அத்தியாயம் 4

 

“மனம்…… கடலில் ஏற்படும் சூழல் போன்றது…  மனிதனை வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடும்….. கடலை வற்றச் செய்வதும்… மழையை வேருடன் பிடுங்கி எறிவதும்…. தீயை உண்பதும்  எவ்வளவு கடினமானதோ… அவ்வளவு கடினம் மனதைக் கட்டுப்படுத்துவது ஆனால் நல்ல எண்ணங்களால் இதை சுலபமாக செய்யலாம்….”

     இரவு தூங்கும்போது இருந்த குழப்பம் மாறி காலை எழும் போதே…. மனதிற்குள் ஏதோ சந்தோஷ சாரல் அடித்தது போல் உணர்ந்தாள்….

     கண்ணாடியில் அவள் முகம் பார்த்து அவளே சிரித்துக் கொண்டாள்…. எப்படி இந்த காதல் என்னுள் நுழைந்தது என்று கேள்விகளை பலமுறை கேட்டுக் கொண்டாள்….. ஒரு வேளை மஞ்சள் கயிறு மேஜிக்கா … இருக்குமோ…. ம்ஹூம் இல்ல முன்னாடியே மனசுல இருந்திருந்தால்…. எது எப்படியோ…. கண்டேன் கண்டேன் காதலை… ன்னு பாட்டு பாடணுமா… என்று தன்னைத்தானே நினைத்து சிரித்துக் கொண்டாள்….

      காலையில் அவனுக்கு காபி கொடுக்கும் போது அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே அறையை மட்டும் சுத்தம் செய்து விட்டு இறங்கி வந்து விட்டாள்….

      இவ எதுக்கு இன்னைக்கு நிமிர்ந்து பார்க்காமலே போறா…அல்லது ஒரு நிமிஷம் ஒரு பார்வை பார்ப்பாளே… காணோமே என்ற யோசனையோடு குளித்து விட்டு கிளம்பி கீழே வந்தான்….

     கீழே வரவும் அவனது அம்மா யாரோடோ போன் பேசிக் கொண்டிருக்க…. அவன் நேராக கிச்சனுக்கு சென்றான். அங்கே அவள் ஏதோ காய் கட் பண்ணிக் கொண்டிருக்க…  அருகில் சென்று அவளிடம் என்ன விஷயம் சொல்லு என்று கேட்டான்….

    ஒன்னும் இல்லையே…..

    அதை என்ன பாத்து சொல்லு…..

    உங்கள பாத்து என்ன சொல்லணும்…..

    இப்ப சொன்னியே ஒன்னும் இல்லன்னு அதை…..

     உங்கள பார்த்து சொன்னா நான் பீன்ஸ் கட் பண்ணுறதுக்கு பதிலா கைய கட் பண்ணுறதுக்கா….

     இல்லையே ஏதோ இருக்கே….

     நீங்க இப்படி யோசிச்சிட்டே இருங்க எனக்கு வேலை இருக்கு…..

    பாயாசம் வைக்கிறது பற்றி எதுவும் யோசிக்கிறியா என்ன…..

    அட….. ஆமால்ல மறந்து போயிட்டேன் நல்லவேளை ஞாபகப்படுத்திட்டீங்க….

    நானே வாயைக் கொடுத்து… ஞாபகப்படுத்திட்டேனா….

    அதேநேரம் இளமாறனின் அம்மா உள்ளே வரவும்…. என்னடா பாயசம் வேண்டுமா….

     என்னம்மா பாயசம்…  அப்படின்னு பயந்து போய் கேட்க….

      இல்லடா ஃபோன் பேசி கொண்டு இருக்கும்போது…. நீ எதோ  பாயசம் ன்னு நந்தினி கிட்ட கேட்டுகிட்டு இருந்த அதுதான் கேட்டேன்…..

       அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி சிரித்துக் கொண்டிருக்க…. அதைப் புரிந்து கொண்டாலும்…. கண்டுகொள்ளாத படி இல்லம்மா சமைக்க தெரியுமா… என்று கேட்டுட்டு இருந்தேன்….அப்புறம் என்னென்ன சமைக்கத் தெரியும்னு கேட்டுகிட்டு இருந்தேன் என்று சமாளித்தான்….

       டேய் விச்சு போன் பண்ணுனான்டா….

       ஏன் என் நம்பருக்கு கூப்பிடாமல் உங்களுக்கு கூப்பிட்டான்…. நான் பேசிக்கிறேன்….

      ஒரு விஷயம்  கேட்பதற்காக கூப்பிட்டான் நான் பேசிட்டேன்…. இப்போ உனக்கு என்ன…

     எனக்குத் தெரியாமல் உங்களிடம் என்ன விஷயம் பேசினான்…. சொல்லுங்க…

      நந்தினி மத்தியான சமையல் பண்ணாத காலைக்கு மட்டும் தான்…. நான் வர்றேன் ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்…. மதிய சாப்பாட்டுக்கு மாமா வெளியில் சொல்லி இருக்காங்க…..

      நம்ம ஐந்துபேருக்கு தானே எதுக்கு வெளியில சொன்னீங்க….. என்ன விசேஷம் வீட்டுக்கு யார் வாரா…..

       இவன் ஒருத்தன்…. இவனுக்கு விளக்கமா சொல்லணும்… வந்த பிறகு பார்த்துக்கோ…..

          இவர்கள் அனைவரும் காலை உணவை முடிக்கும் நேரம்…. அவனுடைய நண்பர் பட்டாளம் தங்கள் துணைவியருடன் வந்து சேர்ந்தனர்……

     ஏய் என்னடா எல்லாரும் திடீர்னு வந்து நிக்கிறீங்க….

      ஓ அதுவா நீயும் உன் வொய்ப் ம் கிளம்ப ஆரம்பிங்க நாங்க சொல்றோம்….

      என்னடா விஷயம் சொல்லுங்க… எங்க போறோம் ன்னு சொல்லுங்க…. எங்க கிளம்பனும் சொன்னா…  அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ண முடியும்…..

     அதுவா டா…. உனக்கு இன்னைக்கு கல்யாண போட்டோ சூட் ஒன்னு வச்சிருக்கோம்…. வா வா ரெடி ஆகலாம்….

    டேய் அதெல்லாம் எதுக்குடா…..

     நீ அடங்கியிரு…. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்…. நாங்க சொல்ற மாதிரி டிரஸ் மட்டும் ரெண்டு பேரும் பண்ணிட்டு வரணும்…. அவ்வளவுதான் மீதி எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் சரியா…. நீ பேசாம கிளம்பி அமெரிக்கா போயிருவ…. எங்களுக்கெல்லாம் போட்டோஸ் வேண்டா மா…..

       அதுக்குத்தான் கல்யாண போட்டோ இருக்கேடா அப்புறம் என்ன…..

        டேய் எல்லாரும் கல்யாணம் ஆனா அதுக்குன்னு ஒரு போட்டோ ஷூட் வைக்கிறாங்க…. நம்மளும் வைக்கிறோம் உனக்கு சூப்பரா போட்டோ எடுக்குறோம்… நீ உன்னோட லேப்டாப்ல வேணுங்கற போட்டோஸ் எடுத்திட்டு போ… அங்க போய் யாரும் கேட்டா… எந்த போட்டோஸ் காட்டுவ பேசாம இரு நாங்க சொல்றத மட்டும் செய்….

       அம்மா பாருங்க நீங்களாவது சொல்லுங்க…..

     இதுல நான் சொல்ல என்ன இருக்கு…. சும்மா இருக்கிறவனே  போட்டோ வித விதமா எடுக்கும் போது நீங்க எடுத்தா என்னடா தப்பு எடுங்க….

