அவளும் சந்தோஷமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “மதி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. இதுக்கு மேல வேற என்ன வேணும் சொல்லு. நமக்கு நம்ம பிள்ளை வரப் போறான். நீயும் நானும் அம்மா அப்பா ஆகப் போறோம் டி”, என்று சந்தோஷப் பட்டான். 

“எனக்கும் தாங்க. இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குமான்னு ரொம்ப ஏங்கினேன். எல்லாமே கனவா போயிருச்சுன்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப எனக்கு எல்லாமே கிடைச்சிருச்சு.  உங்களால தான் இது சாத்தியமாச்சு”, என்று சொன்னவள் அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள். 

“நான் மட்டும் உன்னை கோவில்ல பாத்தப்பவே என் காதலைச் சொல்லிருந்தா இந்நேரம் நமக்கு ரெண்டு வயசுல பிள்ளை இருந்துருப்பான் டி”

“இல்லைங்க, அப்படி நடக்காம கூட போயிருக்கலாம். முன்னாடியே காதல்னு வந்து நீங்க சொல்லிருந்தா மிருகமா இருந்த எங்க அப்பா அதுக்கு சம்மதிச்சிருப்பார்னு நினைக்கிறீங்களா? அவருக்கு பயந்து நானும் என் காதலை ஒத்துக்கிட்டு இருந்துருக்க மாட்டேன். எது நடக்கணுமோ அது தாங்க நடக்கும்”

“அதுவும் சரி தான். இப்படி எல்லாம் நடக்கணும்னு தான் விதியோ என்னவோ?”

“ஆமாங்க, சரி தூங்கலாமா?”

“தூங்கலாம் டி”, என்று சொன்னவனின் உதடுகள் அவளது கழுத்தில் ஊர்ந்தது. 

அவன் விரல்கள் அவள் கழுத்தில் கிடந்த நகைகளைக் கழட்டியது அவன் தொடுகையில் அவளுக்கு கூச்சமாக இருந்தது. அவன் கை அவள் மேனியில் ஊர்ந்த விதத்தில் அவள் நெஞ்செங்கும் பல பூகம்பங்கள் எழுந்தது. 

குழந்தையைக் கொஞ்சுவதற்காக அவளுடைய வயிற்றில் பதிந்த அவனது கரம் அங்கிருந்து செல்ல மறுத்தது. அவன் தொடுகையில் அவள் தேகம் சிலிர்க்க குழந்தைக்கு என்று சொல்லி அவளது வயிற்றில் முத்தமிட்டான். திண்டாடிப் போனாள் வெண்மதி. 

சட்டென அவன் கரம் நீண்டு விளக்கை அணைக்க “சேலையை மாத்தணும்”, என்று சொன்னாள் வெண்மதி.

“மாத்திட்டா போச்சு”, என்று சொன்னவன் அவளுடைய உதடுகளை சிறை செய்ய அவள் தேகம் எங்கும் அனல் பற்றிக் கொண்டது. அந்த உணர்வின் தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாமல் திணறி அவன் கரங்களுக்குள்ளே ஐக்கியமாகி விட்டாள். 

அவள் புடவை அவன் கரம் வழியாக தரையில் அடைக்கலமாக அவளுக்கு அவன் மட்டுமே ஆடையாகிப் போனான். அவனது முத்தத்தில் அவள் திணற அவள் மூச்சுக் காற்றை அவளுக்கு வழங்கியவன் அவளை ஒரு நொடி கூட விலக அனுமதிக்க வில்லை.

அவனோடு காற்று புக முடியாத அளவுக்கு அவள் ஒட்டிக் கொள்ள அவனுக்கும் வேறு என்ன வேண்டுமாம்?

அடுத்த நாளே மருத்துவரிடம் காட்ட அவரும் குழந்தை என்று உறுதி செய்தார். வசந்தா மருமகளைப் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள். சாந்தியும் அவளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தாள்.

தினமும் விசாலமும் ஏதாவது செய்து கொண்டு மகளைப் பார்க்க வந்து விடுவாள். அப்போது ஒரு நாள் மகளைப் பார்க்க வந்த விசாலத்துடன் குற்றாலமும் வந்தார்.

வந்தவர் நேராக சென்று நின்றது செந்தில் முன்பு தான். “என்ன சித்தப்பா?”, என்று அவன் கேள்வியாக பார்க்க “இந்தாப்பா, இது உனக்கு தான். வாங்கிக்கோ”, என்று சொல்லி ஒரு பேப்பரை நீட்டினார். 

அவன் என்னவென்று குழம்பி அதை விரித்துப் பார்க்க அவர் தன்னுடைய மாவு மில்லையும் அரிசி மில்லையும் அவன் பேருக்கு எழுதி வைத்திருந்தார்.

