“பாட்டி நீங்க மாடல் மாடல் மாடல் ன்னு மாற போய் தான், நான் இப்படி ட்ரெடிஷனல் ட்ரெடிஷனல் போய்கிட்டு இருக்கேன்”, என்று சத்தமாகவே சொன்னார்.
“அம்மாடியோ உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா”, என்று பாட்டி சலித்துக் கொண்டார்.
மறுநாள் காலை சொன்னது போல கடைக்கு கிளம்பி சென்றவள் ஒரு ஓரமாக அமர்ந்து அவர்கள் புடவை செலக்ட் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொன்றாக வைத்து பார்க்கும் போது தள்ளி நின்றாள்.
அவள் அண்ணனும் எந்த சேலை நல்லா இருக்கும் என்று பார்த்து கொண்டே இருந்தான்.
இருவரும் பேசி முடிவு செய்யட்டும் என்று தள்ளி நின்று அங்கிருந்த மற்ற புடவையை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் சித்தார்த்தனும் அவன் நண்பனும் வந்து சேர்ந்தனர்.
பாட்டி தான் “சித்தார்த்தா இப்போ தான் வந்தீங்களா, முந்தானாளே உன்னைய அங்க பந்தக்கால் நடும் போதே வரச்சொன்னேன் இல்ல”, என்று கேட்டார்.
“முக்கியமான வேலை பாட்டி வரக்கூடாதுன்னு எல்லாம் இல்ல, அதுக்கு தான் நீங்க அம்மா அப்பா சித்தி சித்தப்பா நீங்க எல்லாம் போய் இருக்கீங்களே, நான் எதுக்கு” என்று சொன்னவன் சிரித்துக் கொண்டே வந்தவர்களிடம் “வாங்க” என்று கேட்டபடி பேசிக் கொண்டிருந்தான்.
அவன் நண்பனோடு வர இவளோ அவனை பார்த்தவுடன் தள்ளி நின்று பார்த்தபடி மட்டும் இருந்தாள். பேச எதுவும் முயற்சி செய்யவில்லை.
“சேலை எடுத்தாச்சா” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.,
பெரியவர்கள் தான், “இங்கே சேல செலக்ட் பண்ணிட்டு இருக்கட்டும். நீ போய் மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் டிரஸ் பாக்கறீங்களா” என்று கேட்கும் போது தான்,
அவன் தான் “சேலை எடுத்து முடிக்கட்டும் பாட்டி, அதுக்கப்புறம் மாப்பிள்ளைக்கு எடுத்துக்கலாம்”, என்று சொன்னவன் நித்திலனிடமும் “மாப்பிள்ளை நான் சொன்னது ஓகேவா” என்று கேட்க,
அவனும் சிரித்தபடி “தேங்க்ஸ்” என்றான்.
“ஓகே ஓகே நீங்க செலக்ட் பண்ணுங்க”, என்று சொல்லி பார்த்த படி தள்ளி நின்று தன் நண்பனிடம் கதை பேசத் தொடங்கினான்.
நண்பனோ அவன் காதுக்குள் ரகசியமாக பேசத் தொடங்கினான்.
“மச்சான்” என்று அழைத்தான்.
“என்னடா” என்றான்.
“மச்சான் சித்து” என்று மீண்டும் அழைத்தான்.
“சொல்லேன்டா என்ன மச்சானுக்கு”, என்று கேட்டான்.
“அப்படியே மெதுவா நம்மளோட லெப்ட்சைட்ல திரும்பி பாரு” என்றான்.
“ஏன்” என்று கேட்டான்.
“உடனே திரும்பிடாதேடா, மெதுவா சும்மா பாக்குற மாதிரி பாரு, சரியா”, என்று கிசுகிசுத்தான்.
“ஏன்டா”, என்றவனிடம் ,
“சொன்னா கேளுடா”,என்றான்.