     அண்ணா இங்க பாரு… ஓவரா பேசாத இப்ப தான் அண்ணிய கன்வின்ஸ் பண்ணி வச்சிருக்கேன்…. நீ ஓவரா பேசி சொதப்பிறாத…..

       ஆமாடா சொல்றதை கேளு…. நர்மதா க்கும் போட்டோ எடுத்து வைக்கணும்…. உங்களை எடுக்கும்போதே நாங்க எல்லாரும் சேர்ந்து  எடுக்கலாம் ன்னு நினைச்சோம்…..

        நாங்களும் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அதுக்கு தான் வந்திருக்கோம்…. எல்லாம் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கணும் நாங்க டிரஸெல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வந்து இருக்கோம் பாருங்க…

    டேய்…. எல்லாரும் ஒரு முடிவு பண்ணிட்டீங்க சரி நடத்துங்க….  இப்ப என்ன டிரஸ் பண்ணிட்டு வரணும்….

      முதலில் எல்லாம் சாதாரணமாக இருவரையும் சேர்த்து வைத்து விதவிதமாக உடையணிவித்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்….

      சற்று நேரத்தில் அவர்கள் நண்பர்களுக்குள் கூடிப் பேசி விட்டு….

      இப்ப நாங்க சொல்ற மாதிரி போட்டோ எடுக்கணும் என்று ப்ர்ண்ட்ஸ் கட்டாயப் படுத்தவும்….

       சரி எடுக்கலாம் என்று இளமாறனும் ஒத்துக் கொண்டான்….

      அவளை தோளில் சாய்த்துக் கொண்டு இருப்பது போலவும்… பின்னிருந்து அணைப்பது போலவும்…இன்னும் புதிதாய் வந்துள்ள போட்டோ ஷூட்டைபோல விதவிதமாய் சொல்லி எடுக்க  வைக்கப்பட்டது….

       சிலப் புகைப்படங்களுக்கு நந்தினி உண்மையாகவே முகம் சிவந்து போய் நிற்கும் அளவிற்கு இருந்தது….

     “ஏனோ உன் மூச்சுக்காற்று

      என்னருகில் உணரும்போது

      தயக்கமா…..  மயக்கமா…..

     என்ற குழப்பத்தில்

     தயங்கி நிற்கிறேன்…..

     ஏனோ என் பெண்மை

     உன் விரல் ஸ்பரிசத்தில்

    முகம் முழுவதும் வெட்க

    பூக்களை பூக்கவைக்கிறது…..

     தள்ளியே நின்று விடு….

     ஆனந்த அவஸ்தையில்

     தள்ளி விடாதே…….”

     ஒவ்வொரு முறையும் புகைப்படத்திற்காக அவளை நெருங்கி நிற்கும் போது… அவள் உடம்பில் எடுக்கும் உதறலை அவனால் உணர முடிந்தது… கை சில்லிட்டுப் போயிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது…  ஆனாலும் மற்றவர்கள் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்… அவள் முகம் சிவந்து போவதையும்….. அவள் கை நடுக்கத்தையும் வைத்து அவன் உணர்ந்து கொண்டான்…..

     அவள் முகம் சிவக்கும் ஒவ்வொரு முறையும்…. நண்பர் பட்டாளத்தின் மனைவியர் அவளை கேலி பேசிய ஒருவழி ஆக்கினார்…..

     அவர்கள் நினைத்த படி போட்டோக்கள் அனைத்தும் நன்றாக வரவும் போட்டோ எடுத்தவர்…. அதை  இளமாறனின் லேப்-டாப்பில் ஏற்றி கொடுத்து விட்டு மற்றவை ஆல்பத்தில் வரும் என்று சொல்லி விட்டு செல்ல…. அந்த போட்டோவில் எது அழகாக இருக்கிறது என்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்…. அந்த நேரம் நந்தினி உடை மாற்றிவிட்டு அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள்….

     ஒவ்வொரு போட்டோ எடுக்கும் போதும் அவளுடைய அவஸ்தையை அவன் மட்டும் உணர்ந்திருந்ததால்.. அவளை பார்த்தவுடன் போட்டோவைப் பார்த்துவிட்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்….

       நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குடும்பத்தினருடன் இரவு உணவிற்காக வெளியே செல்வதாக பேசி முடிவு செய்து கொண்டார்கள்….மாறனின் பெற்றோரும் நர்மதா வும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்….

      நர்மதா வை அழைத்துக் கொண்டிருக்கும் போது…..

      நர்மதாவோ… இல்ல அண்ணி இன்னைக்கு  எனக்கு நிறைய வொர்க் இருக்கு இத்தனை நாள் காலேஜ் போகாதது சேர்த்து…. வீட்டில் உட்கார்ந்து  ஒர்க்கை கம்பிளிட் பண்ணனும் என்று சொல்லி…. வரவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கி கொண்டிருந்தாள்…..

       வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான உணவை கேட்டு கடையில் ஆர்டர் செய்த பின்பு இளமாறன் கிளம்ப தொடங்கினான்….

     அனைவரும் கிளம்பி சென்று உணவருந்தி விட்டு திரும்பும் முன் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவிலுள்ள இன்னொரு நண்பனும் வீடியோ சேட்டிங்கில் வர அனைவரோடும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்…..

       என்னடா….  எப்படா ஊருக்கு வருவ இந்த  சைனாகாரி வேற உனக்காக காத்துகிட்டு இருக்கா…. தினமும் எப்ப வருவ எப்ப வருவ ன்னு  கேள்வி கேட்டு என்ன படுத்தி எடுக்கிறா…. அவ என்னோட பேசுவதை பார்த்தால் என் வீட்டுல உள்ளவ என்ன வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருவா…. சீக்கிரம் வந்து சேருடா….

         இவன் இங்கிருந்து வாயில் விரலை வைத்து சொல்லாத சொல்லாத என்பது போல் சைகை காட்ட …. அவனோ கண்டும் காணாமல் அனைத்தையும் சொல்லி விட்டான்…..

       நண்பர்கள் குழுவில் உள்ள ஒருவன் தான்…  என்ன விஷயம்டா…. விஷயத்தைச் சொல்லு முழுசா சொல்லாம இப்படி சொன்னா எங்களுக்கு எப்படி புரியும் என்று விளக்கமாக வேறு கேட்கவும் அவனும் சொல்லத் தொடங்கினான்…..

     மாறனோ மனதிற்குள் ஏற்கனவே பாயசம் வைக்கவா ன்னு கேட்டா….. கண்பார்மா நாளைக்கு கொடுத்துடுவா…. இவன் வேற எல்லாத்தையும் சொல்ல போறானே என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்…..

     அது வேற ஒன்னும் இல்லடா…. சைனா  பொண்ணு எங்க கூட கம்பெனில ஒர்க் பண்ணுது…… எங்களுக்கு கம்பெனியிலிருந்து கொடுத்து இருக்க வீடு ரோ ஹவுஸ் மாதிரி….. அதுல தான் அந்த பொண்ணு வீடும் இருக்கு…… மாறன் வீட்டுக்கு நேர் எதிர்த்த வீடு தான் அந்த பொண்ணு வீடு…. மாறன  பார்க்காம கண்ணு பூத்திருச்சாம் அந்த பொண்ணுக்கு….

       பாத்தியாடா…. இந்த மாறன் நம்ம கிட்ட வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லல…

       மாறனும் பொறுக்கமுடியாமல் டேய்… நல்லா இருக்க குடும்பத்தில் கும்மியடிச்சிட்டு போயிடாதீங்க…. ஏற்கனவே எனக்கு அவ பாயாசம் தந்துருவேன் ன்னு  சொல்லி இருக்கா…..  நீங்க வேற பாயாசம் வைக்க ரெடி பண்ணிருவீங்க போல…..

      நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தாலும் கவனிக்காதது போல் அவளுடைய செல்லில் அவன் அனுப்பி வைத்த  போட்டோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்….  மற்ற நண்பர்களின் மனைவியர் பாயாசம் ஐடியா நல்லா இருக்கே  நாங்களும் அத பாலோ பண்ணலாமே என்று சொல்லி…. கணவர்களின் மேல் ஒரு பார்வையை செலுத்தி விட்டு….அவளிடம் பேசிக் கொண்டிருந்தனர்…..

      டேய் இந்த விஷயத்தை இவ்வளவு சத்தமா வா  டா சொல்லுவ…  எல்லார் வீட்லயும் பாயாசம் ஐடியா வந்துருச்சே…..

     பெண்கள் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது நண்பனின் மனைவி ஒருத்தி நந்தினியிடம்…..

நந்தினி இதை பெருசா எடுத்துக்காதீங்க இவங்கதான் சும்மா கிண்டலுக்கு பேசுவாங்க…… மற்றபடி அந்த மாதிரி கிடையாது….  நாங்களும் தெரிஞ்சுதான் ஜாலியா சொல்கிறோம்….  பிரண்ட்ஸ் கூட சேர்ந்து பேசும்போது ஜாலியா பேசுவாங்க மற்றபடி  அப்படி எல்லாம் கிடையாது….

     தெரியும் நானும் அதைப் பெருசா எடுத்துக்கல….. சும்மா ஜாலிக்கு தான் பேசினேன்…….

     நண்பர்கள் அனைவரும் ஜாலியாக பேசி விட்டு….. அனைவரும் அங்கிருந்து அவரவர் வீட்டுக்கு கிளம்ப நந்தினியும் மாறனும் அவர்கள் வீட்டுக்கு கிளம்ப தயாரானார்கள்…. இன்னும் மூன்று நாட்களில் மாறன் அமெரிக்கா கிளம்புவதாக இருந்தது….. திருமணத்திற்கு 15 நாள் மட்டுமே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தான்……

       திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு வந்தவன் 13 நாளில் திரும்பவும் கிளம்புகிறான்…….

        நண்பர்கள் அனைவரும் தனியே பேசிக் கொண்டிருக்கும் போது அவனிடம்.,  அனைவரும் சேர்ந்து சொன்ன ஒரே விஷயம் அடுத்த முறை எப்படியாவது விசா எடுத்துக்கொண்டு நந்தினியை அழைத்துச் சென்றுவிடு….. என்பது மட்டுமே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள் என்று வற்புறுத்தினர்…. அனைவருக்கும் இவர்களுடைய சண்டையும் தெரியும்….. இப்போது இவன் வார்த்தைகளால் வறுத்தெடுப்பது தெரியும்….

       கூட்டிட்டு போக கூடாதுன்னு இல்லடா…. விசா அப்ளை பண்ணா உடனே கிடைத்துவிடும் கம்பெனி மூலமாக உடனே வாங்கி விடலாம்….. ஆனால் என்னோட கோபம் கொஞ்சம் குறையட்டும்….. நான்  இவ்வளவு கோபத்துடன்  இருக்கும் போது அவளை கூட்டிட்டு போனா…. நான் அவளை கஷ்டப் படுத்திருவேனோ ன்னு தான்  பயமா இருக்கு…..  இப்போது தினந்தினம் அவள கஷ்டப்படுத்திட்டு  தான் இருக்கேன்…. தப்பு ன்னு எனக்கே தெரியுது….. நேத்திக்கு தான் அவ என்னை எதிர்த்து பேசி இருக்கா…. அது வரைக்கும்  பேசினது இல்ல……  என்ன சொன்னாலும் அமைதியாக இருப்பா….

