காபி குடித்து விட்டு அவன் மேலே செல்ல மதியோ அறையை தாழ் போடாமல் லேசாக மூடி விட்டு சேலை கட்டிக் கொண்டிருந்தாள்.

     படக்கென்று அவன் கதவைத் திறந்து உள்ளே போக அதிர்ந்து முந்தானையை தூக்கி மேலே போட்டவள் “இவன் தானா?”, என்று எண்ணினாலும் அவனைப் பார்த்து முறைத்தாள்.

            “என்ன அம்மணி முறைக்கிற?”, என்று கேட்க அவனது அம்மணி என்ற அழைப்பில் ஒரு உயிர்ப்பு இருப்பது போலவே அவளுக்கு பட்டது.

            நெகிழ்ந்த மனதை அடக்கி “உங்களுக்கு கொஞ்சமாவது மேனஸ் இருக்கா? இப்படியா கதவை தட்டாம உள்ள வரது?”, என்று கேட்டாள்.

            “ஹலோ மேடம், இது எனக்கும் ரூம் தான். என் ரூமுக்கு நான் கதவைத் தட்டிட்டு வரணுமா? என்ன நியாயம் இது?”

            “உங்க ரூமா இருந்தாலும் இப்ப நானும் தானே இருக்கேன்? நான் டிரஸ் மாத்திட்டு இருக்கும் போது இப்படி வந்தா ஆச்சா?”

            “ஏன் என் முன்னாடி டிரஸ் மாத்த மாட்டியாக்கும்?”, என்று அவன் நக்கலாக கேட்க அவள் முகம் சிவந்தது. அவள் அமைதியாக இருக்க “எனக்கு ஒரு சந்தேகம் பேபி. நேத்து நீ தூங்கின அப்புறம் தான் நான் விளக்கையே நிறுத்துனேன். அப்படி இருக்க இந்த கோபம் தேவையா?”, என்று கேட்டான்.

     அவன் சொல்ல வந்ததை உணர்ந்தவளுக்கு முகம் சிவந்து விட்டது. அவளை முழுதாக பார்த்து விட்டான் என்று சொல்வதை உணர்ந்தவளுக்கு வேறு என்ன சொல்ல என்று தெரியாமல் அவனுக்கு முதுகு காட்டி நின்று சேலையை கட்ட ஆரம்பித்தாள்.

     சிறு சிரிப்புடன் கட்டிலில் ஏறி ஒரு பக்கமாக படுத்தவன் அவளது முதுகையே பார்த்தான். தலையில் துண்டு கட்டி இருந்தாள். அவளது ஜாக்கெட்டில் மறைக்காத முதுகும் சேலை மறைக்காத முதுகின் இடைப் பகுதியும் அவன் கண்ணில் பட்டது. அதுவும் நேற்று அவன் கட்டிய தாலிக் கயிரின் ஒரு முனை அவள் முதுகில் உராய அதைக் கடந்து நீர் துளி அவள் முதுகுக்குள் இறங்க அதைக் கண்டவனுக்கு ஒரு மாதிரி உடல் முருக்கேறியது.

     இப்போது கிட்ட போனால் வம்பா தான் முடியும் என்று எண்ணி வெறும் ரசிப்பதோடே நிறுத்திக் கொண்டான். சேலை கட்டி முடித்து தலையை உணர வைத்தாள் மதி. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை.

     தலையை கிளிப்பில் அடக்கி விரித்து விட்டவள் அடுத்து என்ன செய்ய என்று முழிக்க “வா கீழ போகலாம்”, என்று அழைத்தான்.

     எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடன் சென்றாள். அவர்கள் கீழே சென்ற போது அனைவரும் ஹாலில் தான் இருந்தார்கள். அதுவும் பரமசிவமும் அங்கே தான் இருந்தார். காலையிலே புது மணமக்களை இரண்டாம் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தார்.

            அவரைக் கண்டதும் “அப்பா”, என்ற படி அவரை நெருங்கியவள் அவர் கைகளை இறுக்கிக் பிடித்துக் கொண்டாள்.

            “நல்லா இருக்கியா டா பாப்பா?”, என்று கேட்க அவள் முகம் மலர தலையாட்டினாள். அதுவே பெற்றவருக்கு நிறைவாக இருந்தது. அவனும் “வாங்க மாமா”, என்று வரவேற்றான்.

     அப்போது தமயந்தி அனைவரையும் காலை உணவுக்கு அழைக்க அனைவரும் சென்றார்கள். பரமசிவம் மறுக்க தமயந்தி விட வில்லை. அவரையும் உண்ண வைத்தே விட்டாள்.

     காலை உணவு முடிந்தவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பரமசிவம் மதி ஆதி மூவரும் கிளம்பினார்கள். ஆதியின் வேலைப் பளு காரணமாக இன்று முழுக்க அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வருவதாக ஏற்பாடு.

     மதிய உணவு தடாபுடலாக செய்திருந்தார் பரமசிவம். மீன், இறால், நண்டு, மட்டன் கிரேவி, சிக்கன் வறுவல் என்று ஹோட்டலில் ஆர்டர் செய்தவர் மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் சிக்ஸ்டீ பை இரண்டையும் வீட்டிலே அவர் கையால் செய்திருந்தார்.

     உணவு உண்டு முடிந்ததும் “மதி, மாப்பிளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்று சொல்ல அவளும் அவனை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அறை சிறியதாக இருந்தாலும் அவளைப் போலவே சுத்தமாக இருந்தது. “ரூம் நீட்டா இருக்கு”, என்று மனம் விட்டு பாராட்ட அவள் முகம் மலர்ந்தது.