“என்ன சித்தப்பா இதெல்லாம்?”, என்று குழப்பமாக கேட்டான்.

“அன்னைக்கு நீ சொன்னியே வெண்மதி என்னோட தங்கைன்னு. அப்படின்னா நீ என் மகன் தான் பா. வெண்மதி சொன்னா, நீ என்ன தொழில் தொடங்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்னு? எனக்கு இதை உனக்கு கொடுக்கணும்னு தோணுச்சு பா”

“இல்லை சித்தப்பா, உங்க அன்பே போதும். இந்த சொத்து எல்லாம் வேண்டாம். இது வெண்மதி சொத்து. இது அவளுக்கோ சரவணனுக்கோ தான் வரணும்”

“அப்படின்னா நீ வெண்மதியை தங்கைன்னு சொன்னது சும்மா தானா?”, என்று அவர் கேட்க அவன் திணறினான்.

“அதானே, நீங்க எனக்கு அண்ணன் தான். அப்படின்னா இதை நீங்க தான் வச்சிக்கணும்”, என்றாள் வெண்மதி.

சரவணனும் “அவர் தான் ஆசையா குடுக்குறார்ல டா? வாங்கிக்கோ”, என்றான்.

“இல்லை டா, இது உனக்கு சேர வேண்டிய சொத்து”, என்று மறுத்தான் செந்தில்.

“என் மாப்பிள்ளைக்கு கொடுக்காம உனக்கு சொத்தைக் கொடுக்குறேன்னு தானே பா தயங்குற? இந்த ரெண்டு மில்லை தானே உனக்கு கொடுக்குறேன்? என்னோட மத்த சொத்து எல்லாம் என் மாப்பிள்ளைக்கு தான். வீடு நிலம் தோப்பு துறவுன்னு எல்லாம் அவருக்கு தான். இந்த ஊர்ல ஒரு ஸ்கூல் ஆரம்பிக்க போறேன். அதுவும் என் மாப்பிள்ளை பேர்ல தான். அதை வெண்மதியும் பூர்ணிமாவும் பாத்துக்கட்டும்”, என்றார் குற்றாலம்.

“அப்படினா எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு. இந்த சொத்தை நான் இனாமா வாங்க மாட்டேன். இதுக்கான பணத்தை தந்துருவேன்”, என்றான் செந்தில்.

“சரிப்பா கொடுத்துரு. அந்த பணத்தையும் சேத்துப் போட்டு நான் ஸ்கூல் ஆரம்பிச்சிறேன். ஆனா மில்லுக்கு எவ்வளவு பணம்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். உனக்கு எவ்வளவு கொடுக்கணும்னு தோணுதோ அதை கொடு .ஒரு ரூபாயா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்”, என்றார் குற்றாலம்.

அவன் சரி என்று சொல்லி விட அடுத்த நாளே எல்லா வேலைகளும் நடந்தது. அவனுடைய பெயரில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க விடாமல் பாரினில் இருந்து பூர்ணிமா பெயரில் போட்ட பணத்தை எடுத்து குற்றாலத்திடம் கொடுக்கச் சொன்னாள் பூர்ணிமா. அதை அப்படியே செய்த செந்தில் மில்லை பூர்ணிமா பெயரில் தான் வாங்கினான்.

அதே போல சரவணனும் பள்ளியை வெண்மதி பெயரில் தான் ஆரம்பிக்கச் சொன்னான். அந்த வேலையும் ஆரம்பித்தது. 

அடுத்த இருபது நாட்கள் கழித்து பூர்ணிமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வீடே சந்தோசத்தில் திளைத்தது. செந்திலுக்கு இந்த உலகையே வென்ற சந்தோஷம். மகனுக்கு கதிர் என்று பெயர் வைத்தார்கள். 

சில மாதங்களுக்கு பிறகு வெண்மதிக்கும் குழந்தை பிறந்தது. அவளுக்கும் ஆண் குழந்தை தான். மருத்துவமனையில் இருக்கும் போதே நிர்மலின் பெற்றோர் வந்து குழந்தையைப் பார்த்து விட்டுச் சென்றார்கள். அவர்களின் மகனுக்கு கார்த்திகேயன் என்று பெயர் வைத்தார்கள். 

வெண்மதியிடம் “குழந்தைக்கு நிர்மல்ன்னு பேர் வைக்கவா மதி?”, என்று சரவணன் கேட்டான் தான்.

