குளித்து முடித்து நைட்டியுடன் வந்தவள், அவனைக் காணாமல் திகைக்க, பிறகு தான் கவனித்தாள் அவன் பால்கனியில் நின்றிருந்ததை. அவன் உடலிலும், முகத்திலும் தெரிந்த இறுக்கத்தில் அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்த ஆதி கேசவன் இவன் தான் என்று சத்தியம் செய்து சொன்னாலும் நம்புவதற்கில்லை. அவள் வந்ததை அவன் உணரவில்லை.
“மாமா” என்ற அவள் அழைப்பிலும் தொடுதலிலும் நிஜத்திற்கு வந்தவனின் முகம் சட்டென்று பழையபடி மாறிப் போனது அவளிடம்.
“பத்து நிமிஷம் தீர்த்தா” என்று கனிவான குரலில் சொன்னவன், குளியல் அறைக்குள் சென்று விட, சிவாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை.
“என்னாச்சு இவங்களுக்கு? இவ்வளவு நேரம் நல்லாத் தான இருந்தாங்க” என்று எண்ணியவளுக்கு, அப்போது தான் ஞாபகமே வந்தது.
“அய்யோ, இவங்க வீட்ல நடந்ததைப் பத்தி கேட்டாங்க, ஒரு வேளை அதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்காங்களோ” என்று எண்ணியவளுக்கு மனம் அடித்துக் கொண்டது.
‘எங்கே மீண்டும் வந்து அதைப் பத்தி கேட்பாங்களோ’ என்று எண்ணியவள் பதட்டத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்தவனின் ஸ்பரிசத்தில் யோசனைகள் பின்னுக்கு சென்றது.
“தேங்க்ஸ்டி”
“எதுக்கு?”
“எல்லாத்துக்கும் தான்”
“நானும் தான் நன்றி சொல்லணும்” என்றாள் சிவா.
“மேடம் எதுக்கு நன்றி சொல்றிங்க?”
“இந்த வீட்ல எல்லாரும் வெறுத்த என்னை, இப்படி கொண்டாடி தீர்க்க நீங்க வருவிங்கன்னு நான் கனவுல கூட நினைச்சதில்லை, அதுக்குத்தான்” என்றவளை விட மனமின்றி தனக்குள் புதைத்துக் கொண்டவன்,
“எப்பவும் கோபமா பேசுற தீர்த்தா இப்படி பேசுறது கூட நல்லா இருக்குடி. அழகா பேசுற” என்றவனைப் பார்த்தவள்,
“சின்ன வயசுல அவர் சமைச்சு ஒரு தடவை சாப்பிட்டிருக்கேன்” என்றான்.
“நிஜமாவா?” என்றாள்.
“ம்ம்” என்றவனுக்கு முகம் ஏனோ இறுகி மீண்டதைப் போல் இருந்தது அவளுக்கு.
அவன் அங்கேயே அமர்ந்து சாப்பிட, அவளுக்கும் ஊட்டியிருந்தான்.
“இல்ல, நீங்க சாப்பிடுங்க” என்றவளை விடாது அவளுக்கும் ஊட்டிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அங்கே வந்த ரேணுகா கண்டது பேசிக் கொண்டே தோசை ஊற்றிக் கொண்டிருந்த மருமகளையும், அவளுக்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனையும் தான். மனம் நிறைந்து போனது அவருக்கு. அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர் திரும்பி செல்ல எத்தனிக்க,
“வாங்கம்மா” என்றவனின் குரலில் வேறு வழியின்றி சென்றார்.
“அம்மா, அவ கையால அன்னைக்கு பர்ஸ்ட் டைம் சாப்பிட்டேன். எடுத்த உடனே அது பிடிக்காதுன்னு எப்படி சொல்ல முடியும். அது மட்டுமில்லாம நிஜமாவே அன்னைக்கு அவ்ளோ டேஸ்ட்டா இருந்தது. நான் நல்லா சாப்பிட்டேன்” என்றவனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்திருந்தார் ரேணுகா.
“ஏன்னு கேட்டா? என்ன சொல்ல முடியும் தீர்த்தா? வாழ்க்கையில நீ வரவே கூடாதுன்னு நினைச்ச இந்த வீட்ல, நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான இருந்த. அப்படி இருக்கும் போது, நான் என்ன பெருசா பண்ணிட்டேன். ஒரு சாப்பாடு விஷயம், அவ்வளவு தான” என்றவனின் குரலில் எப்படி உணர்ந்தாள் என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை.
