அன்று மதிய உணவு நேரத்தில் அவள் வகுப்பில் அமர்ந்திருக்கும்போது உணவை உண்ண பிடிக்காமல் மூடி வைத்துவிட்டு அமர்ந்து இருக்கும் போது கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் வெளியே பேசிக்கொண்டு நின்றார்கள்…. யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்… அப்போது வெளியே பேச்சு சத்தம் கேட்டது, என்னப்பா கல்யாணம் ன்னு கேள்விப்பட்டோம் இங்க வந்து இருக்க என்று கேட்கவும்… கல்யாண பொண்ணு காலேஜ்ல தான் சார் இருக்கு, தூக்கிட்டு போறதுக்கு வந்திருக்கேன் என்று சொன்னான்.., அதன் பிறகு தான் தெரிந்தது வெளியே சித்தார்த்தன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று….
பொண்ணு யாருப்பா என்று சார் கேட்பதும்.,
இவன் உள்ளே தான் இருக்கிறாள் என்று தலையை எட்டிப் பார்த்தவுடன் எழுந்து விட்டாள்….
ஒஒ… சரி சரி கல்யாணத்துக்கு எல்லாருக்கும் சொல்லிரு., என்று சொல்லி விட்டு கிளம்பினார்….
மித்ரா வெளியே வா என்று அழைத்தான்…
அவள் மட்டும் வரப்போகும் போது., பேக் எல்லாத்தையும் எடுத்துட்டு வா என்றான்….
அவள் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது., எதையும் பார்க்காமல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டே வந்தாள்…. அவள் வருவதைதான் அவனும் பார்த்துக்கொண்டே நின்றான்…. வெளியே வந்த பிறகு..,
அமைதியாக நின்றுக் கொண்டே எதுக்கு கூப்பிட்டீங்க என்றாள்…. ஈவினிங் பங்க்ஷன் வச்சுட்டு நீ இப்ப காலேஜ்ல என்ன பண்ற.. உன்னை யார் காலேஜுக்கு வர சொன்னா என்றான்….
அதுவா என்ன கல்யாணம் பண்ணிக்க போறவரு மார்க் குறைந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொன்னாரு…. அதுக்காக வந்தேன் என்றாள்….
அடே யப்பா…. காலேஜ் ரெகுலரா வந்தா., மார்க் வந்துருமா என்ன.., அதெல்லாம் படிக்கணும் என்றான்…, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்துக் கொண்டே வீட்டுக்கு வாங்க என்றாள்….
ஏன் வீட்டுக்கு வந்தா… ஏதாவது கிப்ட் தருவியா என்று கேட்டான்…
அவன் பார்வையில் ஒரு ஆர்வம் தெரிந்தாலும்.., அவனிடம் இருந்து எதுவும் இவளால் கண்டுபிடிக்க முடியவில்லை…, எனவே மறுபடியும் ஒரு குழப்ப நிலைக்கு சென்றாள்…..
இல்ல நான் பஸ்ல போயிடுவேன் என்று சொல்லிவிட்டு கிளம்பவும்….. அவள் பதில் சொல்லிவிட்டு வேகமாகச் செல்வதைப் பார்த்து…. மேடம் ஏதோ கோபம் பேசும் போதே தெரியுது…. சரி பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்…
பின் நண்பர்களிடம் விடைபெற்று விட்டு., அவன் வெளியே வரும்போது அருகில் இருந்த பஸ்ஸ்டாப்பில் தேடினான்….
அவளில்லை.., சரி போய் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்…. சற்று நேரம் சென்று அவளுக்கு போனில் அழைக்கும் போது வீட்டிற்கு வந்துவிட்டதாக சொன்னாள்… அதன் பிறகு அவனும் பேசவில்லை அவளும் அவளுக்கு உண்டான குழப்பத்தில் தான் இருந்தாள்….
மாலை அலங்காரம் செய்து எல்லாம் முடித்தபின்.., உடை மாற்றி மாற்றிக் கொள்ளச் சொல்லி மித்ராவின் தாயும் அத்தையும் சொல்லிக்கொண்டிருக்க இவளுக்கு எதிலும் ஈடுபாடு இல்லாமல் அமைதியாக இருந்தாள்..,
மித்ராவின் அம்மாவுக்கு ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கவலை…, மித்ராவின் அத்தை ஒருவேளை திருமணத்தில் இஷ்டமில்லையோ மற்றவர்களுக்காக பண்ணிக் கொள்கிறாளோ., என்ற எண்ணம் தோன்றியது., அதை அவள் நேரடியாக கேட்கவும்., மித்ரா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.,கொஞ்ச நேரம் எனை ப்ரீயா விடுங்க…, அப்புறமா டிரஸ் மாத்திக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.., இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு அனைவரும் வந்து விட மித்ராவின் அம்மாவும் அத்தையும் அவர்களை வரவேற்க சென்றுவிட்டனர்.. அவளுக்கான உடையை எடுத்து வைத்துவிட்டு சென்றனர்… அவளோ வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்…. சற்று நேரத்தில் கதவு தட்டுவதை கேட்டவுடன் இந்த அம்மாக்கு வேற வேலையே இல்லை., என்றபடி திறந்துதான் இருக்கு என்றாள்…..