“இல்லை வேண்டாம். வேற பேர் வைக்கலாம். நிர்மல் ரொம்ப நல்லவர் தான். ஆனா அவரை தினமும் நாம நினைச்சிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. என் மனசுல இருக்குறது எல்லாம் அவர் இன்னொரு ஜென்மத்துல அதே அம்மா அப்பாக்கு பிறந்து என்னை விட ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி நூறு வருஷம் வாழனும். அது மட்டும் தான். அவரையும் நம்ம வாழ்க்கையையும் குழப்பிக்க வேண்டாம்”, என்று தெளிவாக சொல்லி விட்டாள் வெண்மதி. 

அடுத்து வந்த நாட்களில் சரவணன் கல்லூரியில் வேலை பார்த்தாலும் அவ்வப்போது செந்திலுக்கு உதவியாக இருப்பான். பூர்ணிமாவும் வெண்மதியும் சேர்ந்து அந்த ஊரில் புதுப் பள்ளியைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தினார்கள். 

அந்த பள்ளி அதிக கட்டணம் வாங்கப் படாமல் சேவை நோக்கில் துவங்கப் பட்டது என்பதால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது எல்லாம் குற்றாலமே பார்த்துக் கொண்டார். தவறான வழியில் சம்பாதித்த பணத்தை அந்த பள்ளிக்காக செலவழிக்க ஆரம்பித்தார். 

வெண்மதி மற்றும் சரவணன் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல நகர ஆரம்பித்தது. கார்த்திக்கேயன் மற்றும் கதிர் இருவரும் அந்த வீட்டின் இளவரசர்களாக வலம் வந்தார்கள். இப்போது கதிருக்கு ஐந்து வயது ஆகி இருக்க பூர்ணிமா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தாள். 

இப்போது கார்த்திக்கேயனுக்கு நான்கு வயது. ஒரு நாள் அவன் வெற்றிவேல் மற்றும் வசந்தாவுடன் உறங்கச் சென்று விட மனைவியைத் தேடி அறைக்கு வந்தான் சரவணன். 

அவள் உறங்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்க அவனைக் கண்டதும் அவன் பின்னால் தேடினாள்.

“யாரை டி தேடுற?”

“வேற யாரைத் தேடுவேன்? நீங்க மட்டும் வரீங்க? எங்க உங்க சீமந்த புத்திரன்”, என்று கேட்டாள் வெண்மதி. 

“குட்டி அம்மா அப்பா கிட்ட படுக்க போறேன்னு சொல்லிட்டான் டி”

“அவன் சொன்னானா, இல்லை நீங்க அவனைத் துரத்தி விட்டீங்களா?”

“யாரைப் பாத்து என்ன வார்த்தை கேக்குற?”, என்று அவன் அதிர்வாக கேட்க “சும்மா நடிக்காதீங்க. உண்மையைச் சொல்லுங்க. என்ன பண்ணுனீங்க?”, என்று கேட்டாள் வெண்மதி.

“ஹி ஹி, இன்னைக்கு அம்மாவுக்கு நல்ல தலைவலி. அம்மா கதை சொல்ல மாட்டா. அதனால ஆச்சி தாத்தா தான் கதைச் சொல்லுவாங்கன்னு சொன்னேன்”, என்று சிரிப்புடன் சொன்னான் சரவணன். 

“போச்சா? இன்னைக்கு அத்தை மாமா தூங்கின மாதிரி தான். கதை கிதைன்னு அவங்களை உயிரை எடுப்பான். நான் உங்க கிட்ட சொன்னேனா எனக்கு தலை வலின்னு? அவனை இங்க தூக்கிட்டு வாங்க”

“வேண்டாம் வேண்டாம், இன்னைக்கு நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு”, என்று சொன்னவன் அவளை ஆசையாக பார்க்க அவன் பார்வையில் முகம் சிவந்தாள் வெண்மதி.

“வேண்டாம், இப்ப தான் பூர்ணி ரெண்டாவது குழந்தைக்கு மாசமா இருக்கா. இப்ப நானும் வயித்தை தள்ளிட்டு இருந்தா அவளை நல்லா கவனிச்சுக்க முடியாது”

“கார்த்திக்கு நாலு வயசாகிருச்சு. இப்ப தான் சரியா இருக்கும். பூர்ணியைப் பாத்துக்க அம்மாவும் சித்தியும் இருக்காங்க. நீங்க என்னைக் கவனிச்சிக்கோங்க டீச்சரம்மா”, என்று சொன்னவன் அவளுடைய இதழ்களில் முத்தமிட அவள் மறுப்பு எல்லாம் காற்றோடு கரைந்து போனது. எப்போதும் போல் அவன் தொடுகையில் அவள் நெஞ்செங்கும் காதல் பூகம்பம் விஸ்வரூபம் எடுத்தது. 

……முற்றும்…..