எப்போதும் ஆதி கிளம்பி சென்ற பிறகு அறைக்குள் சென்று விடும் சிவா அன்று ரேணுகாவுடனே இருக்க, அவளின் மாற்றம் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் இதைத்தானே எதிர்பார்த்தார்.
“அவங்க மில்லுக்கு போயிட்டு வந்து தோட்டத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. நான் போயிட்டு வந்திடவா?” என்றாள் ரேணுகாவிடம்.
“போயிட்டு வாடா! இதையெல்லாம் என்கிட்ட கேட்கணுமா என்ன?” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க,
“இங்க பார் ரேணுகா, தோட்டத்து பக்கம் போற வேலையெல்லாம் வச்சுக்க வேண்டாம்னு சொல்லு. யார் தோட்டத்துக்கு யார் போறது?” என்றார் விசாலாட்சி.
“நான் எங்க தோட்டத்துக்கு போறதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தேன். இப்போ நீங்களாதான் வாயைக் குடுத்திங்க? இப்ப என்ன முடிவு பண்ணியிருக்கேன்னா என் புருஷன் வீட்டு தோட்டத்துக்கு போகலாம்னு இருக்கேன்” என்றாள் நக்கலாய்.
“அம்மா அவகிட்ட வாயைக் குடுக்காதிங்க. வரவர அவ ஆளே சரியில்லை. எது பேசுனாலும் உரிமை கொண்டாடிட்டு வந்தர்றா. பேசாம அமைதியா இருங்க” என்றார் மேகலை.
பல்லைக் கடித்த விசாலாட்சி,
“ரேணுகா இவ சமைச்சதை எல்லாம் நான் சாப்பிட மாட்டேன்” என்றார் வீம்பாய்.
“சந்தோசம் அப்போ சமைச்சு சாப்பிட்டுக்கோங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லை. அவங்களால வேற எதுவும் செய்ய முடியாது” என்ற சிவா,
“வரப்போறிங்களா இல்லையா?” என்றாள் சற்று மிரட்டலாய்.
ரேணுகாவும் வேறு எதுவும் பேசாமல் வந்து சாப்பிட அமர, அவருக்கு பார்த்து பார்த்து பரிமாற, அதைப் பார்த்திருந்த விசாலாட்சிக்கு தான் எரிச்சல்.
“நீங்களும் வாங்க” என்றாள் மணி மேகலையைப் பார்த்து.
“அம்மா வாங்க சாப்பிடலாம். நம்ம வீட்டுல சாப்பிடுறதுக்கு நாம ஏன் யோசிக்கணும்?” என்ற மேகலை வம்படியாய் அவரையும் அழைத்துக் கொண்டு போக, சற்று நேரத்தில் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.
விசாலாட்சியின் அருகில் இருந்த மகாதேவனோ எரிச்சலின் உச்சத்தில் அமர்ந்திருந்தார்.
“என்னத்தை நடக்குது இந்த வீட்ல” என்றவரின் குரல் காதில் விழுந்தாலும் கண்டும் காணாமல் இருந்தாள் சிவ தீர்த்தா.
அமிர்தாவும், ஜீவனும் அவளை ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க, அவர்களிடத்தில் அவளுக்கு வஞ்சம் எல்லாம் இல்லை.
“என்ன? சாப்பிடுங்க” என்றாள் மெதுவாய்.
“சிவாக்கா டிபன் சூப்பர்” என்றாள் அமிர்தா.
“ஆமாக்கா, சூப்பரா இருக்கு” என்று ஜீவனும் சேர்ந்து கொண்டு சொல்ல,
“அமிர்தா, ஜீவன் வாயை மூடிட்டு சாப்பிடுறிங்களா?” என்று மகாதேவன் ஒரே அதட்டாய் அதட்ட, அப்படியே அமைதியாகிக் கொண்டனர்.
“நீ இப்படி சாப்பிட மட்டும் தான் லாயக்கு” என்றார் மேகலை கோபமாக.
“உண்மையை சொன்னா உங்களுக்கு பொறுக்காதே” என்ற தாரணி வஞ்சகமே இல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிட, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சிவ தீர்த்தா. சுபத்ரா ஓரமாய் ஒதுங்கி நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மகாதேவன் அங்கிருந்து அவரை முறைக்க,
“உன் முறைப்பெல்லாம் ஒன்னும் செய்யாது” என்ற ரீதியில் பார்த்து வைத்திருந்தார் சுபத்ரா.
அப்போது சாப்பிட வந்த விசாகன் சிவாவை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் செல்ல முற்பட,
அமைதியாய் அவனுக்கும் அவள் பரிமாற, முதலில் ஆச்சர்யப்பட்டவன், பின் அமைதியாய் சாப்பிட துவங்கினான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளை அமர வைத்து ரேணுகா பரிமாற, சுபத்ராவும் அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மாவும் மகளும் மட்டும் இருக்க, ரேணுகா பரிமாறிக் கொண்டிருந்தார். மகளின் கையால் சமைத்த உணவை முதன் முதலில் சாப்பிடுகிறார் சுபத்ரா. ஏதோ சொல்ல முடியாத ஒரு துக்கம் தொண்டையை அடைக்க, எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் இதையெல்லாம் பார்த்திருந்த மகாதேவனுக்கு தான் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
“என்ன அத்தை? உங்க மக, முதல் புருஷனுக்கு பிறந்த பொண்ணைப் பார்த்ததும் அப்படியே பாசத்துல உருகிக் கரையறா?” என்றார் விசாலாட்சியிடம்.
“அப்படி எல்லாம் இல்லை மகா தேவா. அவ எப்பவும் போல தான் இருக்கா” என்றார் அவர்.
“என்னமோ இந்த வீட்ல நடக்குறது எதுவும் நல்லதா படலை. மாமா படுத்த படுக்கையா இருக்கார்னு எல்லாரும் அவங்க இஷட்டத்துக்கு ஆடுற மாதிரி இருக்கு” என்றார்.
“ஆதி சரியா இருந்தா நமக்கு இந்த பிரச்சனையே இல்லையே மகா தேவா. எங்க அவன் தான் பொண்டாட்டி பித்து பிடுச்சு போய் இருக்கானே?” என்றார் விசாலாட்சி ஆதங்கமாய்.
அவர்கள் பேசுவது சிவாவின் காதிலும் விழுந்து கொண்டு தான் இருந்தது. அவள் சாப்பிட்ட படி விசாலாட்சியை முறைக்க,