக்கா எல்லா விசயத்திலும் தெளிவா தான இருந்தா? ஒன்னுத்துக்கும் ஆகாத இவனுக்காக வாழ்க்கையே போச்சு” அவர் அழுதார்.
ஸ்ரீநிதி அவள் அம்மா கையை பிடித்து, “ம்மா..ரிஷி எதுவுமே பண்ணலை” என்று அவனுக்காக பேச,
“என்னடி பண்ணலை. இதுக்கு மேல அவனை பத்தி ஏதாவது பேசுன? நான் உன்னோட அம்மான்னு மறந்துடு” அவர் கோபமாக செல்ல, ரிசாத்பவன் வீட்டினர் ஸ்ரீநிதியின் காதலில் அசந்து தான் போனார்கள்.
ரிஷியால் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு பவியை அல்லவா பிடிக்கும்? அவளை தானே அவன் காதலிக்கிறான்.
“அம்மா” ஸ்ரீநிதி அவள் அம்மாவை அணைத்துக் கொண்டாள்.
பனிமலர் முன் வந்த ரிசாத்பவன், “எனக்கு நடந்தது எதுவும் தெரியாது. உங்க பொண்ணையும் எனக்கு தெரியாது. எனக்கு அந்த விபத்து எப்படி நடந்ததுன்னு தெரியாது. ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் என்னை மன்னிச்சிருங்க” மண்டியிட்டான்.
அவன் வீட்டினரால் நம்பவே முடியவில்லை ரிஷியா என்று அவனை பார்த்தனர்.
ஜோ அவன் சட்டையை பிடித்து இழுத்து, “மன்னிப்பு கேட்டால் எங்க புகழ் வர மாட்டான். அவனை இழந்த வலியும் போகாது. உன்னால் தான் எங்க புகழையும் நிதுவையும் இழந்தோம்”.
“நிது கிடைச்சிட்டா ஆனால் புகழ் வர மாட்டான். எங்களால உன்னை மன்னிக்கவே முடியாது” அவன் அம்மா, ஸ்ரீநிதி கையை பிடித்து இழுத்து வெளியே வந்தான்.
பவிதா காரை திறக்க, “நீயும் ஏறு” ஜோ அவளிடம் கூற, பவிதா திரும்பி அவர்களின் குடும்பத்தை பார்த்தாள். ஜெய்யின் பார்வை அவள் மீது ஏக்கமுடன் படிவதை பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.
ஓடி வந்த தனு பவிதாவுடன் ஏறச் செல்ல, “தனு” அழைத்தான் ரிசாத். அவள் காதில் வாங்காமல் ஏற, “நீ எங்க வர்ற?” சினமுடன் ஜோ கேட்டான்.
“கொஞ்ச நேரம் மட்டும் நிதுவோட இருந்துட்டு வீட்டுக்கு வந்துருவேன்” அவள் ஜோவை பார்க்க, “தேவையே இல்லை. உன்னோட அண்ணன் செய்தது போதாதா? நீ என்ன செய்யப் போற? இனி நிதுவை பார்க்கிறேன் வீயை பார்க்கிறேன்னு வராத” சத்தமிட்டான்.
நளினி சினமுடன், “இந்த மாதிரி லோக்கல் ஆளுங்க கூட என்னடி பண்ற?” சத்தமிட்டார்.
ஜோ அவரை முறைத்து, “நான் சொன்னதை நினைவில் வச்சுக்கோ” காரில் ஏற, அவள் அம்மா அவளை வீட்டிற்குள் இழுத்தார்.
நளினி கையை தட்டி விட்டு, “நீ என்னடா சொல்றது? நிதுவும் ஆன்ட்டியும் சொல்லட்டும் நான் வரக் கூடாதுன்னு. நீ பேச தேவையில்லை. நான் சாப்பிட்டு உங்க வீட்டுக்கு தான வரப் போறேன். முடிஞ்சதை பண்ணிக்கோ” அழுது கொண்டே சொல்லி விட்டு கண்ணை துடைத்து,
“ஏம்மா எப்ப பாரு உன்னோட ஸ்டேட்டஸை தலையில் வச்சிட்டு ஆடாத. உனக்கு அவங்க குடும்பத்தை பத்தி என்ன தெரியும்?” கேட்டு விட்டு உள்ளே ஓடினாள்.
“தனு” நளினி சத்தமிட, “அமைதியா வா நள்ளூ. பிள்ள டென்சன்ல்ல போயிருக்கா” பாட்டி தன் பேரனை பார்க்க, ரிசாத் தன் குடும்பத்தை ஏக்கமுடன் பார்த்தான்.
உள்ள வரச் சொல்லு அவனை? என்னன்னு பார்க்கலாம். ஜெய் அந்த பிரச்சனை நடந்த மலைப்பகுதி சிசிடிவியை ஆளுங்கள வச்சி வாங்கப்பாரு..