             டேய் டேய் இனிமேல் அப்படி எல்லாம் பேசாதே…..  ஏதோ வார்த்தைகளால் உன் மனசுல அடிச்சாங்க ன்னு  நீ பீல் பண்ணுவியே…. இப்ப அந்த பொண்ண வார்த்தையால நோகடித்து இருக்கியே….  நாளைக்கு உங்க லைஃப்ல இப்படியே போய் விடப் போறதில்ல…. இந்த வார்த்தை அந்த பொண்ணு மனதை நோகடித்து நாளைக்கு அந்த பொண்ணு ஏதாவது ஒரு சூழ்நிலையில் உன் கிட்ட சொல்லி காட்டிட்டா என்ன பண்ணுவ….. வேண்டாம் இனிமேல்  பேசாதே….. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழலை என்பது எங்களுக்கு தெரியும் விடு…. முதலில் அந்த பொண்ண கூட்டிட்டு போக பாரு…. உனக்கு எப்போ மனசு ஓகே அப்படின்னு தோணுதோ அதுக்கு அப்புறமா வாவது சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க…… எப்பவும் இப்படியே இருந்துவிட முடியாது இல்லை…..

       முயற்சி பண்றேன் டா…. தங்கச்சிக்கு மேரேஜ் க்கு பார்க்க சொல்லி இருக்கேன்….. அவ டிகிரி முடித்த உடனே கல்யாணம் பண்ணிடலாம்னு……  கண்டிப்பா கல்யாணத்துக்கு வரும்போது நந்தினியை கூட்டிட்டு போற மாதிரி ரெடி பண்றேன்….. அதுக்குள்ள என்னைய  நானும் கொஞ்சம் மாத்திக்க ட்ரை பண்றேன்……

    நீ சந்தோஷமா இருந்தா எங்களுக்கு அது போதும் டா….. அந்த பொண்ணு பெங்களூரில் இருக்கும் போது ஒரு தடவை நான் பார்த்திருக்கேன்…. வைஃப் வீட்டு விசேஷத்திற்காக பெங்களூர் போயிருந்தேன் அந்த நேரத்தில் அந்த பொண்ண பார்த்தேன் ரொம்ப சிம்பிள் தெரியுமா….. இப்ப பார்க்கும்போது அப்படி ஹோம்லியா  இருக்கு…. பெங்களூர்ல இருக்கும் போது ஜீன்ஸ் குர்தி ல பார்த்தேன்…   கழுத்துல ஒரு செயின் கையில்  வாட்ச் மட்டும் ரொம்ப ரொம்ப சிம்பிள்….. நான் கூட யோசிச்சேன் காலேஜில் படிக்கும்போது எப்படி வரும் இந்த பொண்ணு இப்ப இப்படி இருக்குது என்று யோசித்தேன்…..  முகத்தில் ஒரு அமைதி எதையோ இழந்த மாதிரி ஒரு சோகம்…… அத பார்க்கும் போதுகஷ்டமா இருந்துச்சுடா….  நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க போறேன் ன்னு சொல்லும் போது எனக்கு பயமா இருந்துச்சி ஏற்கனவே  அவங்க அப்பாவை கண்டா ஆகாது…… அப்படி இருக்கும்போது நீ எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்ச ன்னு யோசிச்சேன்…… எப்படியோ டா நீங்க சந்தோஷமா இருந்தா எங்களுக்கு அது போதும்……

          இருவரும் அவரவர் மன நிலையில் யோசனையோடு வீடு வந்து சேர்ந்தனர்…….

“வாழ்க்கையில் அவிழ்க்க முடியாத

சிக்கல் இல்லை பொறுமை தேவை……

அடைய முடியாத இலக்கு இல்லை

அயராத உழைப்பு தேவை……

குணப்படுத்த முடியாத நோய் இல்லை

சகிப்புத் தன்மை தேவை…….

விலக்கமுடியாத பகையில்லை

மனமலர்ச்சி தேவை….

திருத்த முடியாத குணங்கள் இல்லை

தற்சோதனை தேவை….

சீர்படுத்த முடியாத சிதிலங்கள் இல்லை

உயரிய திட்டம் தேவை…….

தோற்றுவிக்க முடியாத உயர்வுகள் இல்லை

நம்பிக்கை தேவை…..”