            “நீங்களும் உங்க ரூமை நீட்டா தான் வச்சிருக்கீங்க”, என்று பதிலுக்கு பாராட்ட அவனும் புன்னகைத்தான்.

            அடுத்து என்ன பேச என்று தெரியாமல் “நீங்க ரெஸ்ட் எடுங்க”, என்றவள் படுக்கையை விரித்தாள்.

            “நான் மட்டுமா?”, என்று அவன் ஏக்கமாக கேட்க அவளுக்கோ வெட்கமாக வந்தது. அவள் தர்ம சங்கடத்துடன் விழிப்பதைப் பார்த்தவன்

            “சும்மா சொன்னேன். அதை எல்லாம் நம்ம வீட்ல போய்ப் பாத்துக்கலாம். உனக்கு தூக்கம் வரலைன்னா  மாமா கூட வேணா பேசிட்டு இரு. நான் தூங்கப் போறேன்”, என்று சொல்லி படுத்தான். அவனுடைய புரிதலுடன் கூடிய பேச்சு அவளுக்கு நிம்மதி அழிக்க அந்த நிம்மதியோடு அவளும் தந்தையை தேடிச் சென்று கதையழந்தாள்.

     பின் மாலை ஆனதும் டீ, ஸ்னாக்ஸ் என்று கழிய இரவு உணவை மதி செய்ய பரமசிவமும் ஆதியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

     அன்றைய இரவு உணவு முடிந்ததும் இருவரும் அறைக்குள் சென்றார்கள். ஆதி முதலில் படுக்க விளக்கை அணைத்து விட்டு அவளும் அவன் அருகே படுத்தாள். இன்று எதுவும் கிடையாது என்று அவள் நிம்மதியில் இருக்க அவனுக்கோ நேற்றைய நினைவில் உடல் சூடேறியது.

     அவன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க “என்ன ஆச்சு தூங்கலையா?”, என்று கேட்டாள் மதி.

     “தூங்க முடியலை”

     “ஏன்? மதியம் தூங்கினதுனாலயா?”

     “ப்ச் இல்லை, இது…. வேற…. மதி…”

     “ஹான்”

     “அவசரப் பட்டு நம்ம வீட்ல போய் வச்சிக்கலாம்னு சொன்னேன். ஆனா…”, என்று அவன் தடுமாற “நேத்து உங்களுக்கு நான் ஏதாவது மறுப்பு சொன்னேனா?”, என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு கேட்க அடுத்த நொடி அவளை நெருங்கியவன் அவள் மேல் படர விருப்பத்துடன் அவனை ஏற்றுக் கொண்டாள்.

     கூடல் முடிந்து அவள் விலகிப் படுக்க “என் கைக்குள்ளே இரு பேபி”, என்றவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள அவளும் அவன் மார்பில் மஞ்சம் கொண்டாள்.

            அடுத்த நாளே மதியை அழைத்துக் கொண்டு ஹனிமூன் பறந்து விட்டான் ஆதி. ஊட்டியில் இருந்த மரவீடு தான் அவர்களது ஹனிமூன் பிளேஸ் என்று முடிவு செய்திருந்தான் ஆதி.

            இடத்தை மட்டுமே ஆதி சொல்ல மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்தது ராயர் தான். ஒரு காட்டுக்குள் இருந்தது அந்த மரவீடு. கொஞ்சம் தள்ளி தள்ளி அதே போல மர வீடுகள் இருந்ததால் பயம் எல்லாம் இல்லை. இது ஹனிமூன் ஜோடிகளுக்காகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. உணவு கூட அவர்களே கொடுத்து விடுவார்கள்.

            ஆனால் மதிக்கு தான் அங்கே கொஞ்சம் பயமாக இருந்தது. அவள் பயத்தை உணர்ந்தவன் “இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு வேற ஏற்பாடு பண்ணுறேன்”, என்று சொல்ல தலையசைத்தாள்.

            அன்றைய இரவு உணவு முடிந்ததும் இருவரும் அறைக்குள் வந்தார்கள். உடனே கதவை அடைத்தவன் அவளை இழுத்து அணைத்து வாசம் பிடிக்க அவளும் அவன் கைக்குள் சுகமாக நின்றாள்.

            குளிர் அந்த அறை முழுவதும் பரவி இருந்தாலும் அவர்கள் உடலில் மட்டும் ஒரு கதகதப்பு. சுற்றி பூச்சிகளின் ரீங்காரம் மட்டுமே அந்த இடத்தை நிறைக்க இருவருக்குமே அந்த தனிமை போதையாக தான் இருந்தது.

            அவளை அழைத்து வந்து கட்டிலில் விட்டவன் அவள் மேல் படர சூடான கம்பளி அவர்களை உள்வாங்கிக் கொண்டது. கணவனுக்கே உரிய சீண்டல்களால் அவளை கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

            அவன் ஆசைகளை அவள் காதில் கூற கொஞ்சம் மிரண்டாலும் விருப்பத்துடன் சம்மதித்தாள். அடுத்த நாளே போகலாம் என்று பேசியவர்கள் மேலும் ஐந்து நாட்கள் அங்கே இருந்து விட்டு தான் வீட்டுக்கு வந்தார்கள்.

            வீட்டிலும் ஆதியின் காதலும் சீண்டலும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இப்போதெல்லாம் மதியும் அவனுக்கு அடிமை ஆகி இருந்தாள். சூரியன் நிலவை வென்று விட்டது போல?

காதல் தொடரும்….