“டாட்” ஜெய் ரிசாத்தை முறைத்தான்.
“வரட்டும் விடுடா. அந்த பொண்ணுக்காக தான். அந்த பொண்ணு வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இருக்கு” சந்திரமுகன் உள்ளே வந்தார்.
அம்மாடி, “எதுக்குடி இப்ப அழுற?” பாட்டி கேட்க, “பாட்டி” அவரை அணைத்து “எல்லாமே இவனால் தான். எனக்கு புகழ் அண்ணாவை பார்க்கணும் போல இருக்கு” அழுதாள்.
சந்திரமுகன் அவளருகே அமர்ந்து அவள் தலையை கோதி, “இவங்கள உனக்கு நல்ல பழக்கமோ?” கேட்டார்.
பிக்ப்பா, இவங்க கூட இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா? சாதனாவும் நானும் இவங்களோட சேர்ந்துக்க ட்ரை பண்ணோம்.. நல்லா பேசுவாங்க. கெல்ப் பண்ணுவாங்க. ஆனால் அவங்க நாலு பேர் போல மிங்கிலாகவே முடியல.
நால்வர் பற்றி தன்வி அவள் குடும்பத்தில் கூற ஆரம்பித்தாள்.
புகழ் அண்ணா..
அவங்களுக்கு பெற்றோரும் நண்பர்களும் தான் எல்லாமே! அப்புறம் நிது…நிதுவை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியா தான் இருப்பார். ஆனால் நிதுவை பற்றி ஏதாவது யாராவது பேசினால் போச்சு..கோபம் வந்து அடிக்கவே செய்திடுவார். அவ்வளவு காதல் நிது மேல..
அடுத்தது…நிது..
ரொம்ப திறமையானவங்க பிக்ப்பா. சமையல் பிடிக்கும். மியூசிக் கேக்குறது பாடுறது ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று தன் அண்ணன் ரிசாத்தை முறைத்து விட்டு..உங்க பையனையும் பிடிக்கும்..
முக்கியமான விசயம். ஆடை வடிவமைப்பது ரொம்ப பிடிக்கும். அவங்க செய்யும் மாடல் எல்லாமே சூப்பரா இருக்கும். படிப்பிலும் நிதுவை அடிச்சுக்க முடியாது. ரொம்ப பாசமானவங்க. அமைதியானவங்க..
கடைசி எக்ஸாம் எழுதல. லாஸ்ட் பிராஜெக்ட்டை மட்டும் சப்மிட் செஞ்சிருந்தாங்கன்னா. அவங்க இப்ப நம்பர் ஒன் டிசைனரா இருந்திருப்பாங்க..
அடுத்து பவி, ஜோ..
இருவருமே சரியான சுட்டி என்னை போல. பவிக்கிட்ட பிடிவாதம் அதிகமா இருக்கும். நினைக்கிறத சாதிச்சிருவாங்க. படிப்பாங்க புகழ் அண்ணா நிது போல வராது.
ஜோ படிப்பை விட விளையாட்டில் அதிக ஆர்வமா இருப்பான். அவன் சிரிப்பு தனி அழகு. பொண்ணுங்க அவனை கரெக்ட் பண்ண பக்கத்துல்ல வந்தால் எட்டவே நின்று விடுவான். அவனுக்கு எப்போதும் அவன் குடும்பமும் நண்பர்களும் தான். காதல் வந்தால் ப்ரெண்ட்ஷிப்பும் குடும்பமும் இல்லாமல் போயிரும்ன்னு நினைப்பு.. நொடித்துக் கொண்டாள்.
“ஜோ என்னோட கிளாஸ் தான். நாங்க ஒண்ணா தான் படித்தோம்” சந்திரமுகனை பார்த்து, “பிக்ப்பா நான் ஒரு விசயத்தை உங்களிடம் மறச்சுட்டேன்” கண்ணீர் வர அவரை பார்த்து, “ரிஷியால பாதிக்கப்பட்ட பொண்ணுன்னு நியூஸ் வந்ததே அந்த பொண்ணு ஷாலினி” கண்ணீர் தேமலாக “என்னோட கிளாஸ் மேட்” அழுதாள் தன்வி.
“என்னடி சொல்ற?” அவளுடைய அம்மா பதற, “அவளுக்கு அண்ணாவை தவிர யாருமேயில்லை தெரியுமா? தினமும் அவளையும் நிதுவையும் பார்க்க தான் நான் போனேன்”.
தினமுமா? மான்விழி அவள் கையை பிடித்து, “என்னிடம் சொல்லி இருந்தால் நானும் வந்திருப்பேன்ல்லம்மா?” கேட்டார்.