இவை அனைத்தும் தண்ணீர் பிடிக்க வந்த சுபத்ராவின் கண்களில் பட்டு அவரையும் நெகிழ்த்தியிருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாய் நீரை மட்டும் பிடித்துக் கொண்டு திரும்பியவரை,
“சுபாத்தை” என்ற ஆதியின் குரல் நிறுத்தியிருந்தது.
“ஆதி” என்றவர் கேள்வியாய் பார்க்க, அவரை தன்னருகில் இழுத்து, அவருக்கும் ஊட்டியிருந்தான்.
“தீர்த்தா இன்னும் ரெண்டு தோசை” என்றவனை முறைத்தவள், அமைதியாய் திரும்பி தோசையை ஊற்ற, அவனோ சுபாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட இருந்து எதையாவது மறைக்குறிங்களா?” என்றான். குரல் சாதாரணமாகத் தான் இருந்தது. முகமோ இறுகியிருந்தது. அவன் இதற்கும் தட்டைத் தான் பார்த்திருந்தான். சுபாவைப் பார்க்கவில்லை.
ஆனால் அவன் கேட்டது தான் தாமதம் என்பதைப் போல், அவர் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வந்திருக்க, அதை சட்டென்று துடைத்திருந்தார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆதி” என்றவரைத் தான் இப்போது கூர்மையாய் பார்த்திருந்தான். சிவாவிற்கோ அவன் அப்படி கேட்டதில் யோசனை.
“எனக்கு போதும் ஆதி” என்ற சுபா தன்னை அடக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
“இன்னைக்கு வீட்ல என்னம்மா நடந்தது?” என்றான் ரேணுகாவிடம். சிவா பதட்டத்துடன் திரும்பி ரேணுகாவைப் பார்க்க, அவளின் பார்வையில் சேதி அறிந்தவர், அவள் சொல்ல வேண்டாம் என்பதைப் போல் தலையாட்டியதையும் பார்த்திருந்தார்.
“ஒன்னும் நடக்கலையேப்பா?” என்றார்.
“இவ கூட சேர்ந்து நீங்க கூட பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டிங்க போல” என்றான்.
“ஆதி”
“சரி சரி நானும் எதுவும் கேட்கலை, போதுமா” என்றவன் கையை கழுவி விட்டு வெளியே செல்ல, அப்போது தான் சிவா நிம்மதியாய் மூச்சே விட்டாள்.
“நான் தான் அன்னைக்கே சொன்னேனே? இந்த இடுப்புக்கு பட்டா பத்திரம் எல்லாம் போட்டவன் நான்தான்னு. இடத்துக்கு சொந்தக்காரனையே கையை எடுக்க சொல்லுவியா?” என்றான்.
“ச்சச்ச.. விடாம பிடிச்சுக்கோங்க. யார் வேண்டாம்னு சொன்னா?” என்றவளைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்திருந்தான். சிவாவோ அதோடு நிறுத்தாமல் எக்கி அவன் இதழ்களிலும் ஒரு முத்திரையை பதித்திருக்க, ஆதி அதிர்ந்தானோ இல்லையோ பார்த்திருந்த விசாலாட்சிக்கு மயக்கமே வந்துவிட்டது.
“வந்தா வரட்டும். அதைப் பத்தி எனக்கென்ன கவலை” என்றவள்,
“மாமா” என்றாள்.
“ஏமா?”
“நீங்க ஏன் என்னை மேல தூக்கிட்டு போகக் கூடாது?” என்றாள் அவனைப் பார்த்து கண் சிமிட்டியபடி.
“பொண்டாட்டி கேட்டு நிறைவேத்தாம இருக்க முடியுமா?” என்றவன் சட்டென்று அவளைத் தூக்கியிருந்தான்.
‘கிழவிக்கு காலையில உசுரு இருக்குமான்னு தெரியலையே?’ என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி அவனுடன் ஒட்டிக் கொண்டாள் சிவ தீர்த்தா.
அவள் எண்ணியதைப் போல் தான் அமர்ந்திருந்தார் விசாலாட்சி.
“என்ன இந்த பையன்? அவளை அத்து விட்டுறேன்னு நம்ம கிட்ட சொன்னான். இப்ப என்னடான்னா அவளோட இப்படி கொஞ்சிக் கொலாவிட்டு இருக்கான்?” என்று எண்ணியவருக்கு இரவு உறக்கம் முற்றிலும் தொலைந்து போனது.