திறந்துதான் இருக்கு என்று சொன்னாலும்., அவள் ஜன்னல் வழியாக பின்புறத்தில் உள்ள தோட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்…. அவளுக்கு உள்ளே வந்தது யார் என்று கூட தெரியாது., அம்மாவிடம் சொல்லிக் கொள்ளலாம், என்ன இப்ப டிரஸ் மாத்திட்டு கீழ வா னு சொல்வாங்க, வேற வழி போவோம் என்று நினைத்துக்கொண்டே மெதுவாக திரும்பவும்., கதவை சாத்தி தாழிட்டு விட்டு அதில் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்., சித்தார்த்.. அப்போதுதான் தெரியும் உள்ளே வந்தது சித்தார்த் என்று…, இவன் எப்போ வந்தான் என்று யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டு நிற்கவும்…,
மெதுவாக அருகில் வந்தவன் என்ன கோபமா, இருந்தாலும் அப்புறமா தனியா என் கிட்ட சண்டை போடு., இப்போ யார் முன்னாடியும் சண்டை போடாத கிளம்பு என்று சொல்லிக் கொண்டிருந்தான்….
அருகில் இருந்த புடவை பார்த்துவிட்டு, நான் இன்னைக்கு தான் உன்னை மொத மொதல்ல புடவையில் பார்க்க போறேன், அது நல்லா ஜம்முனு கிளம்பி வா என்றான்.., அவன் முகத்தில் இருந்த ஆர்வமும் சிரிப்பும் அவனுக்கு முழு சம்மதம் என்று சொன்னாலும், அவளோ அவன் முகத்தையே பார்த்து இருந்தாள்.,
அவன் சிரித்துக்கொண்டே வேண்டாம் பார்க்காத.., நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதனால் அமைதியா இருக்கேன் கிளம்பு என்று சொல்லி விட்டு போனான்….
அவன் சென்ற பிறகு தான் அவன் சொன்னதற்கான அர்த்தம் விளங்க…. ஆமா கல்யாணம் ஆயிருந்தா மட்டும் என்று நினைத்தாள்… பிறகு தன்னைத்தானே தலையில் தட்டிக் கொண்டு வர வர நான் ரொம்ப கெட்டு போயிட்டேன்., என்று வேறு சொல்லிக் கொண்டாள்…, அதன்பிறகு அவள் அம்மா எடுத்து வைத்துவிட்டு போன புடவையை கட்டி விட்டு கண்ணாடி முன் நின்று பார்க்கவும்., அவளுக்கு சிரிப்பு தான் வந்தது… எத்தனையோ முறை புடவை கட்டியிருந்தாலும்.., ஏனோ இன்று பார்த்ததும் சிரித்துக்கொண்டாள்……
கீழே வந்தவளை காமாட்சி தன் அருகில் அமர்த்திக் கொண்டார்… பின்பு அவர்கள் பேச வேண்டியவற்றையும்., கல்யாண தேதி குறிப்பது போன்ற மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்க., இவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்…
இவள் மேல் மாடியிலிருந்து கீழே வருவதற்குள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்து… கடிதம் முதற்கொண்டு பார்த்து ஜெகதீஷ்ம், சித்தார்த்தும் தங்கள் பேச வேண்டியவற்றை வெளியே சென்று பேசிக்கொள்வதாக முடித்துக் கொண்டனர்… அவரவர் பெற்றோருடன் இருக்க கல்யாண பேச்சு நடந்து கொண்டிருந்தது.,
திருமணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் என்றும், நிச்சயதார்த்தம் முடிந்த உடன் வரவேற்பு , மறுநாள் கல்யாணம் மதியத்திற்கு மேல் வீட்டிற்கு செல்ல வேண்டும்…, என்று பேசிக் கொண்டிருந்தனர்… மித்ராவின் பரீட்சை தேதி பொறுத்தே திருமண தேதி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் -தனர்…. அவள் பரீட்சை முடியட்டும் அதன் பிறகு திருமண தேதி குறித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்….
அனைவரின் சம்மதத்தோடு அன்று பேசி முடித்துக் கொண்டனர்… அனைவரும் கிளம்பலாம் என்று நினைத்து., பேசும் போது சித்தார்த்தும் ஜெகதீஷ்ம் , நாங்கள் தனியாக பேசவேண்டும் வெளியே செல்கிறோம்., இரவு உணவை முடித்துக் கொண்டு தான் வருவோம் என்று சித்தார்த் சொல்லவும்.,பரசுராம் காமாட்சியும் சரி என்று வீட்டிற்கு கிளம்ப தயாராகினர்… அதே நேரம் சித்தார்த் , மித்ராவின் வீட்டில் மித்ராவை தன்னோடு அனுப்ப வேண்டும், என்று கேட்டுக் கொண்டிருந்தான்…
அப்போதுதான் அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைக்கவும்…, தனியாக இல்லை பிரதீபாவும் வருகிறாள் என்று சொன்ன பிறகே வீட்டில் சரி என்று சொன்னார்கள்..,
அதன்பிறகு பிரதீபா விற்கு போன் செய்து அவ்விடத்திற்கு வர சொல்லிவிட்டு, அங்கு செல்ல முடிவெடுத்தனர்… ஜெகதீஷ் அவனின் வீட்டினரை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் விட்டுவிட்டு அவ்விடத்திற்கு வந்து விடுவதாக கூறினான்….
அப்போது ஜெகதீஷின் பெற்றோரும் நாங்களும் கூடிய சீக்கிரம் திருமண தேதியை முடிவு செய்து விடுவோம்., இரண்டு தேதியும் ஒரே நாளில் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டனர்….
வீட்டில் அனுமதி வாங்கி கொண்டு… அவளை அவனோடு அழைத்து சென்றான்…