அவனோ “என்ன விஷயம் டா”, என்று பரபரப்பாக கேட்கவும்.,
“அதுவா உன்ன அங்கிள் அங்கிள் ன்னு சொன்ன பொண்ணு, அங்க நின்னு இங்க உன்னை தான் பாத்துட்டு இருக்கு”, என்று சொல்லவும்.,
“அடேய் சும்மா இரு, அது மாப்பிள்ளையோட தங்கச்சி”, என்றான் மெதுவாக,
“மாப்பிள்ளையோட தங்கச்சி தான்டா, ஆனா ஏன் உன்ன பாத்துட்டு இருக்கு”, என்று கேட்டான்.
“அது என்னை பாக்கல, பேசாம இரு”, என்று சொன்னவன்.
“சும்மா நக்கலா பாக்கும்டா, அது எல்லாம் சிட்டில வளர்ந்த பொண்ணுங்க., நம்ம எல்லாம் ஊறுகாட்டுல வளர்ந்தவங்க, நம்ம ட்ரெஸ்ஸிங்க நக்கல் அடிக்கிறதா, இல்ல எப்படி எல்லாம் நக்கல் அடிக்கலாம் இவனை., அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கும்” என்று சொன்னவன்.,
“பாரு அவங்க வீட்டில எல்லோரின் ட்ரெஸ்ஸிங் பாரேன், வரும் போதே எப்படி வந்து இருக்காங்கன்னு, அந்த பொண்ணு வளர்ந்ததே அந்த மாதிரி தான் இருக்கும்., நம்மளோட டிரெஸ்ஸிங் பாரு நம்ம ஊர் சைடு டிரஸ் பண்ற மாதிரி பண்ணுவோம்., அவங்க ஒன்னு ஒன்னுக்கும் பார்த்து பார்த்து ரெடி பண்ணிக்குவாங்க, நாம அப்படி இல்லை அது கூட நக்கலா பாக்கும் டா”, என்று சொன்னான்.
“மெதுவா தான் திரும்பி பாரேன்”, என்று சொன்னான்.
இவனும் “ஏன் என்னை வம்புல மாட்டி விடுறதுக்கா”, என்று சொல்லி இங்கு மணமக்கள் துணி எடுப்பதையும் அவர்களை சுற்றி குடும்பத்தினர் இருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தவன்.
“ஆமா இந்த பொண்ணு எதுக்கு நிச்சயதார்த்த தன்னைக்கும் பக்கத்துல வரல., இன்னைக்கும் தள்ளி நின்னு பார்த்துகிட்டு இருக்கு”, என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,
வேகமாக அவளை திரும்பி பார்க்கவும்., அவளோ அவனைப் பார்த்து கையை ஆட்டினாள்.
“அந்த பொண்ணு கையாட்டுதுடா”, என்று சொல்லவும்.
“நானும் இதை தானே மச்சான் அப்பவே இருந்து சொல்லுறேன்., அது உன்ன தான் பாத்துட்டு இருக்கு ன்னு” என்றான் மெதுவாக,
“டேய் டேய் சும்மா இரு”, என்று சொல்லவும்.,
அவள் மெதுவாக இவர்கள் இருந்த பக்கமாக நடந்து வந்தவள்,”இன்னைக்கும் தனியா வந்துட்டீங்களா” என்று கேட்டாள்.
சித்தார்த்தனின் நண்பனோ, “இன்னும் கல்யாணமே ஆகல” என்று சொன்னான்.
“ஆனால் பார்த்தால் அப்படி தெரியலையே” என்றாள் மெதுவாக.,
அவனும் அவளை திரும்பிப் பார்த்து முறைத்த படி “இப்போ உனக்கு என்ன பிரச்சனை”, என்று கேட்டான்.
“நீங்க தான், மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்ல”, என்று சொல்லி விட்டு
“ஆமா உங்க கல்யாணத்திற்கு எங்களுக்கெல்லாம் இன்விடேஷன் கொடுப்பீங்களா”, என்று கேட்டாள்.