பிக்ம்மா, “என்னோட அண்ணா தான் ரிஷி என்றவுடன் அவளோட அண்ணா என்னை திட்டினார். ஒரு முறை சினத்தில் அடிக்க கூட வந்துட்டார். உடனிருந்த செவிலியர் தான் அவர் என்னை அடிக்காமல் பார்த்துக்கிட்டாங்க. நீங்க வந்தால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க பிக்ம்மா” அழுதாள்.
“தனியா எதுக்குடி போன?” அவள் அம்மா திட்ட, மன்னிச்சிருடா தங்கம். எனக்கு அந்த பொண்ணை பார்க்க கூட தோன்றவில்லை…
ரிஷி தப்பு செய்தானா? இல்லையா? என்பதை விட, “புகழ் அண்ணா இறப்புக்கு மட்டும் இவன் காரணமில்லாமல் இருந்தால் போதும்ன்னு தான் இருக்கு” ரிஷியை பார்த்து..
உன்னோட ப்ரெண்டு அந்த பொறுக்கி ஜெகாவுக்கு நிது மேல ஒரு கண்ணு. அவங்க யாரிடமும் சொல்லலை. ஆனால் அவன் வம்பு செய்யும் போது நான் பார்த்து அவங்களுக்கு உதவ போனேன்..
அந்த பொறுக்கி, என்ன சொன்னான் தெரியுமா?
“கொஞ்ச நேரம் கழித்து அவள விட்டுடுறேன் நீ வான்னு என்னை கூப்பிட்டான்டா. நான் போகவாடா?” கண்ணீருடன் ரிஷியை பார்த்தாள் தன்வி.
கையை இறுக மூடி நின்றான் ரிசாத்பவன்.
“உன்னிடம் கேட்டு என்ன ஆகப் போகுது? எனக்கு எல்லாத்தையும் விட உன்னை எப்படி தான் நிதுவுக்கு பிடிச்சதுன்னு தான் புரியல?” எனக்கு ஆசை கூட இருந்தது.
சும்மாவை எனக்கு நிது ஸ்பெசல். அவங்களுக்கு உன்னை பிடிச்சிருந்ததா? நானே உதவ நினைத்தேன். புகழ் அண்ணாவை பார்க்கும் போது என்னால நிதுவுக்கு உதவ முடியல. அதுவும் நல்லதா போச்சு. அவங்க பக்கத்துல்ல நிக்க கூட உனக்கு அருகதை இல்லை. பவி சரியா தான் சொன்னாங்க.
பிக்ப்பா, உங்களுக்கு தெரியுமா? பவியும் நிதுவும் சேர்ந்து இருக்கும் இடம் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்து இருப்பதை நான் நிறைய முறை உணர்ந்திருக்கேன். பவியும் நிதுவும் எதிரெதிர் குணம் உள்ளவங்க. நிது செய்வதை பவி செய்ய மாட்டாங்க. பவி செய்வதை நிது செய்ய மாட்டாங்க. இருவருக்கும் பிரச்சனையே வராது.
இருவரும் திருமணம் செய்து போகிற வீடு முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.. யாருக்கு குடுத்து வச்சிருக்கோ?
புகழ் அண்ணா இப்ப இருந்திருந்தால் கண்டிப்பாக எப்பேர்ப்பட்டாவது புகழ் அண்ணாவை நிதுவுக்கு கல்யாணம் செய்து வைக்க உதவி இருப்பேன்..
பிக்ப்பா, “நான் அவங்க வீட்டுக்கு சென்று அவங்கள பார்த்து வரலாம்ல்ல? நீங்க தடுக்க மாட்டீங்கள?”
போயிட்டு வாம்மா. இதுல என்ன இருக்கு? ஆனால் இவனை பத்தி எதுவும் பேசிறாத..
இல்ல பிக்ப்பா. இது தான் என்னோட முதல் வேலை. நிது மனசுல இருந்து இவனை வெளிய எடுக்கணும். ஏதாவது செய்யணும். ஜோ கோபமா தான் இருப்பான். பேசி பார்க்கணும்.
ஏம்மா, இதை கண்டிப்பா செய்யணுமா? பாட்டி கேட்க,
அப்புறம் இவனை போய் மனசுல வச்சி அவங்க அழுதுட்டு இருக்கணும்ன்னு சொல்றீயா? உன்னோட பேரன் அவங்க அம்மாவிடம் உங்க பொண்ணை தெரியவே தெரியாதுன்னு சொல்றான். ஆனால் நிது பைத்தியமான நிலையில் கூட இவனோட பெயரை தான் கூறிட்டு இருந்தாங்க.
அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். உனக்கும் பசங்க இருக்காங்க பாட்டி கொஞ்சம் யோசித்து பாரு..
“பிக்ப்பா எனக்கு சோர்வா இருக்கு. நான் ரெஸ்ட் எடுத்துட்டு போறேன்” அவள் அறைக்கு செல்ல, ஜெய்யும் சென்றான்.