அவனோ “கண்டிப்பா உனக்கு கொடுக்க மாட்டேன்., அங்கேயும் வந்து அங்கிள் கூப்பிடுவ”, என்றான்.
“கண்டிப்பா கூப்பிடுவீங்க” என்று பக்கத்தில் இருந்த டேபிளில் சேலை பார்ப்பது போல பார்த்தபடி அவனிடம் பேசியவள், “ஒன்னே ஒன்னு சேலஞ்ச் பண்ணி சொல்லட்டுமா”, என்று அவனிடம் கேட்டவுடன்.,
அவன் நண்பன் தான், “இல்லைமா உங்க வீடு அவன் தங்கச்சி கட்டி கொடுக்க போற வீடு, அப்படிங்கும் போது பத்திரிகை வைப்பாங்க”, என்று அவர்கள் இருவருக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
அவனும் “ஏன் உன்னை எதுக்கு ஸ்பெஷலா கூப்பிடனும்”, என்று முனுமுனுத்தான்.
“அதைத்தான் சேலஞ்ச் பண்ணி சொல்றேன்”, என்று சொல்லி விட்டு அவன் கண்ணை நேருக்கு நேர் பார்த்து சிரித்தபடி அங்கிருந்த சேலைகளை பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள்.
கடையில் சேல்ஸுக்கு நின்றிருந்த பெண்ணோ, “மேடம் இதைவிட பெட்டர் சாரீஸ் காமிக்கிறேன். அந்த பக்கம் வரீங்களா, உங்க பாட்டி உங்க மம்மி கட்டி இருக்க மாதிரி சாரீஸ் பாக்குறீங்களா., இல்ல வேற மாதிரி சாரீஸ் வேணுமா”, என்று கேட்டார்.
அவளோ “நான் ஆல்ரெடி சென்னையில் எடுத்துட்டேன்., இப்போ அண்ணாக்கு அண்ணிக்கு பாக்குறதுக்கு தான் வந்திருக்கோம்., எனக்கு இல்ல”, என்று சொல்லி , திரும்பி நின்று அங்கு புடவை எடுத்துக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்தாள்.
சித்தார்த்தன் தன் நண்பனை தள்ளிக்கொண்டு சற்று தூரம் தள்ளி சென்று நின்று கொண்டவன்., “டேய் அந்த பொண்ணு ஒரு புடவை செலக்ட் பண்றதுக்கே இவ்வளவு யோசிக்குது, இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் சும்மா நம்மள பாத்தா கூட, நாம அலறி அடிச்சு ஓடி போயிடனும்., ஏன்னா நம்ம ஃபேமிலி எப்படி இருப்பாங்கன்னு தெரியும்., இது கொஞ்சம் ஹைஃபையா வளர்ந்தவங்களா இருக்காங்க
“டேய் சென்னைல புடவை வெரைட்டி நிறைய இருக்கும் இங்க வெரைட்டி கம்மியா இருக்கு, அதனால தான் அவங்க 10 தடவை உங்க வீட்டுல கேட்டாங்க, உங்க வீட்ல தான் பொண்ணு கூட்டிட்டு போவதற்கு யோசித்து இருக்காங்க, அன்னைக்கு தான் உங்க தாத்தா சொன்னாருல அப்புறம் என்ன விடு”, என்று சொல்லிவிட்டு.,
“ஆனா மச்சான் உன்னை அங்கிள் அங்கிள் ன்னு சொல்லி உன்னையே ஒரு ஃபீல் பண்ண வைக்கிறாங்க பாரு, அதுக்கே அந்த புள்ளைய பாராட்ட தான்டா செய்யணும்”, என்று சொல்லவும்.
வேகமாக கண்ணாடி முன்னாடி நின்று தன் தலையை கோதி கொடுத்தவன்., “ஏண்டா ரொம்ப வயசு ஏறினவன் மாதிரியா இருக்கேன், வயசு 29 தானடா ஆகுது”, என்று கேட்டான்.